மனித தோலை விந்தணுக்களாக மாற்றும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

291

குழந்தைப் பாக்கியம் அற்று இருப்பதற்கான காரணங்களுள் ஆரோக்கியம் அற்ற விந்தணுக்களும் ஒன்றாகும்.

625.117.560.350.160.300.053.800.210.160.70

இதற்கான வெவ்வேறு மாற்று வழிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் மனித தோலை விந்தணுக்களாக மாற்ற முடியும் என ஸ்பெயின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விஞ்ஞானிகள் குழு கருத்து தெரிவிக்கையில் 2012ம் ஆண்டின் பிற்பகுதியில் ஜப்பானை சேர்ந்த Shinya Yamanaka மற்றும் பிரித்தானியாவின் John Gordon என்பவர்கள் இணைந்து இளம் வயதினரின் கலங்களை இழையங்களாக மாற்றி இருந்தனர்.

இதற்காக அவர்களுக்கு நோபல் பரிசும் கிடைத்திருந்தது. இச் செயற்பாடே தமக்கு தூண்டுகோலாக அமைந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இப் புதிய தொழில்நுட்பம் ஊடாக பரம்பரை அலகு மாறாத ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவ் வருட ஆரம்பத்தில் கரு முட்டையினுள் விந்தணுக்களை செலுத்துவதற்கு டெஸ்ட் டியூப் முறை ஒன்றினைப் பயன்படுத்தி ஆரோக்கியமான எலிகளை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE