மனைவி சங்கீதாவின் தங்கையுடன் விஜய் இருக்கும் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.

99

 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளிவந்த முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Goat படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 69 படம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை. ஆனால், ஹெச். வினோத் தான் இப்படத்தை இயக்கப்போகிறார் என்றும், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

விஜய்க்கும் – சங்கீதாவிற்கும் கடந்த 1999ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சஞ்சய், திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் இடையே சில பிரச்சனைகள் இருப்பதாக கூறப்படுகிறது.

சங்கீதாவின் தங்கை
இந்த சர்ச்சை கிளம்பிய பின் வெளியில் தலைகாட்டாத சங்கீதா, ஷங்கரின் மகள் திருமணத்திற்கு வருகை தந்திருந்தார். அந்த புகைப்படம் கூட ரசிகர்கள் மத்தியில் வைரலானது. சங்கீதாவின் தாய், தந்தையின் புகைப்படம் கூட வெளிவந்துள்ளது. ஆனால், அவருடைய தங்கையின் புகைப்படம் இதுவரை பலரும் பார்த்தது இல்லை.

இந்த நிலையில், விஜய் தனது மனைவி சங்கீதா மற்றும் அவருடைய தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

SHARE