மரண அறிவித்தல்

1098

குருக்கள் பகுதி கரணவாயைப் பிறப்பிடமாகவும் 37ஃ3 கணேசபுரம் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சிவகௌரி யோகானந்த சர்மா (முகாமைத்துவ உதவியாளர்-கரைச்சி பிரதேசசபை) 09-02-2016 அன்று சிவபதமடைந்தார். அன்னார் சிவசுப்பிரமணியக்குருக்கள் அன்னம்மா(அமரர்) தம்பதிகளின் இளையமகளும், தியாகராஜா ஐயர்(அமரர்) தனலட்சுமி அம்மா தம்பதிகளின் மருமகளும், யோகானந்த சர்மாவின் அன்பு மனைவியுமாவார், சிவானந்தராஜா (ஆசிரியர்-யாஃவரணி மத்தியகல்லூரி) சிவஜெயந்தி (ஆசிரியர்-கிளிஃகனகபுரம் மகாவித்தியாலயம்) ஆகியோரின் அன்புச்சகோதரியும், சுமேதா(வரணி) ஜெயசுதர்சன் (ஆசிரியர்-கிளிஃமத்தியகல்லூரி, இயக்குனர் கிளிஃஎடிசன் கல்லூரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் சிவஜெயசுதனா, சிவஜெயலவனிக்கா ஆகியோரின் சிறிய தாயாரும், சிவகலையின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-02-2016 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று, தகனக்கிரியைகளுக்காக திருநகர் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
குடும்பத்தினர்

46bd2701-ea24-42dc-9a13-d3076d1dbb30

SHARE