உலக அளவிலேயே பெரும் தலைவலியாக இருக்கும் நோயாக எயிட்ஸ் காணப்படுகின்றது.இந் நோயை பரப்பும் HIV ஆனது மனித நிர்ப்பீடனத் தொகுதியை தாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை இல்லாமல் செய்கின்றது.
இவ்வாறான நோயை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஆய்வுகளில் மற்றுமொரு முன்னேற்றம் கிடைத்துள்ளது. அதாவது நோயெதிப்பு கலத்தில் உள்ள HIV இனை CRISPR/Cas9 எனும் ஜீன் (Gene) எடிட்டிங் முறை மூலம் நீக்கி விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். இவ்வாறு HIV இனை குறித்த கலத்திலிருந்து நீக்குவதன் மூலம் வைரஸ் ஆனது தொடர்ச்சியாக இரட்டிப்படைந்து பல்கிப் பெருகுவதை தடுக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். CRISPR/Cas9 எனும் ஜீன் எடிட்டிங் முறையானது பரம்பரை அலகுகள் சம்பந்தமான நோய்களுக்கும் நிவாரணம் அளிக்க பயன்படக்கூடியது. இந்த சிகிச்சை முறை 2015ம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. |