மருத்துவமனையில் இருந்து வந்த நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம்.. யாருடன் இருக்கிறார் பாருங்க

78

 

கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பல விதமான வதந்திகள் வெளிவந்தன.

ஆனால், இது வழக்கமான மருத்துவ சிகிச்சை தான் என்றும், ஓரிரு நாட்களில் அஜித் வீடு திரும்பி விடுவார் என்றும் அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்தரா தெரிவித்து இருந்தார். இதன்மூலம் அனைத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

மருத்துவமனையில் இருந்து நலமாக வீடு திரும்பிய அஜித்தின் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் உலா வருகிறது.

லேட்டஸ்ட் புகைப்படம்
நடிகர் அஜித் தனது மகன் ஆதிவ் உடன் இருக்கும் புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பிறகு தான் அவர் பழையபடி நலமுடன் இருக்கிறார் என தெரிகிறது.

அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE