மனைவி ஷாலினியுடன் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஜித்..

133

 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் படம் குறித்து சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்திற்கு குட் பேட் அக்லி என தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளனர்.

ஷாலினியுடன் வந்த அஜித்
விடாமுயற்சி படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் அஜித் தனது நண்பர்களுடன் இணைந்து பைக் ரைடு சென்று இருந்தார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கூட இணையத்தில் வெளிவந்து வைரலானது.

இந்த நிலையில், பைக் ரைடு சென்றிருந்த அஜித் தற்போது சென்னை திரும்பிவிட்டாராம். சென்னையில் நடந்தது நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவி ஷாலினியுடன் கலந்துகொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.

SHARE