மனிதன் தோன்ற முன்பே மதம் தோன்றியது.தோன்றிய அனேக மதங்களுமே பெண் அடிமை,ஆண்ணாதிக்கத்தினை மறைமுகமாக வலியுறுத்தியது.அன்று தொடக்கம் இன்று வரை அவை தொடர்ந்து கொண்டே செல்கிறது.

506

 

மனிதன் தோன்ற முன்பே மதம் தோன்றியது.தோன்றிய அனேக மதங்களுமே பெண் அடிமை,ஆண்ணாதிக்கத்தினை மறைமுகமாக வலியுறுத்தியது.அன்று தொடக்கம் இன்று வரை அவை தொடர்ந்து கொண்டே செல்கிறது.
இதற்கு காரணம் மதமா?மனிதமா?என்று ஆராய்வதனால் எந்த பலனுமில்லை.மாறாக எங்கிருந்து ஆணாதிக்கம் பெறுகின்றது.எதனால் பெண் அடிமை தோன்றுகின்றது,அவற்றிலுள்ள அறிவியல் தன்னை  என்பதனை அறிய வேண்டும்.”ஆண்கள் வலிமையாக படைக்கப்பட்டமைக்கான காரணம் பலவீனமான பெண்களை பாதுகாப்பதற்காகவே”.அந்த உண்மையினை உணராத ஆணாதிக்க சமூகம் மேலும் பெண்களை ஆதிக்கம் பண்ணுவது சமூகத்தின் சாபமே.
         இக் கட்டுரையினை நான் எழுதக் காரணம் சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற”முதலிரவு கொலை”சம்பவமாகும்.திருமணம் முடித்து தனது கணவனோடு தனது வாழ்க்கை பாதையில் பயணிக்க சென்ற மணப் பெண் முதல் நாள் இரவே  கொல்லப்பட்டுள்ளார்.காரணம் அந்த பெண் கன்னித்தன்னை இழந்தமையினால் கொல்லப்பட்டுள்ளதாக கொலை செய்த கணவன் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.என்னவொரு மிருகத்தனம்?மனிதம் எங்கே போகின்றது?அறியாமை பகுத்தறிவை வெற்றி கொண்ட வேடுவ காலத்திலா நாம் வசிக்கிறோம்?
எவ்வளவு கனவுகளோடு திருமணம் முடித்து தனது கணவன்தான் இனி தனது எதிர் காலம் என்று நம்பி தன்னையே அவனுக்கு வழங்கிய அந்த முதல் நாளே அந்த சகோதரி கொல்லப்பட்டுள்ளார்.அச் சகோதரியின் உயிர் பறிக்கப்பட்டது மாத்திரமன்றி கொல்லப்பட்டதற்கு”கன்னி தன்னை இழந்திருந்தார்”என்றதொரு பழியினையும் சுமத்தியுள்ளான் அக் கொலைகார பாதகன்.என்ன இது?எங்க நாம் நிற்கிறோம்?கன்னித் தன்னை என்றால் என்ன?அதை யார் வரையறுத்தது?எது அதனை தீர்மானிப்பது?பெண்களை மட்டுமா அது சார்ந்தது?…”காட்டுமிராண்டி சமூகத்தில் காளையர் காடையராக மாறும் போது எண்ணியதெல்லாம் கன்னி தன்னை இழந்ததாகவே தோணும்”.
கன்னித் தன்மை என்றால் உடல் சார்ந்ததா?அல்லது மனசு சார்ந்ததா?என்ற கேள்வி நிலவினாலும்,ஆணாதிக்கமுள்ளவர்கள் மற்றும் பழைமைவாதிகள் அது உடல் சார்ந்ததாகவே நம்புகின்றனர்.அவர்களுக்கு சரியான புரிதல்,அறிவியல் இல்லை.அதனை நாம் தெளிவு படுத்தியேயாகனும்.காரணம் இனி வருகின்ற ஆண்களாவது எது உண்மை எது பொய் என்ற விம்பத்தினை இனியாவது தனது மனசில் பதிப்பாராயின் கொலை காரனாக வேண்டிய அவசியமிருக்காது.”நகைத்தினை புதைத்தால் நக காளாண் வளரும் என்ற கற்பனை கதையினை நம்பும் எத்தனையோ பேர் தற்போதுகூட இருக்கிறார்கள்.அதற்கு காரணம் அவர்களுக்கு தவறான புரிதலினை வழங்கியுள்ளனர்.அதில் உண்மையில்லை என்று தெளிவு படுத்தப்படுமாயின் அக் கற்பனை கருத்தினை கதைப்பதற்கு அடுத்த சந்ததி இருக்காது.அதனால் சட்டத் தரணி என்ற வகையில் எமது தொழில் சார் அனுபவத்தின் மூலமாக கன்னித் தன்மை பற்றிய தவறான புரிதலினை விளக்க ஆசைப்படுகிறோம்.கன்னித்தன்மை இழந்த பெண் சார்ந்த பல வழக்குகள் உலமெங்கும் நடைபெற்றுள்ளன.எமது நாட்டிலும் பல வழக்குகள் இடம்பெற்றுள்ளன.ஏழு வருடங்களுக்கு முன் தெகிவளையை சேர்ந்த ஆயிஷா(பெயர் மாற்றம்) என்ற பெண்ணிற்கும் அத்தகைய பிரச்சனை காரணமாக ஆயிஷாவின் கணவனால் விவாகரத்து கோரப்பட்டது.அவ்வழக்கில் ஆஷியா கன்னித் தன்மை இழக்கவில்லை என்று விஞ்ஞான(அறிவியல் சான்று)ரீதியில் நிரூபக்கப்பட்டு,ஆயிஷா மீது அவதூறு செய்ததன் பிரகாரம் ஆயிஷாவின் கணவருக்கு எதிராக மான நஷ்ட வழக்கு போட்டு மூன்று மில்லியன் ரூபா நஷ்ட ஈடாக ஆயிஷாவின் கணவரால் ஆயிஷாவிற்கு வழங்கப்பட்டது.இந்த நஷ்ட ஈட்டினை அந்த நபர் வழக்கியமைக்கு காரணம் கன்னித் தன்மை பற்றிய போதிய புரிதலில்லாமேயாகும்.
கன்னித் தன்மை என்பது கீமென் மென்சவ்வினையே(Hymen tissue) குறிக்கிறது.இந்த மென்சவ்வானது மிக மெல்லியதாகும்.இந்த மென்சவ்வுதான் முதல்தர உடலுறவின் போது கிழிந்து குருதி சிறிய அளவில்  வெளியேறும்.(அனேகமானவர்களுக்கு குருதி வந்தால் மட்டுமே கன்னி தன்னை என்று நம்புகான்றனர்.அந்த Hymen tissue தடித்தல்,மெல்லியதாகுதல் போன்ற நிகழ்வை வைத்தே அது தீர்மாணிக்ப்படும்.அதனை எழுதவும் விருப்பமில்லை)இந்தவொரு காரணத்தை (திருமணமான முதலிரவில் பெண்ணுக்கு குருதி வந்தால் அப் பெண் கன்னித் தன்மையுள்ளவள்)மட்டுமே வைத்து ஆணாதிக்கவாதிகள் பெண்ணின் கன்னித்தன்மையினை அளவிடுகின்றனர்.ஆனால் பாரமான வேலை செய்தல்,ஓடுதல்,பாய்தல்,சுய இன்பத்தில் ஈடுபடுதல்,துஷ்பிரயோகம்.பலாத்காரம்..போன்ற காரணத்தினால் அந்த கீமென் மென்சவ்வு இயல்பாகவே இல்லாமலாகிவிடும்.சில வேளை சில பெண்களின் பிறப்பியல்பால் அந்த கீமென் சவ்வு யோனி துவாரத்தினை முழுமையாக மூடியிருப்பதில்லை.இத்தகைய காரணங்களால் கீமென் மென்சவ்வு பெண்களிடமிருப்பதில்லை.இத்தகைய பெண்கள் திருமண முதல் நாள் இரவில் கணவனுடன் இணையும் போது குருதி வர வாய்ப்பில்லை.ஆணாதிக்கவாதிகளே! இப்போது கூறுங்கள் முதல் நாள் இரவில் தங்களுடைய மனைவிக்கு குருதி வரவில்லை என்பதனால் தங்கள் மனைவி கன்னித் தன்மை இழந்தவளா?
ஆணாதிக்கவாதிகளே!நான்  தங்களுடைய தங்கைக்காவும் தான் கருத்து கூறுகிறேன்.
தங்களுடைய தங்கையை அவ்வாறு நினைப்பது எந்த விதத்தில் நியாயம்? அவ்வாறு வளர்த்தது யார் தவறு? இதை கேட்க வலிக்குதுதானே? கோபம் வருதுதானே? இதே கோபம்தானே உண்மையாக, பரிசுத்தமாக வளர்த்த எத்தனை தகப்பன்மார்,அண்ணாமார்கள்,தாய்மார்களை கேவலப்படுத்தியிருக்கும்.ஒருவேளை தாங்கள் கூறும் கருத்து உண்மையாகவே வைத்துக் கொண்டாலும், அப் பெண்ணின் கன்னித் தன்னையை நாசமாக்கியதும் தங்களை போன்ற ஒரு ஆண்தானே? அந்த ஆணுக்கு கன்னி தன்னை இல்லையா? அந்த பாவத்திற்கு என்ன தண்டனை? கன்னி தன்னையினை எவ்வாறு கண்டுபிடிக்கின்றீர்கள்? அதுவும் ஒரு இரவில் கண்டுபிடிக்குமளவிற்கு ஏதாவது கருவி வைத்துள்ளீர்களா? இருந்தால் கூறுங்கள் நான் சட்டத் தரணி என்ற அடிபடையில் அரசாங்கத்தின் கவனத்திற்கு சமர்பித்து அதனை சட்டமாக அங்கிகரிக்க சிபாரிசு செய்கிறேன்.சட்டமாக்கப்பட்டால் வீணான சந்தேகம் வாராதுதானே? அனைத்து ஆண்களும் முதலிரவிற்கு போகும் போது தாங்கள் கண்டு பிடித்த கருவியையும் கொண்டு போய்விடுங்கள்…..ஆணாதிக்கவாதிகளே!நான் தங்களது மனதை நோகடிப்பதற்காக அவ்வாறு கூறவில்லை, .100 பெண்களுள் ஒரு பெண்ணாவது பரசுத்தமானவளாக இருப்பாள்தானே? அந்த ஒரு பெண்ணின் மனைதை நோகடித்துவிடக்கூடாது என்பதனாலதான் அவ்வாறு கூறுகிறேன்.
