மயோன் சமூக சேவை அமைப்புக்கும், றிஷாட் பதியுதீன் எம்.பி க்கும் இடையிலான முக்கிய சந்திப்பு..!

91

 

மயோன் சமூக சேவை அமைப்புக்கும், றிஷாட் பதியுதீன் எம்.பிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு..!

 
அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சினைகள், அமைப்பின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த பல விடயங்களை நோக்காகக் கொண்டு மயோன் சமூக சேவை அமைப்புக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு 2024.12.13 நேற்று மாலை கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கட்சியின் பிரதான காரியாலயத்தில் இடம்பெற்றது.

மயோன் சமூக சேவை அமைப்பின் தலைவரும், கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான றிஸ்லி முஸ்தபா அவர்களின் தலைமையில் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்களின் பங்கேற்புடன் இவ் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அமைப்பின் பொதுச் செயலாளர் சுகையில் ஜமால்டீன் அமைப்பின் கடந்த கால, எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார். றிஸ்லி முஸ்தபா அவர்கள் இளைஞர்கள் தொடர்பான கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும் அமைப்பின் செயற்பாடுகளுக்கு தன்னால் முடியுமான பங்களிப்புகளை வழங்குவதாக கட்சியின் தலைவர் தெரிவித்தார்.

மேலும் இவ் கலந்துரையாடல் நிகழ்வில் மயோன் சமூக சேவை அமைப்பின் உறுப்பினர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

மாளிகைக்காடு செய்தியாளர்
SHARE