நம் முன்னோர்கள் கூறும் சாதாரண விஷயத்திற்கு கூட அறிவியல் காரணங்கள் இருக்கும் என்பது மிகவும் உண்மையாகும்.
அந்த வகையில், அவர்கள் மதிய உச்சி வெயிலில் கிணற்றின் அருகில் நின்று அதை எட்டிப் பார்க்க கூடாது என்று கூறுவார்கள் அல்லவா?
ஆனால் அவ்வாறு கூறுவதற்கு என்ன காரணம் என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா?
உச்சி வெயிலில் கிணற்றை எட்டி பார்க்க கூடாது ஏன்?
கிராமப் புறங்களில் இருக்கும் ஒருசில கிணறுகளை பயன்படுத்தாமல் இருக்கும். அவ்வாறு இருக்கும் கிணறுகளில் நச்சு காற்று மற்றும் நச்சுக் கிருமிகள் உருவாகி இருக்கும்.
மதிய வேளையில் உச்சி வெயில் அடிக்கும் நேரத்தில் கிணற்றில் சூரிய ஒளி விழும் போது, அந்த சூரிய ஒளியால் கிணற்றில் வெப்பமடைந்த நச்சுக் காற்று விரிவடைந்து மேலே செல்லும்.
எனவே நாம் அந்த வெயில் நேரத்தில் கிணற்றை எட்டி பார்த்தால், கிணற்றில் இருந்து வெளிவருகின்ற நச்சுக் கலந்த வாயுவால் தாக்கப்பட்டு கிணற்றுக்குள் விழ வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதற்காக தான் பெரியவர்கள் உச்சி வேளையில் கிணற்றை எட்டி பார்க்க கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள்.