மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? -இரணியன்

879

 

மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? -1

சுழியோடி

2005  காலப்பகுதி அது மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்று போரை துவங்கவில்லை ஆயினும் போருக்கான ஆயுத்தங்கள் படையிரனால் மேற்கொள்ளபட்டு கொண்டுதான் இருந்தன என புலனாய்வு தகவல்கள் கிடைத்து இருந்தன ..இராணுவத்துக்கான போர் பயிற்சிகளிலும் ஆயுத கொள்வனவுகளிலும் சிறிலங்கா தீவிரமாக இறங்கியிருப்பது தெளிவாக தெரிந்து இருந்தது ..மஹிந்த அரசு பாரிய போர் ஒத்திகை ஒன்றை தொடங்க போகிறது என்பது உறுதியாக தெரிந்து இருந்தது
prabhakaran-mahinda
..அதற்கான முன்னேற்பாடுகள் மட்டுமல்ல போர் நிறுத்தம் மீறும் வகையில் அங்கங்கே விடுதலைபுலிகளுக்கு எதிரான சில தாக்குதல் நடவடிக்கைகளிலும் விடுதலை புலிகளுக்கு ஆத்திரத்தை உட்டகூடிய செயல்பாடுகளிலும் சிறிலங்கா படையினர் இறங்கி இருந்தனர் …
சிறிலங்காவின் இந்த போரை எதிர்கொள்ள தமிழீழ தேசியத்தலைவர் புதிய போர் வியூகங்களை வகுத்துக்கொண்டு இருந்தார் ..அதில் வான் புலிகளின் தாக்குதல் திட்டமும் இருந்தது என்பதை நாங்கள் பின்னாளில்தான் அறிந்துகொண்டோம்.விடுதலை புலிகளிடம் விமானங்கள் இருப்பதாக செய்திகள் பரவலாக இருந்த போதும் அதற்கான தடையமோ ஆதாரமோ எவரிடமும் இருக்கவில்லை (1998 ) ம் ஆண்டு மாவீரர் தினத்தின்போது முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம் மீது தமிழ்ழீழ வான்படையினர் மலர்துவி தமது முதல் பறப்பை மேற்கொண்டு இருந்தனர் .அதன்பின்னர் வான்புலிகளின் பறப்பை (2005 )காலபகுதியிலேயே நிகழ்ந்ததை அறிய முடிந்தது வன்னி வான்பரப்பில் அந்த அற்புதம் நிகழ்ந்தது தமிழ்ழீழ தேசிய தலைவரை சுமந்துகொண்டு தமிழ்ழீழ வான்படை வன்னி வான்பரப்பில் வட்டமடித்தது
இந்த பறப்பு செய்திகள் குட விடுதலை புலிகளின் தளபதிகள் போராளிகள் மட்டத்தில் குறிப்பிட்ட சிலருக்கும் மட்டுமே தெரிந்தது
மாவிலாற்றில் மஹிந்த அரசு போரைதொடங்கி கிழக்கை ஆக்கிரமிக்க தொடங்கியபோது வன்னியில் பெரும் தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை .ஆனால் வன்னிபகுதியில் ஆழ உடுருவும் படையினரின் தாக்குதல்கள் அதிகரித்து இருந்தன இதில் போராளிகள் மட்டுமில்லை மக்களும் இழப்பை சந்தித்தவண்ணம் இருந்தனர் .இந்த நிலையில்தான் (05-01-2008 ) சனிக்கிழமை மாலை மன்னார் பள்ளமடு பகுதியில் சிறிலங்கா ஆழ உடுருவும் படையினர் நடத்திய தாக்குதலில் கேணல் சாள்ஸ் வீரச்சாவை தழுவிக்கொண்டார் .கேணல் சாள்சின் வீரச்சாவு விடுதலை புலிகள் மட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது காரணம் சாள்ஸ் பொட்டு அம்மனுக்கு அடுத்த நிலையில்லிருந்த ஒரு உயர்மட்ட புலனாய்வு தாக்குதல் தளபதி .பொட்டு அம்மான் இல்லை என்றால் சாள்ஸ் என்ற நிலையில்தான் அன்றைய விடுதலைபுலிகளின் கட்டமைப்பு இருந்தது .விடுதலை புலிகளின் பல கரும்புலிதக்குதல்கள் குறிப்பாக கட்டுநாயக்க கரும்புலி தாக்குதல்வரை எந்த தாக்குதல் நடவடிக்கை என்றாலும் சாள்ஸ் அவர்களின் பங்கு முதன்மையானதாக இருக்கும் .தென்னிலங்கையில் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்த முடியுமா என்ற சந்தேகம் ஒரு காலத்தில் எழுந்தபோது முடியும் என்று பல வெற்றிகரமான தாக்குதல்களை நிகழ்த்தி காட்டியவர் கேணல் சாள்ஸ்.ஒரு தாக்குதல் திட்டத்தை தலைவருக்கே விளக்குகிற அளவுக்கு பொட்டு அம்மனுக்கு அடுத்து சாள்ஸ் அவர்களே இருந்தார் சிறிலங்காவின் தென்பகுதி நடவடிக்கை தொடக்கம் இலங்கை பிரதேசம் எங்கும் விடுதலை புலிகள் நடவடிக்கை என்றால் சாள்ஸ் அவர்கள் தான் முக்கியம் என்று சொல்லும் அளவிற்கு அவரது செயல்பாடுகள் இருந்தன சாள்ஸ் அவர்களுக்கு அடுத்து கபிலம்மான் என்று தொடர்ச்சியாக பல்வேறு பொறுப்பாளர்கள் இவரது நடவடிக்கைகளுக்கு பக்க துணையாக நின்று செயல்பட்டனர்..

சிறிலங்கா தென்பகுதி மீது நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதுக்காக மன்னாரில் தளம் அமைத்து சாள்ஸ் செயற்பட்டுக்கொண்டு இருந்தார் அந்த பிரதேசத்தை சாள்ஸ் தேர்ந்தெடுக்க காரணம் மன்னாரில் விடுதலை புலிகள் கட்டுபாட்டு பிரதேசம் எங்கிலும் செல்பேசிக்கான கவரேஷ் உள்ளது அத்துடன் டயலாக் ரன்கத்த மோட்டரோல என்பவற்றுடன் இந்தியாவில் இருக்கும் சில தொலைதொடர்பு நிறுவனங்களின் சிக்கனல் குட சிலவேளைகளில் கிடைக்கும் .எனும் அளவிற்கு பல தொலைதொடர்பு நிறுவனங்களின் சிக்னல் அங்கு தொடர்சியாக இருந்தது இது சாள்சின் நடவடிக்கைக்கு இலகுவாக இருந்தது .அத்துடன் தென்னிலங்கை பகுதிகளுக்கு தாக்குதல் நடத்த மன்னார் கடல் பகுதியும் கரைய ஒட்டிய காட்டு பகுதியும் இலகுவாக இருந்தது கடல் வழியாக புத்தளம் சிலபத்துக்கு வெடிபொருட்களை கொண்டுசென்று சேர்ப்பதும் அங்கிருந்து தென்னிலங்கை ஏனைய பகுதிகளுக்குக்கும் நகர்த்துவதும் இலகுவாக இருந்தது இதனால் மன்னரே சாள்சின் பிரதான தளமாக மாறியிருந்தது ஒரு காலத்தில் அந்த பாதை படையினரின் முற்றுகைக்கு உள்ளானதால் மன்னரின் கட்டையடம்பன் மடு போன்ற பகுதிகள் உடாக வில்பத்து சரணாலயம் சென்று அதனுடாக போராளிகளும் வெடிபொருட்களும் நகர்த்தபட்ட சம்பவங்களும் இடம்பெற்றன இவ்வாறு விடுதலை புலிகளின் முக்கியத்துவம் மிக்க பொறுப்பாளர்களில் ஒருவரான கேணல் சாள்ஸ் தேசிய தலைவர் அவர்களுடன் அந்த வான் பரப்பில் ஈடுபட்டார் இந்த அனுபவம் பற்றி இவரது வீரச்சாவு நிகழ்வில் கலந்து கொண்ட பொட்டு அம்மான் போராளிகளுக்கு கூறியதை கேட்டதிலையே விடுதலை போராட்டத்தில் இவரது காத்திரமான பங்கு என்ன என்பதை புரிந்துகொள்ள முடியும்.சாள்ஸ் விடுதலை புலிகளின் புலனாய்வுத்துறையின் அடுத்த நிலை தளபதியாக செயல்பட்டவர் உண்மையில் விடுதலை புலிகளின் கட்டமைப்பு வன்னிக்குள் மட்டுமல்ல தென்னிலங்கையிலும் உலகநாடுகள் எங்கும் இயங்கிகொண்டு இருப்பது சிறந்த புலனாய்வு கட்டமைப்பினரால்தான் அதற்கு முக்கிய காரணங்களில் சாள்ஸ் ம் ஒருவர் சிலவேளைகளில் தாக்குதல் நடத்த போகும் கரும்புலிகளுக்கு குட இவரின் அறிமுகம் தெரிந்திருக்காது கரும்புலிகளுக்கு ஆனா திடத்தினை வேறு தளபதிகள் தான் வழிநடத்துவார்கள் இதனால் சாள்ஸ் பற்றி சாதாரண போராளிக்குகுட தெரிந்திருக்கவில்லை இவ்வாறன செயற்பட்தலன் சாள்ஸ் கால் படாத இடமே இலங்கையில் இல்லை என்றுதான் குறவேண்டும் மட்டகிளப்பில் நின்ருகுட தனது தென்பகுதி நடவடிக்கைகளை மேற்கொண்டவர் விடுதலை புலிகளின் கொரிலா பாணியிலான நடவடிக்கைகள் மரபு வழியிலான நடவடிக்கைகள் என்று எல்லாவித தாக்குதல் நடவடிக்கையிலும் சாள்ஸ் அவர்களின் திட்டமிடல் இருக்கும் இதனால்தான் விடுதலை புலிகளுன் புலனாய்வு துறையின் இரண்டாம் நிலை பொறுப்பாளராக உயர முடிந்தது .அன்று எமது விமானபடை தளத்திற்கு தளபதிகள் அழைத்துவரபட்டு இருந்தனர் அப்போது அங்கு தலைவர் அவர்களும் நின்றிருந்தார் அதில் நானும் கலந்து கொண்டேன் எமது இயக்கத்தின் முதன்மை தளபதிகளுக்கு தலைவர் அவர்கள் விமானபடையினை அறிமுகம் செய்து வைக்கிறார்.இதில் விமானபடைப்பிரிவின் போராளிகளும் அறிமுகம் செய்து வைக்கபட்டர்கள் .அதன் பின்பு நான்கு நான்கு பேராக விமானத்தில் பரப்பில் ஈடு பட்டார்கள் .எமது பாதுகாப்பு படைப்பிரிவு விமான தளத்தின் பாதுகாப்பில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தது விமானத்தின் வடிவத்தினையும் விமான ஓட்டிகளின் திறைமைகளையும் தலைவர் அவர்கள் தளபதிகளுக்கு எடுத்துரைத்தார் .அதன்பின்புதான் தளபதி அவர்களுடன் வந்தவர்கள் என்று நான்கு பேராக விமானத்தில் பறந்தார்கள் .இரண்டு விமானங்கள் மாறி மாறி பரப்பில் ஈடுபட்டன அப்போது தலைவர் அவர்களும் பறப்பதுக்காக விமானம் ஒன்றில் ஏறினார். தலைவர் அவர்கள் ஏறும்போது அவரது பாதுகாப்புக்காக நானும் அதில் இருவதுக்கு முற்பட்டேன் அப்போது என்னை ஏறவிடாமல் தடுத்த தலைவர் அவர்கள் பொட்டு நான் தனிய போறேன் பிறகு நீ போ .நான் போனால் நீ பார் என்று கூறிவிட்டு விமானத்தில் ஏறி வன்னி வான்பரப்பில் வட்டமிட்டுவிட்டு கிழே இறங்கினார் .அப்போது அங்கு நின்றவர்களுக்கு அப்போது தலைவர் சொன்னதன் அர்த்தம் என்ன என்பது புரிந்திருந்தது ..அதாவது விமானத்தில் நான் போகும்போது எதாவது நடந்தால் இயக்கத்தை நீ பார் என்பதுதான் அர்த்தம் .அதன் பின்புதான் நான் பறப்பதுக்கு சென்றேன் அப்போது தளபதி சாள்ஸ் நான் எறிய விமானத்தில் எனது பாதுகாப்புக்காக ஏறினார் ..அப்போது தலைவர் அவர்கள் சாள்சை என்னுடன் ஏறவிடாமல் தடுத்தார் .இவங்கட விமானங்களை நம்பி எல்லோரும் ஒன்றாய் பறக்க வேணாம் முதல்ல பொட்டு அம்மான் போகட்டும் பிறகு நீ போ என்று சொன்னார் .என் என்றால் பொட்டு இல்லாவிட்டால் நீதான் புலனாய்வு துறைய கொண்டுநடத்த வேணும் என்று சொன்னார் ..அந்த அளவுக்கு சாள்ஸ் திறைமையான தளபதிய இருந்தார் அதன் பின்பு எல்லா தளபதிகளும் பரப்பில் ஈடுபட்டனர் என்றார்.இவ்வாறு தளபதிகளுக்கு வான் படையினர் தொடர்பான அறிமுகம் நிகழ்ந்திருந்தது .அனால் அதன் பின்னர் (26-3-2007 ) தமிழ்ழீழ வான்படை கட்டுநாயக்க மீது முதல் தாக்குதலை நடத்தி உலகத்திற்கு அறிமுகபடுத்தி கொண்டது தமிழின வரலாற்றில் முதல் வான்படை அமைத்த தலைவன் என்னும் பெருமை தமிழ்ழீழ தேசிய தலைவருக்கு கிடைத்தது .இத் தாக்குதல் மூலம் வான் பாதுகாப்பு படையணி என்ற அமைப்புடன் இருந்த விடுதலை புலிகள் ..வான் தாக்குதல் படையணி என்ற புதிய பலத்தை பெற்று இருந்தனர் .
அனால் இத்தனை பலம் கொண்டிருந்த விடுதலை புலிகள் இரண்டு வருடங்களில் எவ்வாறு பலமிழந்து செயலிழந்து போனார்கள் ???

மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? -2

சுழியோடி

தமிழ்ழீழ விடுதலை புலிகளின் போராட்ட வரலாற்றிலே மாற்றத்தை ஏற்படுத்திய (2002 )ம் ஆண்டின் பின்னரான காலபகுதி அமைந்துள்ளது அதாவது சமாதனா காலபகுதி என்று குறிப்பிடலாம் .இந்த சமாதனா காலபகுதியில் விடுதலை புலிகளின் கட்டுபாட்டில் உள்ள நிர்வாக பகுதியான வன்னி பகுதிக்கு பல்வேறுபட்ட நாட்டு பிரமுகர்களின் வருகை வேற்றின மக்களின் வருகை என்பன அதிகரித்திருந்த வேளையில்தான் .விடுதலை போராட்டத்திற்கு எதிரானவர்களின் உடுருவல்கள் என்பனவும் அதிகரித்திருந்தன
இதனை முடியடிக்க இவ்வறனவர்களை கண்டறிந்து இந்த உடுருவல்களை தடுக்கும் நடவடிக்கையில் விடுதலை புலிகளின் புலனாய்வு பிரிவினர் வன்னி பெருநிலப்பரப்பில் தீவிரமாக ஈடுபட்டனர் .
தமிழ் மக்கள் சிலரே இவ்வாறான துரோகத்தனங்களில் ஈடுபட்டு இருந்ததால் சந்தேகத்திற்கு இடமானவர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தபட்டபோது .மக்களிடையே சில மனகசப்பும் ஏற்படத்தான் செய்தது ..எனினும் தாயகத்தின் பாதுகாப்பு என்றவகையில் இந்த நடவடிக்கைக்கு பெருமளவு மக்கள் ஆதரவு வழங்கினர் இதே வேளை விடுதலை புலிகளின் கட்டுபாட்டு பகுதிக்கான பொருளாராத தடை தளர்த்தபட்டது ..விடுதலை புலிகளும் வன்னி வாழ் மக்களும் பொருளாதார ரீதியான வளர்ச்சிய பெறுவதுக்கு சற்று வழியையும் ஏற்படுத்தி கொடுத்தது .அனால் இது மறைமுகமாக தமிழ்ழீழ விடுதலை போராட்ட வளர்ச்சிக்கு மறைமுக பாதிப்பு ஒன்றை ஏற்படுத்தி கொண்டிருந்ததையும் மறுப்பதற்கு இல்லை ..
இவ்வாறு வன்னி மக்கள் மீதான பொருளாதார தடை சிறிலங்கா அரசால் நீக்கபட்டத்தை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் உள்ள தங்கள் நிர்வாக பகுதிகளுக்கும் பொருளாதார தடைகளை முற்றுமுழுதாக நீக்குமாறு விடுதலை புலிகளால் சிறிலங்கா படையினிடம் கோரிக்கை விடப்பட்டது .இதன் பிரகாரம் எழுந்த அல்லது உருவாக்கபட்ட பிரச்சனைதான் மாவிலாற்று பிரச்சனை.இயற்கையின் எழில் நிறைந்த மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் காணப்படுகிறது .இயற்கை துறைமுகம் விமானபடைத்தளம் எண்ணெய் சேமிப்பு கிணறுகள் என்று பல நாடுகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அது காணபடுகிறது .விஞ்ஞானி ஆதார் சீ கிளாக் அவர்கள் குட ஆசிய கண்டத்தில் திருகோணமலைய முக்கிய இடமாக குறிப்பிட்டு உள்ளார் .அதாவது செய்மதி ஏவுதளம் அமைக்ககூடிய இடமாக திருகோணமலை விளங்குவதாக அவர் கணித்திருந்தார் .அதேவேளை பல்வேறு நாடுகளும் திருகோணமலைய முதன்மை இடமாக கருதுகின்றன இந்நிலையில் திருகோணமலையில் சில இடங்கள் சிறிலங்கா அரசால் வெளிநாடுகளுக்கு குத்தகைக்கு விடபட்டு இருந்தன .இவ்வாறு அமையபெற்ற இடத்தில் இருந்து கொண்டே விடுதலை புலிகள் (2003 ) ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் தலைதுக்கிய துரோகத்தினை களைவதுக்கு படையெடுத்து அதில் வெற்றியும் பெற்றார்கள் .கிழக்கில் இருந்து விடுதலை போராட்டத்தின் துரோகிகள் விரட்டியடிக்கபட்டு பாதுகாப்பான நிலைக்கு கொண்டுவரப்பட்டத்தின் பின்னர் அங்கு விடுதலை புலிகளின் நிர்வாக கட்டமைப்புக்கள் மீண்டும் செயற்பட தொடங்கின .திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் தொடக்கம் வெருகல் துறைமுகத்துவாரம் வரையான ( 50 ) மீற்றர் கரையோர பகுதி விடுதலை புலிகளின் திறமைமிக்க நிர்வாக பகுதிகளில் ஒன்றாக விளங்கியது.பல கிராமங்களை உள்ளடக்கிய இந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் விவசாயத்தையும் கடல் தொழிலையும் தமது தொழிலாக கொண்டு வாழ்ந்து வந்தார்கள் .கல்வியில் சற்று குறைவான நிலையிலே இங்கு காணபட்டது இம்மக்கள் தமது அன்றாட பொருட்களை குட சிறிலங்கா படையினரின் பிரதேசங்களுக்குள் சென்றே பெற்றுகொள்ள வேண்டிய தேவை உள்ளது .சம்பூர் மக்கள் கட்டைபறிச்சான் பொலிஸ் சோதனை நிலையம் உடாகவும் ஈசிலம்ப்று வெருகல் கிராம மக்கள் சேருநுவர படை சோதனை நிலையம் உடாகவும் கதிரவெளி மக்கள் வாழைச்சேனை படை சோதனை நிலையம் உடாகவும் சென்றே பொருட்களை பெறவேண்டும் .ஒருவர் தனக்கு தேவையான பொருட்களை மட்டுமே கொண்டுசெல்லாம் பெருமளவு பொருட்கள் எடுத்துசென்றால் அவர் படையினரால் சந்தேகிக்கபட்டு விசாரிக்கபடுவார் .இவ்வாறு அங்குள்ள மக்களுக்கான பொருளாதார தடை சிறிலங்கா படையினரால் போடபட்டு இருந்தது .இவற்றின் மத்தியில்தான் விடுதலை புலிகள் தமது நிர்வாகத்தை அங்கு நடத்தினார்கள் .காட்டு வழியாகவும் கடல் வழியாகவும் பொருட்களை கொள்வனவு செய்தே விடுதலைப்புலிகள் தமது நிர்வாகத்தை நடத்தினார்கள் .அங்கு பல பயிற்சி தளங்களை நிறுவினார்கள் பலநுறு போராளிகளை உருவாக்கினார்கள் மறைமுகமாக அங்கு விடுதலைபுலிகளின் கடற்படைத்தளங்கள் நிறுவபட்டன.
இதன் பிரகாரம் புலம்பெயர்வால் தமிழ் மக்களின் நிதி உதவியில் கொள்வனவு செய்யபட்ட ஆயுத தளபாடங்கள் கப்பல் வழியாக திருகோணமலையில் ஒருதொகுதி இறக்கபடுகிறது .இவ்வாறு அங்கு கடல்புலிகளின் நிலைபடுத்தல் உயர்ந்துகொண்டு சென்றது.. இதனாலையே விடுதலைபுலிகளின் கடல்புலிகளின் ஆதிக்கம் மேலோங்கி காணப்படும் காலப்பகுதியாக (2003 ) ம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதி அமைந்தது ,கடல்புலிகளின் பலமே விடுதலைபுலிகளின் பலம் என்று குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பலமான அணியாக கடற்புலிகள் அணி செயல்பட்டது .இது சிறிலங்கா கடற்படைக்கு மட்டுமில்லை தரைப்படைக்கும் பாரிய அச்சுறுத்தலாக இருந்தது .தங்களுக்கான படையினரின் பலத்தை பெருக்கிகொண்டும் ஆயுத தளபாடங்களை கொள்வனவு செய்துகொண்டு இருந்த சிறிலங்கா படையினருக்கு விடுதலை புலிகள் தங்கள் படைபலத்தை பெருக்கிறார்கள் என்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது .இதனால் தமது இராணுவ முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மறைத்துக்கொண்ட விடுதலை புலிகள் சமாதன காலத்திலும் ஆயுத கொள்வனவிலும் புதிய போராளிகளை இணைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்கள் இதன் ஒரு கட்டாமாக எழுந்த அழுத்தம் காரணாமாக சமாதான தூதுவர்களாக இருந்த நோர்வையின் சமாதான அதிகாரிகள் வன்னியில் உள்ள விடுதலைபுலிகளின் கடற்படையின் படகு கட்டுமானங்களை நேரில் சென்று பார்வையிடுகிறார்கள் .
கடற்புலிகள் தமது படகுகளின் வடிவங்களையும் தாக்குதல் படகுகளையும் படகு கட்டுமானங்களையும் அவர்களுக்கு காட்டியதோடு கடலில் அதன் செயற்பாடுகளையும் செய்து காண்பித்தார்கள் .இவை தொடர்பான தகவல்கள் சிறிலங்கா படையினரை சென்றடைகின்றன இதே நீரம் கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற விடுதலைபுலிகளின் உத்தியோகபூர்வ படகுசேவை உடாகவும் விடுதலைபுலிகளின் கடற்புலிகளின் பலத்தினை சிறிலங்கா படைபுலனாய்வளர்கள் ஆராய்கின்றார்கள் ,அத்துடன் சிறிய படகுகளில் சென்று எதிரிக்கு பாரிய இழப்புக்களை கொடுக்கலாம் என்றும் ஏற்கனவே கடல்புலிகள் ஏற்கனவே வெளிப்படையாக காட்டியிருந்தார்கள் .
இதன் பிரகாரம் புதிதாக சிறிலங்கா கடற்படையின் தரை இறக்கும் படகனிப் படகுகள் கடல்புலிகளின் சிறிய ரக தாக்குதல் படகு போன்ற வடிவத்தில் உருவாக்குகின்றார்கள் .அவைதான் பின்னாளில் கடற்புலிகளுடன் மோதிய அரோ வகை படகுகள் .கடல்புலிகளின் படகுகளை பார்த்தே இந்த படகுகளை சிறிலங்கா படையினர் வடிவமைத்து கொண்டார்கள் .இந்த அரோ வகை படகுகளில் சில நவீன வசதிகளை சிறிலங்கா கடற்படையினர் ஏற்படுத்தினார்கள்.இதன் நாவீன கட்டுமானத்திற்கு ஜப்பான் நாட்டின் உதவிகள் கிடைத்திருந்தது .இவ்வாறான சுமார் நுறு வரையான அரோ படகுகளை கடல்புலிகளை எதிர்பதுக்காக என்றே சிறிலங்கா படையினர் உருவாக்கி இருந்தார்கள் .
இதேநேரம் கிழக்கில் திருகோணமலையில் பல அரசியல் பணிகளில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டார்கள் சாமாதான காலத்தை பயன்படுத்தி சம்பூர் ஈசிலம்பற்று வெருகல் போன்ற பிரதேசங்களில் வீதிகள் பாலங்கள் புனரமைக்க படுகின்றன .இந்த புனரமைப்புக்கு சிறிலங்கா அரசே உதவுகின்றது .இதனுடாக படையினர் புலிகளின் நிர்வாக அலகுகளை கண்கானிக்கின்றார்கள்.இதனிடையே ஒட்டுகுழுக்களின் துரோகத்தனமும் உடுருவல்களும் தலைதுக்குகின்றன .இவற்றையும் விடுதலைப்புலிகள் முரியடிக்கின்றார்கள் இந்த முறியடிப்பில் திருகோணமலை மாவட்டத்தின் இராணுவ புலனாய்வு பொறுப்பாளராக மாவீரர் லெப் கேணல் அறிவு திறம்பட செயல்படுகிறார் .
அத்துடன் அங்குள்ள மாவீரர் குடும்பங்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கான உதவிகள் வழங்கபடுகின்றன .பாடசாலை செல்லாத வறிய மாணவர்கள் இனம்கானபட்டு கல்வி கழகம் உடாக அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு பாடசாலைக்கு அனுப்பிவைக்கபடுகின்றனர் .பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இனம்காணப்பட்டு உயர்தரம் படித்த தொண்டர் ஆசிரியர் உடாக கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுத்தபடுகின்றார்கள் .மருத்துவ பிரச்சனை இனம்காணப்பட்டு வன்னியில் இருந்து தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையினை வரவளைக்கபட்டு மருந்துபொருட்கள் வழங்கபட்டு மக்களின் நோய்கள் தீர்க்கபடுகின்றன .கடல்புலிகளின் ஏற்பாட்டில் சங்கங்கள் உடாக கடல் தொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டு தொழில் வாய்ப்பு உக்குவிக்கபடுகின்றது .சம்பூர் வெருகல் பிரதேச மக்கள் வளமான மக்களாக மற்றம் கண்டு வந்துகொண்டு இருந்தார்கள் .
அத்துடன் பொருண்மிய கட்டமைப்பு உருவாக்க படுகின்றது மக்களின் சீர்திருத்தத்தை கண்காணிக்க தமிழ்ழீழ காவல்துறை தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தியது .நீதி நிர்வாகம் அங்கு கொண்டு செல்லபடுகின்றது.மக்களிடையே ஆனா பிணக்குகளுக்கு தீர்வு காணப்படுகிறது .பிரச்சனை களையபடுகின்றது.விடுதலை புலிகளின் இந்த சீரான நிர்வாக கட்டமைப்பு அயல் பிரதேசங்களில் குடியேற்ற பட்டிருந்த சிங்கள மக்கள் மத்தியில் அவமானத்தையும் கோவத்தையும் ஏற்படுத்துகின்றது .இதனால் சில சிங்கள கிராமத்தின் முதன்மையானவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான தமிழ் மக்களுடன் விரோதத்தை ஏற்படுத்தகூடிய சூழ்ச்சி வேலைகளில் ஈடுபட்டார்கள் .மூதுரை பொருத்தமட்டில் முதூர் இஸ்லாம் மக்களை கொண்ட நகரமாக காணப்படுகிறது .தமிழ் முஸ்லீம் மக்களிடையேயான பிரச்சனைகள் தமிழ்ழீழ விடுதலைபுலிகளால் தீர்க்கபட்டு இரு பகுதியினருக்கும் இடையிலான உறவு அங்கு வளர்க்க படுகிறது .இவ்வாறு அங்கு விடுதலை புலிகளின் கட்டுமானங்கள் அங்கு திறம்பட செயல்படுகின்றன .
இந்நிலையில் வன்னியில் இருந்த தளபதி பால்ராஜ் தலைவர் அவர்களால் திருமலை அனுப்பிவைக்க படுகிறார்..

மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? -3

சுழியோடி

சிறிலங்கா தனது இராணுவப் பலத்தை பெருக்கிகொண்டுடிருக்கும் போது மறுதரப்பான விடுதலைப்புலிகள் அமைதியாக இருந்துவிட்டால் அது அவர்களுக்கு பெரும் ஆபத்தாக முடிந்துவிடும் .சிறிலங்கா போர் ஒன்றை தொடுக்கும்போது அதனை எதிர்கொள்ளமுடியாத ஒரு நிலையை விடுதலைபுலிகளுக்கு ஏற்படுத்திவிடும் .இதனால்தான் சமாதனத்துக்கான சரியான வழி எப்போதும் போருக்கு தயாராக இருப்பதுதான் .என்று அமரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஸ் தெரிவித்தாரே .

எனவே சிறிலங்கா பலத்தை பெருக்கிக்கொண்டு இருக்கும்போது விடுதலைப்புலிகள் மவுனமாக இருந்துவிட முடியாது .அவர்களும் தமது படைவலுவை கட்டியெழுப்ப வேண்டியது சமாதன காலத்திலும் அவசியமாயிருந்தது .இந்த நிலையில்தான் தலைவர் அவர்களால் பால்ராஜ் தலைநகர் திருமலைக்கு அனுப்பிவைக்க படுகிறார் .( 2004 )ம் ஆண்டின் ஆரம்பத்தில் திருகோணமலையில் தளபதி பிரிக்கேடியர் பால்ராஜ் கால் பதிக்கின்றார் வாகரையில் புதிய பயிற்சி தளங்களை அவர் நிறுவுகிறார் போராளிகளுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கபடுகின்றன .கிழக்குக்கு தேவையான ஆயுத தளபாடங்களை தரை வழியாக கொண்டுசென்று சேர்ப்பதைவிட கடல்வழியாக இறக்குவதே சுலோபமாக இருந்தது .எனவே அந்த மாவட்டத்துக்கு தேவையான ஆயுதங்கள் கடல் வழியாக இறக்கபடுகின்றன .பெருமளவு மோட்டார்கள் இறக்கப்பட்டு அதனை இலக்குநோக்கி வீசுவதுக்கான பயிற்ச்சிகள் போராளிகளுக்கு வழங்கபடுகின்றது.புதிய குறிசூட்டு (சினைப்பர் )அணியினர் உருவக்கபடுகின்றார்கள் குறிப்பிட்டு கூறுவதனால் பால்ராஜ் அவர்களின் வருகைக்கு பின்னர் விடுதலைப்புலிகள் படையணிகள் அங்கு பலம்பெறத் தொடங்கியிருந்தன .
இதேவேளை சமாதன காலமான இக் காலத்தில் பிரிக்கேடியர் சு ப தமிழ்செல்வன் கிழக்கு மாகாணத்தை பார்வையிட சிறிலங்கா படைப் உலங்குவானுர்தியில் திருகோணமலை சேனையூரில் வந்திறங்குகிறார் .அவர் சம்பூர் தொடக்கம் வாகரை வரை சென்று பார்வையிட்டு பொறுப்பாளர் தளபதிகள் ஆகியோரை சந்தித்து மக்களுடன் கலந்துரையடுகிறார் .இதேநேரம் சர்வதேச போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் வழித்துணையுடன் போராளிகள் கடல்வழியாக பயணங்களை கிழக்கிற்கு மேற்கொண்டனர்.இதற்கிடையில் தமிழீழ விடுதலைப்புலிகள் புலனாய்வு பொறுப்பாளர் ச போட்டு அவர்களும் வன்னியில் இருந்து காடு மற்றும் கடல் வழிகளுடாக இரகசிய பயணம் ஒன்றை திருமலைக்கு மேற்கொண்டார்.அங்கு சொர்ணம் அவர்களுடன் இணைந்து அங்குள்ள கள நிலைமைகளை அராய்கின்றார்.அங்கு மக்களை சந்தித்து உரையாடிவிட்டு வன்னி திரும்புகின்றார் அன்று இது ஒரு இரகசிய பயணமாகவே இருந்தது.இதன்பின்னர் விடுதலைபுலிகளின் நீண்டகால திட்டமிடலின் அடிப்படையில் வெருகல் பிரதேசத்தில் கல்லடி என்னும் கிராமத்தில் வானொலி ஒலிபரப்பு சேவை என்ற பெயரில் தொலைத்தொடர்பு வான்படை கடல்வழி அவதானிப்பு கருவிகளை இணைப்பதுக்காக இரண்டு கோபுரங்கள் (ரவர்கள்)அமைக்கபடுகின்றன .கடற்கரைய அண்மித்ததாக மலையில் ( 120 ) அடி உயரம் ( 200 ) அடி உயரம் உடையதுமான இரண்டு கோபுரங்கள் அமைக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன .இதனை அறிந்த சிறிலங்கா படைபுலனாய்வளர்கள் இது குறித்து ஆராய்கின்றார்கள் பின்பு சிறிலங்கா வானொலியொன்றில் இது செய்தியாக வெளியிடபடுகின்றது.திருமலையில் விடுதலைபுலிகளின் விமானதளம் அமைப்பதுக்கான கண்காணிப்பு கோபுரம் வெருகல் பிரதேசத்தில் அமைக்கபட்டு வருகின்றது என்ற செய்தி அங்கு பரபரப்பை ஏற்படுத்துகின்றது .இந்த கோபுரம் அருகில் உள்ள சிங்கள கிராமங்களுக்கும் தெரிவதால் அங்குள்ள சிங்கள மக்களுக்கும் ஊர்காவல் படையினரின் மனங்களிலும் சிறு அச்சம் ஏற்படுகின்றது .
இவ்வாறு இருக்கையில் ( 2004) ம் ஆண்டு நடுப்பகுதியில் மட்டகிளப்பு மாவட்டத்திற்கு ஒரு தொகுதி ஆயுத தளபாடங்கள் கடல்வழியாக இறக்கபடுகின்றன .கடல்புலிகளால் ஆயுதங்கள் பாதுகாப்பாக இறக்கபட்டு மட்டகிளப்பு மாவட்ட தளபதி பானுவிடம் ஒப்படைக்க படுகின்றன
வன்னியில் இருந்த ஆயுத பயிற்சி ஆசிரியர்கள் நிர்வாக திறன்மிக்க போராளிகள் தாக்குதல் வியூகங்களை வகுக்கும் தளபதிகள் இரகசியமாக திருகோணமலை மாவட்டத்திற்கு மட்டகிளப்பு மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கபட்டு பயிற்சி வகுப்புங்கள் நிர்வாகம் சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள்.அங்குள்ள போராளிகளுக்கு கற்பிக்கின்றார்கள் மரபுவழி படையணிகள் கட்டி வளர்கபடுகின்றன.குறிப்பாக ஜெயந்தன் படையணி அன்பரசி படையணி .மோட்டார் படையணி என்பன சிறப்புற கட்டியமைக்க படுகின்றன.இவற்றுக்கு மத்தியில் சிறிலங்கா படையின் கட்டுபாட்டு பகுதியில் இருந்துகொண்டு செயற்படும் துரோகிகள் களையப்பட வேண்டிய அவசியம் எழுகின்றது.விடுதலைக்கு ஆதரவாக செயற்படுபவர்களை படைப் புலனாய்வாளர்களும் படுகொலை செய்துகொண்டு இருந்தமையால் இதனை தடுத்து நிறுத்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய ஒரு இறுக்கமான நிலை ஏற்படுகிறது .இதனால் இதற்காக விசேட அணியொன்று பிஸ்டல் குருப் என்ற பெயரில் இரகசியமாக உருவாக்கபடுகின்றது .தமிழ்ழீழ விடுதலைக்காக துரோகத்தனங்களில் ஈடுபட்ட துரோகிகள் படைப்புலனாய்வளர்கள் இக்குழுவின் இலக்கிற்குள் அகப்பட்டுகொள்கின்றார்கள்.இரு பகுதிக்கும் இடையே ஒரு மறைமுக மோதலாக இது இடம்பெற்று கொண்டிருக்கிறது.இந்த நிலையில்தான் ( 2004)ம் ஆண்டு (12)ம் மாதம் ( 26 ) ம் நாள் சுனாமி தமிழீழ கரையெங்கும் தாக்குகின்றது.திருகோணமலையில் விடுதலைபகுதியில் நிர்வாக பகுதியான சம்பூரதொடக்கம் வாகரை மாங்கேணி கடற்கரை வரை தாக்கிய சுனாமியால் ஆயிர கணக்கான மக்கள் காவுகொள்ளபடுகின்றனர்.மக்களின் உடைமைகள் அளிக்கபடுகின்றன இதன்போதும் வாகரையில் விடுதலைபுலிகளின் சிலதளங்கள் பாதிப்படைகின்றன.குறிப்பாக அங்கிருந்த மோட்டார் தளங்களில் கடல் தாக்கம் ஏற்படுகின்றது.இந்த பாதிப்பிற்குள் தளபதி பால்ராஜ் உள்ளகின்றார் .
இதனை தொடர்ந்து திருமலையில் மக்களை மீள்கட்டுமானம் செய்யும் பணிகளில் விடுதலை புலிகளின் நிர்வாக கட்டமைப்புகள் செயற்படுகின்றன.கொல்லபட்ட மக்களின் உடலங்களை எடுத்து அடக்கம் செய்யும் மக்களுக்கான இருப்பிட வசதிகள் உணவு வசதிகள் என்பனவற்றை ஏற்படுத்திகொள்ளும் பணிகளில் ஈடுபடுகின்றார்கள்.இதே வேலை இந்த சுனாமியால் படையினரின் வளங்களும் பாதிக்கபட்டு அவர்களின் போர் முனைப்புக்கள் தமதம்மடைகின்றன .போர் ஒன்றை சிறிலங்கா இராணுவம் ஆரம்பிக்க முடியாத நிலையை இந்த சுனாமி ஏற்படுத்தியது

மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? – 4

சுழியோடி

இயற்கையின் பேரனர்த்தத்தில் (சுனாமி) இருந்து மக்களை மீள் கட்டமைக்கும் செயற்பாடுகள் விடுதலை புலிகளால் கிழக்கிலும் முல்லைத்தீவிலும் யாழ்பாணத்திலும் பகுதிகளிலும் சிறப்புற மேற்கொள்ளபடுகின்றன .இதற்கான நிர்வாக அலகுகள் திறம்பட செயற்படுகின்றன .விடுதலை புலிகளை அனைத்து கட்டமைப்புகளும் மக்கள் மீள் கட்டுமான பகுதிகளில் ஈடுபடுத்தபடுகின்றன உலக நாடுகளிடமும் புலம்பெயர்ந்த மக்களிடமும் இருந்து கிடைத்த உதவிகளை பெற்று மக்களுக்கு சென்றடைய விடுதலைப்புலிகள் நிர்வாகங்களை உருவாக்குகின்றார்கள் .

இதே வேளை சமாதன செயலகத்தால் சுனாமி மீள்கட்டுமான செயற்குழு உருவாக்க படுகின்றது .இதனுடாக உலகநாடுகளில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்க படுகின்றன .இந்த சுனாமியால் கிடைத்த வாய்பை பயன்படுத்தி மக்களுக்கு தேவையான பொருட்கள் வன்னிக்கு எடுத்துவரபட்ட அதே வேளை விடுதலைபுலிகளுக்கு தேவையான பொருட்களும் இறக்குமதி செய்யபடுகின்றன .குறிப்பாக பெறுமதி மிக்க இலத்திரனியல் பொருட்கள் தொலைத்தொடர்பு பொருட்கள் ஏன் விமான உதிரிப்பாகங்கள் கூட கொள்வனவு செய்து இறக்கும் போது பிடிபட்டு இருந்த செய்தியும் நீங்கள் அன்று அறிந்திருப்பீர்கள் .இவ்வாறு திருகோணமலை மாவட்டத்திற்கும் விடுதலைப்புலிகள் தமக்கு தேவையான பொருட்களையும் தருவித்து கொள்கின்றார்கள் .இவற்றுள் நீண்டகாலம் வைத்திருக்ககூடிய மருந்து பொருட்கள் முதன்மையாக அடங்குகின்றன .அதற்கான இடங்கள் இனம்கனபட்டு மருத்துவ பிரிவு மருத்துவமனைகளை அங்கு அமைக்கிறார்கள் .இதனிடையே திருகோணமலையில் வெளிநாட்டு மருத்துவ அணிகள் வந்து விடுதலைபுலிகளின் கட்டுபட்டு பகுதிக்குள் சென்று மக்களுக்கு சிகிச்சை அளிக்கிறார்கள் .இது ஒரு புலனாய்வு நடவடிக்கை என்று தெரிந்திருந்த போதும் மக்களுக்கு மருந்து சேவை அவசியமாக தேவைபட்டாதால் விடுதலைப்புலிகள் இது தொடர்பான அவதானத்துடன் அவர்களின் சேவைக்கு அனுமதி வழங்கியிருந்தார்கள் ,எனினும் ஒரு சில தமிழ்மக்கள் முலமே தங்களுக்கு தேவையான புலனாய்வு தகவல்களை அவர்கள் திரட்டிக்கொண்டு இருந்தார்கள் என்பதை பின்னர் அறியமுடிந்தது.இவர்களது நடவடிக்கை இவ்வாறு இருக்கையில் விடுதலைபுலிகளும் திருமலை மாவட்டத்தில் இருந்துகொண்டு இலங்கையின் தென்பகுதிக்கான நடவடிக்கைகள் விடுதலைப்புலிகள் புலனாய்வு பிரிவினரால் திட்டமிட படுகின்றன.இலங்கையின் தலைநகரான கொழும்பு மற்றும் சுற்றுப்புற இடங்களில் தாக்குதல் நடத்துவது இராணுவ அரசியலில் முதன்மையனவர்களை இனம்கண்டு அவர்களின் இருப்பிடங்களை கண்டறியும் ஒரு பிரிவும் ,இவ்வாறு தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கும் முதன்மையானவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதுக்கான ஒரு பிரிவு .அதிலும் கரும்புலி அணிகள் இவற்றுக்கு எல்லாம் திருகோணமலை உடாகவே வெடிபொருட்களை கடத்தும் அணிகளின் செயற்பாடுகள் நடைபெறுகின்றன .
___________________________________________________________________________________

