மாமியார் தயாரிப்பில் நடித்த ஜெயம் ரவி.. படுமோசமான வசூல்.. சைரன் படத்தின் நிலைமை என்ன

132

 

முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சைரன். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆண்டனி பாக்யராஜ் இயக்க, ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்து இருந்தார்.

கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகி பாபு மற்றும் சமுத்திரக்கனி போன்ற நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியது.

வலுவாக திரைக்கதை இல்லாததால், எதிர்பார்ப்பை சைரன் திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இதனால் முதல் வாரத்திற்கு பின் சைரன் படத்தின் வசூல், பாக்ஸ் ஆபிஸில் அடிவாங்க துவங்கியது. ஆம், முதல் வார இறுதியில் கிட்டதட்ட ரூ. 6 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த இப்படம், அதற்குப்பின் குறைய துவங்கியது.

இதுவரையிலான வசூல்
இந்நிலையில், இப்படம் வெளிவந்து 12 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ரூ. 12.5 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவான வசூல் தான் சைரன் திரைப்படம் செய்துள்ளது என கூறப்படுகிறது.

ஏற்கனவே இறைவன் திரைப்படம் படுதோல்வியடைந்த நிலையில், தற்போது சைரன் படமும் இப்படியொரு நிலைமையை சந்தித்துள்ளது.

 

SHARE