மாங்குளத்தில் 20 அடி ஆழமான கிணற்றில் விழுந்த பிள்ளையைக் காப்பாற்றிய இராணுவத்தினருக்கு பாராட்டுப் பரிசு

535
மாங்குளத்தில் 20 அடி ஆழமான கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றிய இரண்டு இராணுவத்தினருக்கு பாராட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பாராட்டுப் பரிசு வழங்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி படைகளில் தலைமையகத்தில் கிளிநொச்சி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தலைமையில் நடைபெற்றது.

மாங்குளம் பிரதேசத்தில் கடந்த 2 ஆம் திகதி சேவையில் ஈடுபட்டிருந்த 57வது படைப் பிரிவு மற்றும் 3வது கஜபா படைப் பிரிவின் அதிகாரிகள் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

அப்போது பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் பிள்ளை விழுந்துள்ளதுடன், காப்பாற்றுமாறு தாய் கதறி அழுததுடன் இராணுவத்தினரின் உதவியை கோரியுள்ளார்.

உடனடியாக செயற்பட்ட கோப்ரல் எம்.டப்ளியூ. விஜித பெரேரா, கோப்ரல் டி.எம். லீலாரத்ன ஆகியோர் கிணற்றிக்குள் குதித்து சிவக்குமார் சிந்துஜன் என்ற பிள்ளையை காப்பாற்றியதுடன் குழந்தை குடித்திருந்த தண்ணீரை வெளியேற்றியுள்ளனர்.

SHARE