மஹிந்தவை காட்டுமிராண்டியென ஒப்பிட்டு பேசிய வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம். நேற்றைய வடமாகாணசபையின் அமர்வில் முள்ளிவாய்க்காலில் நடந்து வரும் நில சுவீகரிப்பு தொடர்பாக சிவாஜிலிங்கம் பேசிக்கொண்டிருக்;கையில் இது தொடர்பில் மஹிந்தவுடனோ கோத்தாவுடனோ பேசலாமெயென சில உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டனர்.
இதற்கு பதிலளித்த சிவாஜிலிங்கம் காட்டுமிராண்டிகளுடன் என்னால் பேசமுடியாதென தெரிவித்தார். அவ்வேளையிலேயே குறுக்கிட்ட அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இவ்வவையில் இவ்வாறு சொற்பிரயோககங்களைப் பயன்படுத்த முடியாதென தெரிவித்து சீற்றமடைந்தார்.
எனினும் இதற்கு சிவாஜிலிங்கம் விளக்கமளிக்க முற்பட அவரது ஒலிவாங்கி செயலிழந்தது. தனது தரப்பு விளக்கத்தை சிவாஜிலிங்கம் அளித்த பின்னரே அவரது ஒலிவாங்கி செயற்பட தொடங்கியது.