விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியானது மருத்து உலகிலும் பாரிய புரட்சிகளை ஏற்படுத்தி வருகின்றமை அறிந்ததே.
இதன் தொடர்ச்சியாக தற்போது விழுங்கக்கூடிய இலத்திரனியல் மின்கலங்களை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
நச்சுக்கள் அற்ற இயற்கை பதார்த்தங்களையும் உள்ளடக்கியதாக இம் மின்கலங்கள் வடிவமைக்கப்பகின்றது. அதாவது தோல், தலை முடி மற்றும் கண் பகுதிகளில் காணப்படும் மெலனின் வேதிப் பொருளைக் கொண்டு இம் மின்கலங்கள் தயாரிக்கப்படுகின்றன.
உள்ளார்ந்த உடல் ரீதியான குறைபாடுகளைக் கண்டறிதல் மற்றும் அவற்றிற்கு சிகிச்சை அளித்தல் என்பவற்றிற்காக இது உருவாக்கப்படுகின்றது.
இம் மின்கலங்களை ஒரு நாள் முழுவதும் மருத்துவ ரீதியான சாதனம் ஒன்றிற்கு மின்னை வழங்குவதற்கு பயன்படுத்த முடியும். மேலும் இதன் செயற்பாட்டினை விளக்கக்கூடிய வீடியோ கோப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.