மன்னார் சின்னப் பண்டிவிரிச்சான் மினி சூறாவளி

595

மன்னார் சின்னப்பண்டிவிரிச்சான் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கநாதன் மற்றும் உறுப்பினர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.

மன்னார் சின்னப்பண்டிவிரிச்சான் பகுதியில் கடந்த 29 ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் வீசிய மினி சூறாவளியால் அப்பகுதி வாழ் மக்களின் வீட்டுக்கூரைகள் வாழைத்தோட்டங்கள் என்பன சேதமடைந்துள்ளன.

இந்த சேத விபரங்களை சம்பந்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளோ, அரச அதிகாரிகளோ வந்து பார்வையிடவில்லை என்பதால் ஆத்திரமடைந்துள்ள அக்கிராம மக்கள் இது தொடர்பில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து வடக்கு மாகான மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு அழிவுகளையும் பார்வையிட்டனர்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடுகளை விரைவாக வழங்க  நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் அரச அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மன்னார் சின்னப் பண்டிவிரிச்சான் மினி சூறாவளி அழிவுகளை இது வரை எந்த அரச ஸ்தாபனங்களும் சென்று பார்வையிடவில்லை என்று அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

 

SHARE