மனித உரிமை கழகத்தின் விசாரணை அறிக்கையை 2015 மார்ச்சில் வெளியிட வேண்டும்- பிரித்தானியாவில் ஓங்கி ஒலித்த குரல்

449

 

 

APPG for Tamils Annul Dinner 2015,Btf15பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி தமிழர்களுக்கான நீதி கோரிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதில் அரசியல் சமய தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ் இன செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

 ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான சந்திப்பில் பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் பரத நாட்டிய நிகழ்வும் இடம்பெற்றது. இதை தொடர்ந்து பிரித்தானிய தமிழர் பேரவையின் பொது செயலாளர் திரு. ரவி குமார் வரவேற்புரையை நிகழ்த்தினார். இலங்கையில் இடம்பெற்றிருப்பது ஆள் மாற்றமே அன்றி ஆட்சி மாற்றம் அல்ல, இலங்கையில் இனவழிப்பு இடம்பெறும் போது ஆட்சியில் இருந்த சிங்கள இனவாத பிரதிநிதிகளே தற்போதைய ஆட்சியில் இடம்பெற்றிருப்பதால் இதை ஒரு ஆட்சி மாற்றமாக  பார்க்க முடியாது என அவர் தனது உரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய திரு. ரவி குமார், ஒன்று கூடலுக்கு சமுகமளித்திருந்த ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்ததுடன், குறிப்பாக இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையை வெளி உலகுக்கு படம் பிடித்து காட்டிய Channel 4 ஊடகவியலாளர் கலம் மக்ரேக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மனித உரிமை கழகத்தின் விசாரணை அறிக்கையை 2015 மார்ச்சில் வெளியிட வேண்டும் என்பது அவசியமானது ஆகும். இலங்கையின் அரசியல் நிறுவனங்களை முழுமையாக மறுசீரமைக்காமல் இலங்கையில் இவ்வின அழிப்பு முற்றுப்பெறாது என வலியுறுத்திய அவர் என்பதை வலியுறுத்திய அவர் தமிழ் மக்களின் முழுமையான சுய நிர்ணய அங்கீகாரம் இல்லாமல் இது சாத்தியம் இல்லை எனவும் தெரிவித்தார். இதேநேரம் மக்களின் வாழ்விடங்கள், காணிகளில் நிலை கொண்டுள்ள இராணுவம் உடனடியாக வெளியேற்றப்படவேண்டும்,  ஸ்ரீ லங்கா அரசின் மீது பாரிய அழுத்தங்களை பிரயோகித்து மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க சர்வதேசத்தை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தனது  உரையில் குறிப்பிட்டார்.
 ஒன்றுகூடலில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற தலைவரும் பிரித்தானிய  பழமை வாத கட்சி  பாராளுமன்ற உறுப்பினருமான திரு.Lee Scott,, தனது உரையின் ஆரம்பத்தில் 2009இல் இலங்கையில்  இனப்படுகொலை இடம்பெறும் நேரம் அதை தடுக்க தவறிய ஒருவர் என்கின்ற ரீதியில் தானும் அங்கே கூடியிருந்தவர்கள்  சார்பாக தமிழ் மக்களிடம் மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துக்கொண்டார். அதுமட்டுமன்றி இலங்கையில் இனவழிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க தாம் கட்டாயமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
நீதி அமைச்சர் Chris Grayling, தமிழ் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவுக்குமான உறவுமுறையில் பெருமையடைவதாக குறிப்பிட்டார். அரசியல்வாதிகள், பிரித்தானிய ஸ்தாபனங்களின்  பிரதிகள் பலர் 2009இல் இலங்கையில் இடம்பெற்ற பாரிய இனப்படுகொலைக்கு தமது கவலையை வெளிப்படுத்தியதுடன் இனிவரும் காலத்தில் இது போன்ற செயற்பாடுகள் இடம்பெறாமல் இருக்க பாரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில், கலந்து கொண்ட  அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், எரிசக்தி மற்றும் காலநிலை மாற்ற அமைச்சர் எட் டேவி, Bassetlaw பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மன், Mitchem & Morden பகுதி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர்களுக்கான  அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழு பிரதி தலைவர் Siobhain McDonagh, தொழில் கட்சியின் வட அயர்லாந்துக்கான நிழல் அமைச்சர் Ivan Lewis, Harlow பகுதி பாராளுமன்ற உறுப்பினரும், அனைத்துக்கட்சி தமிழ் பாராளுமன்ற குழு பொருளாளர் மற்றும் செயலருமாகிய Robert Halfon, Carshalton & Wallington பகுதி பாராளுமன்ற உறுப்பினரும் கீழ்சபை பிரதித்தலைவர் Tom Brake,  அரச கொரடா வும் Croydon Central பாராளுமன்ற உறுப்பினருமாகிய Gavin Barwell ஆகியோர் தமது உரைகளை நிகழ்த்தினர். பிரித்தானியாவில் இருக்கும் தமிழர்களின் செயற்பாடுகளை பாராட்டும் வகையிலும் தமிழர்களுக்கான நீதியை பெற வலியுறுத்தும் பேச்சுக்களாக இவர்களது உரைகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு பிரித்தானிய எதிர்க் கட்சி தலைவர் எட் மில்லிபான்ட்டின் செய்தி அடங்கிய காணொளி திரையிடப்பட்ட அதேவேளை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரனின் செய்தி பாராளுமன்ற உறுப்பினர்  Nick de Bois இனால் வாசிக்கப்பட்டது.
சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை தான் தமிழர்கள் அனைவரும் பாரிய வன்முறைகளாலும் மனித உரிமை மீறல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே உடனடியாக சர்வதேச விசாரணை நடத்தப்படுவேதே சரியானது என வெளிப்படையாக தமது கருத்தை பதிவு செய்தனர்.
முன்னதாக ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியின் போதும் தமது பேச்சுக்களின் போதும் பலர் ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியதுடன் சர்வதேசத்தின் கடமை முடிந்துவிடவில்லை என்பதை வலியுறுத்தினர். இதை கருத்தில் கொண்டு இங்கிலாந்தில் வசிக்கும் தமிழ் சமுகம்  தொடர்ந்து தமது நடவடிக்களை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். பாராளுமன்ற உறுப்பினர்  Ivan Lewis தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்  Charles Tannock ஊடகங்களுக்கு தனது கருத்தை வெளிப்படுத்தினார். 2010இல் ஐரோப்பிய யூனியனால் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.பி ப்ளஸ் சலுகை நிறுத்தம் தொடரவேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
 வட அயர்லாந்துக்கான அமைச்சரும் Chipping Barnet பாராளுமன்ற உறுப்பினருமான Theresa Villiers,   உணவு மற்றும் சுற்று சூழல் நிழல் அமைச்சரும் Ogmore பாராளுமன்ற உறுப்பினருமான Huw Irranca-Davies, Cotswolds பாராளுமன்ற உறுப்பினர் Geoffey Clifton-Brown, Harrow East பாராளுமன்ற உறுப்பினர் Bob Blackman, Ealing Southall பாராளுமன்ற உறுப்பினர் Virendra Sharma, Ealing North பாராளுமன்ற உறுப்பினர் Stephen Pound, Ilford South பாராளுமன்ற உறுப்பினர்  Mike Gapes, Wycombe பாராளுமன்ற உறுப்பினர்  Stephen Baker என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
லண்டன் சட்டசபை உறுப்பினர்கள், Roger Evens, Dr Onkar Sahota and Navin Shah போன்றோரும்  கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கினர்.
தமிழீழத்தில் பயின்று பயிற்சி பெற்ற மருத்துவர் திரு. தர்மரத்தினம் முள்ளிவாய்க்கால்  இறுதி வரையான தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். அவர் கடந்த 2009 இறுதி யுத்தத்தின் போது மக்கள் எப்படி வதைக்கப்பட்டனர் என்பதை விளக்கிப் பேசினார். யுத்தத்தின் வடுக்களின் சான்றாக தானும் ஒருவர் இருப்பதாகவும் இந்த யுத்தம் தனக்கு எப்படியான மன உடல் பாதிப்புக்களை கொடுத்தது என்பதையும் உணர்ச்சி பொங்க எடுத்துரைத்தார். வைத்தியசாலை அமைந்திருந்த பகுதியில் இருந்து ஆயுதங்கள் மற்றும் விடுதலை புலிகள் போன்றோர் விலகி இருந்த போதும் வெளியில் செஞ்சிலுவை கொடிகள் மற்றும் செஞ்சிலுவை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதும் ஸ்ரீ லங்கா இராணுவம் தொடர்ந்து ஷெல் வீச்சு தாக்குதலை நடத்தியது என்பதை வெளிப்படுத்தினார். இன்னமும் ஸ்ரீ லங்கா இராணுவத்தின் அட்டூழியம் தொடர்வதை சுட்டிக்காட்டிய  அவர் அங்கே சுமுக நிலை திரும்ப பிரித்தானியா உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
 APPG for Tamils Annul Dinner 2015,Btf15APPG for Tamils Annul Dinner 2015,Btf11APPG for Tamils Annul Dinner 2015,Btf1

SHARE