சினிமா ரசிகர்கள் இருக்கும் வரை இவரது பெயர் ஒலிக்கும், யார் அவர் நடிகை ஸ்ரீதேவி தான்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நாயகியாக டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து சாதித்தவர்.
பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள ஸ்ரீதேவி துபாய்க்கு உறவினர் திருமணத்திற்காக சென்றுள்ளார். அங்கு எதிர்ப்பாராத விதமாக அவரது உயிர் பிரிந்துள்ளது. அவர் உயிர் பிரிந்த செய்தி கேட்டு இந்திய சினிமா ரசிகர்கள் அனைவருமே ஆடிப்போய்விட்டார்கள்.
2018ம் ஆண்டு உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து இப்போதும் மக்கள் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
யார் இவர்
தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீதேவியின் அக்கா மகள் என்ற அடையாளத்தோடு கருத்தம்மா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மகேஷ்வரி.
17 வயதில் சினிமாவில் நுழைந்தவர் நேசம், உல்லாசம், என்னுயிர் நீதானே, நாம் இருவர் நமக்கு இருவர், சுயம்வரம், அதே மனிதன் என நிறைய படங்கள் நடித்துள்ளார்.
1994ம் ஆண்டு முதல் 2000 வரைக்கும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படங்கள் நடித்து கலக்கியுள்ளார். இவர் நடிகை ஸ்ரீதேவியுடன் எடுத்த சிறுவயது புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.