பாலியல் தொழிலாளர்கள்மீதான வன்முறை என்றைக்கும் நிகழ்ந்துவரும் ஒன்று. எனினும் சில நேரங்களில் அவர்கள் வழக்கத்திற்கு அதிகமான வன்முறையைச் சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாகக் காவல் துறையினரிடமிருந்து. வன்முறை எப்பொழுதையும்விட அதிகமாகியிருக்கிறது என்று ஒருவர் கூறுவது அவரது வாழ்வில் வன்முறை ஏதோ ஒரு வடிவத்தில் நிரந்தரமான இடம் பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அத்தகைய வன்முறையை அவர் வழக்கமான ஒன்றென ணணிணூட்ச்டூடித்ஞு செய்திருக்கக் கூடிய நிலையையும் அது காண்பிக்கிறது.
சென்னை பிராட்வே பேருந்து நிலையம் பகுதியில் கடந்த ஒரு வருடமாகப் பாலியல் தொழில் செய்யும் பெண்கள்மீதான தங்களுடைய வன்முறையைக் காவல் துறையினர் அதிகப்படுத்தியுள்ளனர். காவல் துறையினருக்குரிய சீருடை அணிந்திராத, மஃப்டியில் இருக்கும் போலீசார் அங்கங்குப் பதுங்கி நின்று பெண்களைச் சுற்றிவளைத்து, அடித்தும் உதைத்தும் அருகில் உள்ள ஙி2 காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வெவ்வேறு விதமான வழக்குகளைப் பதிவுசெய்கின்றனர். இது தவிர எவரெவர் பாலியல் தொழிலாளி என்று தங்களுக்குக் காட்டிக்கொடுக்கும் நபர்களுக்கு ரகசியமாகச் சன்மானமும் வழங்குகின்றனர். இத்தகைய பரிமாற்றம் ஒன்றை நேரில் கண்ட சமூக ஆர்வலரும் பாலியல் தொழிலாளி ஒருவரும் பகிர்ந்துகொண்ட செய்தி இது.
பாலியல் தொழிலில் பெண்கள், ஆண்கள், அரவானிகள் என எல்லாப் பாலினத்தவர்களும் ஈடுபட்டிருக்கின்றனர். இந்தப் பிரிவினருக்கு இடையே பாலியல் தொழிலின் யதார்த்தங்கள் வேறுபடும் என்பது மட்டுமல்லாமல் இந்த ஒவ்வொரு பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்குள்ளும் பாலியல் தொழில் என்பது பொருளாதார வர்க்க நிலை, இடம் போன்ற கூறுகளைச் சார்ந்து மாறுபடும். உதாரணத்திற்கு, வேறுபட்ட பொருளாதார நிலைகளைச் சேர்ந்த பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் காவல் துறையினர் மற்றும் ரவுடிகளின் வன்முறைக்கு அதிகம் ஆளாவது ண்tணூஞுஞுt ஞச்ண்ஞுஞீ ண்ஞுது தீணிணூடுஞுணூ எனக் கருதப்படும் வசதி குறைவான பின்னணி கொண்ட பெண்களே.
இந்தக் கட்டுரையின் கண்ணோட்டத்திற்கு நான் கருதுவது பொருளாதார வசதி குறைந்த பின்னணிகளிலிருந்து வரும் பாலியல் பெண் தொழிலாளர்களை மட்டுமே.
இது தவிரப் பாலியல் தொழில் என்பது இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. உதாரணத்திற்கு, கொல்கத்தாவில் உள்ள சோனாகாச்சியைப் போலவோ மும்பை நகரின் காமாத்திபுரா பகுதியைப் போலவோ சென்னை நகரில் பாலியல் தொழில் சில குறிப்பிட்ட பகுதிகளில் விபச்சார விடுதிகள் (ஞணூணிtடஞுடூண்) என்ற முறையில் நடப்பதில்லை. இங்குப் பெரும்பாலும் பெண்கள் தனிப்பட்ட முறையில் செயல்படுகின்றனர். பொதுவிடங்களில் வைத்தோ கைப்பேசிகள் மூலமாகவோ வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்கின்றனர். அருகில் உள்ள விடுதிகளிலோ தெரிந்த நபரின் வீட்டு அறையிலோ பாலியல் உறவை மேற்கொள்கின்றனர். அதனால் பெறும் ஊதியத்தில் ஒரு பங்கை அந்த இடத்தின் வாடகைக்காக அறையின் சொந்தக்காரரிடம் வழங்குகின்றனர்.
விடுதிகள் அமைத்துச் செயல்படும் பாலியல் தொழில் முறை நடைமுறையில் இருந்தாலும் அது கண்களுக்குப் புலப்படுவதில்லை. எனவே பொதுவெளியில் புலப்படும் மேற்கூறிய தனிப்பட்ட பெண்களே காவல் துறையினரின் வன்முறைக்கு இலக்காகின்றனர்.
சட்டமும் இன்றைய சூழ்நிலையும்:
இந்தியச் சட்டம் பாலியல் தொழில் செய்வதை நேரடிக் குற்றமாக்கவில்லை. பாலியல் தொழில் குறித்த சட்டங்களையும் மனிதர்கள் மற்றும் குழந்தைகள் பல்வேறு காரணங்களுக்காகக் கடத்தப்படுவதையும் பரிமாற்றம் செய்துகொள்ளப்படுவதையும் இடம்பெயர்க்கப்படுவதையும் குறித்த சட்டங்களையும் உள்ளடக்கிய ஒரே கட்டமைப்பாக உள்ளது ஐட்ட்ணிணூச்டூ கூணூச்ஞூஞூடிஞி (கணூஞுதிஞுணtடிணிண) அஞிt 1956 (ஐகூகஅ) என்பது. தொடக்கத்தில் பெண்களை மட்டுமே இந்தச் செயல்பாடுகள் மற்றும் குற்றங்களின் இலக்குகளாகக் கொண்டிருந்த இச்சட்டத்தில் 1986ஆம் ஆண்டு திருத்தங்கள் இயற்றப்பட்டன. இதன்படி ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவான சட்டமாக இது மாறியது. எனினும் ஐகூகஅஇன் பார்வையில் சிறார், 18 வயதிற்கு மேற்பட்டோர் என்கிற வேற்றுமையில்லை. இதனால் சுய விருப்பத்துடன் பாலியல் தொழில் செய்யக் கூடிய நிலையையும் (திணிடூதணtச்ணூதூ ண்ஞுது தீணிணூடு) வற்புறுத்தலின் மூலம் இன்னொருவரின் பணியை வலுக்கட்டாயமாகப் பெறும் நிலையையும் (tணூச்ஞூஞூடிஞிடுடிணஞ்) இது வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.
வற்புறுத்தலின் மூலமும் ஆள்கடத்தல் செய்வதன் மூலமும் மற்றவரின் உடலுழைப்பை அவரது சம்மதமின்றி விற்றுப் பிழைப்போர் ஆகியோரையே இந்தச் சட்டம் நசுக்க நினைக்கிறது என்றாலும் உண்மையில் இச் சட்டத்தின் கீழ் அதிகம் கைதுசெய்யப்படுபவர்களும் தண்டனைக்குள்ளாகிறவர்களும் பாலியல் தொழில் செய்பவர்களே.
தமிழகத்தைப் பொறுத்தவரை, பாலியல் தொழில் செய்வோரை இலக்காக்கும் ஐகூகஅ சட்டத்தின் 8ஆம் பிரிவைப் பயன்படுத்திக் காவல் துறையினர் பெண்களைக் கைதுசெய்யக் கூடாது என்றும் பாலியல் உறவுக்கு வாடிக்கையாளர்களை அழைத்துக் கொடுப்போர், பெண்களை வைத்துப் பிழைப்போர், வற்புறுத்தலுக்கு உட்படுத்துவோர் ஆகியோரை மட்டுமே கைதுசெய்ய வேண்டும் என்னும் ஆணையை 2004ஆம் ஆண்டில் அப்போது தமிழகக் காவல் துறையின் தலைமை இயக்குநராக இருந்த ஐ. கே. கோவிந்த் பிறப்பித்திருந்தார். எனினும் தொடர்ந்து கைதுசெய்யப்படுவதும் வன்முறைக்குள்ளாவதும் பாலியல் தொழில் செய்யும் பெண்களே.
தமிழகத்தில் பாலியல் தொழிலுக்கென விடுதிகளை அமைத்து நடத்தும் ஞணூணிtடஞுடூ முறை நடைமுறையில் இல்லாத காரணத்தால் இங்குப் பொதுவாகப் பாலியல் தொழில் தனிப்பட்ட பெண்களால் மேற்கொள்ளப்படுகிறது. இவர்கள் பெரும்பாலும் தனி நபர்களாகச் செயல்படுகிறார்கள். ஒரு நகரத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் பொதுவிடங்களில் இவர்களைப் பாலியல் உறவுக்கு ஆண் வாடிக்கையாளர்கள் அழைக்கிறார்கள். அப்போது அந்தப் பாலியல் பரிமாற்றத்திற்கான விலை நிர்ணயிக்கப்பட்டு அப்பெண்ணுக்கோ அந்த வாடிக்கையாளருக்கோ தெரிந்த ஒரு தனி இடத்தில் உறவு மேற்கொள்ளப்படுகிறது. இந்த இடம் அருகில் உள்ள ஒரு விடுதியின் அறையாகவோ அப்பெண்ணுக்குத் தெரிந்த நபர் ஒருவரின் வீட்டு அறையாகவோ இருக்கலாம். இம் முறையில் தனிப்பட்ட முறையில் வற்புறத்தலின்றி சுயேச்சையாகப் பாலியல் தொழில் செய்யும் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களையே காவல் துறையினர் பொதுவிடங்களில் சுற்றி வளைத்து மிகுந்த உடல்சார் வன்முறைக்கு உள்ளாக்கிக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பலவிதமான வழக்குகளைப் பதிவுசெய்கின்றனர். காவல் துறை முன்னாள் தலைமை இயக்குநர் ஐ.கே. கோவிந்த் அவர்களின் மேற்கூறிய 2004ஆம் ஆண்டு ஆணையின்படி பெண்களை மிஜிறிகிவின் 8ஆம் பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்யாமல் வேறு பல சட்டப் பிரிவுகளைப் பயன்படுத்துகின்றனர்.
உதாரணத்திற்கு, சென்னை நகரக் காவல் துறைச் சட்டத்தின் பிரிவு 75 பாலியல் தொழில் செய்யும் பெண்கள்மீது அடிக்கடி சுமத்தப்படுகிறது. மது அருந்திவிட்டுப் பொதுவிடத்தில் ரகளை செய்வதையும் அநாகரிகமாக நடந்துகொள்வதையும் அவ்விடத்தில் உள்ள மற்றவர்களுக்குத் தொந்தரவு தரும் விதத்தில் நடந்துகொள்வதையும் இந்தச் சட்டப் பிரிவு குற்றமெனக் கருதுகிறது. பாலியல் தொழில் செய்யும் பெண் என்று அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட ஒருவர் பொதுவிடத்தில் நின்றிருந்தால்கூடப் பல தருணங்களில் அவர்மீது இந்தக் குற்றம் காவல் துறையினரால் சுமத்தப்படுகிறது. புறப்படவிருந்த பேருந்து ஒன்றில் அமர்ந்துகொண்டிருந்த ஒரு பெண்ணை ஆண் காவல் அதிகாரி ஒருவர் சென்று வலுக்கட்டாயமாக இறக்கி அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்த அனுபவம் வெகுசமீபத்தில் சென்னையில் நிகழ்ந்தது.
