நேற்று இரவு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது நடிகர் டேனியல் பாலாஜியின் மரணம். மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட வழியில் மரணமடைந்துள்ளார்.
இவருடைய மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர் மற்றும் கவுதம் மேனன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேற்று இரவு வந்துள்ளனர்.
48 வயதாகும் இவர் சித்தி சீரியல் மூலம் அறிமுகமானார் டேனியல் பாலாஜி. வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் படத்தில் நடித்து திரையுலகில் வில்லனாக மிரட்ட துவங்கினார். பின் வேட்டையாடு விளையாடு, வடசென்னை, பைரவா, காக்க காக்க, பிகில் போன்ற படங்களில் நடித்து வந்தார்.
டேனியல் பாலாஜியின் அண்ணன்
நடிகர் டேனியல் பாலாஜி, மறைந்த நடிகர் முரளியின் தம்பி ஆவார். ஆம், இதை டேனியல் பாலாஜி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் தற்போது அவருடைய தம்பி என கூறப்படும் நடிகர் டேனியல் பாலாஜி 48 வயதில் மரணமடைந்துள்ளது திரையுலகிற்கு பெரும் இழப்பு என கூறி வருகிறார்கள்.