மரங்கள் ஒய்வெடுப்பதில்லையா? விஞ்ஞானிகளுக்கு வந்த சந்தேகம்

286

home_tree

மரங்களுக்கும், காடுகளுக்கும் உயிரனங்களின் வாழ்வில் முக்கிய அம்சங்கள் உள்ளன.

அவை வெறுமே காபனீரொட்சைட்டை பதித்து, நாம் சுவாசிக்கவென ஒட்சிசனை தருவது மட்டுமல்லாது, நம் நரம்புகளுக்கும் குளிர்ச்சியைத் தருகிறது.

இதனால் தான் விஞ்ஞானமும் இதன் மீது கவனம் செலுத்துகிறது. அண்மையில் புதிய ஆய்வில் யாருமே இதுவரையில் கருத்தில் கொள்ளாத கேள்வியொன்று கேட்கப்பட்டிருந்தது.

அது என்ன கேள்வி? ஆம், மரங்கள் ஒய்வெடுப்பதில்லையா என்பதே அது.

முதன் முறையாக Austria, Finland, மற்றும் Hungary போன்ற நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களை கொண்ட சர்வதேச குழுவொன்று, லேசர் ஸ்கான் மூலம் மரங்கள் இரவில் எத்தகைய மாற்றத்தை காட்டுகின்றன என ஆராயப்பட்டிருந்தது.

இதன் முடிவிலிருந்து, மரங்கள் இரவில் மெதுவாக சோர்வடைந்து, பகலில் மீண்டும் வசந்தமடைகிறது என தெரியவருகிறது.

ஆனால் இது உண்மையில் தூக்கம் தானா?

ஆராய்ச்சியின் போது இரு மரங்கள் எடுக்கப்பட்டு, ஒன்று Finland இலும், மற்றையது Austria இலும் உயர் லேசர் ஸ்கானுக்குட்படுத்தி அவதானிக்கப்பட்டன.

இங்கு இரவில் மரங்கள் என்ன செய்கின்றன என ஆராயப்பட்டது. அவற்றின் சிறு அசைவு கூட நுணுக்கமாக ஆராயப்பட்டது.

இதன் போது இரவுகளில் இலைகள், கிளைகளின் நிலை மாற்றப்பட்டு முழு மரமும் தொங்கிய நிலையில் இருப்பது அவதானிக்கப்பட்டது. ஆனால் மாற்றங்கள் பெரிதளவிலில்லை, 5 மீட்டர் உயரமான மரங்களில் இம் மாற்றம் கிட்டத்தட்ட 10 cm வரையிலேயே இருப்பதாக சொல்லப்படுகிறது.

தெங்கிய நிலையானது பொதுவாக மரக் கலங்களில் உள்ளாதியான நீர் அமுக்கம் குறைவதனாலேயே ஏற்படுகிறது.

இந் நிலை எல்லா தாவரங்களுக்கும் பொதுவானது என என விஞ்ஞானி Andy Coghlan கூறுகிறார்.

SHARE