மாணிக்கக்கல் எடுக்கச் சென்ற நபர் பரிதாபகரமாக உயிரிழப்பு!

145

 

களு கங்கையில் மாணிக்கக்கல் அகழ்ந்து கொண்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி குறித்த சம்பவமானது நேற்று (26) பிற்பகல் ஹொரண, போருவதந்த பிரதேசத்தில் களு கங்கையில் மாணிக்கக்கல் அகழ்ந்த போதே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நபர் களு கங்கையில் மாணிக்கக்கல் அகழும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் நீரில் மூழ்கியதாகவும் ஆபத்தான நிலையில் இருந்த இவரை மீட்டு ஹொரண வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை
குறித்த நபர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் போருவதந்த பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார் என்று காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

 

SHARE