மனித தலைமுடியை விட நுண்ணிய வெப்பமானி! விஞ்ஞானிகள் சாதனை

285

625.117.560.350.160.300.053.800.210.160.70 (1)

உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் நனோ தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சிகளில் ஆழமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் மூலம் மிகவும் சிறிய உபகரணங்களை உருவாக்க முடியும் என்பதே முதன்மை காரணம் ஆகும்.

இவ்வாறான முயற்சியின் பயனாக மிகவும் நுண்ணிய வெப்பமானியை கனடாவை சேர்ந்த வேதியியல் நிபுணர்கள் உருவாக்கியுள்ளனர்.

இவ் வெப்பமானியானது மனித தலை முடியிலும் 20,000 மடங்கு சிறியதாகும். அத்துடன் கணணி புரோகிராம் மூலம் இயங்க வைக்கக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

இந்த வெப்பமானியை உருவாக்குவதற்கு சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட கண்டுபிடிப்பு தூண்டுகோலாக அமைந்துள்ளது.

அதாவது குறித்த வெப்ப நிலைக்கு வெப்பமேற்றப்பட்ட DNA மூலக்கூறுகள் விரிவடையாது காணப்படும் என்று 60 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆய்வினை அடிப்படையாகக் கொண்டே DNA மூலக்கூறினை பயன்படுத்தி கனடாவின் மொன்றியல் பல்கலைக் கழகத்தினை சேர்ந்த வேதியியல் நிபுணர்கள் மிக நுண்ணிய வெப்பமானியை உருவாக்கியுள்ளனர்.

SHARE