மலேசியாவில் பிடிபட்ட புலிகளின் சிறப்புத் தளபதி “குசந்தன்” பற்றிய முக்கிய தகவல்கள்

606

அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று விடுதலைப்புலிகளும் நாடு கடத்தப்பட்டிருந்தது தெரிந்ததே. இதில் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் இருந்த குசந்தன்பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த இவர்தான் சிலின் ரக விமானங்களை தாக்குதல் விமானங்களாக மாற்றியதாக கூறப்படுகின்றது.

தென்மராட்சியின் மீசாலையை சேர்ந்த சுந்தரலிங்கம் குசந்தன் என்ற இவர் 1994இல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பில் குசந்தன் மாஸ்ரர், முல்லைசசெல்வன் உள்ளிட்ட பெயர்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் சரத்பாபு 6 பயிற்சிமுகாமில் பயிற்சிபெற்று இம்ரான் பாண்டியன் படையணியில் இணைந்தபோதும், சில மாதங்களிலேயே விமானப்படையில் இணைக்கப்பட்டிருந்தார்.

அச்சுதன் மற்றும் கேணல் சங்கருடன் குசந்தன்

கேணல் சங்கரின் தலைமையில் இயங்கி விமானப்படையிணில் மிக விரைவிலேயே தேர்ச்சி பெற்ற விமானியாக அவர் உருவாகிவிட்டார். மேலதிக பயிற்சிகளிற்காக மலேசியா சென்று விமான ஓட்டுனர் பயிற்சியை பெற்றவர், அடுத்து கனடாவில் விமானப்பொறியியல் படிப்பை நிறைவு செய்தார். இதன்பின்னர் 1998 இல் இலங்கைக்கு திரும்பியுள்ளார். இதன்பின்னர்தான் விடுதலைப்புலிகளின் வான்படை துரித வளர்ச்சி பெற்றுள்ளது. அதுவரை சிறிய சிலின் ரக விமானங்களை வைத்து பறப்பு முயற்சிகளில் மட்டும் ஈடுபட்டு வந்த புலிகள், குசந்தனின் வரவின் பின்னர் வேறு வடித்திற்கு மாறியுள்ளனர். சிலின் ரக விமானங்களை உள்ளூர்வளங்களை மட்டும் பாவித்து தாக்குதல் விமானங்களாக மாற்றினார். இந்த விமானங்களையே இறுதிவரை விடுதலைப்புலிகள் பயன்படுத்தினார்கள். முல்லைத்தீவின் கேப்பாப்புலவு மற்றும் கிளிநொச்சியின் இரணைமடு பகுதிகளிலேயே இந்த பணிகள் தீவிரமாக நடந்தன. மற்றொரு முக்கிய வான்புலியாகிய அச்சுதனும் இதில் தீவிர பங்காற்றியிருக்கிறார்.

விமானப்பறப்பு முயற்சி ஒன்றில் குசந்தனும் அச்சுதனும்

குசந்தன் விடுதலைப்புலிகளின் விமானியாக தீவிர பணியாற்றியது தொடர்பான தகவல்களை தாம் ஏற்கனவே வைத்திருந்ததாக இராணுவப்புலனாய்வுத்துறை கூறுகிறது. இதற்கான புகைப்பட ஆதாரங்கள் இறுதி யுத்தகாலத்தில் கிடைத்ததாகவும் கூறியது.

குசந்தனின் திருமண நிகழ்வில் விடுதலைப்புலிகளின் தலைவர் தனது மனைவியுடன்

எங்கள் ஈழம் இது தமிழீழம்'s photo.
எங்கள் ஈழம் இது தமிழீழம்'s photo.
எங்கள் ஈழம் இது தமிழீழம்'s photo.
SHARE