மனிதனின் கையெழுத்தினை கணணியினால் நகல் செய்ய முடியுமா?

234

கணணிகளில் நமக்கு தேவையான ஆவணங்களை டைப் செய்யும் வசதி காணப்படுகின்றது.

எனினும் இதற்காக தயாரிக்கப்பட்ட மென்பொருட்களைப் பயன்படுத்தும்போது தரப்பட்ட எழுத்துருக்களுக்கு என தனிப்பட்ட சிறப்பியல்புகள் காணப்படுகின்றன.

ஆனால் அவற்றின் உதவியுடன் ஒரு நபரின் கையெழுத்தினை ஒத்த எழுத்துக்களைக் கொண்ட ஆவணங்களை உருவாக்க முடியாது.

இப்படியிருக்கையில் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதற்கான விசேட மென்பொருள் ஒன்றினை தயார் செய்துள்ளனர்.

அதாவது ஒருவரின் கையெழுத்தினை ஒரு முறை உட்செலுத்திவிட்டால் அதே கையெழுத்தினைக் கொண்ட ஆவணங்களை தயாரிக்க முடியும்.

இப் புதிய முறைமைக்கு My Text In Your Handwriting என பெயரிடப்பட்டுள்ளது.

இதில் வெற்றி கிட்டிய போதிலும் குறித்த முறைமையானது 100 சதவீதம் சரியாக செயற்படவில்லை என்பதை குறிப்பிட்ட அவர்கள் மேலும் குறித்த முறைமையினை மேலும் மேம்படுத்தவுள்ளனர்.

SHARE