“மதவாதத்தை தூண்டும் செயற்பாடுகளை தவிர்த்து பொறுப்புடன் செயற்பட வேண்டும்” – சாள்ஸ் நிர்மலநாதன்

307

மதவாதத்தை தூண்டும் செயற்பாடுகளை தவிர்த்து பொறுப்புணர்ச்சியுடன் செயற்படுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார் .

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக இன்று திருகேதீஸ்வர கோயில் நிர்வாகத்தினருடனும் மாந்தை பங்கு தந்தையுடமும் தனித்தனியாக சம்பவ இடத்துக்கு சென்று உண்மை நிலவரங்களை கேட்டறிந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ,

இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நிகழாதிருக்கவும் முரண்பட்ட இரு மதத்துகிடையில் ஒரு சந்திப்பை மேற்கொண்டு இதை சுமுகமாக  தீர்க்க அனைவரும் முன்வரவேண்டும் .

இச் சம்பவங்களால் எமது இனத்தில் அரசியல் இலக்குகள் திசை மாறிச் செல்ல நாம் ஒருபோதும் அனுமதிக்க  போவதில்லை என சம்மந்தப் பட்டவர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

வன்முறைகளால் எந்த விதமான ஒரு தீர்வையும் நாம் அடைந்துவிட முடியாது .அனைவரும் பொறுமையாக பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட முன்வரவேண்டும்.

இதை பயன்படுத்தி பல  தீய சக்திகள் நாசகார வேலைகளில் ஈடுபடுவதற்கு முன்வருவார்கள்.   ஆகவே எமது இனத்தின் முறுகலை சுமுகமாக பேசி அல்லது  சட்டத்தை  நாடி ஒரு முடிவிற்கு நாம் அனைவரும் வரவேண்டும்.

இது தொடர்பாக இந்து கலாச்சார அமைச்சர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்துகொண்டார். தமிழ் மக்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி இதில் குளிர்காய பல தீய சக்திகள் எமக்குள் ஊடுருவியுள்ளனர்.

ஆகவே அனைவரும் பொறுப்புணர்ச்சியுடன் மதங்களை  மதித்து இந்த நேரத்தில் செயற்படுமாறு கேட்டுக்கொளுகின்றேன்.என குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE