அருண் விஜய் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே.
இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அருண் விஜய்யுடன் இணைந்து எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், குழந்தை நட்சத்திரம் இயல் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த இப்படம் முதல் சில நாட்களில் குறைந்த திரையரங்களில் வெளியிடப்பட்டது. பின் மக்களிடம் இருந்து பேராதரவை பெற்ற மிஷன் திரைப்படத்திற்கு கூடுதல் திரையரங்கங்கள் கிடைக்க துவங்கின.
வசூல் விவரம்
விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் மிஷன் படத்திற்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். ஆம், கடந்த 12ஆம் தேதி வெளிவந்த இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.