மன்னார் ஆயருக்கு நடந்தது என்ன??? வெளிவந்தது உண்மை! அதிர்ச்சித் தகவல்

319

மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் மன்னார் ஆயருக்கு கொடுத்த தேனீரை அருந்திய பின்னரே அவர் சுகயீனமுற்றுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழ் தேசிய போராட்ட வாழ்வில் மன்னார் ஆயரின் பங்கு என்ன என்பதனை அனைத்து தமிழ் மக்களும் நன்கு அறிந்துள்ளதோடு, மன்னார் ஆயரின் பலம் தொடர்பில் சர்வதேச நாடுகளும் புரிந்து கொண்டுள்ளனர்.

யுத்தம் முடிவுற்ற பின்பு இலங்கையில் இடம்பெற்றது மனிதாபிமான பணிகளா? அல்லது மனித படுகொலையா? என்பது தொடர்பில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு தெரிவித்திருந்தார்.

திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை என்றும், யுத்தம் நடந்து முடிந்த பின் தமிழ் மக்களை அப்போதைய மஹிந்த அரசாங்கம் கொடுமைப்படுத்துகின்றது என்று உலகிற்கு எடுத்துக்கூறியிருந்தார்.

இதனால் இலங்கை அரசாங்கத்திற்கும் குறிப்பாக இலங்கை இராணுவத்தின் மீது காணப்பட்ட போர்க்குற்ற விசாரனைகள் அதிகரித்த நிலையில் காணப்பட்டது.

இந்தநிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை அவர்கள் சுகவீனம் அடைவதற்கு முன்னர் மன்னாரில் இருந்து கொழும்பிற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்தித்து தமிழ் மக்களுக்கு இலங்கை அரசினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கூறச் சென்றார்.

கொழும்பிற்குச் செல்லும் வழியில் மன்னார் தள்ளாடி இராணுவ முகாமில் இடம் பெற்றுக்கொண்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்குமாறு இராணுவம் அழைத்த மன்னார் ஆயர் மற்றும் அருட்தந்தை ஒருவரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது குறித்த இருவருக்கும் இராணுவத்தினரால் தேனீர் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மன்னார் ஆயர் அவர்கள் கொழும்பு நோக்கி சென்று மறுநாள் அமெரிக்க இராஜாங்க செயலாளரை சந்திக்கச் செல்லும் போது மன்னார் ஆயர் அவர்கள் திடீர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டார்.

மன்னார் ஆயருடன் சென்று தேனீர் அருந்திய மற்றை அருட்தந்தை சில தினங்களுக்கு பின் திடீர் மாரடைப்பினால் மரணமாகியுள்ளார்.

இந்த சம்பவங்கள் மன்னார் மக்கள் மத்தியில் கடும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

SHARE