மல்டி புரோசஸ் வசதியுடன் அறிமுகமாகும் Mozilla Firefox

232

உலகின் முதற்தர இணைய உலாவிகளின் வரிசையில் இடம்பிடித்துள்ள Mozilla Firefox உலாவியில் சில குறைபாடுகள் காணப்படுகின்றமை வெளிப்படையானதே.

அவற்றுள் பிரதானமாக திகழ்வது ஒன்றிற்கு மேற்பட்ட டேப்களை ஓப்பன் செய்யும் போது ஸ்ரக் (Stuck or Freeze) ஆகின்றமையாகும்.

இதற்கு மல்டி புரோசஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இக் குறைபாடு உட்பட மேலும் சில குறைபாடுகளை நீக்கியதாக புதிய Mozilla Firefox உலாவி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இவற்றுக்கு மேலாக அன்ரோயிட் சாதனங்களில் Offline Mode இலும் இணையப் பக்கங்களை பார்வையிடும் வசதியை தரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப் புதிய பதிப்பின் ஆரம்பக்கட்ட பரிசோதனையில் 400 சதவீத முன்னேற்றம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ் உலாவியானது பயனர்களின் பயன்பாட்டிற்காக 2017ம் ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE