மணப்பெண் கோலத்தில் அமிர்தா, தாலியுடன் கணேஷ்- பரபரப்பான பாக்கியலட்சுமி சீரியல் புரொமோ

115

 

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் தொடராக டிஆர்பியில் டாப்பில் சில மாதங்களுக்கு முன்பு எல்லாம் இருந்தது பாக்கியலட்சுமி தொடர்.

அதன்பின் சிறகடிக்க ஆசை சீரியலில் மக்களின் பேராதரவை பெற அது தான் இப்போது டாப்பில் இருந்து வருகிறது, 2வது இடத்தில் பாக்கியலட்சுமி தொடர் உள்ளது.

கடந்த வாரம் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் நடந்தது, அந்த கதைக்களமும் மிகவும் விறுவிறுப்பாக தான் இருந்தது.

புதிய புரொமோ
தற்போது கதையில் கணேஷ் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை என்று கூறி அமிர்தாவை வீட்டிற்கு வர வைத்து அவரை கடத்திவிடுகிறார்.

ஒரு இடத்தில் அமிர்தா மற்றும் நிலாவை பூட்டி வைக்க எழில் ஒருபக்கம் தேடிக்கொண்டு இருக்கிறார்.

இப்போது வந்துள்ள புரொமோவில் கணேஷ், அமிர்தாவை மீண்டும் திருமணம் செய்யப்போவதாக கூறுகிறார், சம்மதிக்கவில்லை என்றால் எழிலை கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறார்.

கணேஷ் கையில் தாலியுடன் நிற்க அமிர்தா மணப்பெண் கோலத்தில் உள்ளார். இந்த பரபரப்பான புரொமோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

SHARE