மாலி நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் பலி

269
மாலியில் ராணுவ தளத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் - 29 பேர் பலி

மாலி ராணுவ வீரர்கள் (கோப்பு படம்)
மாலி ஆப்பிரிக்க கண்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று. இங்கு அல்கொய்தா ஆதரவு பெற்ற பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகிறது.
இந்த பயங்கரவாத குழுக்களை அழிக்கும் நடவடிக்கையில் உள்நாட்டு ராணுவத்தினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனால், பயங்கரவாத குழுக்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் ஜியோ நகரில் உள்ள தர்கிண்ட் கிராமத்தில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து நேற்று பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் 29 பேர் உயிரிழந்தனர்.

SHARE