வடமாகாணச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரம் இன்று மன்னாரில் மன்னார் வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் மீ.மு.ஸியான் தலைமையில் அல் அஸ்கார் தேசியப் பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினர்களாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்,வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.