மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வு – பணிப்பாளர் வைத்தியர் ஒஸ்மன் டெனி

238

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் எதிர்வரும் சனிக்கிழமை (11) காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை மன்னார் மாவட்ட மக்கள் இரத்ததானம் வழங்க முடியும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஒஸ்மன் டெனி தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையினை கருத்தில் கொண்டு தேசிய மட்டத்தில் இரத்த தான நிகழ்வு அரசாங்கத்தினால் நடை முறைப் படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக நாளை வெள்ளிக்கிழமை (10) காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களினால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம் பெறவுள்ளது.

சனிக்கிழமை  11 ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை மன்னார் மாவட்ட மக்கள் இரத்ததானம் வழங்கி வைக்க முடியும்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குறித்த இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம் பெறும்.குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கி வைக்குமாறு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஒஸ்மன் டெனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE