மான் கராத்தே படப்பிடிப்பில் சதீஷ், சூரியுடன் கிரிக்கெட் விளையாடிய சிவகார்த்திகேயன்- அன்ஸீன் போட்டோ

59

 

சிவகார்த்திகேயன் சினிமா நாயகனாக நடிக்க தொடங்கிய போது பெரிய எதிர்ப்பார்ப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான திரைப்படம் மான் கராத்தே.

கிரிஸ் திருகுமரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா, சதீஷ் ஆகியோர் நடிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

காமெடி, காதல், சென்டிமென்ட் என எல்லாம் கலந்த கலவையாக படம் அமைந்தது, பாடல்களும் செம ஹிட்டடிக்க மாபெரும் வெற்றிப்படமாக சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் அமைந்தது.

அன்ஸீன் போட்டோ
இந்த படத்தில் சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்க சூரியும் சின்ன ரோலில் நடித்திருப்பார், அந்த காட்சிகளும் காமெடி காட்சிகள் தான்.

தற்போது என்ன விஷயம் என்றால் மான் கராத்தே படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் சிவகார்த்திகேயன், சூரி, சதீஷ் என பலர் கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

SHARE