மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாதது ஏன்.. காரணம் இதுதானா

142

 

மாரடைப்பு காரணமாக டேனியல் பாலாஜி மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை அனைவருக்கும் கொடுத்தது. இவருடைய இறப்பு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பு ஆகும்.

தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களில் ஒருவர் டேனியல் பாலாஜி. வேட்டையாடு விளையாடு, வடசென்னை, காக்க காக்க போன்ற படங்களை இவருடைய சிறந்த நடிப்பிற்கு உதாரணமாக சொல்லலாம்.

விஜய் சேதுபதி, வெற்றிமாறன், அதர்வா போன்ற பல நட்சத்திரங்கள் இவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்
48 வயதாகும் நடிகர் டேனியல் பாலாஜி ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என பலரும் கேட்டு வந்தனர். இதுகுறித்து அவருக்கு நெருக்கமான சிலர் பேசியுள்ளனர்.

இதில் அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்றும் கடவுள் ஈடுபாடு மற்றும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்ததால் தான் அவர் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர்.

SHARE