மனிதர்களை குழப்பத்தில் ஆழ்த்திய புகைப்படங்கள்

349
செவ்வாய் கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்துவரும் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம், அவ்வப்போது வியப்பூட்டும் தகவல்களை வெளியிட்டு வருகிறது.எலி, கரடி, பெண், பிரமிடு, புத்தர் சிலை போன்றவை செவ்வாய் கிரகத்தில் இருக்கின்றன என்பதனை புகைப்பட ஆதாரங்களோடு வெளியிட்டாலும், தொடர்ச்சியாக வெளியான தகவல்களால் மக்கள் அதிர்ச்சியடைந்ததோடு மட்டுமல்லாமல் குழப்பத்திலும் மூழ்கினர்.

அப்படி என்னதான் இருக்கிறது செவ்வாய் கிரகத்தில்?

தண்ணீர்

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது என்றும் அந்த நீரானது உப்புக்கரிக்கும் தன்மை கொண்டுள்ளது எனவே மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகைள் அங்கு அதிகம் என புகைப்படங்களை வெளியிட்டது.

மேலும், அந்த நீரானது திரவ நிலையில் இருப்பதையும், சரிவுகளிலும் நீரோடை பள்ளத்தாக்குகளிலும் நீர் இருப்பதினை காட்டும் ஆதாரங்களை வெளியிட்டன.

குட்டி கரடி

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் செவ்வாய் கிரகத்தில் குழந்தை கரடி இருக்கிறது என்ற தகவலை நாசா வெளியிட்டது, வேற்றுகிரகவாசிகளால் வேட்டையாடப்பட்ட அந்த குழந்தை கரடியின், முடிகள் மற்றும் நிழல் உருவத்தினை வைத்து அது உயிரோடு இருப்பதாக தெரிவித்தனர்.

புத்தர் சிலை

புத்தர் சிலை போன்ற வடிவில், மனித முகம்போன்று சிலை இருப்பதை கண்டுபிடித்தனர், செவ்வாய் கடவுள் என்றழைக்கப்பட்ட இந்த சிலையை பார்த்த சிலர், இயேசு நாதர் அமர்ந்திருப்பது போன்று இருக்கிறது என கருத்து தெரிவித்தனர்.

ஒரு மாயை தோற்றமாக காட்சியளித்த இந்த சிலையின் தலைப்பகுதி வலதுபக்கமாக திரும்பியிருக்க, பருமனான வயிறுடன் காட்சியளித்தது.

செவ்வாய் கிரகத்தில் பெண்

செவ்வாய்கிரகத்தில் பெண் இருப்பது போன்று வெளியான புகைப்படத்தை தொடர்ந்து, பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

சின்ன குழந்தைகள் தங்களது படுக்கை அறையில் ஏதேனும் நிழலினை பார்த்துவிட்டால் கூறும் கதைகளை போன்று இருப்பதாக விமர்சனம் செய்யப்பட்டன.

நாசா வெளியிட்ட அந்த புகைப்படத்தில், பாறைகளுக்கிடையே, ஒரு முக்கோண வடிவ பாறையின் மீது சிறிய அங்குல உயரத்தில் ஒரு பெண் நிற்பது போன்று இருந்தது.

அது உண்மையில் பெண்தானா அல்லது ஏதேனும் சிலையா என்பது குறித்த கேள்விகளும் பார்ப்பவர்களுக்கு எழுந்தன.

 செவ்வாய் கிரகத்தில் மரம்

செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை சுற்றி HiRISE என்ற ஆராய்ச்சியாளர் எடுத்த புகைப்படத்தில், கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள குன்றுகள் மற்றும் மலைகளுக்கிடையே, கருமையான நிறத்தில் நீண்ட கூம்பு போன்ற காணப்படுகின்றன.

கார்பன் டை ஆக்சைடு அல்லது உறை பனியால் மணற்குன்றுகள் மூடப்பட்டுள்ளது போன்று காட்சியளித்தன.

செவ்வாய் கிரகத்தில் எலி

கஸ்ட் 2012 ஆம் ஆண்டு தன்னார்வ வானியலாளர் Joe White என்பவரால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், இது பார்ப்பதற்கு ஒரு மாயையாக இருந்தாலும், அந்த எலியின் கண்கள் மற்றும் மூக்கு நன்றாக தெரிகிறது.

இது ஒரு பெரிய எலி என்றும், அதன் வால்பகுதி இரண்டு அல்லது மூன்று அடி இருக்கும் எனவும் கூறியுள்ளார் இந்த எலியின் புகைப்படம் 6ft உயரத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் பிரமிடு

பாறைகளுக்கு இடையே எகிப்தில் இருப்பது போன்று மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டுள்ள பிரமிடு போன்ற புகைப்படத்தினை கடந்த 2015 ஆம் ஆண்டு யூன் மாதம் வெளியிட்டது.

ஒரு அறிவார்ந்த கட்டிடமாக உள்ளது. இந்த பிரமிடு கார் அளவில் உள்ளது. ஆனால் பெரிய அமைப்பு முறை செவ்வாய்யின் நிலப்பரப்புக்கு அடியில் இருக்கலாம்.

இதனால் பண்டைய எகிப்து நாகரிகத்தினர் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்து இருக்க கூடும் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

SHARE