மண்ணை கவ்வியது இலங்கை! 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி

96

 

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இலக்கை நிர்ணயித்த இலங்கை
இலங்கை-பங்களாதேஷ்(வங்கதேசம்) இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி Chattogram, ஜாஹுர் அகமது சௌத்ரி மைதானத்தில் இன்று தொடங்கியது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 48.5 ஓவர்கள் முடிவிலேயே 10 விக்கெட்டுகளையும் இழந்து 255 ஓட்டங்களை குவித்தது.

இலங்கை அணியில் அதிகப்பட்சமாக குசல் மெண்டிஸ்(Kusal Mendis) 59 ஓட்டங்களையும், ஜனித் லியனகே(Janith Liyanage) 67 ஓட்டங்களையும் கைப்பற்றி இருந்தனர்.

வெற்றி வாகை சூடிய வங்கதேசம்
இதையடுத்து வெற்றி இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க வீரர்களான சௌமியா சர்க்கார்(Soumya Sarkar) 3 ஓட்டங்களுடனும், லிட்டன் தாஸ்(Litton Das) ஓட்டங்கள் எதுவும் குவிக்காமலும் விக்கெட்டை பறிக்கொடுத்து வெளியேறினர்.

ஆனால் பின்னர் ஜோடி சேர்ந்த நஜ்முல் ஹுசைன் சாண்டோ(Najmul Hossain Shanto) மற்றும் முஷ்பிகுர் ரஹீம்(Mushfiqur Rahim) அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

நஜ்முல் ஹுசைன் சாண்டோ(Najmul Hossain Shanto) 129 பந்துகளில் 122 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

முஷ்பிகுர் ரஹீம்(Mushfiqur Rahim) 84 பந்துகளில் 73 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

இறுதியில் வங்கதேச அணி 44.4 ஓவர்கள் முடிவிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 257 ஓட்டங்கள் குவித்து அசத்தியது.

அத்துடன் இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

SHARE