மாணவிகளை விடுவிக்க முதலில் எங்கள் தோழர்களை விடுவிக்க வேண்டும்: நைஜீரியா பயங்கவாத இயக்கம் திட்டவட்டம் 

637
நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை விடுவிக்க வேண்டும் என்றால் கைதான தீவிராவாதிகளை விடுவிக்க வேண்டும் என போகோ ஹரம் தீவிரவாத அமைப்பு வலியுறுத்தியுள்ளது.நைஜீரியாவில் தனி நாடு கேட்டு போகோ ஹரம் என்ற தீவிரவாதிகள் தொடர்ந்து பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த மாதம் 14ம் திகதி சிபாக் நகரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றினுள் புகுந்த தீவிரவாதிகள், அங்கு தேர்வு எழுதிக்கொண்டிருந்த 276 மாணவிகளை வலுக்கட்டாயமாக கடத்திச்சென்றனர்.

இந்த மாணவிகளை விடுவிக்க கோரி சர்வதேச நாடுகள் வேண்டுகோள் விடுத்து வருவது மட்டுமல்லாமல் நைஜீரியா மக்களால் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றது.

தற்போது கடத்தப்பட்ட மாணவிகளை விடுதலை செய்ய போகோ ஹரம் தீவிரவாதிகள் அமைப்பினர் யூடியூப் தளத்தில் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

இதில் அந்த தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் பேசுகையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எங்களது இயக்கத்தைச் சேர்ந்த தோழர்களை (தீவிரவாதிகளை) உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் இல்லையேல் மாணவிகளை விடுதலை செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்த காணொளியில் கடத்தப்பட்ட மாணவிகளில் தோன்றிய 130பேரும் இஸ்லாமிய முறைப்படி முகத்தை மூடி இருந்தனர்.

மேலும் தீவிரவாதிகளின் இந்த புதிய நிபந்தனையால் நைஜீரியாவில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

SHARE