கஞ்சா போதைப் பொருளை விற்பனைக்காக உடைமையில் வைத்திருந்த இளைஞனுக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி 40 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தார்.
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் பண்ணையில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் 2ஆயிரத்து 100 கிராம் கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச் சாட்டில் மன்னார் பேசாலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவருக்கு எதிரான வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் விசாரணைக்காக நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது கஞ்சாவை உடைமையில் வைத்திருந்தமை,விற்பனை செய்ய முயற்சித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதனை சந்தேகநபர் ஏற்றுக்கொண்டார்.
இதனை அடுத்து அவருக்கு இரு குற்றங்களுக்கும் தலா 20 ஆயிரம் ருபா தண்டமும் செலுத்த தவறின் 20 மாத சிறைத்தண்டனையும் விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார்.