இது தவிர, 18 வயதைக் கடந்த தனிநபர்களாகப் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் பலரைக் காவல் துறையினர் திடிஞிtடிட் என முதல் தகவல் அறிக்கையில் (ஊஐகீ) பதிவுசெய்து குற்றவியல் நடுவரின் முன் ஆஜர்படுத்துகிறார்கள். இப்பெண்கள் மைலாப்பூர்க் கச்சேரி சாலையில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பப்படுகிறார்கள். உண்மையிலேயே மற்றவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண்களையும் 18 வயதிற்குக் கீழ் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்களையும் அவர்களின் பாதுகாப்பிற்கென வைப்பதற்கான இடம் இந்தப் பெண்கள் காப்பகம். ஆனால் சுய விருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடும், 18 வயதைக் கடந்த, பெண்களையும் திடிஞிtடிட் எனப் பதிவுசெய்து இந்தக் காப்பகத்தில் அடைக்கிறது காவல் துறை. இவ்விடத்தில் பெண்களைச் சென்று பார்ப்பதற்கு எண்ணற்ற விதிமுறைகள் உள்ளன. இரத்த உறவு என்பதற்கான ஆதாரம் கொண்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இக்காப்பகத்தில் ஐந்து மாதங்கள் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியில் வந்த பெண் ஒருவர் என்னுடன் பகிர்ந்துகொண்டது இது: போலீசார் என்னை திடிஞிtடிட் என்று பதிவுசெய்தார்கள். நான் திடிஞிtடிட் அல்ல. எனக்கு நாற்பது வயதாகிறது. அவர்கள் என்னைக் கையொப்பமிடச் சொன்ன எதிலும் நான் இடவில்லை. சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அருகில் இருக்கும் குற்றவியல் நடுவர் ஒருவரின் வீட்டிற்கு என்னையும் வேறு பெண்கள் சிலரையும் அழைத்துச் சென்றார்கள். அவர் எங்களை ஏற இறங்கப் பார்த்தார். எங்களிடம் எதுவும் கேட்கவில்லை. போலீசார் தன்னிடம் வழங்கிய காகிதங்களில் கையொப்பமிட்டார். பிறகு நாங்கள் மைலாப்பூரில் உள்ள பெண்கள் காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். நான் அங்கு ஐந்து மாதங்கள் இருந்தேன். 18 முறை என் வழக்கு வாய்தாவிற்கு வந்தது. பல வாரங்கள் என்னுடைய இரு பிள்ளைகளும் பிராட்வே பேருந்து நிலையம் அருகில் தெருவில் காலத்தைக் கழிக்க நேர்ந்தது.
பல சமயங்களில், கைதுசெய்யப்படும்போது காவல் துறையினரிடம் பெண்கள் தங்களுடைய உண்மையான வீட்டு முகவரியைக் கொடுப்பதில்லை. இது நாம் புரிந்துகொள்ளக்கூடியதுதான். பாலியல் தொழில் குறித்த உணர்வுகளும் மதிப்பீடுகளும் இருக்கும் நிலையில், தாங்கள் பாலியல் தொழில் செய்வதைப் பெண்கள் பெரும்பாலும் தங்களுடைய குடும்பத்தினரிடமிருந்து மறைத்துவைக்கிறார்கள். இந்த நிலையில் ஒருவர் கைதாகும்போது அவர் வழங்கிய முகவரிக்குக் காவல் நிலையத்திலிருந்து தந்தி அனுப்பப்படுகிறது. அல்லது அதிகாரி ஒருவர் நேரில் சென்று விசாரிக்கிறார். இந்த முகவரிகள் தவறாக இருக்கும் காரணத்தால் பல சமயங்களில் கைதான பெண்களின் குடும்பத்தாருக்கு அவருக்கு என்ன ஆயிற்று என்ற தகவல் தெரியவரக் காலதாமதமாகிறது. அவர்கள் தகவலறிந்து காவல் துறையினரையோ நீதிமன்றத்தையோ அணுகினால், காவல் துறை ஆவணங்களில் உள்ள தவறான முகவரிக்கான ஆவணங்கள் அவர்களிடமிருந்து கோரப்படுகின்றன.
கீழ்க்காணும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் அதிகம் பதிவுசெய்யப்படுகின்றன. 2011ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் சிலவற்றிலிருந்து பெறப்பட்ட தகவல் இது.
ஐட்ட்ணிணூச்டூ கூணூச்ஞூஞூடிஞி (கணூஞுதிஞுணtடிணிண) அஞிt 1986இன் பிரிவுகள்:
4(1) – மற்றவர் பாலியல் தொழில் செய்து ஈட்டும் வருமானத்திலிருந்து நன்மை அடையும் எவரொருவரும்; 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
5(1) ச் – பாலியல் தொழிலுக்காக ஒருவரை அவருடைய சம்மதத்துடனோ சம்மதமின்றியோ அழைத்துக் கொடுப்பவர், ஊக்கப்படுத்துபவர்.
6(1) – பாலியல் தொழில் நடைபெறும் இடம் ஒன்றில் (ஞணூணிtடஞுடூ) மற்றவரைப் பாலியல் உறவுக்காக வைத்திருப்பவர்.
7(1) – பொதுவிடத்திற்கு அருகாமையில் உள்ள இடத்தில் பாலியல் தொழில்செய்பவரும் அவருடன் தொழிலில் ஈடுபடுபவரும்.
மேலும் முன்னர் கூறியதுபோல் பெரும்பாலான சமயங்களில் பாலியல் தொழில் செய்யும் பெண் என்று அடையாளம் கண்டுகொள்ளப்பட்ட பெண்கள் பொதுவிடத்தில் நின்றுகொண்டிருந்தாலோ பேருந்திற்காகக் காத்திருந்தாலோ கடைகளுக்குச் சென்றாலோகூட அவர்கள் போலீசாரின் அடி உதைக்கு உள்ளாவதும் கைதாவதும் சகஜமாகிவிட்டன. சென்னைப் பாரிமுனை, பிராட்வே பேருந்து நிலையம், பூக்கடைப் பகுதிகளில் அருகிலுள்ள ஆ2 மற்றும் இ1 காவல் நிலையத்தார் பெண்கள்மீது அதிக வன்முறையை நிகழ்த்திவருவதாக ஒரு நேர்காணலின்போது பாலியல் தொழில் செய்யும் பெண்கள் பலர் என்னுடன் பகிர்ந்துகொண்டனர். இப்பெண்களுள் ஒருவர் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்திடம் ஏப்ரல் 2011இல் கொடுத்த புகார் ஒன்றிற்குப் பிறகு சில மாதங்களுக்குப் பிராட்வே பகுதியில் வன்முறை குறைந்திருந்ததாகவும் இப்போது மீண்டும் அதிகரித்திருப்பதாகவும் பெண்கள் பகிர்ந்துகொண்டனர். ஆனால் காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட இதே புகாருக்கு எந்தப் பதில் நடவடிக்கையும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிரக் காவல் துறையினருக்குரிய சீருடை அணியாது பொதுமக்கள் போன்று தோற்றமளிக்கும் நபர்களும் இப்பெண்களைப் பொதுவிடங்களில் கைது செய்வது அடிக்கடி நிகழ்கிறது. ஈ.ஓ. ஆச்ண்த ஙண். குtச்tஞு ணிஞூ ஙிஞுண்t ஆஞுணஞ்ச்டூ என்ற வழக்கின் தீர்ப்பின்படி காவல் துறையினருக்கான சீருடையில் இல்லாத அதிகாரிகள் கைதுசெய்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும் இது சென்னையில் வழக்கமாக நடைபெறும் ஒன்று. சில நேரங்களில் இந்த அதிகாரிகள் பாலியல் தொழில் செய்யும் பெண்களிடம் தங்களை வாடிக்கையாளர் என்று அறிமுகம் செய்துகொண்டு அணுகிப் பின் கைதுசெய்வதும் அதிகம் நடைபெற்றுவருகிறது.
இப்பகுதியில் போலீசாரிடம் உடல்ரீதியான வன் முறைக்கு உள்ளாகும் பெண்கள் உடற்காயங்களுக்கான சிகிச்சை பெறப் பொதுவாகக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கோ அரசுப் பொதுமருத்துவமனைக்கோ செல்கிறார்கள். இந்த உடற்காயங்கள் வன்முறை காரணமாக ஏற்பட்டவை என்பதற்கான அத்தாட்சியை (Mஞுஞீடிஞிணி-ஃஞுஞ்ச்டூ இஞுணூtடிஞூடிஞிச்tஞு) மருத்துவமனையிலிருந்து பெறுவதற்கான உரிமை இப்பெண்களுக்கு உண்டு. எனினும் இந்த இரு மருத்துவமனைகளுமே அதை வழங்க மறுக்கின்றன. பல நேரங்களில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நுழைவுச்சீட்டுகூட இப்பெண்களுக்கு மறுக்கப்படுகிறது.
விரிவான விவாதக் களம்:
பாலியல் தொழில் குறித்த யதார்த்தம், சட்டத்தின் பார்வை, இவ்விரண்டிலும் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் ஆகியவை குறித்த விரிவான விவாதக் களம் ஒன்றுண்டு. பாலியல் தொழில் என்பதே பெண்களுக்கு இழிவு என்றும் அவர்கள் அதில் வற்புறுத்தியே திணிக்கப்படுகின்றனர் என்றும் இந்தத் தொழில் நடைபெறுவதற்கான சூழ்நிலைகள் எல்லாவற்றையும் ஒடுக்குவதன் மூலம் இந்தப் பெண்களை மீட்க வேண்டும் என்பதும் ஒரு சாராரின் மையப் பார்வை. எந்தப் பெண்ணும் சுய விருப்பத்தின் காரணமாக, எந்தவித வற்புறுத்தலும் இன்றிப் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சாத்தியமல்ல என்றும் இவர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் பொருளாதார நிலையின் வற்புறுத்தலாவது கண்டிப்பாக இதற்குக் காரணமாக இருக்கிறது. பெண்களை இத்தொழிலில் தள்ளுவதால் அவர்களின் மறுவாழ்வுக்கான முயற்சிகளையே மேற்கொள்ள வேண்டுமென்று இச்சாரார் வலியுறுத்துகின்றனர். பாலியல் தொழிலில் பெண்களையும் குழந்தைகளையும் தள்ளுவோர்மீது சட்டம் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் பாலியல் உறவுக்கு அழைக்கும் வாடிக்கையாளனையும் குற்றவாளியாகக் கருத வேண்டும் என்றும் இவர்கள் கோருகின்றனர். சமீபத்தில் புது தில்லியில் நடந்த கூட்டமொன்றில் அமெரிக்கப் பெண்ணியத்தின் முக்கிய முகங்களுள் ஒன்றாகக் கருத்தப்படும் க்லோரிய ஸ்டைனம் எடுத்த நிலைப்பாடு இதுவாகவே இருந்தது. இது குறித்த தன் கருத்துகளை இவர் தி இந்து நாளிதழில் சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த ÷ஷாஹினி கோஷ் அவர்களின் நிலைப்பாடு பாலியல் தொழில் குறித்த மற்றொரு முக்கியமான நிலைப்பாடாகும். இது மேற்கூறிய நிலைப்பாட்டில் உள்ள சில அம்சங்களைச் சுட்டிக்காட்டி அவை எவ்விதத்தில் பிரச்சினைக்குரியவை என்று விவரிக்கிறது. பாலியல் தொழில் என்பதே ஒடுக்குமுறை என்றும் அது முற்றிலும் இல்லாத நிலையை அடைய வேண்டும் என்றும் கூறும் தரப்பினர் சுய விருப்பத்தின் அடிப்படையில் பாலியல் தொழில் செய்யக்கூடிய நிலையையும் (திணிடூதணtச்ணூதூ ண்ஞுது தீணிணூடு) வற்புறுத்தலின் மூலம் இன்னொருவரின் பணியை வலுக்கட்டாயமாகப் பெறும் நிலையையும் (tணூச்ஞூஞூடிஞிடுடிணஞ்) வேறுபடுத்தத் தவறிவிடுகிறார்கள் என்பதை இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனால் எந்தப் பெண்ணுக்கும் சுய விருப்பத்துடன் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கான முனைப்பும் உரிமையும் சுயசிந்தனையும் இருக்க முடியுமென்பதையே அவர்கள் மறுத்துவிடுகிறார்கள்.
இது தவிரப் பொருளாதாரச் சூழலின் நெருக்கடிகளால்தான் பெண்கள் பாலியல் தொழிலுக்கு வருகிறார்கள் என்றும் அதனால் அதையும் வற்புறுத்தலாகத்தான் கருத முடியும் என்றும் கூறுபவர்கள் ஏன் பொருளாதாரச் சூழலின் காரணமாகப் பெண்கள் மேற்கொள்ளும் வேறெந்தத் தொழிலையும் (உதாரணம்: வீட்டு வேலை) பிரச்சினைக்குரியதாகப் பார்ப்பதில்லை என்று கேள்வியெழுப்புகிறார்கள். பெண்களுடைய சுயதேர்வை நிராகரித்தாவது ஒட்டுமொத்தமாகப் பாலியல் தொழில் என்பதையே நீக்க வேண்டும் என்று கூறுபவர்களுடைய விவாதங்கள் கடைசியாகப் பாலியல் சார்ந்த ஒழுக்கம் என்ற தளத்திலேயே இயங்குகின்றன என்று இந்த இரண்டாம் சாரார் கருதுகின்றனர். இதனாலேயே பாலியல் உடலுறவு என்பது எந்தப் பெண்ணுக்கும் ஒரு தொழிலாகவும் பொருளாதாரப் பரிமாற்றமாகவும் இருக்க முடியும் என்பதை முதல் தரப்பினரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை என்றும் இவர்கள் கூறுகின்றனர்.
பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் எந்த வற்புறுத்தலுமின்றி சுய விருப்பத்தின் அடிப்படையில் ஈடுபடும் பாலியல் தொழிலை அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உரிமையாகக் கருதி அரசு அதைச் சட்டத்தின் பார்வையில் குற்றமற்றதாக்க வேண்டும் (ஞீஞுஞிணூடிட்டிணச்டூடித்ஞு) என்பது முக்கியமான கோரிக்கை. பாலியல் தொழில் என்பது பெண்களின் சுயதேர்வாகவும் இருக்க முடியும் என்ற பார்வையை இது முன்வைக்கிறது. பெரும்பான்மைச் சமூகத்தின் ஒழுக்க நெறி சார்ந்த பார்வை காரணமாகப் பெண்களின் அத்தகைய சுயதேர்வு மறுக்கப்படக் கூடாது என்ற விவாதம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பாலியல் சார்ந்த கண்காணிப்புகள் பொதுவாகப் பெண்கள்மீது மிக அதிகமாக இருக்கும் சூழலிலும் அரசு என்பது தந்தைமை சார்ந்த கண்ணோட்டத்திலிருந்து பெண்களைப் பாதுகாக்கப்பட வேண்டிய, மீட்கப்பட வேண்டிய வலுவற்ற பிரஜைகளாகப் பார்க்கும் சூழலில் பெண்களின் பாலியல்சார் சுயதேர்வை வலியுறுத்தும் விவாதங்கள் அவசியமானவை.
வன்முறைச் சூழல்:
பெண்கள் மீது நிகழ்ந்துவரும் வன்முறை பற்றிய விவாதங்களைப் பாலியல் தொழில் மற்றும் உரிமை குறித்த விரிவான விவாதக் களத்தில் பொருத்திப் பார்ப்பது அவசியம். தற்போதைய வன்முறைக்கான நிவாரணம் தேடுவது அவசியம் எனினும் பாலியல் தொழிலாளர் உரிமை, பெண்களின் உடல்சார் உரிமை என்ற விரிந்த தளத்தைக் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது மிகுந்த குறுகியகால நிவாரணங்களை மட்டுமே அளிக்கும்.
இன்று பெண்ணியம் உட்படப் பல வலுவான அரசியல் கருத்தாக்கங்கள் வந்தடைந்திருக்கும் நிலை இதுவே: குறிப்பிட்ட வன்முறை நிகழ்வுகளுக்கான தற்காலிகத் தீர்வுகள் காண்பதிலும் குறிப்பிட்ட சட்ட மசோதாக்களை முன்வைப்பதிலும் ஒரு பிரச்சினையின் சம்பவத்திலிருந்து மற்றொன்றுக்குத் தீயணைப்புப் படையினர்போல அலைந்து திரிந்து சோர்வுறும் நிலையில் நாம் வைக்கப்பட்டிருக்கிறோம். அரசு உட்பட்ட ஆதிக்க அமைப்புகளைப் பொறுத்தவரை ஆதிக்கம், ஒடுக்குமுறை, சமூக நீதி, சமூக மாற்றம் ஆகியவை குறித்து மக்களிடமிருந்து வரும் விரிந்த, ஆழமான விவாதங்களும் விமர்சனங்களும் சொல்லாடல்களும் ஆபத்தானவை. நாம் இந்தப் பிரச்சினைக்காக மனித உரிமை ஆணையத்திடம் அலைவது, அந்தப் பிரச்சினைக்காக நம்மால் இயன்ற போராட்டத்தை மேற்கொள்வது, வேறொரு பிரச்சினை குறித்து எழுதுவது ஆகிய அனைத்தும் அந்தந்தப் பிரச்சினைக்கான அப்போதைய தீர்வைக் கருத்தில் கொண்டிருக்கும்வரை ஆதிக்கக் கட்டமைப்புகள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றன. நமக்கு அவ்வப்போது சாதகமாக இருப்பதுபோலும் காட்டிக்கொள்கின்றன.
அதிகாரம் தன்னைப் பல்வேறு விதங்களில் நிலைநாட்டிக்கொள்கிறது. பெண்களைக் காப்பாற்றப்பட வேண்டியவர்களாக – அதிலும் குறிப்பிட்ட பொருளாதாரப் பின்னணி கொண்ட பெண்களை – எந்தவித சுயதேர்வும் இல்லாதவர்களாகக் கருதுவதன் பின் இருக்கும் வன்முறை கட்டவிழ்க்கப்பட வேண்டும். பெண்களின் உடல் மற்றும் பாலியல் சார்ந்த உரிமைகளைப் பற்றிப் பேசும்போது ஒழுக்க நெறி சார்ந்த நம் சொந்தக் கருத்துகளைக் கழிவிரக்கம் நிரம்பிய சொல்லாடலால் மறைத்து வேறொருவிதமான வன்முறையை நிகழ்த்திவிடக் கூடாது. நல்ல பெண்கள் ஜ் கெட்ட பெண்கள் என்று வேரூன்றியிருக்கும் இருமை கேள்விக்குள்ளக்கப்பட வேண்டும். நல்ல பெண்களுக்கு உரிமைகள், கெட்ட பெண்கள் மீட்கப்படவும் சீர்திருத்தப்படவும் வேண்டியவர்கள் என்ற அடித்தளத்திலிருந்து நம் அக்கறைகள் எழுகின்றனவா என்று நாம் விசாரணைசெய்துகொள்ள வேண்டும்.
இது தவிர இந்தியக் குற்றவியல் சட்டம் (திருத்த) மசோதா 1932இன் 7(1)ச் பிரிவின் கீழும் வழக்கு பதிவுசெய்யப்படுகிறது. ஒருவரை ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதிலிருந்து தடுப்பது, அவர்மீது வன்முறையைப் பயன்படுத்துவது, அவரைத் தொடர்ந்து சென்று அச்சுறுத்துவது ஆகியவற்றை இந்தச் சட்டம் குற்றமெனக் கருதுகிறது. போலீசாரின் பல நடவடிக்கைகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் என்பது வேடிக்கையான உண்மை!
நீதி உலவும் வெளிகள்
பாலினம், பெண்ணியம், சமூக நீதி ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருப்பவர்கள் தீபா தன்ராஜின் நீதியை முன்னிட்டு ஆவணப்படத்தைப் பார்க்க வேண்டும். இந்தப் படத்தின் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளில் மொழிபெயர்ப்பாளனாக நான் பணியாற்றியுள்ளேன். இதனால் என் பரிந்துரை பாரபட்சமானது என்பதை நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்! எனினும் நீதி குறித்த சொல்லாடல்கள், அது வாழப்படும் மற்றும் வழங்கப்படும் முறைகள், இறை நம்பிக்கையிலிருந்து எழும் நீதி குறித்த புரிதல்கள், மனசாட்சி கூறும் சரியும் தவறும் என அனைத்தும் ஒன்றின் மீதொன்று உரசிக்கொள்ளும் இடங்களை நமக்குக் காட்டும் பணியை இந்த நீதியை முன்னிட்டு ஆவணப்படம் மிக அழகாகச் செய்கிறது என்பதையும் நான் சொல்லத்தான் வேண்டும்.
பெண்ணிய ஆவணப்பட இயக்குநர் தீபா தன்ராஜ் அவர்கள் தயாரித்த இப்படம் சென்ற மாதம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை அரங்கில் திரையிடப்பட்டது. பெண்கள் சந்திப்பு குழுவினரும் தமிழ்த் துறையும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தனர்.
2004ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் ஷரீஃபா கானம் அவர்களால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத்தின் பணிகளை விவரிக்கும் விதமாக இப்படம் அமைந்துள்ளது. மரபாக ஆண்களை மட்டுமே கொண்ட ஜமாத் அமைப்பு நீதி வழங்கும் முறைகளைக் கண்டு சலிப்பும் ஆத்திரமும் அடைந்த பெண்கள் பலர் ஒன்றுகூடிப் பெண்களுக்கான நீதியை உறுதிசெய்வதை முன்னிட்டு ஜமாத் குழு ஒன்றை அமைத்தனர். வழக்கமாக இஸ்லாமியச் சமூகங்களின் குடும்பம் சார்ந்த பிரச்சினைகளை ஆண்களை மட்டுமே கொண்ட அமைப்பான ஜமாத் விசாரித்துத் தீர்ப்பு வழங்கிவருகிறது. வழக்கில் சம்பந்தப்பட்டவர்களாக இருப்பினும் பெண்களுக்கு அதில் இடமில்லை. குறிப்பிட்ட பெண்ணின் தந்தையோ சகோதரர்களோ அப்பெண் தரப்பு விவாதங்களை முன்வைப்பர். வழங்கப்படும் தீர்ப்புகள் பல நேரங்களில் பெண்களுக்குச் சாதகமாக இருப்பதில்லை. மேலும் குரானாலும் ஷரியா சட்டத்தாலும் கண்டிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பான்மையான ஆண்களும் ஜமாத்துகளும் வரதட்சணை பெறுவதைக் குற்றமெனக் கருதுவதில்லை.
தம் சமூகத்திற்குள்ளேயே இத்தகைய நீதி மறுப்புகளையும் ஒடுக்குதல்களையும் அனுபவிப்பதில் ஆத்திரமடைந்த ஷரிஃபாவும் மற்ற பெண்களும் பெண்கள் ஜமாத் என்னும் குழுவாக இணைந்தனர். இந்தச் செயல்பாட்டிற்குத் தன் வாழ்க்கையில் உந்துதலாக இருந்த விஷயங்களைப் பற்றிப் பேசுகையில் ஷரீஃபா குறிப்பிடுவது 1988இல் பட்னாவில் நடந்த அகில இந்தியப் பெண்கள் மாநாட்டை. அதில் மொழிபெயர்ப்பாளராகப் பங்கேற்கச் சென்றபோது இந்தியாவில் பல இடங்களிலிருந்தும் வந்த பெண்களைச் சந்தித்த தனக்குப் பெண்கள் மீதான வன்முறை குறித்த புதியதொரு விழிப்பு அந்தச் சமயத்தில்தான் ஏற்பட்டதாகக் கூறுகிறார். தானும் தன் சகோதரிகளும் தன் சமூகத்தில் உள்ள மற்ற பெண்களும் ஒவ்வொரு நாளும் சந்திக்கும் வன்முறையைப் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்றும் ஆணாதிக்கத்தைக் கேள்விக்குள்ளாக்குவது அவசியம் என்பதையும் தான் தீவிரமாக உணர்ந்தது அத்தருணத்தில்தான் என்றும் ஷரீஃபா கூறுகிறார்.
பெண்கள் ஜமாத்தைத் தொடங்கியவராகவும் மிகப் பெரிய ஊக்க சக்தியாகவும் அவர் இருந்திருப்பினும், நீதியை முன்னிட்டு ஆவணப்படம் ஷரீஃபாவை மையமாகக் கொண்டிருக்கவில்லை. பெண்கள் ஜமாத்தின் மற்றொரு உறுப்பினரான ஹம்சூன் என்பவரைச் சார்ந்தே படம் நகர்கிறது. பெண்கள் பலரின் நீதிக்காக இவர் ஈடுபடும் தினசரிப் பணிகளையும் தன் பணி மற்றும் சமூகச் சூழ்நிலை குறித்து இவர் சிந்திக்கும் விதங்களையுமே மூலக்கருவாக இந்த ஆவணப்படம் கொண்டிருக்கிறது. ஹம்சூனைப் பொறுத்தவரை அவரது இறை நம்பிக்கை தழுவிய அன்றாட வாழ்க்கை, அதில் அவர் எடுக்கும் தீர்மானங்கள், அவர் கொள்ளும் கட்டுப்பாடுகள், ஏற்றுக்கொண்டுள்ள ஒழுக்கங்கள், அல்லாவின் பார்வையில் எது சரி என்னும் உள்விசாரணை ஆகியவற்றினூடாக எழும் நீதி குறித்த தெளிவே அவருக்குப் பிரதானமாகிறது. பெண்கள் ஜமாத்தின் மற்ற உறுப்பினர்கள் வழக்குகளை விவாதிக்கும் முறைகளை நாம் கவனிக்கும்போது நீதி குறித்த அவர்களின் உள் உரையாடலும் இத்தன்மையானதே என்பது புரிகிறது.
