மன்னார் நறுவிலிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் 25-02-2015 புதன் கிழமை மாலை 2:00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது, நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன்

393

 

 

மன்னார் நறுவிலிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி – கிராமங்களில் உள்ள கிராம மட்ட அமைப்புக்களும் பாடசாலையின் தூண்களே – வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர்…

1782144_10205979319831225_9040911850793082611_n 10404425_10205979321471266_3686404985383228708_n 10917456_10205979321351263_5565768058423932586_n 11041760_10205979323631320_3799400820360653116_n 11042972_10205979320711247_8344351589771603722_n

மன்னார் நறுவிலிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் 25-02-2015 புதன் கிழமை மாலை 2:00 மணியளவில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது, நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக ஜனாப்.எம்.எம்.சியான் வலயக் கல்விப் பணிப்பாளர் மன்னார், திரு.அன்பு ராஜ் லம்பேர்ட் தவிசாளர் நானாட்டான் பிரதேச சபை நானாட்டான், திரு.ஜெகநாதன் கோட்டக் கல்வி அதிகாரி நானாட்டான், ஆகியோர் கலந்து சிறப்பித்தனர், நிகழ்வினை பாடசாலையின் அதிபர் திரு.எஸ்.ஆசப்பிள்ளை அவர்கள் தலைமை தாங்கினார்.

நிகழ்வில் அமைச்சர் தனது உரையில் ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கும் அங்குள்ள அதிபர் ஆசிரியர் மாணவர்கள் இவர்களை விட அந்த கிராமத்து கிராம மட்ட அமைப்புக்களே தூண்களாக இருந்து பாடசாலைகளை வளர்க்க வேண்டும் என்றும், பாடசாலையில் பலதரப்பட்ட தேவைகள் இருக்கலாம் தேவைகளை என்னிடமும் கல்வி அமைச்சரிடமும் தெரிவியுங்கள் எனக்கு நிதிவளம் வரும் வேளைகளில் நான் என்னால் ஆன உதவிகளை எனது இந்த கிராமத்துக்கும் வழங்க மறக்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.

SHARE