வாழும் காலம் முடிந்துவிட்டால் சாவு எப்படியெல்லாம் வரும் என்று எதிர்பார்க்கவே முடியாது. இதனை பல சம்பவங்கள் எடுத்துக்காட்டிக்கொண்டிருக்கின்றன.
அவ்வாறே இங்கும் ஒருவர் சற்றும் எதிர்பாராத விதமாக தனது உயிரைப் பறிகொடுத்துள்ளார். தொழிற்சாலை ஒன்றிற்கு சொந்தமான வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த கேட்டுடன் பலமாக மோதியுள்ளது.
இதன்போது கேட் உடைந்து குறித்த நபரின் தலை மீது விழ அவரது தலையும் தரையில் பலமாக அடிபட்டுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்ட போதிலும் உயிர் பிரிந்துவிட்டது.