___________________________________________________________________________________
இதற்கிடையில் வன்னியில் விடுதலைபுலிகளின் கட்டுபாட்டு பகுதிகளிலும் கிழக்கிலும் பல்வேறு இராணுவ நடவடிக்கைகளை அதாவது உடுருவல் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதில் படையினருக்கும் பல்வேறு தகவல்களை வழங்கி வந்தவரும் விடுதலை போராட்டத்திற்கு பெரும் தடைகற்கள இருந்தவருமான புளட் மோகன் என்று அழைக்கப்படும் கந்தையா யோகராச என்பவர் கொழும்பில் வைத்து பிஸ்ரல் குழுவினரால் ஏற்கனவே சுட்டு கொல்லபட்டு இருந்தார் .சிறிலங்காவில் வன்னி மற்றும் மட்டகிளப்பு திருகோணமலையில் மேற்கொள்ளபட்ட பல உடுருவி தாக்குதல்களுக்கும் விடுதலை போராட்டத்திற்கு ஆதரவானவர்கள் சுட்டுகொல்ல படுவதற்கு பின்னால் மட்டுமல்ல கருணா விடுதலை போராட்டத்திற்கு துரோகம் இழைத்து இயக்கத்தை விட்டு வெளியேறியபோது கருணாவிற்கு பாதுகாப்பு அழிப்பது உட்பட கருணாவின் பல நடவடிக்கைகளுக்கு பின்னே இந்த பிளாட் மோகன் இருந்ததால் கொழும்பின் உச்ச பாதுகாப்பு பகுதியில் வைத்து (31-07-2004 ) அன்று பிஸ்ரல் குழுவினர் அவரை சுட்டு கொன்றிருந்தனர்.எனினும் அதன் பின்னரும் விடுதலை போராட்டத்திற்கு ஆதரவானவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் சில மாதங்களில் ஏற்பட்ட சுனாமி காரணமாக சற்று ஓய்ந்திருந்தது .எனினும் அது அதிக காலம் நீடிக்கவில்லை மீண்டும் சிறிலங்கா படை புலனாய்வாளர்களால் ஒட்டு குழுக்களினதும் நடவடிக்கை தொடர தொடங்கியதும் அதற்கு எதிரான நடவடிக்கைகளில் மீண்டும் பிஸ்ரல் குழுவினர் இறங்கினார்கள் .இதன் ஒரு கட்டத்தில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராக இருந்த லக்மன் கதிர்காமரும் (2005 ) ஓகஸ்ட் (12 ) ல் சுட்டுகொல்லபட்டார்.இவ்வாறன களையெடுப்பு நடவடிக்கைகளுக்கு தளமாக கட்டளை பிடமாக திருகோணமலையே விளங்கியது .இதே வேளை கடலிலும் கடற்புலிகளுக்கும் சிறிலங்கா கடற்படைக்கும் இடையில் சில மோதல்கள் இடம்பெற்றன.எச்சரிக்கை அறிவிப்பாக போராளிகளால் டோற படகுகள் முழ்கடிக்க பட்டன .இதனை தொடர்ந்து மீண்டும் சிறிலங்கா கடற்படையினரால் கடலில் மீன்பிடிக்க கடுமையான தடைச்சட்டம் கொண்டுவர பட்டது.திருகோணமலையிலும் ஆழ்கடலிலும் சென்று தொழில்செய்யமுடியாத நிலைக்கு கடல்தொளிலாளர்கள் தள்ளபட்டனர் .இத்துடன் பொருளாதார thaday மக்கள் மீது திணிக்கபடுகின்றது.பொருட்களுக்கு மீண்டும் கட்டுபாடு விதிக்கபடுகின்றன இவ்வாறன பிரச்சனைகளை தளர்த்துமாறு சிறிலங்கா படையினரிடம் விடுதலை புலிகளால் கேட்கபடுகின்றது.இதற்கு சம்மதிக்காத சிறிலங்கா அரசு மக்கள் மீது பல்வேறு கெடுபிடிகளை மேற்கொள்கின்றார்கள்.சிறிலங்கா மீண்டும் போர் ஒன்றை முன்னேடுப்பதுக்கு முனைப்புடன் செயற்படுகின்றது என்பதை சமாதன உடன்படிக்கைக்கு எதிரான இந்த செயற்பாடுகள் புரியவைத்தன .சிறிலங்காவின் இந்த போர் முனைப்பை பிரகாரம் தொடங்குகிறது .மாவிலாற்று பிரச்சனை சம்பூர் சேனையூர் ஈச்சிலம்பற்று புன்னையடி போன்ற விவசாயிகளின் இணக்கத்துடன் விடுதலை புலிகளால் சிங்கள கிராமத்துக்கு செல்லும் அணைமீது இடைக்கட்டு கட்டபட்டு ஆற்று நீர் சிங்கள் மக்களுக்கு செல்லாமல் தடுக்கபட்டு முற்றிலுமாக தமிழ் மக்களின் செயற்பாட்டுக்கு விடப்படுகிறது

மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? -5

சுழியோடி

சமாதன உடன்படிக்கைக்கு முரணாக சிறிலங்கா செயற்பட்டுக்கொண்டு இருந்தபோதுதான் விடுதலைப்புலிகள் மாவிலாறு அணையை முடுகின்றார்கள் .போரினால் மட்டுமல்ல இயற்கை அனர்த்தமான ஆளிபேரளையால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கும் உதவுவதுக்கு முனையாத சிறிலங்கா அப்பாவி மக்கள் மீது கெடுபிடிகளை ஒரு பொற்கால நிலைபோன்று ஏற்படுத்திய நிலையில்தான் அதற்கு எதிராக விடுதலைப்புலிகள் மாவிலாறு அணை விவகாரத்தை கையிலெடுத்தார்கள்.(2006 ) ம் ஆண்டு யூலை (22 ) ம் திகதி சிங்கள குடியேற்ற மக்களுக்கு செல்லும் தண்ணீருக்கான அணைகள் மூடப்பட்டன .

இது மூடப்பட்டதும் இரு தரப்பினரும் சிலகாலம் சமரச நடவடிக்கையில் ஈடுபட்டனர்.அனால் மக்களின் அடிப்படை பிரச்சனைய தீர்பதுக்கு குட சிறிலங்கா இறங்கியோ இணங்கியோ வராத நிலையில் பிரச்சனை போர்நிறுத்த கண்காணிப்பு குழுவிற்கு செல்கிறது .இதன்போது ஏற்பட்ட இணக்கப்பாடுகளை அடுத்து மனிதாபிமான அடிப்படையில் அணையை திறந்து விடுவதுக்கு விடுதலைப்புலிகள் சம்மதிக்கின்றார்கள்.அனால் பேச்சுக்கள் முலம் அணையை திறப்பதுக்கு மறுத்த படையினர் தாக்குதல் முலம் அணையை திறப்பதாக அறிவித்து விட்டு கடுமையான முன்னேற்ற தாக்குதல்களை நடத்த தொடங்கினர்.இந்நிலையில்தான் படையினரின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் திருகோணமலையில் விடுதலைப்புலிகள் பலத்தினை காட்டும் முகமாகவும் ஓகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஒரு வழிந்த தாக்குதலை முதூர் பகுதியை இலக்கு வைத்து மேற்கொள்கிறார்கள்.திருகோணமலையில் விடுதலைபுலிகளின் பலத்தினை கட்டும் முகமான தாக்குதலாக இருக்க வேண்டும் எனக் கருதிய விடுதலைப்புலிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இந்த தாக்குதலை நடத்துவதுக்கு திட்டமிடுகிறார்கள்.புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் இதற்கான தாக்குதல் திட்டத்தினை தளபதி சொர்ணம் வகுத்து கொடுத்தார் .தாக்குதல் தரை வழியாகவும் கடல் வழியாகவும் நடத்துவதுக்கு திட்டமிடப்பட்டது.தரைபகுதியில் வெளிகளினுடாக கடந்து சென்று கட்டடைபறிச்சான் ஜி.பி.எஸ்.படைமுகாமினை தாக்கி அழித்து அங்கிருந்து (45 ) ம் கட்டைபறிச்சான் படைமுகாம் சென்று தாக்குதல் நடத்துவது.கடல்வழியாக முதூர் இறங்குதுறை மீது தாக்குதல் நடத்தி முதூர் நகரத்தை மீட்பது பின்பு அங்கிருந்துகொண்டு தம்பலகாமம் ஆலங்கேணி பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி முதுரின் பிரதேசத்தை முற்றுமுழுதாக விடுதலைபுலிகளின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவருவதுக்கான திட்டம் தீட்டபட்டு இருந்தது .புலனாய்வு தகவல்களை கொண்டு இழப்புக்களை குறைத்து படையினருக்கு பெரும் அழிவை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் திட்டம் மிக கவனமாக வகுக்கபட்டு இருந்தது.எனினும் முதூர் பிரதேசம் பெரிய பிரதேசம் தமிழ் முஸ்லீம் மக்கள் இணைந்து வாழுகின்ற பிரதேசமாக காணபடுகிறது.இதில் முஸ்லீம் மக்கள் தாக்குதல் நடத்தும் இடங்களில் அதிகம் வசித்து வந்தார்கள்.எனவே ஒரு வழிந்த தாக்குதல் திட்டமாக வடிவமைக்க பட்ட இந்த தாக்குதல் திட்டம் இறுதியில் ஒரு முறியடிப்பு தாக்குதல் திட்டமாக மாற்றபட்டது.அனால் எதிர்பார்த்ததுக்கு மாறாக தாக்குதல் தொடன்குவதுக்கு முன்னர் முதூர் பிரதேசத்தில் உள்ள படைமுகாம்களில் இருந்து படையினர் எல்லோரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்கள்.அருகில் குடியேற்ற பட்டிருந்த மக்கள் கூட தாக்குதல் அச்சத்தால் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்கள்.எனினும் முதூரில் குறிப்பிட்டு சொல்லகூடிய படைமுகாம்கள் விடுதலைபுலிகளால் தாக்கியளிக்கபட்டு படையினரின் இராணுவ தளபாட பொருட்கள் பெருமளவில் கைப்பற்றபட்டு இருந்தன.முதூர் பிரதேசம் விடுதலைபுலிகளின் கைகளில் முழுமையாக வந்தடைந்தது.எனினும் மீட்கப்பட்ட இடங்களை தக்கவைப்பது என்பது கேள்விக்குரிய விடையமாகிறது .அதாவது விடுதலைபுலிகளின் கைகளுக்குள் இலகுவாக விழுந்த பரந்த பிரதேசத்தில் அரண் அமைத்து தக்கவைப்பதுக்கு காலம் மட்டுமல்ல போராளிகளும் போதாமல் இருந்தனர்.அதிக இழப்புக்களும் அழிவுகளும் இன்றி மிக இலகுவாக வெற்றி கொள்ளபட்ட பிரதேசத்தை தக்கவைக்க முடியாமல் போராளிகள் தங்கள் பழைய நிலைகளுக்கு திரும்பவேண்டிய ஒரு இக்கட்டான நிலை எழுந்தது.அதேவேளை இராணுவ முன்னேற்றங்களுக்கு கருத்து கூறாத சர்வதேச நாடுகள்.விடுதலைப்புலிகள் ஒப்பந்தத்தை மதித்து தமது பழைய நிலைகளுக்கு திரும்பவேண்டும் என வலியுறுத்த தொடங்கியிருந்தார்கள்.இந்த நிலையில் போராளிகள் மீண்டும் பழைய நிலைகளுக்கு திரும்பினர்.மீண்டும் அந்த பிரதேசங்களை ஆக்கிரமித்தது சிறிலங்கா இராணுவம் இந்த ஆக்கிரமிப்பின்போது அங்கு தங்கியிருந்த மக்கள் பலரை படுகொலை செய்தது.இதில் குறிப்பாக பிரான்சின் பட்டினிக்கு எதிரான அமைப்பின் பணியாளர்கள் (17 ) பேர் மிககொடுராமாக படுகொலை செய்யபட்ட கொடுமை அரங்கேறியது.இதற்கிடையில் மாவிலாற்றை திறப்பதற்கு பொதுமக்கள் மீதான பொருளாதார தடைகளை நீக்குமாறு போர்நிறுத்த கண்காணிப்புகுழு உடாக சில தமிழ் தலைவர்கள் சமரச முயற்சியில் ஈடுபடுகின்றார்கள்.இதில் திருகோணமலை மாவட்ட மக்கள் பேரவை தலைவராக இருந்து பின்பு சிறிலங்கா துணை இராணுவ ஓட்டுகுளுவினரால் சுட்டுகொல்லபட்ட மாமனிதர் விக்கினேஸ்வரன் மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் ஆகியோர் சிங்கள அதிகாரிகளுடனும் சிங்கள தலைவர்களுடனும் கதைத்து இணக்கப்பாட்டை ஏற்படுத்த முனைகின்றார்கள்.அதிலும் எதுவித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை இதேவேளை மாவிலாற்று அணை விவகாரம் தொடர்பாக விடுதலைபுலிகளுக்கும் சர்வதேச போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினருக்கும் இடையிலான பேச்சுகளின் முடிவில் மனிதாபிமான அடிப்படையில் நீரை திறந்து விடுவதற்கு விடுதலைப்புலிகள் முடிவு செய்கின்றார்கள்.இதனடிப்படையில் (06.08.2006 ) அன்று அணையை திறப்பதற்காக சென்ற திருகோணமலை மாவட்டத்தின் அரசியல்துறை பொறுப்பாளர் எழிலனும் சர்வதேச கண்காணிப்பு குழுவினரும் சிறிலங்கா படையினரின் கடுமையான எறிகணை தாக்குதலுக்குள் இலக்காகின்றார்கள்.எழிலனும் கண்காணிப்பு குழுவினரும் மயிரிழையில் உயிர்தப்புகின்றனர்.

பின்னர் (08.08.2006 ) மாலை ஐந்து மணிக்கு அணை திறந்துவிடப்பட்டது.
எனினும் தமது போர் நடவடிக்கைய கைவிடாத சிறிலங்கா அரசாங்கம் அணையை ஆக்கிரமிப்பு நோக்குடன் மாவிலாறு நோக்கி மறுநாள் ஒன்பதாம் திகதி நகர்வை மேற்கொண்டனர்.அந்த நகர்வு விடுதலை புலிகளால் கடும் தாக்குதல் முலம் முறியடிக்கபட்டதையடுத்து மறுநாள் பத்தாம் திகதியும் பெரும் எடுப்பில் படை நடவடிக்கைய மேற்கொண்டனர்.இதன்போது நாற்பதுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லபட்டதுடன் மேலும் பல மதியினர் படுகாயங்களுக்கு உள்ளாகினார்கள்.இந்த முயற்சி தோல்வியடைந்ததையடுத்து கடுமையான விமானதக்குதல்களை தொடங்கிய படையினர் அணைக்கட்டை தாக்கியழிக்கும் நோக்குடன் அதனை இலக்கு வைத்தும் கடுமையான விமானத்தக்குதலை நடத்தினர்.இதற்கு பதிலடியாக ( 12 ) ம் திகதி விடுதலைபுலிகளின் கிட்டு பீரங்கி படையினர் திருகோணமலை துறைமுகம் மீது கடுமையான ஆட்டிலெறி தாக்குதலை நடத்தியது எனினும் தரைவழியாக முன்னேற படையினர் முனைந்தனர்.இவர்கள் மீது விடுதலைபுலிகளின் அணிகள் சிறப்பாக தாக்குதல் நடத்துகின்றார்கள்.காட்டு பகுதியில் பொறிவெடி மிதிவெடி என்பனவற்றில் படைகள் சிக்கி பெரும் இழப்புக்களை சந்திக்கின்றார்கள்.திருகோணமலையில் படையினருக்கு ஏற்பட்டுவந்த தொடர்சியான பேரிழப்பு விடுதலைபுலிகளின் பலம் குறித்து அச்சத்தை இராணுவத்தினர் மத்தியில் ஏற்படுத்துகின்றது.சில குறுகிய காலத்தில் பல படைமுகாம்களை தாக்கியளித்து விடுதலைப்புலிகள் மிகவேகமாக முன்னேறியது எதிர்காலத்தில் படையினருக்கு எதிர்காலத்தில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தும் என்பதை சிங்கள தரப்பிற்கு உணர்த்தியது.கருணாவின் பிரிவும் சமாதன காலமும் விடுதலை புலிகளின் பலத்தை பெருமளவு குறைவடைய வைத்திருக்கும் என்று நம்பிய படையினருக்கு மட்டுமல்ல சிங்கள அரச தலைமைக்கும் பெரும் அதிர்சிய ஏற்படுத்தியது.இதுவே திருகோணமலையில் இருந்து விடுதலைபுலிகளை அகற்றவேண்டும் என்ற என்னத்தை சிங்கள தலைமையான மகிந்தவின் ஆழ மனதில் உருவாக்கியது.எனலாம் .இத்தாக்குதலை தொடர்ந்து திருகோணமலையில் சிறிலங்கா கடற்படையின் முதக்கும் மினிமுகாம் எனப்படும் அரசின் டோரா கலங்கள் விடுதலைபுலிகளின் கடற்புலிகளால் தாக்கியழிக்க படுகின்றன .திருகோணமலை துறைமுகத்தின் நிலை கேள்விக்குள்ளாகின்றது .இது பன்னாட்டு வணிக நடவடிக்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.
அதாவது திருகோணமலைக்கு வரும் வணிக கப்பல்கள் அங்குவர மறுக்கின்றன.இது சிறிலங்கா அரசிற்கு பெரும் சிக்கலை உண்டாக்கியது.குறிப்பிட்டு கூறுவதானால் துறைமுகம் சிறிலங்கா இராணுவத்தின் கைகளில் இருந்தாலும் திருகோணமலையின் கடல் கடற்புலிகளின் ஆதிக்கத்தில் இருக்கிறது என்பது உறுதியாகிறது.இது சிறிலங்கவினை விட அருகில் உள்ள இந்தியாவிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது

மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன?- 6

சுழியோடி

விடுதலைபுலிகளால் திருகோணமலை கைப்பற்ற பட்டு விட்டால் அங்கு தமது இருப்பு கேள்விகுரியகிவிடும் என்ற எண்ணம் இந்தியாவிடம் காணபட்டது.திருகோணமலை படைத்தளம் மீது விடுதலைபுலிகளின் எறிகணை தாக்குதல்களும் கடற்பரப்பில் கடற்புலிகளின் ஆதிக்கமும் திருகோணமலையை சிறிலங்கா இழக்க வேண்டிய நிலைக்கு கொண்டுவந்து விட்டுவிடும் என்பதை இந்திய உணர்ந்திருந்தது அதனை தக்கவைப்பதற்கான நடவடிக்கையில் இந்திய இறங்கியது.
திருகோணமலையில் இந்தியாவிற்கு சொந்தமான என்னை குதங்கள் மட்டுமல்ல பல பொருளாதார நலன்களும் இருக்கின்றன.இவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது திருகோணமலையில் தனது இருத்தலுக்கான ஆதிக்கத்திற்கு ஆப்பு வைத்துவிடும்.என்பதே இந்தியாவின் அவசர நடவடிக்கைக்கு காரணம்.திருகோணமலைய முழுமையான கட்டுபாட்டிற்குள் கொண்டுவர அங்கிருந்து விடுதலைப்புலிகள் அகற்றப்பட வேண்டும் என்ற முடிவிற்கு இந்திய வந்திருந்தது.எனவேதான் கிழக்கில் மகிந்த எடுத்த படையெடுப்புக்கு இந்திய தனது ஆதரவுகளை வழங்கியது வெளிப்படையாக சொல்லுவதானால் திருகோணமலையில் விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை இந்தியாவே தூண்டிவிட்டது.மகிந்தவின் கிழக்கின் உதயம் என்ற கருத்துருவாக்கமும் இந்தியைடம் இருந்து வந்த கருத்துருவாக்கம் என்பது திடமானது

அத்துடன் விடுதலைபுலிகளின் கட்டுபாட்டில் இருந்த சில பிரதேசங்களையும் ஆக்கிரமித்து அங்குள்ள வளங்களையும் பயன்படுத்திகொள்ளவேண்டும் என்பது இந்தியாவின் நீண்டகால நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

திருகோணமலையில் புல்மோட்டை துடக்கம் முதூர் வரையான கடற்கரை பிரதேசங்கள் பல வளங்களை கொண்டிருக்கிறது .இதில் கனிய வளங்கள் மிகமுக்கியமானவை இதனை தனதாக்கி கொள்ளுவதில் முன்னர் யப்பான் அரசு கடுமையாக ஈடுபட்டுவந்தது.சில வருடங்களுக்கு முன் புல்மோட்டையில் யப்பான் கொண்டு செல்லுவதற்காக கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு இருந்த கப்பல் ஒன்று விடுதலைபுலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தது உங்கள் நினைவுக்கு வரலாம்.எனவே இவ்வாறன வளங்கள் நிறைந்த வசதியான இடங்களை கையகபடுத்த வேண்டும் என்ற நிலையில் இந்திய சிறிலங்கா அரசுக்கு உதவிகளை வழங்க தொடங்கியது இந்தியா அதிகாரிகளின் ஆலோசனைகள் சிறிலங்காவிற்கு வழங்கபடுகின்றன.இதில் படைத்துறை சார்ந்த உதவிகளும் வழங்கபடுகின்றன.இந்திய அதிகாரிகள் கிழக்கில் நிலைகொள்கின்றார்கள் என்பது அன்று நமக்கு தெரியவில்லை.அனால் ( 2007 ) ம் ஆண்டு வவுனியா யோசப் படைமுகாம் மீது புலிகள் நடத்திய கரும்புலித் தாக்குதலில் இந்திர (02 ) ராடார் சேதமாக்க பட்டதும் இதன்போது இந்திய அதிகாரிகள் காயமடைந்ததையும் பின்பு கானக்குடியதாக இருந்தது .எனினும் கிழக்கில் அவர்கள் இருந்ததற்கான ஆதரங்களையும் தகவல்கள் எவற்றையும் வெளிக்கொண்டுவர முடியவில்லை.

எனினும் திருகோணமலையில் இந்தியாவிடம் இருந்த எண்ணெய் குதங்கள் போன்றவற்றின் பாதுகாப்புக்காக இந்திய படைகள் அங்கு நிலைகொண்டுள்ளன என்பதையும் தொழில்நுட்ப கருவிகளையும் வைத்திருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.திருமலையில் இருந்த விடுதலைபுலிகளை அகற்றுவது என்ற நோக்கில் படைநடவடிக்கை பெரும் எடுப்பில் ஆரம்பமாகின்றது.முதூர் பகுதியில் இருந்த படையினர் விடுதலைபுலிகளின் பிரதேசங்களை ஆக்கிரமிக்க நகர்கின்றார்கள்.இதனால் சுமார் ( 80,000 ) வரையான மக்கள் வாகரை வெருகல் பிரதேசங்களில் முடக்கபடுகின்றார்கள் பொருளாதார தடைகள் விதிக்கபட்டு மக்கள் பட்டினியால் வதைக்க படுகின்றார்கள்.இதற்கிடையில் விடுதலைபுலிகளின் நிலைகள் என குறிப்பிடப்படும் இடங்கள் மீது சிறிலங்கா படையின் மிக் கிபீர் விமானங்கள் தாக்குதல் நடத்துகின்றன.இவற்றில் மக்கள் கொல்லபடுகின்றார்கள் காயமடைகிறார்கள் அனால் சமாதன காலத்தில் மேற்கொள்ளபட்ட இந்த தாக்குதலால் சர்வதேசம் அதிர்சியடைந்த நிலையில் அவர்களை திசைதிருப்பும் நோக்கத்துடன் சிறிலங்கா அரசு திட்டமிட்ட வகையில் செய்திகளை வெளியிடுகின்றது.திருமலை துறைமுகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விடுதலை புலிகளையும் அவர்களின் பீரங்கிகளையும் அளிக்கும் நடவடிக்கை தொடர்கின்றது என்றும் சிங்கள உடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.இதனையடுத்து வெருகல் ஈசிலம்பரு மீது முர்க்கதனமான தாக்குதல்களை சிறிலங்காவின் முப்படைகளும் மேற்கொள்கின்றார்கள் .வெருகல் பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற முருகன் வெருகல் முருகன் ஆலயம் அமைத்துள்ளது.திருகோணமலை என்ற பேருக்கு அமைவாக இங்கு மலைகள் அதிகம் காணப்படும்.அந்த வகையில் வெருகல் பிரதேசத்திலும் மலைகள் காணபடுகின்றன.மகாவலி கங்கையின் ஒரு கிளை ஆறாக வெருகல் ஆறு உள்ளது இந்த ஆற்றின் அருகிலே வெருகல் முருகன் ஆலயம் அமைந்துள்ளது.சிறிலங்கா படைகளின் தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் வெருகல் ஆறும் மற்றும் முருகன் ஆலையத்தை அண்டிய பகுதிகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தார்கள்.இந்த மக்களுக்கான அத்தியாவசிய உதவிகள் சிலவற்றை அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்குகின்றன.இதற்கிடையில் விடுதலைபுலிகளின் ஆளுகைக்கு உட்பட்ட நிலப்பரப்பினை படையினர் ஆக்கிரமிக்க தயாராகின்றார்கள்.இந்த முயற்சிய தடுப்பதுக்கு மட்டக்கிளப்பில் இருந்து திருகோணமலைக்கு ஒரு தொகுதி போராளிகள் நகர்த்தப்பட தயாராகின்றார்கள்.எனினும் சில காரணங்களால் இவர்களின் நகர்வு இடைநிறுத்த படுகின்றது.இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
அதேவேளை திருகோணமலையில் ஒருந்த காயமடைந்த போராளிகள் கட்டுபகுதி உடாக மட்ட கிளப்பிற்கும் ஏனைய பகுதிக்கும் நகர்த்த படுகின்றார்கள் .கிபீர் விமானங்கள் தாக்குதலில் ஈடுபடுகின்றது.தளபதி சொர்ணம் நிலைகொண்டிருந்த பகுதிகளை இலக்குவைத்து சிறிலங்கா வான்படையினர் கடுமையான தாக்குதலை நடத்தியிருந்தனர்.இலக்குகளை படையினர் அறிந்துகொண்டே தாக்குதலை நடத்தியதில் இருந்து இந்த தாக்குதல்களுக்கு பின்பலம்வாய்ந்த கரங்கள் இருக்கின்றன என்பதை உணரகுடியாதாக இருந்தது.மக்கள் வாழ்விடங்களிலும் தாக்குதல்கள் கடுமையாக இருந்தது மக்கள் பாதிக்க பட்டத்தை அடுத்து சிறிலங்கா அரசு மீது சில குற்றசாட்டுக்கள் வைக்கபடுகின்றன.இந்த குற்ற சாட்டுக்களில் இருந்து தப்பிப்பதற்காக மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு தாக்குதலை நடத்துவதுக்கு சிறிலங்கா முனைகின்றது.அங்கிருந்து மக்களை வெளியேறுமாறு சிறிலங்கா உத்தரவு இடுகிறது அனால் மக்கள் அங்கிருந்து வெளியேற மறுக்கின்றார்கள்.இதனால் விடுதலைப்புலிகள் மக்களை பயணமாக வைத்திருக்கிறார்கள் என்று இன்னுரோ பொய்யான குற்ற சாட்டையும் சர்வதேச ரீதியாக சிறிலங்கா அரசு முன்வைக்க தொடங்கியது.எனவே சிறிலங்கா அரசின் இந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்க போர்நிறுத்த கண்காணிப்பு குழுவுடன் விடுதலை புலிகளின் அரசியல் பிரிவினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றார்கள்.மக்களின் நிலைப்பாட்டினை அறிந்துகொள்ள போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினரை விடுதலை புலிகளின் கட்டுபட்டு பகுதிக்கு நேரில் வந்து மக்களிடம் நிலமைய கேட்டறிந்து கொள்ளும்படி கட்டாயபடுத்துகின்றார்கள்.இதற்கமைவாக கந்தளாய் உடாக போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினர் வெருகல் பிரதேசம் செல்கின்றார்கள் அவர்கள் அங்கு சென்றிருந்த போது நிலைமை மேலும் மோசமடைகின்றது

.

மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? – 7

சுழியோடி

கண்காணிப்பு குழுவினர் மக்களை சந்திப்பதையும் அவர்களிடம் இருந்து உண்மைகளையும் அறிந்துகொள்ளுவதையும் சிறிலங்கா அரசு விரும்பவில்லை .மக்களின் கருத்துக்கள் வெளியே வந்தால் விடுதலைப்புலிகள் பொதுமக்களை பணயமாக வைத்திருக்கிறார்கள் என அரசு சர்வதேச ரீதியாக மேற்கொண்டிருந்த பிரச்சாரம் பொய்யாகி போய்விடும் என்பதை அறிந்திருந்தது.எனவே அந்த மக்களை கண்காணிப்பு குழுவினர் சந்தித்து விடாதபடி கண்காணிப்பு குழுவினரின் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் செல்லும் இடங்கள் மீது கடுமையான எறிகணை தாக்குதல்களை நடத்தினார்கள்.இதன்போது கண்காணிப்பு குழுவை சேர்ந்தவர்கள் மயிரிழையில் உயிர்தப்பினார்கள்.
இதனால் மக்களிடம் இருந்து அவர்களின் மனநிலைய முழுமையாக அறிந்துகொள்ளாமலே அங்கிருந்து கண்காணிப்பு குழுவினர் விரைவாக திரும்பியும் சென்றார்கள்.
திருகோணமலையில் தமது செயற்பாடுகள் முன்னெடுத்து செல்ல முடியாத நிலை காணப்படுவதாக பின்பு போர்நிறுத்த கண்காணிப்பு குழு அறிக்கையொன்றில் வெளியிட்டது.அத்துடன் திருகோணமலையில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து பெரிதாக கண்டுகொள்ளாமல் கண்களை முடியபடி கண்காணிப்புகுழு நடந்துகொண்டது.இவர்களது நடவடிக்கை செயலற்று போனநிலையில் திருகோணமலையில் தமிழ் உணர்வாளர்கள் உரக்க குரல் எழுப்புகின்றார்கள்.எதிர்ப்பு போராட்டங்களுக்கும் எந்தவித பயனும் கிடைக்கவில்லை.இதே வேளை அகதிகள் தங்கியிருந்த வெருகல் முருகன் ஆலயம் மீது சிறிலங்கா வான் படையின் கிபீர் விமானங்கள் தாக்குதல் நடத்துகின்றன. அங்கு அடைக்கலம் தேடியிருந்த மக்கள் பலியாகியும் காயங்களுக்கும் உள்ளாகின்றார்கள்.மக்களின் நிலைமை மோசமடைகிறது.இதனால் மக்கள் அங்கிருந்து கதிரவெளி வாகரை பிரதேசத்தை நோக்கி மீண்டும் இடம்பெயர்கின்றார்கள்.இடம்பெயர்ந்த மக்களுக்கு பணியாற்றுவதில் விடுதலைபுலிகளின் மருத்துவ பிரிவு திறம்பட செயற்படுகின்றது.
வாகரை பிரதேசத்தில் அரச மருத்துவர்கள் இல்லாத நிலையில் காயமடைந்த போராளிகளுக்கும் சிகிச்சை அளித்த போராளி மருத்துவர்களே மக்களுக்கும் அறுவை சிசிச்சை முதல் அனைத்து அவசர சிகிச்சையினையும் மேற்கொள்கின்றார்கள்.மருந்து தட்டுபாடு அதிகரித்து இருந்த நிலையில் மட்டகிளப்பில் இருந்த ஐ. சி.ஆர்.சி.உடாக ஒருதொகுதி மருந்து பொருட்கள் வாழைச்சேனை வழியாக வந்தடைகின்றன..

இதனை பயன்படுத்தி மக்களுக்கும் போராளிகளுக்கும் போராளி மருத்துவர்கள் சிகிச்சை செய்கிறார்கள்.ஆனாலும் நிலைமை மேலும் மோசமடைகிறது.வாகரை மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் எறிகணை தாக்குதலை நடத்துகின்றார்கள் பொதுமக்கள் கொல்லபடுகின்றார்கள் வாகரை பிரதேசத்துக்ககான பாதைகள் ஏ பதினைந்து உட்பட மூடப்படுகின்றன.வாகரை மருத்துவமணைய பாதுகாப்பு வலையமாக்க விடுதலை புலிகளால் கேரப்படுகின்றது.இதனையும் மீறி மருத்துவமனை சுற்றியுள்ள பகுதிகள் மீதும் சரமாரியாக அட்லேறி பல்குழல் எறிகணை தாக்குதல்கள் நடைபெறுகின்றன.காயமடைந்த மக்களுக்கு சிகிச்சை செய்யமுடியாத நிலையில் மருத்துவமனை சுழல் காணப்படுகிறது.இதில் ஒரு நாளில் எழுபதிர்ற்கும் மேலான மக்கள் கொல்லபட்ட சம்பவம் கூட நிறைவேறியது.சிறிலங்கா அரசு எவரது கருத்தினையும் எடுக்காது தாக்குதல்களை தொடர்ந்தது காயபட்ட மக்கள் கடல்வழியாக கொண்டுசெல்லப்படும் போது இடையில் இறக்கின்றார்கள்.ஏனைய மக்கள் சிலர் காட்டு வழியாக நடந்து படையினரின் கட்டுபட்டிலிருந்த மட்டகிளப்பு பகுதிகளை சென்றடைகின்றார்கள்.திருகோணமலையில் விடுதலைபுலிகளின் நிலை கேள்விக்குறியாகிறது.பலம் பொருந்திய பின்னணியுடன் நடக்கும் தாக்குதலை விடுதலைப்புலிகள் எதிர்கொள்ளுவதில் நெருக்கடியை சந்திக்கின்றார்கள்.இலக்கு தவறாமல் நடக்கும் தாக்குதல்கள் பொதுமக்களை கவனத்தில் எடுக்காமல் எடுக்கும் தாக்குதல்கள் பல செய்திகளை சொல்லிசென்றன.மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை விடுதலைபுலிகளை திருகோணமலையில் இருந்து அகற்றவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தது புரிந்தது.தொடர்ந்து திருகோணமலைய தக்க வைப்பது என்பது மேலும் இழப்புக்களையும் அழிவுகளையும் மட்டுமே ஏற்படுத்தும் என்பதை கணக்கில் கொண்டு.நிலத்தை இள போராளிகளை காப்பாற்று நிலத்தை இழந்து போராளிகளை காப்பரறினால் எதிர்காலத்தில் நிலத்தை மீட்க முடியும் .அனால் , போராளிகளை இழந்தால் எதிர்காலத்தில் நிலத்தையும் இழந்து போராளிகளையும் இழக்கவேண்டி ஏற்படும் .என்ற மாவோ சேதுங்கின் போரியல் தத்துவ வரிகள் போல் நிலத்தை இழந்து போராளிகளை தக்க வைக்கின்ற முடிவிற்கு விடுதலை புலிகள் வருகின்றார்கள்.இதனையடுத்து திருகோணமலையில் உள்ள போராளிகள் முழுமையாக வெளியேறும் முடிவு எடுக்கபட்டது.இந்நிலையில் அங்கிருந்த வெடிபொருட்களை விடுதலைப்புலிகள் மறைவிடங்களில் புதைத்தார்கள்.போராளிகள் காட்டு வழியாக மட்ட கிளப்பிற்கு நகர்த்தபடுகின்றார்கள்.ஒரு தொகுதி போராளிகள் வன்னி செல்லும் காட்டிற்குள் செல்கிறார்கள்.முக்கியமானவர்கள் காட்டிற்குள் சென்றுவிட்டார்கள் ஆனாலும் குறிப்பிட்ட போராளிகளும் அங்கு நிலைகொண்டு இருந்தார்கள் கைவசம் இருந்த எறிகணைகளை அட்டிலேறி பிரேங்கி முலம் படையினர் மீது கடும் தாக்குதலை நடத்தி முடிவிற்கு கொண்டுவந்தார்கள்.இறுதியில் அங்கிருந்த வாகனங்கள் கனரக ஆயுதங்கள் என்பவற்றை கொண்டுசெல்ல முடியாத முற்றுகைய படையினர் ஏற்படுத்தி விட்டனர்.இதனால் எதிரியின் கையில் வெடிபொருட்கள் கனரக ஆயுதங்கள் முழுமையாக போகக்கூடாது என்பதுக்காக மோட்டார்கள் வெடிபொருட் களஞ்சியங்கள் தகர்கபடுகின்றன.இதன்போது ஆட்டிலெறி பீரங்கியும் தகர்கபட்டது .இராணுவத்தின் கையில் எந்த ஆயுதங்களும் செல்லமுடியாத நிலைய ஏற்படுத்திவிட்டு அங்கு நின்றிருந்த ஏனைய போராளிகளும் முற்றுகைய உடைத்துக்கொண்டு காட்டுவழியாக மட்டகிளப்பை வந்தடைந்தார்கள்.இதேவேளை என்சியிருந்த மக்கள் வாளைச்சேனை உடாகவும் காட்டு வழியாகவும் கிரான் உட்பட பல பகுதிகளுக்கும் சென்று தன்சமடைந்தார்கள்.மக்கள் வெளியேறிய பின் (2007 ) பெப்பிரவரியின் நடுப்பகுதியில் வாகரை மண் சிறிலங்கா படையினரால் ஆக்கிரமிக்க படுகின்றது.ஆக்கிரமித்த வாகரையில் உள்ள மலையில் சிங்க கொடியேற்றி மகிழ்ந்தார்கள்.இதேவேளை இடம்பெயர்ந்து வந்த மக்கள் மட்டகிளப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்கவைக்க படுகின்றார்கள் இந்த நிலையில் ஒட்டுக்குழுவினர் மக்கள் மீது வலை விரிக்கிறார்கள் முகாம்களுக்குள் சென்று விடுதலைபுலிகளுக்கு ஆதரவான குடும்பங்களை இனம் காண்பது இளைய சமுதாயத்தை கையது செய்வது போன்ற நடவடிக்கையில் படையினரின் ஒத்துழைப்பில் ஒட்டுக்குழுவினர் ஈடுபடுகின்றார்கள்.பலர் கொல்லபடுகின்றார்கள் பலர் காணமல் போகின்றார்கள் அவ்வாறு காணமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் இன்றுவரை தெரியவில்லை என்பது குறிப்பிட தக்கது ..

மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? – 8

சுழியோடி

திருகோணமலையில் இருந்து விடுதலைப்புலிகள் வெளியேறியதும் சிறிலங்காவுக்கும் அவர்களுக்கு துணை நின்ற இந்தியாவிற்கும் மகிழ்ச்சிய ஏற்படுத்தியது.திருகோணமலையில் இருந்து விடுதலைபுலிகளை அகற்றி விட்டதாகவும் துறைமுகத்துக்கான பாதுக்கப்பு அச்சுறுத்தல் நீங்கிவிட்டாதகவும் திருமலையில் எதுவித பிரச்சனையும் இல்லை என்றும் மகிழ்ச்சியின் பூரிப்பில் சிறிலங்கா அரசாங்கம் பல அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் இருந்தது.அமைச்சர்களும் அதிகாரிகளும் இதனை பெருமைப்பட உடகங்களுக்கு கூறிக்கொண்டு இருந்தார்கள் .இதே வேலை சிறிலங்கா அரசின் போர்வெறி போக்கினை உலகநாடுகளுக்கு விடுதலைப்புலிகள் எடுத்து கூறினர்.அனால் சில உலக நாடுகள் கூறிய கருத்துக்களை பொருட்டாககுட எடுக்காமல் செவிடன் காதில் உதிய சங்குபோல.சிறிலங்கா அரசு நடந்துகொண்டது.சிறிலங்கா அரசின் இந்த நடவடிக்கைகள் இந்த போருக்கு பின்னால் பலம் பொருந்திய கரங்கள் இருக்கின்றன என்பதை புரியவைத்தன.ஏனெனில் விடுதலைப்புலிகள் போர்நிறுத்தத்தை மீறுகின்றார்கள் குற்றம் சாட்டிய சில சர்வதேச நாடுகள் கூட சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படையாக போரை நடத்தியபோது மவுனமாக இந்த போரை வேடிக்கை பார்த்தன.

தமிழர் பிரச்சனையில் எவ்வாறு உலகநாடுகள் பேச்சளவில் ஈடுபட்டனவோ அதே போன்றுதான் இன்றும் உலகநாடுகளின் செயற்பாடு பேச்சில் மட்டுமே இருக்கின்றன.திருகோணமலையில் இருந்து விடுதலைப்புலிகள் அகற்ற பட்டதாக குறப்பட்ட நிலையில் அங்கிருந்து போர்நிறுத்த கண்காணிப்பு குழு வெளியேறியது.கண்களை முடிய நிலையில் இருந்த போர்நிறுத்த கண்காணிப்பு குழு திருமலையில் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்ற நிலையில்தான் தமிழ் மக்கள் மத்தியில் அப்போது காணப்பட்டது.அத்துடன் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் செயற்பாடு ஏனைய மாவட்டங்களிலும் இவ்வாறுதான் இருந்தது என்பது குறிப்பிட தக்கது.சிறிலங்கா படையினரின் போர்நிறுத்த மீறல்களை கண்டும் காணதது போல இருந்த போர்நிறுத்த கண்காணிப்பு குழு விடுதலை புலிகள் ஏதும் செய்துவிட்டால் அதனை துக்கி பெரிதாகி காட்டுவதும் மற்றும் மாதத்தில் எந்தனை போர்நிறுத்த மீறல்கள் நடைபெற்றுள்ளன எத்தனை தாக்குதல்கள் விடுதலைப்புலிகள் செய்தார்கள் என்று குற்றச்சாட்டை முன்வைத்தாவர்கள்.படையினர் எத்தனை தாக்குதல்கள் எத்தனை போர்நிறுத்த மீறல்களில் ஈடுபட்டார்கள் என்பதை குறைத்து காண்பித்து அவர்களுக்கு உதவி புரிந்தார்கள் சிறிலங்கா படையினரின் போர்நிறுத்த மீறல்கள் அதாவது வலிந்த போர்கள் கூட பெரிதாக கணக்கில் எடுக்கப்படவில்லை.சிறிலங்கா படையினரின் போர்நிறுத்த மீறல்களின் எண்ணிக்கைய தமது பதிவின் படி கண்காணிப்பு குழுவினர் குறைத்தே குறிவந்து அவர்களின் நடுநிலை தொடர்பான சில கேள்விகளையும் எழுப்பியிருந்தது.போர்நிறுத்த குழுவின் இவ்வாறன சில செயற்பாடுகள் ஈழ விடுதலை போரை கண்காணித்து கொண்டிருக்கும் வல்லரசு நாடுகளிடையே விடுதலை புலிகள் தொடர்பாக மேலும் தவறான எண்ணங்கள் ஏற்படுவதற்கு வழி வகுத்து கொடுத்தது.காரணம் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவில் பல நாட்டு பிரஜைகள் இருந்தார்கள்.இவர்களின் அறிக்கைகள் புள்ளிவிபர வெளியீடுகள் அனைத்தும் உண்மையாகத்தான் இருக்கும் என்பது சர்வதேச நாடுகளின் எண்ணமாக இருந்தது.விடுதலை புலிகளின் அரசியல் போக்கு குறித்து எதிர்மறையான என்ன கணிப்பீட்டினை இவர்களின் அறிக்கைகளும் புள்ளிவிபரங்களும் தோற்றுவித்தன.இதேவேளை சமாதான செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த நோர்வே நாட்டின் செல்வாக்கினை பயன்படுத்தி விடுதலைப்புலிகள் பல வேலைத்திட்டங்களை செயற்படுத்துகின்றார்கள்.வேலைதிட்டங்களுக்கான நிதி வடிவிலான உதவிகள் கிடைக்கபெறுகின்றன.அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் வழிகாட்டலில் அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த பிரிக்கேடியர் சு ப தமிழ்செல்வன் இந்த உதவிகளை பெரும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்.இதே வேலை அரசியல் பிரிவின் செயல்பாடு பலம் பொருந்திய செயற்பாடாக காணப்படுகின்றது.காரணம் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திட்டமிடலில் ஏனைய நாடுகளுடனான ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்திக்கொண்டு விடுதலை போராட்டத்திற்கு வலு சேர்கின்றார்கள்.இதில் சில நாடுகள் நிதி வடிவிலும் ஏனைய வடிவங்களிலும் உதவிகளை வழங்கி தமிழர் விடுதலை போராட்டத்திற்கு மறைமுகமாக உதவிகளை மேற்கொள்கின்றன.உதவிய இந்த நாடுகளால் இவ்வாறன உதவிகளை மேற்கொள்ளலாமே தவிர இலங்கையில் கால் உணர முடியாத நிலை.காரணம் பிராந்திய வல்லரசாக விளங்கும் இந்திய பக்கத்தில் கண்ணுக்குள் எண்ணைய உற்றி இலங்கைய பார்த்துகொண்டு இருக்கிறது.இந்தியாவின் மறைமுக செயற்பாடுகள் இலங்கையில் கால் உன்றி இருப்பதை இந்த நாடுகள் அறிந்திருந்தன .இதனாலையே அவை தமது தலையிட்டினை இலங்கையில் குறைத்துகொண்டன.திருமலையில் இருந்த விடுதலை புலிகள் வெளியேறிய நிலையில் அங்குள்ள தமிழ் மக்கள் மீது கெடுபுடிகள் மேற்கொள்ளபடுகின்றன குறிப்பாக திருகோணமலையில் கடற்படையினரும் தரைப்படையினரும் குவிக்கபட்டு வீதி சோதனைகள் அதிகரிக்கபடுகின்றன சந்தேகத்தின் பெயரில் மக்கள் கைய்து செய்யபடுகின்றார்கள்.இவ்வாறு நெருக்கடியான நிலையில் திருகோணமலையில் இருந்து தமிழ் மக்களின் பிரச்சனைகளை எடுத்து கூறியவர்களில் மாமனிதன் விக்கினேஸ்வரன் செயற்பட்டார்.திருமைலையில் தமிழ் மக்கள் பேரவையின் தலைவராக இவர் இருந்தார்.திருகோணமலையில் எங்கும் சிங்களவர்கள் சிங்கள மொழியின் செல்வாக்கே அரச நிர்வாகங்களில் (90 ) வீதத்திற்கும் மேலாக காணப்டுகின்றது.திருகோணமலை மாவட்டத்தின் அரசாங்க அதிபராக சிங்கள படையில் இருந்து ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளே நியமிக்க படுகின்றார்கள்.இந்த இராணுவ அதிகாரிகளின் திட்டங்கள் அபிவிருத்திகள் எல்லாம் எவ்வாறு இருக்கும் என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை.குறிப்பாக சிங்களவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கே வளங்கள் அனைத்தும் இவரால் திருடபட்டு விடும்.அத்துடன் சிங்கள மொழியின் செல்வாக்கு இல்லாமல் திருகோணமலையில் ஒன்றுமே செய்யமுடியாத நிலை தமிழ் மக்கள் படிவம் ஒன்றை நிரப்பவேண்டும் என்றாலும் சிங்கள மொழியில்தான் நிரப்ப வேண்டும் என்ற கட்டாயம் மதம் ரீதியில் பொவுத்த மதம் பரப்பபடுகின்றது.மொழியாக சிங்களம் திணிக்கபடுகின்றது.தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் கூட பொவுத்த விகாரைகள் கட்டபடுகின்றன.என் கோனேஸ்வர ஆலயத்திற்கு ஏறும் வழியில் கூட புதிய பொவுத்த சின்னம் ஒன்று நிறுவப்பட்டு உள்ளது இவ்வாறு திருகோணமலையில் தமிழ் மக்கள் நசுக்கபட்டுகொண்டு இருக்கிறார்கள்.கடல் வலைய தடைச்சட்டம் போடபட்டு திருகோணமலை கடலில் மீன்பிடிக்க கட்டுபாடு விதிக்கபடுகின்றது.இங்கு குறிப்பாக தமிழ் மக்களே கடல் தொழிலை முதன்மையாக கொண்டு வாழ்ந்தார்கள்.அனால் தமிழ் மக்கள் மீன் பிடிக்க தடை விதிக்கபடுகின்றது.அதாவது குறிப்பிட்ட நேரம் மட்டுமே மீன் பிடிக்கலாம் அதுவும் வலு கூடிய இயந்திரங்கள் படகில் பொருத்தகுடாது.படகில் இரண்டு பேருக்கு மேல் போகக்குடாது என்று பல தடைகள் போடப்படுகின்றன.திருமலை கடலில் மீன்கள் நடமாட்டம் குடுதலக காணப்படும் சில இடங்கள் இருக்கின்றன இவ்வாறன இடங்களில் எல்லாம் மீன் பிடிக்க குடாது என்றெல்லாம் சட்டம் .இவை ஒருபுறம் இருக்க தென் பகுதியில் இருந்து பெருமளவான சிங்கள மீனவர்கள் தொழிலுக்காக திருகோணமலை வருகிறார்கள் ( சிங்களவர்களால் வரவழைக்க படுகிறார்கள் என்றே குறிப்பிடலாம்) கடலில் தொழில் செய்கிறார்கள் தமிழர்களுக்கு விதிக்கபட்ட தடைகள் சிங்கள மீனவர்களுக்கு இல்லை.துறைமுக வாயில் துறைமுகத்திற்குள் எல்லாம் சிங்கள மீனவர்கள் மீன் பிடிக்கின்றார்கள்.அதன் முலம் பெருமளவு வருமானம் ஈட்டி கொள்கிறார்கள் .தமிழ் மீனவர்கள் தமது குடும்பத்தை கொண்டு நடத்த திண்டாடுகின்றார்கள்.இவ்வாறே விவசாய ரீதியிலும் கந்தளாய் குளத்தின் கீழ் பெருமளவான நிலப்பரப்பில் சிங்கள விவசாயிகளே செய்கை பண்ணுகிறார்கள்.தமிழ் முஸ்லீம் மக்களின் விவசாய உற்பத்தி சிங்களவருடன் ஒப்பிடும் இடத்தில் குறைவாகவே காணப்படுகிறது.சிங்கள மக்களின் விவசாய உற்பத்தி பொருட்கள் கூடிய விலையிலும் தமிழ் மக்களின் விவசாய உற்பத்தி பொருட்கள் குறைந்த விலையிலும் சிங்களவர்களால் கொள்வனவு செய்யபடுகின்றது.சிங்கள விவசாயிகளுக்கு இலவசமான உள்ளேடுகள் குறைந்த விலையில் மானியங்கள் என்றெல்லாம் வழங்கபடுகின்றன.இவர்ருக்கெல்லாம் தீர்வு காணப்படவேண்டும் என்றுதான் அன்று திருகோணமலையில் தமிழ் மக்கள் பேரவை தலைவராக இருந்த விக்கினேஸ்வரன் சிறிலங்கா அரசுக்கும் பன்னாட்டு துறை சார்ந்தவர்களுக்கும் அறிக்கைகள் உடாக வாரம் ஒரு பிரச்சனை என்று தொடர்ச்சியாக வெளிப்படுத்தினார் .வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசு புரியும் பல கொடுமையான உண்மைகள் இவர் அறிக்கைகள் முலம் அம்பலமாகியது.இவ்வாறு இவரின் செயல்பாடுகளை பார்த்து பொருக்கமுடியாமல்தான் சிறிலங்கா அரசின் திட்டமிடலுக்கு அமைய தமது கண்ணை தமது கையாலே குத்துவது போல் தமிழ் இனதுரோகிகளை கொண்டு தமிழர்களின் விடிவிற்காய் உழைத்த இவரை கொள்ள திட்டம் தீட்டபடுகின்றது

மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? – 9

சுழியோடி

திருகோணமலையில் இருந்துகொண்டு தமிழ் மக்களின் பிரச்சனைய நடாள மன்றத்திற்கு எடுத்துரைத்து பல செயற்பாடுகளை காண்பித்தவர் நடாள மன்ற உறுப்பினர் துரைசிங்கம்.ஒவ்வுரு நாடாளுமன்ற அமர்விலும் திருமலையின் பிரச்சனைகள் தமிழ் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளை கதைக்கும் போது சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தம் போட்டு மேசைகளில் அடித்தும் பேசவிடாமல் குழப்புவார்கள்.


ஆனாலும் தமிழ் உணர்வாளர்கள் சிங்களத்தின் இந்த கெடுபிடிகளுக்குள்ளும் இருந்துகொண்டு தமிழ் பிரச்சனைக்கு குரல் கொடுத்தார்கள்.அனால் எல்லாம் செவிடன் காதில் உதிய சங்குதான் .இவ்வாறுதான் தமிழ் மக்கள் பேரவை தலைவர் விக்கினேஸ்வரன் அவர்கள் தமிழ் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் திருகோணமலையில் சிறிலங்கா படையினரின் கடல் வளைய தடைச்சட்டம் தொடர்பாகவும் வன்னியில் உள்ள ஊடகம் ஒன்றிற்கு (06-04-2006 ) அன்று இரவு செவ்வியளித்திருந்தார்.செவ்வியளித்த மறுநாள் காலை திருமலை சிரிலங்கள் காவல் நிலையத்திற்கும் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் இடையில் உட் துறைமுக வீதியில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் மத்திய கிளையுனுள் விக்கினேஸ்வரன் துளையும் போது ஒட்டு குழுவினரால் சுட்டு கொல்லபடுகின்றார்.

அவரின் இழப்பு திருகோணமலையில் தமிழ் மக்கள் மத்தியில் பாரிய இழப்பாக கருதப்பட்டது இந்த படுகொலையானது ஜெனீவ பேச்சுகளிருந்து விடுதலை புலிகளை விலக செய்யும் முயற்சியென தமிழ் தேசிய குட்டமைப்பினர் கண்டனம் வெளியிட்டு இருந்தனர்.இவரது தமிழ் உணர்வு செயற்பாட்டினை கவுரவித்து தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் மாமனிதர் என்ற உயர் விருதை வழங்கி கவுரவித்தார்.இவரது வாழ்வு திருகோணமலை மக்களோடும் மண்ணோடும் ஒன்றியதகவே இருந்தது.இவர் திருமலை மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தார்.அங்கு தலைவிரித்தாடும் இராணுவ அடக்குமுறையையும் நில ஆக்கிரமிப்பையும் முழு மூச்சாக எதிர்த்து நின்றார்.எமது மண் எமக்கே சொந்தம் என்று உரிமை குரலை ஆக்கிரமிப்பு இராணுவத்திற்குள் இருந்துகொண்டே உலகிற்கு உரத்து கூறினார்.என தமிழீழ தேசிய தலைவர் இவரது தேசத்துக்கான பங்களிப்பையும் அதற்காக துணிந்து செயற்பட்ட அவரது வீரத்தையும் தனது அறிக்கையில் எடுத்து கூறியிருந்தார்.இவரது உடலம் வன்னிக்கு எடுத்துவரபட்டு பல இடங்களில் பெருமளவான மக்களினதும் போராளிகளினதும் அன்சளிக்காக வைக்கபட்டு பின்பு திருகோணமலையில் அடக்கம் செய்யபடுகின்றது.இவரது படுகொலை தொடர்பிலான அறிக்கையை திருமலை கண்காணிப்பு குழுவினர் கொழும்பு தலைமையகத்துக்கு அனுப்பி வைத்து படுகொலை செய்யபட்டதிற்கு முதல் நாள் கடல்வலைய தடைசட்டத்தை நீக்குவது தொடர்பாக கடற்தொழிலாளர்கள் அமைப்புடன் கண்காணிப்பு குழுவினரை சந்தித்து நீண்ட நேரம் விவாதித்து இருந்தார்.இப்படுகொலை தொடர்பில் பலரிடம் விசாரணை நடத்திய கண்காணிப்பு குழுவினர் சம்பவம் நடைபெற்ற இடத்தின் நிழற்படங்களையும் இணைத்து அறிக்கை தயாரித்து கொழும்பிற்கு அனுப்பிவைத்து தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கண்காணிப்பு குழுவிடம் விக்னேஸ்வரன் பலமுறை முறைப்பாடு செய்திருந்ததையும் அந்த அறிக்கையில் சுட்டி கட்டியிருந்தது .இவரது படுகொலையின் தொடர்சியாக திருமலையில் சில வன்முறை சம்வங்கள் வெடிக்கின்றன சிங்கள காடையர்களால் தமிழ் மக்கள் மீது துப்பாக்கி சுடு கைக்குண்டு தாக்குதல்கள் என தாக்குதல்கள் நடத்தபடுகின்றன.பாடசாலை மாணவர்கள் குட சுட்டு படுகொலைசெய்யபடுகின்ரர்கள்.படையினரால் வல்வளைக்கபட்ட சம்பூர் பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு வளையமாக படையினரால் அறிவிக்க படுகிறது.இதன் பின்பு முதூர் கிழக்கு பிரதேசத்தில் சிங்கள கடற்தொளிலளர்கள் தொழிலில் ஈடுபடுகின்றார்கள்.இன்னுரு பக்கம் பொவுத்த மதத்தை கட்டிஎளுப்புவதில் சிறிலங்கா இராணுவம் எடுபடுகிறது.வெருகல் (45 ) ம் கட்டை வாழைத்தோட்டம் கட்டடி புன்னையடி இலங்கை துறைமுகத்துவாரம் போன்ற பகுதிகளில் பொவுத்த மதம் வளர்ந்த வரலாற்று சின்னங்கள் இருப்பதாக சிறிலங்கா படையினரால் அறிவிக்க படுகின்றது.(இக்கிராமங்கள் வெருகல் (18 ) பிரதேச சபைக்குள் அடங்குபவை) (45 ) ம் கட்டை எனப்படும் இடத்தில் பெரிய பெரிய மலைகள் பாறைகள் கற்கள் உள்ளன இவற்றில் கோவில்களும் உள்ளன.அவ்வாறன சில பாறைகளின் உச்சியில் புத்தர் சிலை நாட்டபடுகின்றது.கல்லடி எனப்படும் இடத்தில் (120 ) அடி உயரம் கொண்ட மலை காணப்படுகிறது அதன் உச்சியில் முருகன் அலையும் உள்ளது.சில விசித்திரமான எழுத்துக்கள் அந்த மலையில் பொறிக்கபட்டுள்ளன .இதனை சிங்கள முததையர்களை கொண்டு சிறிலங்கா அரசு ஆய்வு செய்து தொன்மையான பொவுத்த மதம் இருந்தற்கான சான்றுகள் கண்டுபிடிக்க பட்டுள்ளது என்று அறிக்கை வெளியிடுகின்றது.இதன் பின்பும் அங்கும் பொவுத்த விகாரை அமைக்கபடுகின்றது.அதேபோல் இலங்கை துறைமுகத்துவரத்தில் (70 ) அடி உயரம் கொண்ட கடற்கரை அருகில் கல்லுமலை ஒன்றும் உள்ளதாக இதன் உச்சியில் வேளாங்கண்ணி மாதா கோவில் உள்ளது.அருகில் பெரிய ஆற்று தொடுவாய் உள்ளது.இதனை எல்லாம் அரய்ந்துவிட்டு பொவுத்த மதம் சிங்கள மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உண்டு என தெருவிக்கின்றார்கள்.இவ்வாறு சம்பூர் பிரதேசத்தில் மலைகளும் ஆற்று மரங்களின் கிழும் புத்த விகாரைகள் கட்டபட்டு பொவுத்த மதம் பரப்பபடுகின்றது.தமிழர்கள் வாழ்ந்ததற்கான அதரங்கள் அளிக்கபடுகின்றன.இது ஒருபுறம் இருக்க இந்தியாவுடன் அனல்மின்நிலையம் அமைப்பதற்கு ஒப்பந்தம் எழுதப்படுகின்றது தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த இடம் சம்பூர் சொந்த வீடுகள் விவசாய காணிகள் இங்குள்ளன. தமிழ் மக்களின் பூமியை அயல் நாட்டிற்கு தாரை வருகிறது சிறிலங்கா தமிழர்கள் நிலத்தையும் இழந்து சுழல் பாதிப்பையும் சுகாதார சீர்கேட்டை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இதன் முலம் சிங்கள மக்கள் பெருமளவு பயனடைய இருக்கிறார்கள்.அதாவது இந்தியாவின் அனல்மின்நிலையம் நிறுவப்பட்டால் அங்கு வேலை செய்பவர்கள் சிங்களவர்கள் பின்பு அவர்களின் குடும்பங்கள் அருகில் உள்ள தமிழ் கிராமங்களில் குடியேற்ற படுவார்கள்.இவ்வாறு ஒட்டுமொத்த தமிழின அழிப்பை சிறிலங்கா அரசு நீண்டகால திட்டமிடலின் அடிப்படையில் மேற்கொள்கின்றது.இதன் முதற்கட்டமே திருகோணமலையில் இருந்து விடுதலைப்புலிகள் வெளியேற்ற பட்டு.தமிழின உணர்வாளர்கள் அளிக்கபட்டு. தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கபட்டு தமிழர்கள் ஆனதை ஆக்கபட்டர்கள்.

மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? -10

சுழியோடி

திருகோணமலைய ஆக்கிரமித்து கொண்ட சிறிலங்கா அரசு அடுத்த கட்டாமாக மட்டகிளப்பு மண்ணை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் இறங்கியது.( 2006 ) ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கிழக்கின் உதயம் என்ற பெயரில் மட்டகிளப்பு மண்ணை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா தொடங்கியிருந்தது.தமிழர் தாயகத்தில் மட்டகிளப்பு மண் இயற்கையின் எழில் கொஞ்சும் ஒரு மாவட்டமாக காணப்படுகிறது. அங்கு எழுவான்கரை படுவான்கரை என இரண்டு பிரிவுகள் உள்ளன.இவற்றை பிரித்து நிற்கும் நீரேரிய வாவி என்று சொல்லுவார்கள்.இதனை நீண்ட அகலமுடைய அற்று பகுதியெனவும் குறிப்பிடலாம்.எழுவான்கரை மட்டகிளப்பின் நகர் பகுதியாகவும்.சிறிலங்கா அரசின் நிர்வாகங்கள் இயங்கும் பகுதியாகவும் அதாவது சிறிலங்கா ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாகவும் காணப்படுகிறது

.படுவான்கரை விடுதலைபுலிகளின் நிர்வாக பகுதியாகவும் கிராமத்து வாழ்க்கை வாழும் நடுத்தர மக்களை கொண்ட பிரதேசமாக காணப்படுகிறது.படுவான்கரை வயலும் வயல் சந்ர்ந்த இடமாக கொண்டதால் மக்கள் விவசாய தொழிலையும் கால் நடை வளர்ப்பு தொழிலையும் பிரதான தொழிலாக கொண்டு வாழ்கிறார்கள்.அத்துடன் நன்னீர் மீன்பிடிப்பு தொழிலையும் அங்கு செய்கிறார்கள்.படுவான்கரை பகுதியில் மேற்கு பக்கமாக பொலநறுவை மற்றும் சிங்கள கிராமங்களின் காட்டு பகுதியை எல்லை பகுதியாகவும்.தெற்கே அம்பாறை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளை எல்லை பகுதியாகவும் கிழக்கே வாவியையும் கொண்டு சூழ்ந்திருந்தது.இந்த பிரதேசத்தில்தான் விடுதலைபுலிகளின் நிர்வாகம் அன்று தலைதுக்கி நின்றது.சமாதன காலத்துக்கு பின்னரான காலப்பகுதியில் விடுதலை புலிகளின் படையணிகளின் வளர்ச்சியும்.மக்கள் மீதான நிர்வாக கட்டமைப்பின் வளர்ச்சியும்.இங்கு அதிகரித்து காணப்பட்டது.அங்கு படையணிகள் சிறப்புமிக்க படையணிகளாக மாற்றபட்டு இருந்தன.அத்துடன் விடுதலை புலிகள் அங்கு ஒரு இராணுவ கட்டமைப்புக்குள் அங்கு வளர்க்கப்பட்டு இருந்தார்கள்.

அதே போல் மக்கள் மீதும் விடுதலை புலிகளின் அரசியல் நிர்வாக அலகுகள் திறம்பட செயற்பட்டன.அனால் ( 2003 ) ஆம் ஆண்டு மார்ச் மாதம் கருணா துரோக தனத்தால் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்ற பட்டத்தை தொடர்ந்து.மட்டகிளப்பில் மீள் கட்டுமான பணிகள் படையணிகள் எல்லாம் மீண்டும் தொடக்கத்தில் இருந்தே புதுப்பிக்க வேண்டிய தேவை வன்னி தலைமைக்கு எழுந்திருந்தது.இதன் படி வன்னியில் இருந்து தளபதிகள் போராளிகள் மட்டகிளப்பிற்கு மரரபடுகின்றார்கள்.அங்கு கருணாவின் பிரச்சனை காரணமாக அமைப்பில் இருந்து விலகி வீடு சென்ற போராளிகள் மீள் இணைக்க படுகிறார்கள்.இப் போராளிகளுக்கு இரண்டுபக்க அச்சுறுத்தல் காரணமாக ( கருணாவினதும் சிறிலங்கா இராணுவத்தினரதும்) விடுதலை புலிகளுடன் இணைந்து கொள்கிறார்கள்.கருணாவின் பிரச்சனை வரும்போது வன்னி தலைமைக்கு எதிராக நின்று செயற்பட்ட போராளிகளே இவர்கள் .இவ்வாறு இணைக்கபட்ட போராளிகளில் பொறுப்பானவர்களும் அடங்குவார்கள்.இதில் கருணாவுடன் சேர்ந்து தமிழீழ தேசிய தலைமைக்கு எதிராக தீவிரமாக செயற்பட்ட போராளிகள் பொறுப்பாளர்கள் இனம் காணப்படுகிறார்கள்.அவர்களிடம் அறிக்கை பின்பு விசாரணை என்று தொடர்ந்தது.அத்துடன் கருணாவுடன் விலகி சென்றவர்கள் சிலர் இராணுவத்துடன் இணைந்துகொண்டு விடுதலைபுலி போராளிகள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியதன் பின்னர் அவர்கள் மீது களையெடுப்பு தாக்குதலை விடுதலை புலிகள் மட்டகிளப்பில் மேற்கொள்ள தொடங்குகிறார்கள்.இதன் காரணமாக கருணாவுடன் நின்று செயற்பட்ட சிலர் மட்டகிளப்பினை விட்டு வேறு மாவட்டங்களுக்கும் எதுவித பிரச்சனையும் கொடுக்காமல் வீட்டிற்கும் சென்று வெளிநாடுகளுக்கும் செல்கிறார்கள்.மட்டகிளப்பில் புலிகளின் ஆதிக்கம் மேலோங்குகிறது இவ்வாறு மட்டகிளப்பில் போராளிகள் இணைக்க படுகின்றார்கள்.அவர்களுக்கான அடிப்படை பயிற்சி முடிந்ததும் வன்னிக்கு அழைத்துசெல்ல படுகிறார்கள்.அங்கு தலைமையுடனான சந்திப்புக்கள் நடைபெறுகின்றன.மட்டகிளப்பில் நிலைகொண்டிருந்த ஜெஜந்தன் படையணியின் கட்டுமானம் வன்னியில் கொண்டுவர படுகின்றது.இவ்வாறு மட்டகிளப்பில் அரசியல் பணிகளும் விஸ்தரிக்க படுகின்றன.நகர்ப்புறங்களில் அரசியல் அலுவலகமும் இயங்குகின்றன மக்களின் பல பிரச்சனைகள் விடுதலைபுலிகளால் தீர்க்க படுகின்றது.இவ்வாறு பல வேலைகளை செய்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மாவீரன் லெப்.கேணல் கவுசெல்யன் இவரின் அரசியல் பணி விசித்திரமானது.அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.இவரது செயற்பாடுகள் முலம் மட்டகிளப்பில் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையேயான பிரச்சனைகள் தீர்க்கபட்டு சுமுகமான நிலை காணப்படுகிறது.தமிழ் முஸ்லீம் மக்களிடையே ஆனா நல்லுறவு வளர்க்கபடுகிறது இதன் போதுதான் மட்டகிளப்பு போராளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற தலைமையின் என்னத்திற்கு அமைவாக அன்று மட்டகிளப்பு அரசியல்துறை பொறுப்பாளராக செயற்பட்ட இளந்திரையன் வன்னிக்கு வரவழைக்க பட்டு பின்னர் விடுதலை புலிகளின் படைத்துறை பேச்சாளராக நியமிக்க படுகிறார்.கவுசெல்யனின் செயற்பாடுகள் முலமும் வன்னி மட்டகிளப்பு என்ற வேறுபாடின்றி போராளிகள் செயற்படுகின்றார்கள்.படுவான்கரையில் கரடியனாறு குடும்பிமலை போன்ற பிரதேசங்கள் விடுதலை புலிகளின் இராணுவ வலையமாக காணப்படுகின்றது.படுவான்கரையில் மக்களுக்கான ஊடகமாக விடுதலைபுலிகளின் ஈழநாதம் பத்திரிகை காணப்படுகின்றது.கொக்கட்டிசோலை பகுதியில் ஈழநாதம் தனது கிளையினை செயற்படுத்தி மக்களுக்கு போராட்ட கருத்திற்கமைய நாளாந்தம் செய்திகளை செல்கிறது.இவ்வாறு விடுதலை புலிகளின் அரசியல் நிர்வாக அலகுகள் சிறப்புற செயற்படுகின்றன.இதனிடையே தமிழ்ழீழ இசைக்குழு உருவாக்க படுகிறது.மேஜர் கருவேந்தன் தலைமையில் இந்த இசைக்குழு செயற்படுகிறது.அங்குள்ள போராளி கலைன்சர்களையும் விடுதலை ஆதரவு கலைன்சர்களையும் இணைத்து தமிழ்ழீழ இசைக்குழு செயற்படுகிறது.பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றது.வன்னி கலைன்சர்களால் செயற்படுத்திகொண்டிருந்த தெருவழி நாடகங்கள் மட்டகிளப்பிற்கு கொண்டுசெல்லபட்டு மக்களிடையே அரங்கேற்ற படுகின்றன.சிறப்பு மிக்க கோவிலாக காணப்படும் கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் அலைய திருவிழா உள்ளிட்ட ஆலயங்களின் நிகழ்வுகளில் தமிழீழ இசைக்குழு அரங்கேற்ற படுகின்றன.காவல்துறை நிர்வாகம் அங்கு பலப்படுகின்றது மக்களிடையே காணப்படும் பிரச்சனைகள் தீர்க்கபடுகின்றன.பெற்றோரை இழந்த சிறுவர்களுக்காக மிக வறிய சிறுவர்களுக்காகவும் அறிவுச சோலைகள் உள்ளிட்ட சிறுவர் இல்லங்கள் உருவாக்கபட்டு சிறுவர்கள் பராமரிக்க படுகின்றார்கள்.படுவான்கரையில் பொருண்மிய கட்டமைப்பு சிறப்புற செயற்படுகிறது.படுவான்கரையில் பெருமளவான கால்நடைகள்.( ஆடு மாடுகள்)உள்ளன இவற்றின் உரிமையாளர்களுக்கு பொருண்மிய கட்டமைப்பு உடாக மானிய அடிப்படையில் நிதி உதவிகள் வழங்க படுகின்றன.பால் உற்பத்தி பெருக்கிறது இதுபோன்றுதான் விவசாய உற்பத்திக்கும் செயற்பாடுகள் நடைபெறுகின்றன.நெல் உற்பத்தி பெருகுகின்றது.இது போன்ற நன்னீர் மீன்பிடிக்கும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கபடுகின்றன.மீன்பிடி தொழிலாளர்களின் வருமானம் அதிகரிக்கின்றது.விடுதலை புலிகளின் அரசியல் செயற்பாடுகளால் படுவான்கரை பகுதி மக்களின் வாழ்க்கைதரம் சற்று உயர்வடைகிறது.இங்கு குறிப்பிட கூடிய விடையம் ஒன்று உள்ளது.சிறிலங்கா அரசின் பேருந்துகள் விடுதலை புலிகளின் கட்டுபாட்டுக்கு சென்றுவர கூடிய நிலை காணப்பட்டது.அதே போன்று சிறிலங்கா அரசின் மின்சாரத்தை படுவான்கரை மக்கள் பெறக்கூடிய வகையில் இருந்தது.வேலை இல்லாமல் இருந்த இளைன்சர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க படுகிறது.இதன் முலம் மக்களின் வாழ்க்கைதரம் உயர்த்தபடுகிறது.அத்துடன் படுவான்கரையில் மாவீரர் துயிலும் இல்லம் சிறப்புற கட்டபடுகிறது.அங்குள்ள வீதிகளில் மாவீரர் நினைவு சின்னங்கள் பொறிக்கபடுகின்றன.இவ்வாறு அங்குள்ள மக்கள் இயல்பான வாழ்க்கைக்குள் செல்வதற்கு சமாதான காலத்தை விடுதலை புலிகள் சரியாக பயன்படுத்தி கொண்டிருந்த போதுதான் சிறிலங்காவின் போர் மட்டகிளப்பு மண்ணை சூழ தொடங்கியது

…………………………………………………………………………………………………………..
……………………………………………………………………………………………………………..
SHARE