மணலாற்றில் முற்றுகைக்குள் இருந்தபோது தலைவர் சொன்னார் – ” பொட்டு நிழல் போல பின்னால் இருக்கும் வரை பிரபாகரனுக்கு ஒன்றும் நிகழ்ந்து விடாது” என்று

573
MOSSAD, KGB , CIA போன்று உலகம் முழுவதும் பரிச்சயமான பெயர்கள் சில தான். ஆனால் 450 க்கும் மேற்பட்ட பரிச்சயமில்லாத உளவு நிறுவனங்கள் பல்வேறு அரசுகளுக்காக உலகம் முழுவதும் இன்று இயங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு அரசின் செயல்பாட்டிற்கு அத்தியாவசியமான அங்கமாக உளவு அமைப்புகள் இன்று கருதப்படுகிறது.
இதனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்திருந்தான் ஒரு தமிழன். போர் செய்வதற்கு முன்பு எதிரிகளின் படை பலத்தை அறிந்து வருவதற்காக மட்டும் ஒற்றர்கள் பயன்படுத்தப்பட்ட காலத்தில், உளவு திரட்டலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து ஒரு உளவு அமைப்பு எப்படி இருக்க வேண்டும், இயங்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்து கொடுத்தான் அந்த ஆதி தமிழன். ஒற்றாடல் குறள் 581: ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண். பொருள் : ஒற்றர்களும், நல்ல கருத்துகளை உரைக்கின்ற நீதி நூலும், ஒரு அரசனின் இரண்டு கண்களுக்கு ஒப்பானவை. குறள் 582: எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். பொருள் : எல்லாரிடத்திலும் நிகழ்கின்ற எல்லாவற்றையும் எக்காலத்திலும் ஒற்றரைக் கொண்டு விரைந்து அறிதல் ஒரு நல்ல அரசனுக்குரிய கடமையாகும்
1453294_554045428023213_1544089744_n
குறள் 583: ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்தது இல். பொருள் : ஒற்றர்களை கொண்டு அறியப்படுகின்ற செய்திகளை ஆராய்ந்து தெளிந்து அவற்றின் படி செயல்படாத அரசனின் அரசு ஒரு போதும் தழைக்காது. குறள் 584: வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று. பொருள் : தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்று பாகுபாடு பாராமல் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றர்களின் தொழிலாகும். குறள் 585: கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று. பொருள் : பிறர் சந்தேகிக்க முடியா தோற்றத்துடனும், அப்படி சந்தேகப்பட்டாலும் அவர்களை கண்டு அஞ்சாமலும், என்ன நடந்தாலும் தான் அறிந்தவற்றை வெளிப்படுத்தாமலும் இருப்பவனே நல்ல ஒற்றன். குறள் 586: துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று. பொருள் : துறவிகள் போல் அனைத்தையும் சகித்துக்கொண்டு, செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் சென்று ஆராய்ந்து, தன் எதிரிகள் என்ன செய்தாலும் சோர்ந்து விடாதவரே ஒற்றர் ஆவார். குறள் 587: மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று. பொருள் : மறைவான செய்திகளையும் கேட்டறிய வல்லவனாகவும், அப்படி அறியப்பெற்ற செய்திகளை கொண்டு துணிந்து இயங்கவள்ள ஆற்றல் உடையவனாகவும் இருப்பவனே ஒற்றன். குறள் 588: ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல். பொருள் : ஓர் ஒற்றன் கொண்டுவரும் செய்தியை பிற ஒற்றர்கள் கொண்டு வரும் செய்திகளோடு ஒப்பிட்டு அச்செய்தியின் உண்மை தன்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். குறள் 589: ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் சொற்றொக்க தேறப் படும். பொருள் : ஒரு ஒற்றர் மற்றொரு ஒற்றரை அறியாத படி அவர்களை கையாள வேண்டும். ஒரு ஒற்றர் சொல்லும் செய்தியோடு மற்ற ஒற்றர்கள்(மூவர்) சொல்லும் செய்தி ஒத்திருந்தால் உண்மை என்று தெளியப்பெரலாம். குறள் 590: சிறப்பறிய ஒற்றன்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை. பொருள் : ஓர் ஒற்றனின் திறமையை வியந்து பிறர் அறிய அவனுக்கு சிறப்பு செய்ய கூடாது. அப்படி செய்தால் அவனையும் அவன் கொண்டுவந்த செய்திகளையும் நாமே வெளிப்படுத்துவதற்கு சமமாகும். திருக்குறள் – பொருட்பால் – அரசியல் – ஒற்றாடல் தமிழருக்கென வள்ளுவன் அன்று சொன்ன உளவு அமைப்பை தரணியில் இன்று ஆண்ட வல்லவன், நம் பொட்டு அம்மான் அவர்கள்… –
இன்று(28.11) 51 ம் அகவை காணும் சண்முகலிங்கம் சிவசங்கரன் என்ற இயற்பெயரும் 1981 ல் இயக்கத்தில் இணைந்து தலைவர் அவர்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருந்துவரும் உலகின் தலைசிறந்த புலனாய்வுத் துறையான தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வு துறைத் தலைவரான பொட்டு அம்மான் அண்ணா அவர்களுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்.

எங்கள் கரிகாலனின் வலது கை நீதான் என்பதை உலகறியும் அதை வைத்து என்றுமே நீ பெருமைதேடியவனில்லை.

உன் மனைவி, மக்கள் யாரென்றுகூட எம்மக்களுக்கு தெரியாது

கரிகாலனின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் ஆயிரமாயிரம் போராளிகள் அமைதியாக துணை நின்றார்கள். அவர்களுள் முதன்மையானவன் நீ.

எதிரிகளே அஞ்சி நடுங்கும் தமிழரின் உளவுப்பிரிவை கட்டியாண்டவன் நீ, அதை இன்றளவும் இயங்கவைதுக்கொண்டும் இருக்கிறாய்.

அன்று மணலாற்றில் முற்றுகைக்குள் இருந்தபோது தலைவர் சொன்னார் – ” பொட்டு நிழல் போல பின்னால் இருக்கும் வரை பிரபாகரனுக்கு ஒன்றும் நிகழ்ந்து விடாது” என்று

அந்த நம்பிக்கை தான் இன்றும் இருக்கிறது பறந்த குருவி திரும்பும் போது எம்மக்களின் விடுதலையையும் உடன் கொண்டு வருமென்று !

SHARE