கிட்டத்ததட்ட இரு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வுகளின் படி, மரபணு மாற்றப்பட்ட பயிர்களை (GM/GE) உட்கொள்வதால் பாதிப்புகள் ஏற்படுவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என தெரிய வருகிறது. இதற்கென கடந்த 30 வருடங்களாக வெளிவந்த, 900 ஆய்வுப் பத்திரிகைகள் பகுத்தாரயப்பட்டிருந்தது.
அறிவியல், பொறியியல் மற்றும் மருத்துவ அமெரிக்க தேசிய கல்விக் கூடங்களால் நியமிக்கப்பட்ட 20 விஞ்ஞானிகளால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
1980கள் தொடக்கம் விஞ்ஞானிகள் விட்டமின் உள்ளடக்கம், அதிக விளைச்சல், பீடைகளுக்கு எதிர்ப்பாற்றல் போன்ற விரும்பத்தகு இயல்புகளை தாவரங்களில் பெறுவதற்காக இதுபோன்று மரபணு மாற்றியமைக்கப்பட்ட தாவரங்களை உருவாக்கிய வண்ணம் உள்ளனர்.
இந்த GM விதைகள் புதிய DNA அமைப்பை கொண்டிருப்பதுடன், அவை ஏழை விவசாயிகளுக்கு மீள அதிக தொகைக்கு விற்கப்படுகிறது.
இந்த GM பயிர்கள் பாதுகாப்பானவையா?, மனிதனுக்கு நன்மையளிக்கக் கூடியனவா? என பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனாலும் GM பயிர்கள் தொடர்பில் பொதுமக்களின் கவலையை போக்குவதற்காகவே மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதனாலேயே இப் புதிய பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் பல விடயங்கள் விவாதிக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 900 ஆய்வுப் பத்திரிகைகள் அலசி ஆராயப்பட்டிருந்தன.
மனித சுகாதார சீர்கேடு தொடர்பாக ஆராயப்பட்டிருந்த போது, இந்த GM உணவுகள் மனிதனுக்கு நன்மை பயக்குவனவாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காரணம் குறைந்தளவான பூச்சி கொல்லிகளின் நச்சுத்தன்மை, அதிகளவு விட்டமின் உள்ளடக்கம் போன்றவற்றாலாகும்.
சூழல் தொடர்பான பாதிப்புக்கள் ஆராயப்பட்டிருந்த போது, இவை பீடைகளுக்கு எதிர்ப்பாற்றல் உள்ளதனால் மற்றைய தாவர, பூச்சி இன குடித்தொகைகளை இது பாதிக்காது என தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அவற்றின் குடித்தொகை அதிகரிக்க இது வழிவகுக்கும்.
விவசாயிகளை பொறுத்தவரை இப் பயிர்கள் அவர்களுக்கு கூடிய விளைச்சலை தரக் கூடியன. அத்துடன் விவசாயிகளுக்கு இப் பயிர்கள் தொடர்பில் சலுகைகள் கிடைக்கும் பொழுது, அவர்களின் பொருளாதாரம் மேம்பட வாய்ப்பும் உண்டு.
ஆகையால் இத்தகைய பயிர்களால் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை என்றே மேற்படி ஆய்வு கூறுகிறது.