கொசுக்கள் மூலம் மட்டுமின்றி பறவைகள் மூலமும் மலேரியா பரவுகிறது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.அமெரிக்காவில் ஹோலி லட்ஸ் பகுதியில் உள்ள கார்னல் பல்கலைக்கழக நிபுணர்கள் சமீபததில் இது குறித்து ஆய்வு நடத்தினர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் நூற்றுக்கணக்கான பறவைகள், வவ்வால்கள் மற்றும் பாலூட்டி இன விலங்குகளிடம் இருந்து ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதித்ததில், அவற்றில் மலேரியா நோயை பரப்பும் கிருமிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மலேரியாவை பரப்பும் கிருமிகள் முதலில் பறவைகளிடம் இருந்து தான் பரவுகிறது என தெரிய வந்தது. அதன் பிறகுதான் அவை வவ்வால்கள் மற்றும் பாலூட்டிகளுக்கு பரவுகின்றன. |