மது போதையில் வாள்களுடன் வீட்டுக்குள் வந்த மர்ம கும்பல்! தமிழர் பகுதியில் நடந்த அட்டகாசம்

104

 

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் மது போதையில் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் சென்ற குழுவினர் வீட்டினை அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (12) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணை
அத்துமீறி வீட்டுக்குள் புகுந்த மேற்படி குழுவினர் வீட்டின் உரிமையாளரை தாக்கியதுடன் பெறுமதியான பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

SHARE