85 நிமிடங்கள் ஓடும் இப்படத்தில் பெண்கள் ஜமாத்தின் உறுப்பினர்கள் மூன்று வழக்குகளைக் கையாள்வதை நாம் பார்க்கிறோம். இவற்றில் இரண்டு வரதட்சணை தொடர்பான கொலைகள், ஒன்று மணவிலக்கம் பற்றியது. அவர்கள் வழக்கில் தொடர்புடையவர்களின் வாக்குமூலங்களைப் பெறுவதையும் விசாரணைகள் நடத்துவதையும் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவுசெய்து காவல் அதிகாரிகளுடன் உரையாடல்கள் மேற்கொள்வதையும் பெரும்பாலும் ஒத்துழைப்பு நல்காத ஆண்கள் ஜமாத் உறுப்பினர்களுடன் அமர்ந்து விவாதிப்பதையும் நாம் பார்க்கிறோம். இவற்றைப் பார்க்கும்போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. பெண்கள் ஜமாத்தின் உறுப்பினர்களை ஆணாதிக்கச் சமூகத்தின் ஒடுக்குதல்களை எதிர்த்துப் போராடும் பெண்ணிய வீராங்கனைகளாக மட்டுமே இப்படம் சித்தரித்திருக்க முடியும். அத்தகைய சித்தரிப்பில் அரசியல் பிழையொன்றும் இருந்திருக்காது. எனினும் அதையும் கடந்த ஒன்றின் மீது தீபா தன்ராஜ் நம் கவனத்தைக் குவியச் செய்கிறார். நீதி குறித்து இப்பெண்கள் மிக நுணுக்கமாகச் சிந்திக்கும் விதங்களையே படம் கவனப் பொருளாகக் கொண்டுள்ளது.
சமயம் சார்ந்த இறை நம்பிக்கை இப்பெண்களின் பணிக்கான முக்கிய வரையறையாக இருப்பினும் அந்த நம்பிக்கையின் பகிர்வு உண்டாக்கும் சமூக உணர்வு அவர்களை இணைக்கும் கூறுகளில் ஒன்றாக இருப்பினும், நீதியை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் கேள்விகள் மதத்தின் மைய அதிகாரத்தை நோக்கிக் கேட்கப்படுவதில்லை. மாறாகத் தனிநபர்களின் மனசாட்சியையே இவர்களின் கேள்விகள் சென்றடைகின்றன. நமது அன்றாட உரையாடல்களில் மனசாட்சி என்பதை அதிகபட்சம் ஒரு பேச்சு பலத்திற்காகவும் கவித்துவ வீரியத்திற்காகவுமே பயன்படுத்துகிறோம். நீங்கள் செய்தது சரியா என்று உங்கள் மனசாட்சியைக் கேட்டுப் பாருங்கள் என்று நாம் கூறுகையில் அதில் அதிகம் நம்பிக்கை இல்லாதவர்களாய்ப் பேச்சு மொழியில் அதிகம் பயன்படுத்தும் ஒன்றை யோசிக்காமல் நாடக வரிபோலப் பயன்படுத்துகிறோம்.
எனினும் இப்படத்தில் ஹம்சூன் மனசாட்சியைக் குறித்துப் பேசும்போதெல்லாம் அதில் மிகவும் நம்பிக்கையுள்ளவராய், நீதி/ அநீதி ஆகியவற்றை நிர்ணயிப்பதில் மனசாட்சியின் பணி அவசியமானது என்று நம்புபவராய் நமக்குத் தோன்றுகிறார். கிட்டத்தட்டக் காலாவதியாகிவிட்ட கருத்தியலான மனசாட்சியை நீதி குறித்த சொல்லாடல்களில் மீண்டும் நுழைக்கும் செயல்பாடு இது. மனிதர்களின் சுயத்தின் சாரம் அல்லது மறுக்கப்படாத, இன்றியமையாத அகம் போன்ற சிந்தனைகள் நம்மில் பலரை அசௌகரியத்தில் ஆழ்த்துகின்றன. மனசாட்சியின் மீது கொள்ளும் தீவிர நம்பிக்கையும் ஒருவிதத்தில் அத்தகையது எனினும் நாம் அந்த உறுத்தலுடனும் அந்த அசௌகரியத்துடனும் சற்று நேரம் இருக்க வேண்டுமோ எனத் தோன்றுகிறது.
மற்றொரு நிலையில், நீதி குறித்து உள்ள பல்வேறு கட்டமைப்புகளை ஒன்றின் மீதொன்று சற்று உரசச் செய்யும் விதத்தில் பெண்கள் ஜமாத்தின் பணி அமைந்திருக்கிறது. தனிமனித மனசாட்சியைப் பிரதானப்படுத்தும் விதத்தில் இருந்தாலும், நிறுவனம் சார்ந்த, பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நீதி என்று வருகையில் இப்பெண்கள் நம் நாட்டின் காவல், சட்டம் மற்றும் நீதித் துறைகளையே அணுகுகின்றனர். தங்களுடைய மதம் சார்ந்த அதிகாரங்களும் அவை கூறும் நீதிகளும் ஒருபுறமிருக்க, மனிதம் என்கிற பண்பு மற்றும் ஒழுக்கம் சார்ந்த சுயவிசாரணையில் இவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஒருபுறமிருக்க, மக்களாட்சியின் நிறுவன அமைப்புகள் வழங்கும் நீதியையும் பாதுகாப்பையுமே இவர்கள் அணுகுகிறார்கள். இது அரசின் நீதித் துறையை இவர்கள் ஆமோதிக்கிறார்கள் என்பதைவிட இப்பெண்கள் நீதியின் இன்றைய வரைமுறைகளையும் அவற்றின் தற்காலிகப் பயன்களையும் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. மாறாகப் பெரும்பாலான ஆண்கள் ஜமாத்துகள் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே, வழக்குகளைத் தம் சமூகத்திற்கு உள்ளேயே – அதுவும் ஆண்களை மட்டுமே கொண்ட ஒரு வெளியில் – தீர்மானிக்கிறார்கள்.
மேலும் மொழிக்கும் ஒடுக்குதலுக்கும் உள்ள தொடர்பை நன்கு அறிந்திருப்பது பெண்கள் ஜமாத்தினரின் வலிமை என நினைக்கிறேன். தொடக்கத்தில் தாங்கள் சந்தித்த எதிர்ப்புகள் மற்றும் மிரட்டல்கள் குறித்துப் பேசுகையில், ஜமாத் என்ற சொல்லை இவர்கள் பயன்படுத்தியதே பலரை ஆத்திரப்படுத்தியதாக ஷரீஃபா கூறுகிறார். மரபாக ஆண்களால் மட்டுமே, அவர்களின் வலிமை வாய்ந்த அமைப்பு ஒன்றைக் குறிக்கப் பயன்பட்டு வந்த சொல்லாகிய ஜமாத் என்பதை இந்தப் பெண்கள் அமைப்பு தரித்துக்கொண்டது பெரும்பான்மையான ஆண்களிடமிருந்து கண்டனத்தைச் சந்தித்தது. அத்தருணத்தில்தான் இச்சொல்லின் வலிமையையும் அதை ஏற்றுக்கொண்டதன் மூலம் அதனுடன் இணைந்திருக்கும் அதிகார உணர்வையும் பெண்கள் ஜமாத் ஒருவிதத்தில் அபகரித்திருப்பதையும் தான் உணர்ந்ததாக ஷரீஃபா கூறுகிறார். ஆனால் இவர்களின் இந்த அதிகார உணர்வுக்கும் வழக்கமாக ஆண்கள் ஜமாத்துகள் கையாண்டுவரும் அதிகாரத்திற்கும் வேறுபாடு உண்டு. தாம் படிப்படியாக வென்றுள்ள இந்த அதிகாரத்தைக் குறித்துப் – பெண்களுக்கு மறுக்கப்பட்டுவந்துள்ள நீதியை மீட்டெடுப்பதற்கான இந்தப் புதிய அதிகாரத்தைக் குறித்துப் – பெண்கள் ஜமாத்தினர் எந்நேரமும் விழிப்புணர்வுடன் செயல்படுகின்றனர்.
தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் ஜமாத் மேற்கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செயல்பாட்டை ஆவணப்படுத்துவதுடன் இப்படம் நிறைவு பெறுகிறது: அமருன்னிஸா என்பவரின் திருமண வாழ்க்கை சார்ந்த போராட்டங்களை நாம் படத்தின் முந்தைய காட்சிகளில் பார்க்கிறோம். இந்த இறுதிக் காட்சியில் இவர் தன் கணவருக்குப் பெண்கள் ஜமாத் மூலமாக தலாக் வழங்குகிறார். வழக்கமாக, தலாக் வழங்கும் உரிமை ஆண்களுக்கு மட்டுமே உண்டு. குலா என்பதை வழங்கிப் பெண்கள் அதை ஏற்றுக்கொள்ளவும் வழிமொழியவும் மட்டுமே முடியும். அந்த அதிகாரச் சமன்பாடின்மையைக் கலைத்துப்போட்டுப் பெண்கள் ஜமாத் இஸ்லாமியப் பெண் ஒருவர் தன் கணவருக்குத் தலாக் வழங்குவதைச் சாத்தியமாக்கியிருக்கிறது. மொழிக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை அறிந்து அதைக் குறிப்பிட்ட புள்ளிகளில் தகர்க்கும் விடுதலை வழிகளாக இத்தகைய செயல்பாடுகள் அமைகின்றன.
தமிழ்நாடு முஸ்லிம் ஜமாத்தைச் சேர்ந்த பெண்கள் பாலியல் பாகுபாடு குறித்தும் நீதி குறித்தும் தீவிரமாகச் சிந்திக்கிறார்கள். இறை நம்பிக்கை மிகுந்த, மனசாட்சி செறிந்த, உள்ளுணர்வு நிரம்பிய தம் தினசரி வாழ்விலிருந்து பெறும் நீதி குறித்த புரிதலை உலகில் வழங்கும், மதச்சார்பற்றதாக ஏற்றுக்கொள்ளப்படும் நிறுவன அமைப்புகள் வழங்கும் நீதி என்பதுடன் இவர்கள் உரையாடச் செய்கின்றனர். இவ்வாறு தம் பணிகளைப் பெருமளவு தம் வாழ்வனுபவத்தையும் அது குறித்த தீவிரச் சிந்தனை ஆகியவற்றையும் சார்ந்ததாக இவர்கள் கட்டமைத்திருப்பதால், வேறு நபர் ஒருவர் அதை அபகரித்து இவர்களின் பெயரில் இவர்களுக்கான பணியைச் செய்வது என்ற பொதுவான தொண்டு நிறுவனச் செயல்பாட்டைச் சாத்தியமற்றதாக ஆக்கியிருக்கின்றனர். மேலும் இஸ்லாம் குறித்த தவறான மதிப்பீடுகள் நிலவும் இக்காலங்களில் இஸ்லாமியப் பெண்களாகத் தம் வாழ்வனுபவங்களையும் இறை நம்பிக்கையையும் நிராகரிக்காமல், பெண்களுக்கான நீதியிலும் அந்த நீதியைப் பெறும் முறைகளிலும் கவனம் செலுத்துவதன் மூலம் மீட்கப்பட வேண்டிய முஸ்லிம் பெண்கள் என்னும் அதிகார அகங்காரத்தின் பார்வையையும் அவர்கள் அமைதியாக நிராகரிக்கிறார்கள்.
பாலியல் தொழிலாளர் பற்றிய கட்டுரையை எழுதுவதற்கு எனக்கு உதவியாக இருந்த நண்பர்கள் டி.டி. சிவகுமார், சங்கரி, திவ்யா சாரதி மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத பாலியல் பெண் தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றி.
அனிருத்தன் வாசுதேவன்