மாகாண கல்வி அமைச்சர்கள் என்பவர்கள் கல்வி கற்றவர்களாக விடயங்கள் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்-இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்

382

 

 

மாகாண கல்வி அமைச்சர்கள் என்பவர்கள் கல்வி கற்றவர்களாக விடயங்கள் தெரிந்தவர்களாக இருக்க

வேண்டும்.அதற்கு சிறந்த உதாரணம் வடக்கிலும் கிழக்கிலும் ஊவாவிலும் இருக்கின்ற மாகாண

கல்வி அமைச்சர்களை குறிப்பிடலாம் ஆனால் மத்திய மாகாணத்தில் விவசாயத்துறை அமைச்சராகவும்

தமிழ் கல்விக்கு பொறுப்பாகவும் இருப்பவர்கள் தலைகீழாக செயற்படுகின்றார்;கள் இவர்களுக்கு

கல்வி அறிவும் இல்லை அனுபவ அறிவும் இல்லை யாரிடமும் கேட்டு தெரிந்து கொள்ளும்

பக்கவமும் இல்லை இப்படியானவர்களை மக்கள் புரிந்து கொண்டு தேர்தலில் சரியானவர்களை தெரிவு

செய்ய தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி

இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

unnamed (37) unnamed (38) unnamed (39) unnamed (40)

மத்திய மாகாண மஸ்கெலிய ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட லக்கம் தமிழ் மமகா வித்தியாலயத்தில்

அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை திறந்து வைத்து உரையாற்றும் பொழுதே இவ்வாறு

தெரிவித்துள்ளார்.இந் நிகழ்வில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆh.ராஜாராம் மத்திய

மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் சதீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இங்கு பேசிய கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்

நான் கடந்த சில நாட்களாக கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள பல தொழில்நுட்ப ஆய்வுகூடங்களை

திறந்து வைப்பதற்காக அங்கு சென்றிருந்தேன்.அதன் போது அங்குள்ள பிரதி அமைச்சர்

அமீர் அலி பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன்,பொன் செல்வராசா

மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி,மாகாண சுகாதார அமைச்சர் எம்.அய்.எம்.மன்சூர் ஆகிய

அனைவரும் ஒன்று சேர்ந்து திறப்புவிழாவில் கலந்து கொண்டு மிகவும் சுமுகமாக அவற்றை

திறந்து வைத்தோம்.அதற்கு காரணம் அவர்கள் அனைவரும் தமது சமூன உணர்வுடன்

செயற்படுகின்றார்கள்.கல்வி செயற்பாடுகள் என்று வருகின்ற பொழுது அவர்கள் அனைவரும்

ஒன்றாக இணைந்து செயற்படுகின்றார்கள்.அதனால் அங்கு கல்வியில் நிலை நன்றாக

இருக்கின்றது.

ஆனால் மலையகத்தில் அப்படியான ஒரு நிலைமை இல்லை.ஒரு சிலர் எல்லாவற்றையும் தாங்கள்

செய்ய வேண்டும் என நினைக்கின்றார்கள்.ஆனால் ஒன்றுமே

செய்வதில்லை.செய்கின்றவர்களையும் விடுவதில்லை.இடையில் புகுந்து குழப்பம் விளைவிக்கவும் தமது

அரசியல் அதிகாத்தை காட்டவுமே இருக்கின்றார்கள்.

ஏன் இவர்கள் இப்படிநடந்து கொள்கின்றார்கள் என்று எனக்கு புரியவில்லை. இவ்வாறு

செயற்படுகின்றவர்கள் மனநோயாளிகளாகவே இருக்க வேண்டும்.புத்திசுவாதீனத்துடன்

செய்றபடுகின்றவர்கள் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள்.எனவே இவர்களை மக்கள் இனம் கண்டு

தேர்தலில் உரியவர்களை தெரிவு செய்து அனுப்பினால் இவ்வாறான ஒரு நிலை ஏற்படாது எனவும்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE