சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்டக்காரர்களின் முக்கியத்துவத்தைப் போலவே பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சும் முக்கியத்துவம் வாய்ந்தது.அந்த வகையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்காவின் ’ஹாட்ரிக்’ பந்து வீச்சு மறக்க முடியாத ஒன்றாகும்.
ஆகஸ்ட்-2011 ஆம் ஆண்டு கொழும்புவில் நடந்த போட்டியில் இலங்கை- அவுஸ்திரேலியா அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் வாட்சன், பொண்டிங், கிளார்க், ஹசி ஆகியோரின் அதிரடிக்கு இலங்கை அணியின் பந்து வீச்சு முட்டுக்கட்டை போட்டது. அதிலும் கடைசி ஓவர்களில் மலிங்காவின் ஹாட்ரிக் விக்கெட்டுகளான ஜான்சன், ஹேஸ்டிங்ஸ், தோகர்டி அவுஸ்திரேலிய அணியின் ஓட்டங்களை குறைத்தன. இதன் மூலம் அவுஸ்திரேலியாவின் 212 ஓட்ட இலக்கை இலங்கை எளிதில் கடந்து வெற்றி பெற்றது. ஹாட்ரிக் விக்கெட் பெற்ற மலிங்கா ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். சர்வேதேச கிரிக்கெட்டில் விக்கெட் வீழ்த்துவதே கடினம் என்ற நிலையில் கிரிக்கெட் வரலாற்றில் மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர் என்ற சாதனையைப் படைத்தார் மலிங்கா.
|