ஆண்கள் தன் மனைவியுடன் மட்டும் உடலுறவு வைத்தால் எந்த பெண்ணும் கன்னித் தன்மையினை இழக்க வேண்டிய அவசியமில்லை.எந்த பெண்ணும் ஒரு ஆணுடன் பழகும் போது உடலுறவு கொள்ளனும் என்ற ஆசையில் பழகுவதில்லை.அதிலும் கன்னி வயதிலுள்ள பெண்கள் ஒருபோதும் உடலுறவில் தைரியம் கொள்ளுவதில்லை.தவறு செய்பவர்கள் அனேகமானவர்கள் திருமணமான பெண்களே! .அதேவேளை அனேக ஆண்கள் பெண்ணுடன் பழகுவதே உடலுறவிற்காகவே.”உன்னை உயிரை விட நேசிக்கிறேன் என்றும் நீங்கள் தான் என் மனைவி” என்றும் ஆண்கள் ஆசை வார்த்தை காட்டினால் எந்த பெண்தான் அவனிடம் தனது கன்னி தன்மையினை இழக்க மாட்டாள்? ஆண் சுத்தமாக இருந்தால் பெண் பரிசுத்தமாக இருப்பாள்.கன்னித் தன்மை இழந்த பெண்ணுக்கு ஒரு ஆண்தான் குற்றவாளி என்று ஏன் உஙகளை போன்ற ஆணாதிக்கவாதிகள் ஏற்றுக் கொள்வதில்லை?”எய்தவனை விட்டு அப்பை தவறு கூறுவது என்ன நீதி?குடிப்பவன் இருப்பதனாலயே வடிப்பவன் வடிக்கிறான்.குடிப்பவன் நிறுத்தினால் வடிப்பவனுக்கு அவசியமில்லை..
சில பெண்களும் நெறி தவறி நடப்பது கண்டிக்கத்தக்கது.ஆசை வார்த்தைகளாலும்,ஆசை காரணமாகவும் சில பெண்கள் செய்யும் தவறால் உண்மையான பெண்களை கலங்கப்படுத்துவது தர்மமல்ல.கன்னி தன்மை இழந்ததனை கொலைகார கணவன் எந்த நிர்ணயத்தை வைத்து கண்டு பிடித்தான்?அவன் என்ன கடவுளா?அவனை ஆதரிக்கும் நீ மனித பிறப்பா?ஒரு வேளை அந்த சகோதரி கன்னி தன்மையினை இழந்திருந்தாலும் கொலை பண்ணுவதற்கு அவனுக்கு என்ன உரிமையுள்ளது?கன்னித் தன்மை இழந்ததற்கு உயிரை இழக்க வேண்டுமா?இதெல்லாம் மனித நேயத்துடன் பிறக்காத மிருகங்களுக்கு சொல்லியும் புரியாது.இனி வருகின்ற ஆக்க பூர்வமான,மனித நேயங் கொண்ட ஆணாதிக்கமற்ற ஆண் சமூகமே நன்றாக தெளிவு பெறுங்கள்.பெண்ணின் கற்பு அவளது உடல் சார்ந்த உறுப்பில் இல்லை.அது விஞ்ஞான ரீதியில் பொய் வாதமாகும்.ஒரு வேளை ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் அவள் கன்னித்தன்மை,கற்பிழந்தவள் என்று அர்த்தமா?வீதியால் போகும் உனது உடம்பில் சேறு பட்டால் நீ கலங்கப்பட்டவன் என்று அர்த்தமா?பெண்ணை மட்டுமே ஏன் கலங்கப்பட்டவளா நினைக்கிறாய்?நன்றாக யோசி.கற்பானது மனசு சம்பந்தப்பட்டது”விபாச்சாரி தனது தவறை உணர்ந்து முழு மனசுடன் திருந்தும் அந்த நொடிப் பொழுதே பரிசுத்தமாகிறாள்.அந்த நிமடமே நான் அவளை திருமணம் செய்து மனமகிழ்வோடு வாழுவேன்”உன்னால் முடியுமா?நீ அவ்வாறு செய்யாவிடினும் நல்ல பெண்களை கேவலப்படுத்தாமலிருந்தாலே கோடி புண்ணியமாகும்.
SHARE