மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் விபத்து

480

தலைமன்னார் பிரதான வீதி, 2 ஆம் கட்டை பகுதியில் உள்ள புதிய குடியிறுப்பு பகுதியில் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் உயிரிழந்தவர் பெரிய கருஸல் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது ஜே.ரமீஸ் (வயது-23) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, 2 ஆம் கட்டை பகுதியில்  நேற்று திங்கட்கிழமை மாலை நீர் குழாய் இணைப்பு பணிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில்,மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி 2 ஆம் கட்டை பகுதியில்   குடியிறுப்பு பகுதியில் வைத்து நேற்று மாலை 4.30 மணியளவில் மோட்டார் சைக்கிலில் வந்த பெரிய நபர் ஜே.சி.பி. வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதையடுத்து மேற்படி இளைஞனை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நிலையில் உயிரிழந்துள்ளார்.

மன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பாக ஜே.சி.பி.வாகனத்தின் சாரதியை கைதுசெய்துள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE