மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? –
சுழியோடி
-11
கொடுப்பவர்கள்.ஒட்டு குழுக்களுடன் இணைத்து செயற்படுபவர்கள் உட்பட தமிழ் துரோகிகளை இனம்கண்டு அவர்களை களையும் நடவடிக்கையுடன் விடுதலை புலிகளின் படையணிகளில் புலனாய்வு கட்டமைப்பின் செயற்பாடுகளை வளர்த்து எடுப்பதிலும் தீவிரமாக செயற்பட்டவர்.இவருக்கு என்று மட்டகிளப்பு மண்ணில் நீண்ட வரலாறு உண்டு. இவர் தனது களமுனை செயற்பாடுகளை களமுனைக்கு சென்று பார்வையிடுவார்.இவ்வாறுதான் (21.05.2006 ) அன்று முன்னணி காவலரண் பகுதியை பர்வையிடுவதுக்காக இவர் சென்றிருந்த போது எதிரியின் சினைப்பர் தாக்குதலுக்கு இலக்காகி வீரச்சாவை தழுவிக்கொண்டார்.மட்டகிளப்பு மண்ணில் உதிர்த்த ரமணன்
மட்டகிளப்பு மண்ணில் முதல் கேணல் என்ற பெருமையுடன் விதைக்கபடுகிறார்.இவ்வாறன வீரம் செறிந்த போராளிகளால் நிறைந்த மண்தான் மட்டகிளப்பு.அனால் இந்த மண்ணில் பிறந்தும் கோடாரிக்காம்பாக மாறியிருந்தார் கருணா.விடுதலை புலிகளின் செயற்பாடுகளை சீர்குலைக்க ஒட்டுக்குழுவினர் குறிப்பாக கருணா குழுவினர் படுவான்கரை மண்மீது தமது எதிர் செயற்பாடுகளை காண்பிக்கிறார்கள்.விடுதலை புலிகளின் காவலரண் மீது கருணாகுழு தாக்குதல் செய்வதும் பின்பு கருணா குழுவினரை விடுதலைப்புலிகள் விரட்டியடித்து களைவதுமாக சில காலங்களாக காணப்படுகிறது.
கருணா குழுவினை வைத்து சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகள் மீது போர் துடுத்து பார்த்தார்கள்.முட்டி முட்டி மோதி கருணா குழுவால் இயலாத நிலையில் அவர்களுடன் சிறிலங்கா படையினரும் இணைந்து விடுதலை புலிகள் மீது போர் தொடுக்கிறார்கள்.இவ்வாறு படையினரின் போர் செயற்பாடு உக்கிரமடைகிறது.சாதாரண இயந்திர துப்பாக்கி சண்டையாக காணப்பட்ட தாக்குதல்.பின்பு பீரங்கி தாக்குதலகாக விரிவடைகிறது இதனால் அங்கு வாழ்ந்த மக்கள் நகர் பகுதி நோக்கி நகர்கிறார்கள்.இதனிடையே பொலநறுவை காட்டினுள் கருணா குழுவின் முகாங்கள் விடுதலை புலிகளால் தாக்கி அளிக்கபட்டு அப்புறபடுத்த படுகிறார்கள்.இதன்போது அங்கு மக்களுக்கு தொண்டுசெய்த தமிழர் புனர்வாழ்வு பணியாளர்கள் கருணா குழுவினரால் வாகனத்துடன் கடத்தபட்டு படுகொலை செய்யபட்ட கொடூர சம்பவம்குட விடுதலை புலிகளால் அம்பலபடுத்த படுகிறது.இத்தனையும் நடந்துகொண்டு இருந்தும் சமாதானத்தை குழப்பும் வகையில் ஆயுததாரிகளின் நடவடிக்கைய உக்குவிக்கும் சிறிலங்கா அரசு உலகநாடுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.வேடிக்கை பர்த்துகொண்டிருந்தன மட்டகிளப்பில் உள்ள போர்நிறுத்த கண்காணிப்பு குழு தனது செயற்பாடுகளை செய்யவே இல்லை போர்நிறுத்த கண்காணிப்பு குழு பேரளவில்தான் அங்கு இருந்தது.இவ்வாறு படுவான்கரையில் கிழக்கின் இதயம் என்ற பெயரில் சிறிலங்கா அரசு போரினை தீவிரபடுத்தியது.முதற்கட்டமாக படுவான்கரையின் எல்லை கிராமங்களை பீரங்கி தாக்குதல் விமான தாக்குதல்கள் முலம் நீர்முலம் ஆக்கியது.இதில் குறிப்பிட்டு குறவேண்டிய விடயம் என்னவெனில் சிறிலங்கா வான் படையினர் கரடியன்று பகுதியில்தான் முதன் முதல் வெளிச்ச குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தினார்கள்.அதாவது அன்று மழைக் காலம் கரடியன்று பிரதேசத்தில் மழைமேகம் சூழ்ந்திருந்தது.இருள் சூழ்ந்த நேரம் அது அப்போது தாக்குதல் நடத்த வந்த மிக் விமானங்கள் வெளிச்ச குண்டுகளை வீசின நிலம் பகல் போல காட்சி அளித்தது.இதனை பயன்படுத்தி தாக்குதலை நடத்தின அங்கிருந்த மக்களுக்கு இந்த தாக்குதல் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.இரவில் இவ்வாறன தாக்குதல்கள் தொடர்த்தால் அழிவுகள் அதிகமாகும் என மக்கள் அன்சினார்கள்.இவ்வாறன மழை வெய்யில் இரவு பகல் பாராது விமானங்கள் தாக்குதலை நடத்தின அத்துடன் வாழைச்சேனை படை முகாமிலிருந்து அட்லேறி பீரங்கிகள் ரொக்கட் எறிகணைகள் ஏவப்படுகின்றன படையினரின் தீவிரம் அடைகின்றன.படுவான்கரையில் ஒருசில இடங்களை பிடித்து விட்டாதாக படையினர் அறிவிக்கின்றார்கள்.இருந்தும் விடுதலைப்புலிகள் படையினர் மீதும் தீவிர எதிர்தாக்குதலை நடத்தி படையினருக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்திக்கொண்டு இருந்தார்கள்.காடுகளில் பொறிவெடிகள் மிதிவெடிகளால் படையினர் பெரும் இழப்பை சந்திக்கின்றார்கள்.இவ்வாறு படையினரின் இழப்பு படைத்தளபதிகளுக்கு வெறுப்பை ஏற்படுத்துகின்ற அளவுக்கு இருந்ததை புலனாய்வு தகவல்கள் முலம் அறியக்குடியதாக இருந்தது.இந்த நிலையில் டாங்கிகள் மல்டிபெரல் எறிகணைகள் பல இடங்களில் இருந்தும் ஒரு பகுதியை இலக்குவைத்து கடுமையான தாக்குதலை நடத்தின.ஒரு முற்றுகைக்கு உட்பட்ட பிரதேசமாக படுவான்கரை மாறுகின்றது.சிறிலங்கா பாரிய ஆயுத தளபாட பின் உதவிகளுடன் போரை தொடக்கி இருக்கிறது என்பது புரிந்தது.அதன் எறிகணை மலைகள் இதை புரியவைத்தன தாக்குதல் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க விடுதலை புலிகள் அடுத்த கட்ட திட்டமிடல்களில் ஈடுபட்டார்கள்.படுவான்கரையில் இருந்து பின்வாங்குவதே சரியென முடிவெடுக்க பட்டு அங்கிருந்து கரடியனாறு குடிம்பிமலையில் உள்ள காடுகளை நோக்கி விடுதலை புலிகள் படையணிகளை நகர்த்தினார்கள்.படுவான்கரையில் இருந்த வெடிபொருட்கள் பாரிய ஆயுதங்கள் அன்றைய காலகட்டத்தில் நகர்த்த முடியாத சுழல் காணப்படுகிறது.இவற்றை புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.சிலவற்றை தகர்கின்றார்கள் அன்று மட்டகிளப்பு மாவட்ட தளபதியாக இருந்த கேணல் பானு அவர்களின் பணிப்பின் பெயரில் விடுதலை புலிகளின் சொத்துக்கள் படையினர் கையாக படுத்தாத வண்ணம் எரிக்க பட்டும் புதைக்க பட்டும் மறைக்கபடுகின்றன.தாக்குதல் தீவிரமடைந்த நிலையில் போராளிகள் காயம் அடைவதும் அதிகரிக்கிறது அவர்களை வன்னி கொண்டு செல்ல ஒரு பெரும் அணி தயாராகிறது.அதில் பொறுப்பானவர்கள் சிலரும் அடங்கியிருந்தார்கள்.காட்டு வழியாக வன்னிக்கு மிக நீண்ட பயணம் அது காட்டில் நீண்டதுரம் நடக்க வேண்டும் தமக்கு தேவையான உணவு வெடிபொருட்கள் என்பவற்றுடன் காட்டில் அணி நகர்கிறது.மட்டகிளப்பில் இருந்து வன்னிக்கு செல்லும் போராளிகள் மட்டகிளப்பு கொழும்பு பிரதான வீதிய கடக்க வேண்டும் இதன்போது படையினருடன் கடுமையாக மோதவேண்டி வரும் இதனால் பாதை வழிகாட்டிகள் முன் செல்கிறார்கள்.விடுதலை புலிகள் செல்லும் வழி என்று படையினருக்கு ஏற்கனவே தெரியும்.ஏனெனில் வன்னியில் இருந்து மட்டகிளப்பிற்கும் மட்டகிளப்பில் இருந்து வன்னிக்கும் செல்லும் படையணிகள்.கொழும்பு வீதியில் படையினருடன் சண்டை பிடித்தே பாதைய கடக்க வேண்டும்.தாக்குதல் உச்சம் அடையும் போது விடுதலை புலிகள் வன்னிக்கு செல்வார்கள் என்று தெரிந்திருந்த சிறிலங்கா இராணுவ தலைமை கொழும்பு வீதியில் மேலதிக படையினரை குவித்திருந்ததுடன் சண்டைகள் இன்றி போராளிகளுக்கு கடும் இழப்புக்களை ஏற்படுத்தும் வகையில் எறிகணை வீச்சு தாக்குதலுக்கான இலக்குகளை தீர்மானித்து காத்திருந்தார்கள்.ஒரு பெரும் அழிப்பு தாக்குதலை படையினர் நடத்த போகிறார்கள் என்ற புலனாய்வு தகவல்கள் எதுவும் கிடைத்திராத நிலையில் போராளிகள் வன்னி நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கிறார்கள்
மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? –
சுழியோடி
-12
விடுதலைபுலிகளின் வழிகாட்டி அணிகள் முன்னாலே நகர்கின்றது .எதிர்பார்த்தது போன்று கொழும்பு வீதியில் தாக்குதல் தொடங்குகிறது.இது ஒரு வழமைக்கு மாறாக கடுமையான தாக்குதலாக இருந்தது.ஒருசில அணிகள் பாதைய கடந்து விட்டன மேலும் சில அணிகள் பாதைய கடக்கவேண்டியுள்ளது.இவர்கள் கடந்து செல்வதற்கு வசதியாக ஏனைய அணிகள் எதிரி மீது கடுமையான தாக்குதலை நடத்திக்கொண்டு இருந்தார்கள்.எதிரி உக்கிர தாக்குதலை இவ்விடத்தில் நடத்திக்கொண்டு இருந்தான்.ஒரு கட்டத்தில் நேரடி சண்டைகளை தவிர்த்து அப்பகுதி எங்கும் கடுமையான எறிகணை தாக்குதலை நடத்த தொடங்கினார்கள்.
அத்துடன் தாக்குதல் உலங்கு வானுர்திகளும் அவ்விடத்திற்கு வந்து கடுமையான தாக்குதலை நடத்த தொடங்கின.மிக மோசமாக நடத்தபட்ட தாக்குதலில் சிக்கிய போராளிகளின் அணி காட்டில் சிதறுகிறது.அதாவது தனித்தநியவும் குழுக்களாகவும் காடுகளுக்குள் பிரிந்துவிடுகிறார்கள்.தாக்குதல் சற்று ஒய்வு நிலைக்கு வந்தபின்னர் வழிகாட்டி போராளிகள் வேகமாக செயற்பட்டு போராளிகளை தேடிபிடித்து ஒன்றிணைத்தார்கள்.அன்துடன் இந்த தாக்குதலில் போராளிகள் பலர் காயமடைந்தும் சிலர் வீரச்சாவை அடைந்தும் இருந்தார்கள்.வீரச்சவடைந்தவர்கள் அருகிலுள்ள இடங்களில் விதைக்கபடுகிரார்கள்.காயமடைந்தவர்களை காவிக்கொண்டு வன்னிசெல்லும் அணி
கொழும்பு வீதிய கடந்து வன்னி செல்லும் காட்டுக்குள் நுழைகிறது.வன்னி செல்லும் காட்டிற்குள் நுழைந்துவிட்டால் பிரச்சனை தீர்ந்து விட்டது என்று அர்த்தமில்லை வடக்கில் இருந்து கிழக்கிற்கும் கிழக்கில் இருந்து வடக்கிற்கும் தரைவழியாக பயணம் செய்வது என்பது மிகவும் நீண்டதும் உயிராபத்து மிக்க பயணமிது போகும் போது கொண்டுசெல்லும் தண்ணீர் முடிவடைந்து ஒரு கட்டத்தில் குடிக்க நீர் கூட இருக்காது.உணவு தீர்ந்து போயிருக்கும் ஆனாலும் தொடர்ந்து நடக்கவேண்டியிருக்கும் போகும் போதே பல போராளிகள் நீரின்றி மயங்கி விடுவார்கள்.சிலர் நடக்க முடியாமல் தளர்வடைந்து விடுவார்கள் அத்துடன் இந்த பயணத்தில் ஒரு போராளி தனக்குரிய துப்பாக்கி ரவைகள் உடைகள் இவற்றுடன் மேலதிகமாக சில பொருட்கள் அத்துடன் காயமடைந்த போராளிகளையும் சுமந்துகொண்டுதான் செல்லவேண்டும்.
இடையில் பெரிய பெரிய ஆறுகளையும் கடக்க வேண்டும்.அத்துடன் எதிரியின் நடமாட்டங்களையும் அவதாநித்துகொண்டே பயணம் செய்யவேண்டும்.என்பதால் காட்டினுள் பயணம் என்பது மிக மெதுவாகத்தான் இருக்கும் அடர்ந்த காட்டில் சில மைல்கல் நகர்வது என்பது பெரும் பாடக இருக்கும்.இந்த நீண்ட பயணத்தின் போது உடனடியாக சிகிச்சை வழங்க முடியாது.காயமடைந்த போராளிகளில் சிலர் வீரச்சாவு அடைந்த நிகழ்வுகளும் நடந்ததுண்டு.அவ்வாறு வீரச்சாவு அடைந்தாள் அவர்களை அவ்விடத்திலையே மரியாதையுடன் விதைத்துவிட்டு பயணம் தொடரும்.இவ்வாறுதான் அன்று மட்டகிளப்பில் இருந்து பெரும் அணியொன்று சில முக்கிய தளபதிகள் பொறுப்பாளர்களுடன் வந்தபோது இந்த சண்டை வெடித்திருந்தது.சண்டைய முடிந்துகொண்டு காட்டு வழியாக நடந்து புல்மோட்டைக்கு அருகில் கொக்குதொடுவாய்க்கு இடையில் ஒரு கடற்கரைய வந்தடைந்தது.அந்த இடத்தில் சில வேளைகளில் சிறிலங்கா படையினருடன் சண்டையிட வேண்டிய சுழல் வரும் என்பதால் போராளிகள் அதற்கான தயார் நிலையிலே நின்றிருந்தார்கள்.முல்லைத்தீவில் இருந்து கடற்புலிகளின் படகு அணிகள் அங்கு வரவேண்டியிருந்தது.அவர்கள் வந்தே கடல்வழியாக வன்னிக்கு செல்லமுடியும்.நாயர்ருக்கு அண்மையாக செம்மலை அளம்பில் கடற்பகுதியில் கடற்புலிகளின் பாரிய தளம் ஒன்று இருந்தது.இந்த தளம் இருப்பது யாருக்கும் அன்று பெரிதாக தெரிந்திருக்கவில்லை.இது மிகவும் இரகசியமாய் விடுதலை புலிகளால் பேணப்பட்டு வந்தது. இங்கு கடற்புலிகளின் கடற்கண்காணிப்பு கருவி பொருத்தபட்ட ராடார் தளம்குட இருந்தது .இங்குதான் கடற்புலிகளின் தாக்குதல் அணியுடன் கரும்புலி படகுகள் களம் நோக்கி விரையும்.புல்மோட்டைய அண்மித்த கரைய விடுதலைபுலிகளின் மட்டகிளப்பு அணி வந்துவிட்டது என்ற செய்தி தொலைத்தொடர்பில் பரிபசையில் இத்தளத்திற்கு எடுத்து குறப்பட்டது.இதைனையடுத்து கடற்புலிகளின் படகு அணிகள் கடலில் இறக்கபட்டன.கடற்புலிகளின் படகுகள் கடலில் இறங்கிவிட்டதையும் திருமலை நோக்கி அவை நகர்வதையும் திருகோணமலையில் உள்ள சிறிலங்கா கடற்படை தலைமையாக ராடாரில் அவர்கள் கண்காணித்து விடுவார்கள்.அத்துடன் மனித்தியலத்திற்கு இரண்டு டோற என்ற வீதம் காங்கேசன்துறைக்கும் -திருமலைக்கும் இடையே சுற்ருகவல் இடம்பெற்று கொண்டிருக்கும்.இவர்களின் கண்களில் சிக்குபடாமல்தான் பயணம் மேற்கொள்ள வேண்டும்.அவ்வாறு கண்டாலும் கடற்புலிகளின் பெருமளவு படகுகள் படகுகள் அணிகளை கண்டால் சிறிலங்கா கடற்படை படகுகள் நெருங்கிவராது.அவ்வாறு நெருங்கி வந்தால் அது தற்கொலைக்கு சமமானது என்பது அவர்களுக்கு தெரியும்.இவ்வாறன சம்பவங்களில் பலவற்றில் தமது டோராக்களையும் கடற்கலங்களையும் இழந்த அனுபவம் சிறிலங்காவுக்கு உண்டு.எனினும் சில வேளைகளில் கடற்சமர் வெடித்துவிடும் திருமலையில் இருந்து சிறிலங்கா கடற்படையின் டோற படகுகள் தாக்குதலுக்கு வரும்.கொக்குதொடுவாய் புல்மோட்டை வரையான கடற்பரப்பில் இரு தரப்பின் இடையே கடும் சமர் நடைபெறும்.என் கரும்புலி படகுகள் கூட இதன்போது வெடிக்கும்.டோற படகுகள் முள்கடிக்கபடும்.இவ்வாறுதான் சிறிலங்கா கடற்படையினருடன் மோதி கடற்புலிகளின் படகுகள் அந்த பகுதிய வந்தடைய முடியும்.அதே வேலை இவர்கள் படகில் ஏறும்போது கூட கடற்புலிகளின் தாக்குதல் படகுகள் ஒருபுறம் சிறிலங்கா கடற்படைய துரத்தி துரத்தி அடித்துக்கொண்டு இருப்பார்கள்.படகில் ஏறியவர்கள் செம்மலை அளம்பில் கடற்கரையில் கொண்டுசென்று இறக்கபடுவார்கள்.இறங்கும் இடங்களை கடற்படையினர் அறிவித்தால் அவ்விடத்திற்கு சிறிலங்கா வான்படை கிபீர் விமானங்கள் வந்து தாக்குதலை நடத்தும்.இவற்றை எல்லாம் எதிர்கொண்டுதான் மட்டகிளப்பில் இருந்து போராளிகள் வன்னிய வந்தடைகிறார்கள்.குடும்பிமலை கரடியனாறு குறிப்பாக சில முதன்மை இடங்களை பிடித்த சிறிலங்கா படையினர் சிங்க கொடிகளை அங்கு ஏற்றி குதுகலித்து மகிழ்ந்தார்கள்.கிழக்கின் உதயம் என்ற பெயரில் மட்டகிளப்பு மண் மீட்க பட்டுள்ளதாக (2007 ) இன் இறுதி பகுதியில் சிறிலங்கா அரசு அறிவிக்கிறது.படுவான்கரையில் சில இடங்களுக்கு சிங்கள பெயர்கள் சூட்டுகின்றார்கள்.தாண்டியடி பிரதேசம் சுதந்திரபுர என சிங்கள பெயர் மாற்றபட்டது குறிப்பிடத்தக்கது.இதே வேளை மட்டகிளப்பில் படையினரால் ஆக்கிரமிக்கபட்ட நிலையில் அங்கு நின்று போராடிய ஏனைய போராளிகள் அம்பாறை மாவட்ட போராளிகளுடன் இணைந்து கொள்கிறார்கள்.போராளிகளில் சிலர் விலகி தங்களின் வீடுகளுக்கு செல்கிறார்கள்.இவர்களை அடையலாம் கண்டு பின்னர் கைய்துசெய்த்து இவர்கள் முலம் விடுதலைபுலிகளால் புதைக்கபட்ட ஆயுத தளபாடங்கள் சிலவற்றை கண்டுபிடிக்கிறார்கள்.சில இடங்களில் சில தொழில்நுட்ப கருவிகளை கொண்டு ஆயுதங்கள் புதைக்க பட்டிருப்பதை இனம்கான்கிறார்கள்.இவ்வாறு படுவான்கரையில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மோட்டர்கள் என்பன படையினரால் எடுக்கபட்டு சிறிலங்கா அரசின் பாதுகாப்பு இணையதளத்தில் ஒளிப்படங்கள் முலம் கண்பிக்கபட்டு இருந்தது. சிறிலங்கா படையினரால் ஆக்கிரமிக்க பட்ட படுவான்கரை பகுதியின் பாதுகாப்புக்கு என சிறிலங்கா ஊர்காவல் படையினரும் காவல் துறையினரும் முகாம்களை அமைக்கிறார்கள்.கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் மட்டகிளப்பு அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா படையினரின் சிறப்பு அதிரடி படையினரே பாதுகாப்பில் ஈடுபடுகிறார்கள்.இவர்கள் மிகவும் கொடூரமானவர்கள் என்பது இவர்கள் நடத்திய பல்வேறு படுகொலைகள் முலம் அறிந்திருந்த தமிழ் மக்கள் இவர்களது கட்டுபாட்டில் தங்கள் இருப்பது என்பது ஆபத்து என்பதை உணருகின்றார்கள்.அதே வேளை படுவான்கரையில் பாதுகாப்பில் உள்ள சிங்கள ஊர்காவல் படையினர் தமிழ் மக்களின் சொத்துக்கள் உடமைகளை சூறையாடி தமது கிராமங்களுக்குள் எடுத்து சென்றார்கள்.தமது உடைமைகள் பறிபோனபோதும் அவற்றை பார்த்துகொண்டிருக்க வேண்டிய நிலைமை அங்கிருந்த தமிழ் மக்களுக்கு இருந்தது என் படையதிகாரிகள் கூட தமிழ் மக்களின் சொத்துக்களை வாகனங்களில் ஏற்றி தங்களிடங்களுக்கு கொண்டுசென்றதும் நடந்தது.இவ்வாறுதான் கிழக்கின் உதயம் என்ற பெயரில் மட்டகிளப்பு மண்ணை வல்வளைப்பு செய்து வெற்றி கொண்டாட்டங்களில் சிறிலங்கா அரசு நின்றது.அதன் அடுத்த இலக்காக இருந்தது அம்பாறை
மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? –
சுழியோடி
-13
அம்பாறையில் விடுதலைபுலிகளின் நிர்வாக பகுதியாக கஞ்சிகுடிச்சாறு காணப்படுகிறது.அத்துடன் கஞ்சிகுடிச்சாரரில் படையினருக்கும் விடுதலைபுலிகளுக்கும் மோதல் என்று அடிக்கடி நீங்கள் செய்திகள் கேள்விப்படும் அளவிற்கு சிறிலங்கா படையினருடன் பல சண்டைகளை சந்தித்த மண்ணாகவும் கஞ்சி குடிச்சாறு காணப்படுகிறது.இப்பகுதியில் பெருமளாவன மக்கள் விடுதலை புலிகளின் நிர்வாக பகுதிக்குள் வாழ்ந்து வந்தார்கள்.சிறிலங்கா படையினர் கஞ்சி குடிச்சாறு பகுதி மீது பெரும் படையெடுப்பை செய்தார்கள் இதன்போது கட்டுபாட்டு பிரதேசம் இழக்கபட்டு கஞ்சிகுடிச்சாறு நுவாஸ் குளப்பகுதிகள் படையினரால் ஆக்கிரமிக்க படுகின்றன.அக்கிராமங்களில் வாழ்ந்த மக்கள் படையினரால் பிடிக்கபட்டு முகாம்களுக்கு கொண்டுசெல்ல படுகிறார்கள்.இவர்களில் பலர் பின்பு காணமல் போயிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது இரனுவத்திரனின் ஆக்கிரமிப்பின்போது மக்களில் பலர் விடுதலைப்புலிகள் நிலைகொண்டிருந்த காடுகளுக்குள்ளும் வந்தார்கள்.காடுகளுக்குள் மக்களும் இடம்பெயர்ந்து வந்ததினால் படையினருடன் பாரிய மோதல்களை எதிர்கொள்ள முடியாத நிலை எனவே தாக்குதலை குறைப்பதுக்காக அம்பாறை மட்டகிளப்பு காடுகளுக்குள் இருக்கும் விடுதலை புலிகளின் குறிப்பிட்ட தொகையினர் வன்னி நோக்கி அனுப்பபடுகின்றார்கள்.
இதன்போது வன்னியில் இருந்தும் ஒரு அணி கிழக்கிற்கு அனுப்பபடுகிறது.இது காட்டு தாக்குதல்களில் சிறப்பு பயிற்சி பெற்றிருந்த ஒரு அணியாக இருந்தது.காட்டுபகுதிகளில் குறிப்பாக அம்பாறையின் எல்லை கிராமங்களாக அமைந்திருந்த கதிர்காமம் புத்தல அம்பாந்தோட்ட பகுதிகளில் சிறு சிறு தாக்குதல்களை கிளைமோர் தாக்குதல்கள் படையினர் மீது மேற்கொள்ள படுகின்றன.படையினருக்கு இதனால் பாரிய இழப்புக்கள் ஏற்பட தொடங்கியிருந்த நிலையில் காடுகளுக்குள் விடுதலை புலிகளை தேடியழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.அம்பாறை காட்டுக்குள் விடுதலை புலிகளை தேடி புறப்பட்ட சிறப்பு அதிரடிப்படையினருக்கு கண்ணிவெடிகளும் மிதிவெடிகளும் பலத்த வரவேற்பை அளித்தன.தொடர்ச்சியாக வாங்கிய பலமான அடியால் சிறப்பு அதிரடி படையினர் அம்பாறை காடு பெரும் காடு இக்காட்டில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுவதென்பது கடினமானது என்று கூறி தொடர்ச்சியாக ஈடுபடுவதற்கு மறுக்கிறார்கள்.இந்த சிக்கலை தவிர்க்க படையினர் ருபாஸ் குளப்பகுதி உடாக படையினர் காட்டுக்குள் நுளைகின்றார்கள்.காட்டுக்குள் நுழைந்த படையினர் மீது விடுதலை புலிகள் சிறு சிறு குழுக்காளாக சென்று தாக்குதலை நடத்துகின்றார்கள்.அத்துடன் போராளிகள் காட்டுக்குள் பொருத்தி வைத்த பொறிவெடிகளில் படையினர் சிக்குகிறார்கள்.படையினரை திகப்புற வைக்கும் தாக்குதல்கள் விடுதலை புலிகளால் நடத்தபட்டன.இழப்புக்கள் அதிகமானதால் இந்த நடவடிக்கைய கைவிட்ட படையினர்.பின்பு எறிகணை தாக்குதல்களை காட்டினுள் கடுமையாக நடத்தியபின் காட்டுக்குள் நுழைகிறார்கள்.இந்த நடவடிக்கையில் சிறிலங்கா படையணியின் சிறப்பு கொமாண்டோ தாக்குதல் அணியினர் ஈடுபடுத்த படுகிறார்கள்.இந்த சண்டைகளின் போதும் விடுதலைபுலிகளுக்கும் சிறு சிறு இழப்புக்கள் ஏற்படுகின்றன.அத்துடன் காட்டினை சுற்றிய படையினரின் முற்றுகையும் இறுகுகின்றது.இருந்தும் விடுதலை புலிகள் தளரவில்லை.காட்டில் இருக்கும் விடுதலை புலிகளுக்கு உணவுத்தட்டுப்பாடும் மருந்துதட்டுபாடும் காணப்படுகிறது.இருந்தும் உணவு பொருட்களை நீண்டதுரம் மக்கள் வாழும் பகுதிகளுக்குல்லால் சென்று போராளிகள் சிலர் கொள்வனவு செய்கிறார்கள்.இவ்வாறு பாரிய இடர்களை அங்குள்ள போராளிகள் எதிர்கொண்டபடிதான் படையினருக்கு எதிராக வியூகங்களை வகுத்து தாக்குதலை நடத்திக்கொண்டு இருந்தார்கள்.கண்ணிவெடிகள் பொறிவெடிகள் கிளைமோர்கள் ஒருபக்கம் படையினருக்கு இழப்புக்களை ஏற்படுத்த நேரடி மோதல்களிலும் படையினர் கடுமையான இழப்புக்களை சந்திக்கின்றார்கள்.தொடர்ச்சியான இழப்புக்களால் படையினர் சலிப்புற்று சொவடைந்த நிலையில் அவர்களின் தாக்குதல் திட்டம் மாற்றியமைக்க படுகின்றது.போராளிகள் சிறி சிறு அணிகளாக சென்று தாக்குதல் நடத்துவது போல்.படையினர் சிறு சிறு அணிகளாக பிரிந்து காட்டினுள் தாக்குதலை நடத்த தொடங்கினார்கள்.அவர்களின் ஆள் வளமும் ஆயுத வளமும் அதிகமாக இருந்ததால் பெருமளவு சிறு சிறு அணிகளை பல முனைகளுடாக இறக்கிவிடபட்டு இருந்தனர்.குறிப்பிட்ட போராளிகளே நின்றிருந்த நிலையில் வரும் அணிகள் அனைத்தையும் சமாளிப்பது பெரும்பாடாக இருந்தது.எனினும் போராளிகள் இல்லாத இடங்களில் பொருத்தி வைக்கபட்டு இருந்த கண்ணிவெடிகளும் பொறிவெடிகளும் படையினருக்கு இழப்பை ஏற்படுத்திகொண்டிருந்தன.இதேவேளை இவ்வாறன வெடிப்பு சம்பவங்களின்போது அச்சம் காரணமாக படையினர் நடத்திய தாக்குதலில் அவர்களது சக படையினரே உயிரிழந்த சம்பவங்களும் நடைபெற்றன.இவைகள் அன்றைய காலப்பகுதியில் வெளியே வராமல் தடுக்கபட்டன.அதாவது கள முனைகளில் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களை விட அதிகமாக அம்பாறை காட்டிற்குள் இழப்புக்கள் ஏற்பட்டு இருந்தது என்பது மிகையானது அல்ல.இந்த இழப்புக்களால் ஒரு சில கரையோர காடுகளை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திய படையினர் தமது தேடியழிக்கும் நடவடிக்கைய நிறுத்திவிட்டு எல்லைப்புற கிராமங்களில் முகாம்கள் கவலரங்கள் அமைத்து பாதுகாப்பை பலபடுத்துகிறர்கள்.இதனால் அம்பாறை மாவட்டத்தில் விடுதலை புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் சற்று குறைய தொடங்கின.இந்த இறுக்கத்தை பயன்படுத்திய விடுதலை புலிகள் தாக்குதல்களை நன்றாக குறைத்து காட்டினுள் போராளிகள் குறைவடைந்து விட்டது போன்றொதொரு நிலைய ஏற்படுத்துகின்றார்கள்.அத்துடன் அதே காலப்பகுதியில் தமது இருப்பிடங்களை நிலைப்படுத்தும் நடவடிக்கை உணவு தேடும் நடவடிக்கை போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள்.இவ்வாறுதான் மட்டகிளப்பு காட்டினுள்ளும் போராளிகள் தாக்குதலை நிறுத்திவிட்டு தங்களை பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருந்தார்கள் எனினும் அவ்வப்போது படையினருடன் எதிர்பாராத நிலையில் மோதவேண்டிய சந்தர்பங்களும் எழுந்தன இதனால் காட்டினுள் இருந்த போராளிகள் சில சிக்கல்களுக்கு முகாம் கொடுக்கிறார்கள்.இந்த சிக்கல்களால் போராளிகள் சிலர் ஆயுதங்களை கைவிட்டுவிட்டு வீடுசெல்ல போவதாக கூறுகின்ற அளவிற்கு நிலைமை சென்றிருந்தது
மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? –
சுழியோடி
-14
இது போராளிகளுக்கு இடையில் முரணை அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தது.எனினும் இந்த பிரச்சனை தளபதி ராம் அவர்களுக்கு எடுத்து சொல்லபட்ட போது அப்போரளிகளுக்கு போராட்டத்தின் அவசியமும் தேவையும் எடுத்து சொல்லபட்டது.இறுதியில் போராளிகள் போராட்டத்தின் தேவையா உணர்ந்து தங்கள் எண்ணங்களை மாற்றிகொள்கிறார்கள்.
எனினும் அம்பாறையில் படையினரின் நடவடிக்கைகள் அதிகரிக்கபட்டு அதன் பின்னர் காலத்திலும் அம்பாறை கட்டினுளும் விடுதலை புலிகளின் நடவடிக்கைகள் முடக்க படுகின்றன.இத்துடன் கிழக்கில் விடுதலைபுலிகளின் நடவடிக்கை முழுமையாக முடிவிற்கு வருகிறது.கிழக்கு மாகாணம் முழுமையாக சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்குள் செல்கிறது.கிழக்கு மீட்கப்பட்டு விட்டதாக சிறிலங்கா வெற்றி கொண்டாட்டங்களை கொண்டாடி மகிழ்ந்தது.
கிழக்கின் அபிவிருத்தி என்ற பெயரில் பிள்ளையான் போன்றவர்களை வைத்துகொண்டு சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளவும் பொவுத்த மதசின்னங்களை நிறுவுவதற்கு வழிகளை சிறிலங்கா அரசு ஏற்படுத்தி கொண்டது.இப்போதும் தொடர்ந்து அதனையே செய்துகொண்டு உள்ளது அத்துடன் மாவீரர்களின் துயிலுமில்லங்கள் அளிக்கபட்டுவிட்டன.தமிழர்களின் வீர வரலாற்று சின்னங்கள் அனைத்தும் அளிக்கபட்டு விட்டன.இவை எல்லாவற்றையும் தமிழ் ஓட்டுகுளுக்களான பிள்ளையான் கருணா குழுக்களை தமது பிரதிநிதிகளாக வைத்துக்கொண்டே சிறிலங்கா அரசு நடத்தி முடித்தது.கலையும் விழாக்களும் என களைகட்டியிருந்த கிழக்கு இன்று இருள் சுழ்ந்துபோய் கிடக்கிறது நாளை விடியும் என்ற நம்பிக்கையுடன்.
கிழக்கு மண் முழுவதும் இலக்கபட்டபோது வன்னியில் விடுதலை புலிகளின் அரசியல் பணிகள் தொடர்ந்து செயற்பட்டுக்கொண்டு இருந்தன.அதாவது போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினருடனான சந்திப்பு போன்ற செயற்பாடுகளில் விடுதலைப்புலிகள் தொடர்ச்சியாக ஈடுபட்டுகொண்டிருந்தனர்.அதே வேளை கிழக்கினை இழப்பதற்கு முன்பாகவே (26.03.2007 ) அன்று வான் புலிகள் கட்டுநாயக்க விமானப்படைத்தளம் மீதான தாக்குதல் முலம் அறிமுகபடுத்தியிருந்த விடுதலைப்புலிகள் தங்கள் வான் தாக்குதலை மேலும் அதிகரிந்து இருந்தார்கள்.அனால் சமாதன காலத்தை பயன்படுத்தி விடுதலைப்புலிகள் தங்கள் வான்படைய உருவாக்கி விட்டார்கள் என்று குச்சல் இட்டது சிறிலங்கா.சமாதன காலத்தில் விடுதலைபுலிகளின் பகுதிகளுக்கு சமாதன துதர்களையும் பேச்சுவார்த்தைக்கு சென்ற தளபதிகளையும் ஏற்றி சென்று வந்த சிறிலங்கா படையின் உலங்குவானுர்த்திகள் அந்த சந்தர்ப்பத்தை தமது புலனாய்வுக்கு பயன்படுத்திகொண்டன.விடுதலை புலிகளின் தாக்குதல் இடம்பெற மாட்டாது என்ற துணிவால் வன்னிக்கு பறப்புகளை மேற்கொண்ட சிறிலங்கா
வான்படையின் உலங்குவானுர்திகள் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி தாழ்வாக பறந்து இரணைமடு பகுதியில் உள்ள விடுதலைபுலிகளின் விமான தளத்தினை கண்காணித்து ஒளிப்படங்களையும் எடுத்திருந்தனர்.விடுதலை புலிகள் விமானத்தளம் விமானங்களை வைத்திருப்பது உறுதிபடுத்திய பின் சமாதன காலத்தை பயன்படுத்தி விடுதலை புலிகள் தங்கள் விமானபடைய கட்டியமைத்துவிட்டது போன்று அதனை பெரும் பிரச்சனைக்குரிய போர்நிறுத்த மீறலாக மாற்றி சர்வதேச ரீதியாக பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தது மஹிந்த அரசு.
அனால் உத்தியோகபுர்வமாக அறிவிக்கபடாத போதும் ( 1998 ) ம் ஆண்டு மாவேரர் தினத்தன்று முல்லைத்தீவு முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லம் மீது மலர்துவியதன் உடாக தங்களிடம் விமான படையினர் இருப்பதை விடுதலை புலிகள் உருதிப்படுத்தி கொண்டிருந்தார்கள் அப்போது விடுதலை புலிகளின் விமான படைக்கு கேணல் சங்கர் அவர்கள் பொறுப்பாக இருந்தார்.முல்லைத்தீவு வற்றாப்பளை நந்திக்கடல் வெளிப்பகுதியில் விமானத்தை வைத்து வான் புலிகள் பயிற்ச்சியில் ஈடுபட்டார்கள்.பின்பு வேறுசில இடங்களிலும் விமானத்தளங்கள் விடுதலைபுலிகளால் அமைக்கபட்டன.
சமாதன காலத்திற்கு முன்னரே விடுதலைபுலிகளின் படைகட்டுமான வளர்ச்சி உயர்வடைந்தே இருந்தது.சமாதன காலத்தை பயன்படுத்திதான் புலிகள் படைவலுவை அதிகரித்தார்கள் என்பது சிறிலங்கா அரசின் பொய் பிரச்சாரமே.(1998,1999 ) ஆண்டு காலப்பகுதியிலே முல்லைத்தீவு நந்திக்கடல் வெளியில் கிளைடர் ரக விமானம் முலம் பயிற்ச்சி பெற்ற வான்புலிகள் பின்பு தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்தும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்கள்.இதற்கமைவாகவே விமானதளத்திற்கு இசைவான மத்திய நிலையமாக இரணைமடு பகுதி தேர்ந்தேடுக்கபட்டிருன்தது.அதாவது இரணைமடு குளத்தின் மேற் பகுதியை எல்லையாக கொண்டு விமான தளம் அமைக்கபட்டு இருந்தது.விமான தளத்திற்கு பாதுகாப்பாக வடக்கு பக்கமாக இருந்த இரணைமடு குளக்கட்டு பகுதிக்கருகில் விடுதலை புலிகளின் பயிற்சி தளங்கள் அமைக்கபட்டு இருந்தன.
இதனைவிட இப்பிரதேசங்களின் பாதுகாப்பிற்காக விமானதளத்திற்கு அருகிலிருந்த கிராம பகுதிகளில் விடுதலைபுலிகளால் தேர்வுசெய்யபட்ட மாவீரர் போராளி குடும்பங்கள் குடியமர்த்தபட்டு அவர்களுக்கு அப்பிரந்தியமும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் அதன் பாதுகாப்பு தொடர்பாக வலியுறுத்த பட்டிருந்தது.புதிதாக நடமாடுபவர்கள் தொடர்பாக விழிப்புணர்வுடன் செயல்படுமாறு மக்களுக்கு வலியுறுத்தபட்டு உடனுக்குடன் தகவல் அறிவிக்கும் ஏற்பாடுகளும் அவர்களுக்கு செய்துகொடுக்க பட்டிருந்தன.
சிறகு பொறுக்க காடுமரம் வெட்ட என இப்பகுதி காடுகளுக்குள் யாரும் நுழைய வேண்டாம் என்று விடுதலைபுலிகளால் மக்களுக்கு அறிவிக்க பட்டிருந்தது.அத்துடன் காட்டினும் சில இடங்களில் வட்ட தகரத்தில் எழுதப்பட்ட எச்சரிக்கைகள் மரங்களில் அடிக்கபட்டிருன்தது.இதனை கருத்தில் கொண்டு வேறுபகுதி மக்களும் குறிப்பிட்ட பகுதி காடுகளுக்குள் நுழைவதில்லை.விமான தளத்தின் கிழக்கு பக்கமாக பெரும் காடு காணப்படுகிறது.அதாவது கொய்யகுளம் முத்தையன் கட்டு பெரும் தொடர் காட்டினை மைய்யமாக கொண்டு விமானதளத்தின் பாதுகாப்புக்காக முகாம்கள் பயிற்ச்சி தளங்கள் நிறுவப்பட்டு அதன் பாதுகாப்பு உடாக சுற்று ரோந்து பணிகள் மேற்கொள்ளபட்டு நாள்தோறும் பாதுகாப்பு மணிக்கொரு தடவை உறுதிபடுத்த பட்டுக்கொண்டு இருந்தது.இதே போன்றுதான் தென்பகுதியில் அம்பகாமம் கரிப்பட்ட முறிப்பு தொடர் காட்டினை மையமாக கொண்டு ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியின் பாதுகாப்பு உறுதிபடுத்தல் உடாகவும் அம்பகாமம் காட்டில் பாரிய பயிற்சி தளங்கள் அமைக்கபட்டு முகாம்கள் உடாகவும் பாதுகாப்பு பலப்படுத்த படுகிறது.மேற்காக ஏ ,னையின் வீதிய மையமாக கொண்டு இரணைமடு முருகண்டி கொக்காவில் (18 ) ம் போர்குற்றம் போன்ற இடங்களில் காட்டு பகுதிக்குள் முகாம்கள் அமைத்து பாதுகாப்புடன் நடவடிக்கை செயற்பாடுகளும் நடைபெறுகின்றது.இதற்கிடையில் இரணைமடு குளத்தில் படகில் சென்று அடிக்கடி கண்காணிப்பும் நடைபெறும்.இவ்வாறுதான் இரணைமடு விமான தளத்தின் பாதுகாப்பு விடுதலைபுலிகளால் மேற்கொள்ளபட்டது.அம்பகாமம் முத்தையன் கட்டு வனப்பகுதி விசுவமடு வனப்பகுதி கல்மடு வனப்பகுதி இவைகள் எல்லாம் அன்று விடுதலை புலிகளின் பயிற்ச்சி தளங்கள் நிறைய பெற்ற இடமாகவும் படையணிகளின் முகாம்கள் அமையபெற்ற இடமாகவும் ஆயுத களஞ்சியங்கள் இருப்பிடமாகவும் அதாவது ,வெடிபொருள் பகுதி ,ரவை பகுதி, துப்பாக்கி பகுதி, கனரக ஆயுத, பகுதி என்று பல பகுதிகளாக செயற்பட்ட இடங்கள் இங்கு உண்டு.அதே போல விடுதலைபுலிகளின் சில வெடிபொருள் உற்பத்தி செய்யும் பட்டறைகள் கூட இங்கு காணப்பட்டன.அதாவது கைக்குண்டு உற்பத்தி எறிகணை உற்பத்தி , படகு உற்பத்தி என பல்வேறு பகுதிகள் பல்வேறு இடங்களில் கானபட்டன.இவ்வாறு குறிப்பிட்ட வனப்பகுதிகள் விடுதலைபுலிகளின் இராணுவ மயமாக்கபட்ட பகுதியாகவே காணப்பட்டது.இவற்றுள் காடுகளை குடைந்து புதிய புதிய வீதிகள் அமைக்கபட்டன நடைபாதை வாகன பாதை என பல்வேறுபட்ட வீதிகள் அமைக்க பட்டு போக்குவரத்துக்கள் நடைபெற்றது.அதாவது சாதாரணமாக சொல்லுவதனால் விசுவமடு வனத்துக்குள் நுழைந்தால் முத்தையன்கட்டு அம்பகாமம் செல்லகூடிய அளவில் பாதைகள் அமைக்கபட்டு இருந்தன.இவற்றின் உடகத்தான் இரணைமடு விமானதளத்தின் பாதுகாப்பு உறுதிபடுத்த பட்டிருந்தது.இந்த இரணைமடு தளத்தை விடுதலை புலிகள் நீண்ட விமானத்தளமாக மாற்றி ( 2006 ) ஆண்டு காலப்பகுதியில் பயிற்ச்சியில் எடுபட தொடங்கியிருந்த போதுதான் விடுதலை புலிகளின் விமானங்கள் வானில் பறப்பதை மக்கள் அறிந்துகொள்ள தொடங்குகிறார்கள்.வான் புலிகள் அணி பிறந்துவிட்ட நம்பிக்கை மக்களிடையே பரவலாக காணப்பட தொடங்கியிருந்தது
மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? –
சுழியோடி
-15
சுதுபுரம்,இருட்டுமடு என்பது உடையார்கட்டு காட்டுபகுதியில் உள்ளது.கொண்டமடு என்பது புதுக்குடியிருப்பு அடுத்தாதாக உள்ள மன்னாகண்டல் பகுதிக்கு அண்மையாக உள்ள இடம்.சுதுபுரம் என்பது கோப்பபுளவு எனப்படும் இடத்தில் உள்ளது.இவ்வாறு விடுதலை புலிகளின் விமான தளங்கள் இரகசியமாக அமைக்கபட்டிருந்தன.
இதன்போதுதான் ஒரு நாள் விடுதலை புலிகளின் முத்த தளபதிகளுக்கு புலிகளின் வான்படை அணியினை தலைவர் அறிமுகம் செய்துவைத்தார் (இதனை முதல் தொடரில் விரிவாக பார்த்திருந்தோம்)இதன்போது இரண்டுபேர் விகிதம் விமானத்தில் ஏறி விமானத்தை ஓட்டிகாட்டி மக்களின் இடங்களையும் காண்பிக்கிறார்.தலைவர் விமானபடையின் பலம் தொடர்பாக தளபதிகள் அறிந்திருக்க வேண்டும் என்பதுக்கு அமைவாக இந்த அறிமுகம் நடைபெற்றது.இந்த பறப்பிற்கு பின்னால்தான் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த சு ப தமிழ்ச்செல்வன் அவர்களால் விடுதலைபுலிகளிடம் விமானபடை உள்ளதென்று அறிக்கை வெளியிடபட்டு இருந்தது.இந்த அறிவிப்பு சிறிலங்கா அரசை ஆழ்ந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது இது அயல் நாட்டை கூட வியக்கவைத்தது.விடுதலை புலிகளின் விமான படையினை முடக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிலங்கா அரசின் எண்ணத்தில் மட்டுமல்ல அயல்நாட்டிலும் உருவாகிறது.சிறிலங்கா அரசின் புலனாய்வாளர்கள் பல தரைவழி தகவலை திரட்டுகிறார்கள் அதாவது வன்னியில் இருந்து வவுனியா செல்லும் மக்களை விசாரித்து தகவல்களை புடுங்கி எடுக்கிறார்கள்.இதன்போது விடுதலை புலிகளின் பயிற்ச்சி தளங்கள் வெளிப்படையாகின்றது.வன்னியில் இறுக்காமான சூழ்நிலை காணப்படும்போது சிறிலங்கா அரசின் வேவு விமானம் வன்னி மண்ணை வேவு எடுக்கிறது.இதில் வாகன போக்குவரத்து பாதைகள் ஆள் நடமாட்டங்கள் போன்றவற்றை வைத்து சில இடங்களை இனம்கண்டு தரைவழி தகவல் உடாக விடுதலை புலிகளின் இடங்களை உறுதிபடுத்துகின்றார்கள்.இது ஒருபுறம் இருக்க சிங்கள அரசிடமிருந்து நியாயமான தீர்வு கிடைக்காது என்பதையும் போரையே அது மீண்டும் முன்னெடுக்கும் என்பதையும் தெரிந்திருந்த விடுதலைபுலிகளின் தலைமை வரப்போகும் போரை எதிர்கொள்ளுவதர்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டு இருந்தார்கள்.
இதற்கான தயார் படுத்தல்கள் வன்னியில் பரவலாக நடைபெற்றது.மக்கள் படை உள்ளக பாதுகாப்பு படை எல்லை படை என மக்கள் கட்டுமானங்கள் கொண்டுவர பட்டு அடையாள அட்டைகள் வழங்கபட்டு பயிற்சி நடைபெற்றது.இதில் ஒரு பகுதியாக உதியம் வழங்கபட்டு பணிசெய்யும் விடுதலைபுலிகளின் தேசிய இராணுவ படையொன்றும் உருவாக்க பட்டிருந்தது.இந்த படையணியில் இளைன்சர்கள் யுவதிகள் பலர் முன்வந்து இணைந்தார்கள்.முதல் கட்டமாக யாழ் குடாநாட்டில் இருந்து ஒருசில இளைன்சர்கள் பயிற்சிக்காக பளைக்கு எடுக்கபட்டு சூட்டு பயிற்சிகள் வழங்கபட்டு யாழ்ப்பாணத்திற்கு சென்று இளன்சர்களை திரட்டும் பணியில் ஈடுபடுத்த படுகிறார்கள்.அதாவது குடாநாட்டை எதிரிகளிடம் இருந்து மீட்டு எடுக்க அங்குள்ள இளைன்சர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்பதற்கு ஒருசில இடங்களிலிருந்து முச்சக்க வண்டி சாரதிகள், பல்கலை கழக மாணவர்கள் ,பாடசாலை மாணவர்கள் என விடுதலை உணர்வுள்ளவர்களை கட்டம் கட்டமாக பளைக்கு அழைத்து சில முக்கியத்தவர்கள் கதைத்து பயிற்சி கொடுக்கபடுகிறது.பளையில் உள்ள எரிமலை என்னும் பயிற்சி தளத்தில் ஜி (12 ) என்னும் பயிற்சி தளத்திலும் சுட்டுபயிர்சிஅவசர அவசரமாக மேற்கொள்ள படுகிறது.
யாழ்ப்பான மக்கள் மத்தியிலும் வன்னி மக்கள் மத்தியிலும் கதை பரவலாக அடிபடுகிறது.விடுதலை புலிகள் வழிந்த தாக்குதலை செய்யபோகிறார்கள்.முதல் யாழ்ப்பாணத்தை தான் பிடிப்பார்கள் யாழ்ப்பாணம் பிடித்தால் சிறிலங்கா அரசு விடுதலை புலிகளின் கால்களில் விழுந்துவிடும் என்றெல்லாம் பல கதைகள் மக்கள் மத்தியில் உருவாகிறது.இவற்றை எல்லாம் இராணுவ புலனாய்வாளர்கள் அறிகிறார்கள் .அன்று யாழ் மாவட்ட இராணுவ பொறுப்பாளராக இருந்த ஜி எ சந்திரசிறி இத்தகவலை அறிந்து தனது தலைமைக்கு தெரியபடுத்தி இதனுடாக கிளாலி தொடக்கம் நாவுருகொவில் வரையான படை முன்னணி அரண்கள் பலபடுத்துகிரார்கள்.பாகிஸ்தான் நாட்டு இராணுவ அதிகாரிகள் இந்த முன்னணி காவல் அரண்களை பார்த்து ஆலோசனைகள் வழங்கியிருந்தார்கள்.என்பது குறிப்பிட தக்கது.யாழ்ப்பான முன்னணி காவலரண்களில் உள்ள படையினர் உசார் படுத்தபட்டு இரகசியமான சில படை செயற்பாடுகளில் சிறிலங்கா படையினர் ஈடுபடுகிறார்கள்.ஏராளமான எறிகணைகள் யாழ் குடாநாட்டில் குவிக்க படுகிறது.மேலதிக படையினர் குவிக்க படுகிறார்கள்.
கவச வாகனங்கள் களமுனையில் நகர்த்த படுகின்றன இவ்வாறு படை நகர்த்தல்களை சிறிலங்கா படையினர் இரகசியமாக மேற்கொள்கிறார்கள்.இவ்வாறு இருக்கையில் (2006 ) ஆண்டு ( 08 ) ம் மாதம் (11 ) திகதி மாலை (5 ) மணியளவில் ஏ ( 9 ) வீதி முகமாலை பாதையில் விடுதலை புலிகள் வழிந்த தாக்குதலை தொடுக்கிறார்கள்.விடுதலை புலிகளின் வலிந்த தாக்குதல் உடாக வன்னி களமுனை போர்கால முனையாக மாறுகிறது,இத்தாக்குதலில் விடுதலை புலிகள் சிறிலங்கா படையினரின் கவரன்களை தகர்த்து அழித்து சென்றாலும் இரண்டாம் நிலையான காவலரண்களை தாண்டி செல்ல முடியவில்லை.சிறிலங்கா படையினர் பின்வாங்கி தமது நிலைகளை இலக்குவைத்து கடுமையாக தாக்குகிறார்கள்.இதனால் பிடித்த நிலைகளில் நிலைகொள்ள முடியாத அளவிற்கு கடும் எதிர்பை விடுதலை புலிகள் எதிர்கொள்ளுகிறார்கள்.இதனால் அன்றைய தாக்குதல்கள் இடைநிறுத்த படுகிறது.இதனால் வன்னிக்கும் யாழ் குடவிற்குமான தரைவழி பதைய சிறிலங்கா மூடுகிறது வன்னியிலிருந்து யாழ்பாணம் சென்றவர்கள் யாழ்ப்பாணத்திலும் யாழில் இருந்து வன்னி சென்றவர்கள் வன்னியிலும் முடக்க படுகிறார்கள்.உறவுகளை பிரிந்து வாழும் மக்கள் வன்னியில் இருந்து வெளியேற முடியாத சுழல் காணப்படுகிறது.இந்த நிலையில் மன்னார் உயிலங்குளம் சோதனை சாவடி வவுனியா ஓமந்தை சோதனை சாவடி உடகவும் சென்ற அதே வேளை ஒருசில இளைன்சர்கள் காட்டு வழியாக மன்னார் சென்று படையினரின் கட்டுப்பாட்டுக்கும் கடல்வழியாக படகில் யாழ்ப்பாணம் சென்றடைகிறார்கள்.இவ்வாறு இருக்கையில் மன்னார் உயிலங்குளம் சோதனை நிலையத்தில் இறுக்கமான கட்டுபாடுகளை படையினர் மேற்கொள்கிறார்கள்.ஓமந்தை சோதனை நிலையத்தில் சிறிலங்கா படையினர் பொருட்களுக்கு கட்டுபட்டு தடை விதிக்கிறார்கள்.உயிலங்குளம் பாதை கண்காணிப்பில் இருந்து சர்வதேச செஞ்சிலுவை குழு வெளியேறுகிறது.இதன்போது விடுதலை புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் துப்பாக்கி முனையில் தொடங்கிய தாக்குதல் கடுமையான தாக்குதலாக மாறுகிறது
மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? –
சுழியோடி
-16
வேவு விமானம் முலம் எடுக்கபட்ட தகவல்களினதும் தரைவழியாக எடுக்கபட்ட தரவுகளின் அடிப்படையிலும் இந்த தாக்குதல்களை நடத்திய சிறிலங்கா வான் படையினர்.பின்பு அதனை அண்மித்த காட்டு பகுதிகள் மீதும் குறிப்பாக விடுதலை புலிகளின் முகாம்கள்.பயிற்ச்சி முகாம்களை இனம்கட்டுபிடித்து தாக்குதல்களை நடத்துகின்றார்கள்.
இதன்போது விடுதலை புலிகளின் வான்படைத்தளம் பயிற்ச்சி தளங்கள் முதன்மையானவர்கள் கூடும் இடங்கள்.பெரும் முகாம்கள் வெடிபொருள் களஞ்சியங்கள்
ஆயுத வெடிமருந்து உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவை தாக்குதலுக்கு இலக்ககுகின்றன.இத்தாக்குதல்கள் வெற்றிபெறுவதற்கான காரணங்கள் வேவு விமானத்தின் வேவு நடவடிக்கை மட்டுமல்ல விண்வெளி உடாக பெறப்பட்ட தகவல்களும்தான் என்பது இங்கு முக்கியமானது.கிழக்கு மாகாணத்தை முழுமையாக ஆக்கிரமித்திருந்த சிறிலங்கா அடுத்து வன்னி மீது இலக்கு வைத்தது.அதுக்கு முன்னாதாக மன்னார் மாவட்டத்தை கைபற்ற திட்டமிட்டு மன்னார் மாவட்டத்தின் தென்பகுதியில் சிறிலங்கா படையினர் கடல்வழியாக தரையிறக்கம் ஒன்றை செய்து மன்னார் மாவட்டத்துக்கான தாக்குதலை ஆரம்பித்து இருந்தார்கள்.
இதன்போது குறிபிட்ட நாட்களுக்குள் மன்னாரின் முசாலி பிரதேசம் சிறிலங்கா படையினர் வசம் விழுகிறது.இதில் இருந்த விடுதலை புலிகள் மன்னாரின் வடக்கு பகுதி நோக்கி நகர்கிறார்கள்.சிறிலங்காவின் தென்பகுதிமீது விடுதலைப்புலிகள் தாக்குதல்கள் நடத்துவதுக்கு இந்த முசாலி பிரதேசம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.வன்னியில் இருந்து வெடிபொருட்கள் புத்தளம் உடாக தென்பகுதிக்கும் கடத்தும் பாதையாக முசலி பிரதேசம் காணப்பட்டது.இதனை கைவிட்ட விடுதலை புலிகள் பின்னர் ஏனைய வழிகளுடாக விடுதலைப்புலிகள் தங்கள் தொடர்புகளை மேற்கொள்கிறார்கள்.குறிப்பாக வில்பத்து சரனாளையம் உதான பாதை பயன்படுத்த பட்டது.அன்று வில்பத்து சரணாலயத்தின் வடக்கு பகுதியில் விடுதலை புலிகள் தளம் ஒன்றை அமைத்திருந்தார்கள்.
நிலைமை இவ்வாறிருக்க களத்தில் போர் நிலைமைகள் வலுவடைகின்றன.அங்கங்கே களமுனைகள் புதிது புதிதாக திறக்கபடுகின்றன.மன்னார் பகுதியில் விடுதலை புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் தாக்குதல்கள் நடந்தேறுகின்றன.இதே வேளை மணலாற்று பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் அங்குள்ள முன்னணி விடுதலைபுலிகளின் களமுனைகளுடாக மோதல்களை தொடங்குகிறார்கள்.இதனால் தாக்குதல்கள் பல பகுதிகளிலும் வலுப்பெறுகின்றன.
இதேவேளை சிறிலங்கா படையினரின் கட்டுபாட்டில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுகொண்டிருந்த போராளிகளின் சிறு சிறு அணிகள் படையினரின் கவலரங்கள் மீது கைக்குண்டு தாக்குதல்கள் துப்பாக்கி சுடு போன்றவற்றை நடத்துகிறார்கள்.இவை தொடர்ச்சியாக வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நடந்தேரிகொண்டு இருந்தன.வன்னி எங்கும் போர்கலமுனை திறக்க பட்டத்தை தொடர்ந்து விடுதலை புலிகள் தமது ஆளணி பலத்தினை பலபடுத்துகிறார்கள்.அரசியல் போராளிகள் வீதிகளுக்கு இறங்கி மக்களிடம் போராட்ட வலுவுக்கான ஆதரவினை திரட்டுகிறாகள்.தளபதிகள் பொறுப்பாளர்கள் என இதில் எல்லோரும் ஈடுபடுகிறார்கள்.இதில் குறிப்பிட்டு குரவேண்டிய விடையம் என்னவெனில் போராளிகளை இணைப்பதுக்காக தளபதி பால்ராஜ் அவர்கள் மக்களிடம் நீரடியாக இறங்கியிருந்தார்.
அவர் போராட்டத்தில் இருந்து விலகியிருந்த முன்னாள் போராளிகளையும் அணிதிரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.இதில் குடும்பமாகிவிட்ட முன்னாள் போராளிகளுக்கு அவர்களது குடும்பத்தினரை கருத்தில் கொண்டு கொடுப்பனவு கொடுக்கபடுகிறது.அதாவது அவர்களுக்கு மாதாந்த உதீயம் வழங்கபட்டது.பால்ராஜ் அன்னை போராளிகள் இணைப்பில் இறங்கியபின் முன்னாள் போராளிகளின் மனைவிமாரே தங்கள் கணவரை பால்ராஜ் அண்ணையுடன் அனுப்பிவைத்த சம்பவங்களும் நடந்தது.முல்லை மாவட்ட போராளியின் மனைவி ஒருவர் கணவனை பால்ராஜ் அன்னையுடன் அனுப்பிவிட்டு.நீங்கள் பால்ராஜ் அண்ணையுடன் போங்கள் அப்பத்தான் அவர் உங்களை மனலாத்தில் வைத்திருப்பார்.அங்கு நின்றால் வீட்டிற்று வந்துபோவது இலகு அப்போதான் களமுனையையும் வீட்டையும் பாப்பீங்கள்.என்று கூறி அனுப்பிவைத்தார்.
அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் போராளிகள் தளபதி தீபன் அவர்களின் கிழும் மன்னார் மாவட்ட போராளிகள் தளபதி பானு அவர்களின் கிழும் அணிதிரல்கிறார்கள்.இவ்வாறு முன்னாள் போராளிகள் அணிகள் ஒழுங்குபடுத்த படுகின்றன.இவர்கள் ஏற்கனவே துப்பாக்கி பிடித்து பயிற்ச்சி எடுத்தவர்கள்.என்பதால் அடிப்படை பயிற்ச்சி எடுக்க தேவையில்லை.சுட்டுபயிர்சியுடன் இவர்கள் படையணியாக மாறுகிறார்கள்.
இது ஒருபுறம் நடந்தேறுகிறது. மறுபுறத்தில் முன்னாள் அரசியல் பொறுப்பாளர்கள் மக்களிடம் அவசர அழைப்பினை விடுக்கின்றார்.(2006 ) ம் ஆண்டின் இறுதிபகுதி அது வீட்டிற்கு ஒருவர் நாட்டிற்கு என்று அழைப்பு விடுக்கிறார்.விடுதலை புலிகளின் இந்த அறைகுவலினை.அன்று இருந்த விடுதலை புலிகளின் ஊடகங்களான ஈழநாதம் புலிகளின் குரல் தமிழீழ தேசிய தொலைகாட்சி ,விடுதலைப்புலிகள் ஏடு சுகந்திர பறவைகள்,மற்றும் தெருவெளி நாடகங்கள் உடாக முரசறைய படுகின்றன.இதன்போதுதான் அங்கு புரனனுர்ரிலும் மிஞ்சிய மகிமை வன்னியில் நடந்தேறுகிறது.வீட்டிற்று ஒருவர் நாட்டிற்காக இணைகின்றார்கள்.பெற்றோர்களால் பெண்பிள்ளைகள் ஆண்பிள்ளைகள் இணைக்கபட்டு கொண்டிருக்கிறார்கள்.இந்த செய்திகளை தாங்கியபடி ஈழநாதத்தின் உடகங்கள் செய்திகளை முதன்மையாக வெளியிட்டன.ஆனாலும் ஒருசில பெற்றோர் பிள்ளைகளை இணைப்பதற்கும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தமது பிள்ளைகளை போராட்டத்தில் இணைக்காமல் பின்னடித்தார்கள் தமது பிள்ளைகளுக்கு திருமண வயது வரும் முன்னரே மனம் முடித்து வைத்தார்கள்.திருமண வயசு வராதவர்களுக்கு திருமண பதிவு செய்வதை பதிவாளர்கள் மறுத்தார்கள்.இதனால் பதிவில்லாமல் சிலர் கலாச்சார திருமணங்களை செய்துவைத்து தமது பிள்ளைகள் போராட்டத்திற்கு செல்லாமல் தடுத்தார்கள்.தாலிக்கொடி செய்து கட்டுவதற்கு கூட அவகாசம் இல்லாமல் இருந்த மஞ்சள் கயிற்றில் அவரச அவசரமாக தாலி கட்டி வைத்தவர்களும் இருந்தார்கள் என்பதுதான் உண்மை.இந்த திருமணங்கள் அப்போது மக்களால் போர்க் கலியாணம் என நகைச்சுவையாக குறிப்பிட பட்டது.பலரும் அறிந்தது.இதே வேளை இணைந்த போராளிகள் அடிப்படை பயிற்சிகளை முடித்துக்கொண்டு புதிய புதிய படையணிகளாக களமிறங்குகிறார்கள்.புதிய போராளிகளுக்காக களமுனைகள் திறக்க படுகின்றன.இவ்வாறு புதிய போராளிகள் மன்னார் களமுனையாக இருந்தாலும் முகமாலை களமுனையாக இருந்தாலும் மணலாற்று களமுனையாக இருந்தாலும் வவுனியா களமுனையாக இருந்தாலும் தமது வீரங்களை எதிரிக்கு காட்டுகின்றார்கள்.முதன்மை தளபதிகளின் வழிநடத்தலில் களமுனைகளில் சிறிலங்கா படையினருக்கு பாரிய இழப்புக்கள் இப்புதிய போராளிகளால் நிகழ்கின்றன.
இவ்வாறு போராளிகள் களமுனை அனுபவங்களை பெற்று அடுத்த கட்டத்திற்காக தங்களை தயார் படுத்துகின்றார்கள்.அதாவது அதிகாரி பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.இவ்வாறு அதிகாரி பயிற்ச்சி எடுக்கும் இடமாக முத்தையன் கட்டு பயிற்ச்சி தளங்கள் அமைகின்றன.அதாவது அதிகாரி என்பது ஒரு பதினைத்து பேரைக்கொண்ட அணியினை வழிநடத்தும் திறமை.இதற்க்கான பயிற்சிகள் நடைபெற்று கொண்டிருந்தன.இவ்வாறுதான் புதிய போராளிகளின் பதவி நிலைகள் உயர்கின்றன.இவ்வாறு அணிகள் பயிற்ச்சியில் ஈடுபட்டுகொண்டிருக்க. வேறு சில அணிகள் கிளைமோர் தாக்குதல் கட்டட தகர்ப்பு கனகரா வாகன தகர்ப்பு என வெடிமருந்து பயிர்ச்சிகளிலும் சிறப்பு தேர்ச்சி அடையும் நோக்கில் பயிர்ரபடுகின்றார்கள்
மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? –
சுழியோடி
-17
புதிய புதிய போராளிகளின் உள்வாங்களால் விடுதலை புலிகளின் படையணிகளின் சிறந்த தலமையலார்கள் சிறந்த குறி சுட்டாளர்கள் என ஒரு பக்கம் சிற்ப கலைன்சர்கள் சிறந்த கணணி இயக்குனர்கள் .கணக்காளர்கள் என அறிவுத்திறன் சார்ந்த இன்னொரு பக்கமும் வளச்சியடைந்து இருந்தது.மறுபக்கத்தில் கடற்புலிகளின் அணிகளும் புதிய போராளிகளை உள்வாங்கி பெரும் வளர்ச்சி கண்டுகொண்டு இருந்தது.வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கட்டைக்காடு தொடக்கம் பொக்கனை முல்லிவாய்கள் முல்லைத்தீவு அலம்பில் செம்மலை நாயாறு வரையான நீண்ட கரையோர பகுதிகளில் வாழ்ந்த மக்களில் பலர் தங்களது பிள்ளைகளை கடற்புலிகளின் அணியில் இணைத்திருந்தார்கள்.கடலோடு வாழ்ந்து பழகியதால் அவர்களுக்கு கடலில் பயணிப்பதும் நீச்சலடிப்பதும் அத்துபடியாக தெரிந்திருந்ததால் பெற்றோர்கள் இவர்களை விரும்பி கடற்புலிகளின் இணைத்தார்கள்.அத்துடன் கடலில் சிறிலங்கா படையினரின் தாக்குதலில் தமது உறவுகளை இழந்திருந்த பலரும் தமது பிள்ளைகளை இணைக்க முன்வந்தார்கள்.இவர்களில் பலர் கடற்புலிகளின் அணியில் உள்வாங்க பட்டார்கள்.இவ்வாறு உள்வாங்க பட்டவர்கள் தளபதி சூசை அவர்களின் கிழ வளர்க பட்டர்கள்.இதே வேலை புதிய போராளிகளின் பயிற்ச்சிகளின் நிறைவில் பெற்றோர் முன்னிலையில் பிள்ளைகளை காண்பிக்கும் நடவடிக்கை பெரும் நிகழ்வாக நடந்தன.அதாவது அணிவகுப்பு மரியாதைகளுடன் புதிய போராளிகள் தமது பெற்றோர்களை காண்கிறார்கள்.சந்திக்கிறார்கள் ..பயிற்சிகளின் காரணமாக பெற்றோர்களை நீண்ட நாட்களாக காணாத போராளிகளுக்கு பெற்றோர்களை அழைத்து வந்து பிள்ளைகளுக்கு கண்பிக்க பட்டார்கள்.
புதிய போராளிகள் தமது திறைமைகளை தாய் தந்தை உறவுகளுக்கு சொல்லி மகிழ்ந்தனர்.இதனால் பெற்றோர்கள் பூரிப்பு அடைந்தார்கள்.தன பிள்ளை பெரும் திறமைசாலி படை நடத்துபவன் பொறுப்பாளன் கனரக துப்பாக்கி இயக்குபவன் என்று அவர்கள் பெருமிதம் அடைந்து பிள்ளைக்கு பலத்தினை உட்டியது.இவ்வாறுதான் அன்று அனைத்து புதிய போராளிகளுக்கும் பெற்றோர் சந்திப்புக்கள் நடந்தேறின.புதிய போராளிகளின் நிறைவினால் விடுதலைபுலிகளின் பலம் அதிகரித்து சென்றது கடற்புலிகளின் அதிகரிப்பால் புதிய படையணிகள் உருவாக்க படுகின்றன.தாக்குதல் அணிகளை விட கரையோர காவல்படை என புதிய அணி உருப்பெறுகின்றது.நிலைமை இவ்வாறு இருக்கையில் எதிரியின் ஆக்கிரமிப்பில் இருந்த யாழ் குடாநாட்டில் கைக்குண்டு வீச்சும் காவலரண் தகர்ப்பும் அங்குள்ள விடுதலை புலிகளால் நடத்த படுகின்றன.இதில் விடுதலை புலிகளின் ஆதரவளர்களும் பங்கேற்று எதிரிக்கு அழிவுகளை ஏற்படுத்தி கொண்டிருந்தார்கள்.இவை யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா படையினருக்கு ஆத்திரம் உட்டும் செயாலகல மேற்கொள்ள படுகின்றன.அத்துடம் எதிரி யாழ்குடாவை விட்டு களமுனைக்கு நகர்த்த முடியாத நிலையினை ஏற்படுத்துவதற்காகவும் இவ்வாறன தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டன.இவற்றை விடுதலை புலிகளின் புலனாய்வலர்களான பொது மக்களும் ( இவ்வாறான தாக்குதலுக்கு என பயிர்ரபட்டிருந்தவர்கள்) இணைந்தே மேற்கொண்டார்கள் என்பது இங்கு குறிப்பிட தக்கது.இந்த நிலையில்தான் யாழ்குடா நாட்டில் மேலும் சில தாக்குதல்களை நடத்துவத்தற்கு என கரும்புலிகளை உள்ளடக்கிய புலனாய்வு துறை அணி ஒன்று வன்னியில் இருந்து கடல் வழியாக கொண்டு செல்லப்பட்டு தரையிரக்குகிறார்கள்.யாழ்ப்பாணத்தில் உடுருவி சிறலங்கா படையினருக்கு பின்தள இழப்புக்களை ஏற்படுத்தும் முகமாகவும் சிறிலங்கா படையினரின் கனரக நீண்ட துர தாக்குதல்களுக்கு பயன்படும் பிரங்கி நிலைகளை கண்டறிந்து avarrinai தகர்த்தெறியும் முகமாகவும் அதாவது சிறிலங்கா படையினரின் பின்தளங்களில் ஆட்டிலறி மற்றும் மல்ரிபெரல் எறிகணைகளை இயங்க விடாமல் செய்வதன் முலம் படையினருக்கு வழங்கல் பகுதியினை தடைசெய்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக தரைவழியாகவும் கடல்வழியாகவும் யாழ் குடாவிற்கு அனுப்பிவைக்க படுகிறார்கள்.யாழ் குடாவிற்கான கடல்வழி பதியாக இருவழி பாதைகள் இருந்தன.ஒன்று வடமராட்சி கிழக்கில் இருந்து கடல்வழியாக சென்று கற்கோவளம் பகுதியில் தரை இறங்குதல்.இதற்காக பயிற்றபட்ட அணிகள் செல்வார்கள்.அதாவது கடலில் ஒரு மைல் துரத்திற்கு மேலாக நீந்த kudiyavarkal தான் இந்த வழியினுடாக செல்வார்கள்.வடமராட்சிகிழக்கு கடல் மற்றும்
நாகர்கோவில் கடற் பகுதிகளில் சிறிய படகுகள் விரைந்து சென்று கற் கோவளத்தை அண்டிய கடற்பகுதியில் இவர்களை இறக்கி விடுவார்கள் இவர்கள் கடலில் நீந்தியவாறு படையினரின் நடமாட்டங்களை அவதானித்து கரையேற வேண்டும்.மற்றையது யாழ்ப்பாணத்தில் அடுத்த பகுதியாக உள்ள கிளாலி கடல் பகுதியாக உள்ள குருநகர் பாசையூர் பகுதிகளில் சென்று தரை இறங்குதல் அங்கு வரும் கடற்தொழிலாளர்கள் சிலர் இதற்க்கு ஒத்துழைப்பு வழங்கினாலேயே இதற்கு இலகுவாக இருக்கும்.என்பதால் அவர்களுடனான தொடர்புகள் பேணப்பட்டு கடல் வழியிலான பயணம் இடம்பெறும் கடலில் இடையில் வரும் அவர்களிடம் போராளிகள் ஒப்படைக்கபட்டு அவர்கள் தரையில் இறக்கிவிட்ட நிகழ்வுகளும் நடந்தேறின.இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு சென்று தமிழ் மக்கள் நடமாட தடைவிதிக்க பட்டுள்ள படையினரின் உயர் பாதுகாப்பு வளையத்தினுள் உள்ள இடங்களுக்கு எல்லாம் சென்று அங்கு தகவல்களை திரட்டியது மட்டுமல்ல படையினரின் உணவினையே உண்டு படை நிலைகளுக்குள்ளே பதுங்கி வாழ்ந்த மாபெரும் வரலாற்று வீரன்தான் கரும்புலி லேப் கேணல் புட்டோ .ஆனாலும் கரும்புலி புட்டோ உண்பதற்கு உணவின்றியும் முகாம்களுக்குள் நடமாடி இலக்குகளை சரியாக இனம்கண்டு சொல்லியிருக்கிறான்.இதே வேலை யாழ்குடா சென்றிருந்த போராளிகளை மக்கள் பராமரிக்கிறார்கள் அவ்வாறன மக்கள் அன்றைய நாளில் இருந்தார்கள்.என்றால் அது பெருமிதம்தான்.ஏனென்றால் கண்ட கண்ட இடங்களிலெல்லாம் மக்கள் கைய்துசெய்ய பட்டார்கள் .அவர்களில் விடுதலை புலி ஆதரவாளர்களும் இருந்தார்கள்.ஆவார்கள் உடக மீளும் பல ஆதரவாளர்களும் கைதாகிறார்கள்.அன்று யாழ்ப்பாணத்தில் வீடுகளில் நின்ற புலிகளை எவ்வாறு என்றாலும் கையது செய்துவிட படையினர் முற்படுகின்ற வேலை தன்னைதானே சுட்டும் விடுதலை புலிகளின் கொள்கை மரபுக்கு அமைய நஞ்சினை கடித்தும் வீரச்சாவு அடையும் நிகழ்வுகளும் நடந்தேறின.இவ்வாறுதான் லெப் கேணல் புட்டோ வீடு ஒன்றில் தங்கியிருந்த வேளை அந்த வீட்டை சிறிலங்கா படையினர் சுற்றிவளைத்து முற்றுகை இட்டனர் படையினரின் முருகையா உடைக்க முடியாது என்பதை அந்த கரும்புலி போராளி உணர்ந்து கொண்டிருந்தான் தான் உயிருடன் பிடிபட்டால் யாழ் குடாவில் செயற்படும் போராளிகள் பலருக்கு ஆபத்து நேரும் என்பதை பூட்டோ அறிந்திருந்தான் .எனவே தனது உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டினை வெடிக்கவைத்து தன்னைத்தானே அழித்து விடுதலைக்கு வித்தானான் .அந்த கரும்புலி இவ்வாறன தெய்வ பிறவிகள்தான் அன்று யாழ்ப்பாணத்தில் நின்ற கரும்புலி அணிகள் பூட்டோவின் இழப்பினை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் கரும்புலி அணிகளின் வேவு நடவடிக்கை சற்று மந்தமடைந்தது.இதனால் நகர் கோவில் கண்டால் பகுதிகள் உடாக விடுதலைபுலிகளின் மேலும் சில வேவு அணிகள் சிறிலங்கா படையின் கட்டுபாட்டுக்குள் நுளைகின்றார்கள்.இதில் தளபதி தீபன் அவர்களின் வேவு அணிகள் சிறப்புற அவர்களது நடவடிக்கையில் ஈடுபடுகிறது.இந்த நிலையில்தான் லெப் கேணல் தியகாராயண் தலைமையில் ஓர் அணி அதாவது புலனாய்வுத்துறை அணி அங்கு களமிறங்கு கிறார்கள்
மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? –
சுழியோடி
-18
எழில் சற்று தொய்வடைந்திருந்த தாக்குதல்கள் தியாகராஜனின் வருகைக்கு பின்னர் மீண்டும் புத்துயிர் பெற தொடங்கின மீண்டும் சிறிலங்கா படையினரின் முகாம்கள் ஊர்திகள் ரோந்து அணிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன.நான்தொரும் படையினர் மீது அங்கங்கு தாக்குதல் இங்கு தாக்குதல் என வெளிவந்த செய்திகளுக்கு பின்னால் தியகரயனின் கைவரிசை இருந்தது.அதிகரித்த இந்த தாக்குதல்களால் திக்குமுக்காடிய சிறிலங்கா படையினர் தங்களை பாதுகாக்க ( e,p d,p ) உட்பட தமது துணை இராணுவ குழுக்களை களத்தில் இறக்கினார்கள்.சிறிலங்கா துணை இராணுவ ஒட்டு குழுக்கள் விடுதலை புலிகளிக்கு ஆதரவாக செயல்படுபவர்களையும் விடுதலை புலிகளுடன் தொடர்புடையவர்கள் என கருதுபவர்களையும் படுகொலை செய்யவும் கடத்தவும் கையது செய்யவும் அச்சுறுத்த தொடங்கினார்கள்,நாளும் படுகொலை கடத்தல்கள் என்னும் அளவிற்கு இது மிகவும் மோசமான கட்டத்தை அடைந்தது.குடும்பமாகவும் பலர் இந்த படுகொலைக்கு பலியானார்கள்.ஒட்டுகுழுக்களின் இந்தனடவடிக்கையால் மக்கள் மத்தியில் ஒரு அச்சம் ஏற்பட தொடங்கியது.இராணுவ நகர்வுகள் தொடர்பாக மக்கள் விடுதலைபுலிகளின் புலனாய்வலர்களுக்கு வழங்கிய தகவல்களும் இதனால் குறைவடைய தொடங்கின.இதனால் புலனாய்வு போராளிகள் களத்தில் இரங்கி தகவல்களை சேகரிக்கவும்.
நடவடிக்கையில் ஈடுபடவேண்டிய தேவை எழுந்தது.வேவு நடவடிக்கைகளை மக்களோடு மக்களாக இணைந்திருந்தே மேற்கொள்ளவேண்டிய நிலையில் படையினர் ஓட்டுகுளுவினரினால் அடையலாம் காணப்பட்டு போராளிகள் இழப்பை சந்திக்க தொடங்கினார்கள்.
மேயர் புவியரசன் நெல்லியடி கொறவத்தை என்னும் இடத்தில் வைத்து சிறிலங்கா படையினரால் சுட்டு கொல்லபடுகிறார் . மேஜர் கவியரசன் கப்டன் வினோத் ஆகிய போராளிகளும் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களில் வீரச்சாவு அடைகின்றார்கள் இவ்வாறு போராளிகளின் இழப்புக்களால் யாழில் நடவடிக்கைகள் மீண்டும் மந்த நிலைய அடைகிறது.இந்த நிலையில் தாக்குதல் நடவடிக்கைகளை விட வேவு தரவுகளே அப்போதைய நிலையில் அவசியமாக கருதப்பட்டதால் தாக்குதல் நடவடிக்கைகளை தியாகராஜன் கைவிட்டு என்சியிருந்த தனது ஒருசில போராளிகளுடன் வேவு நடவடிக்கையில் இறங்குகின்றார்.
மக்களோடு மக்களாக வாழ்ந்து வேவு தரவுகளை சேகரிக்கிறார்.அத்துடன் சிறிலங்கா படை அதிகாரிகள் தங்கியிருக்கும் முகாம்கள் கனரக ஆயுத வெடிபொருள் களஞ்சியம் படைமுகாம் ஆட்டிலறி தளங்கள் என்பவற்றை தனது வேவு நடவடிக்கைகள் முலம் அடையலாம் கண்டு போருப்பனவர்களுக்கு தகவல்களை வழங்குகின்றார்.யால்குடவிற்கு மேலும் அதிகளவான வேவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் அடுத்த கட்டமாக விடுதலை புலிகளின் கடற்புலிகளின் வேவு படையணிகள் தரையிறக்க படுகின்றன.தீவு பகுதிகள் உடாகவும் மற்றும் பருத்தித்துறை பகுதி உடாகவும் யாழ்ப்பாணத்தின் கடல் வழியாக தரையிறங்கிய அவர்கள் ஆங்கங்கே நடவடிக்கைகளில் ஈடுபட்கின்றார்கள்.இதன்போது புலனாய்வு துறை அணியின் போராளி ஒருவர் சிறிலங்கா படையினருக்கு எதிரான நடவடிக்கைக்காக தன்னை தயார்படுத்தி செல்லும் வேளை படையினரின் சுற்றிவளைப்புக்குள் அகபட்டு சயனேட் அருந்துவதற்கு கூட அவகாசம் இல்லாத அளவிற்கு உயிருடன் பிடிபடுகிறார்.
கடுமையான சித்திரவதை விசாரணைகளால் இவரிடம் இருந்து சில வெடிபொருட்கள் வைத்திருக்கும் இடங்களையும் சில ஆதரவலர்களையும் படையினர் இனம்கண்டு கொள்கிறார்கள்.இது யாழ் குடாவிற்கான நடவடிக்கையில் ஒரு இக்கட்டான நிலைய ஏற்படுத்துகிறது.இதனால் அடுத்தகட்ட முடிவொன்றை விடுதலை புலிகள் அவசரமாக எடுகின்றார்கள்.அதாவது படையினரிடம் எதிர்பாராமல் அகபட்டு கொண்டால் விடுதலைபுலிகளின் கொள்கைக்கு அமைய சயனேட் அருந்துவதற்கு பதிலாக குண்டை வெடிக்க வைத்து வீரச்சாவை தழுவி கொள்ளுவதும் இதன்முலம் தானும் இழப்பதுடன் எதிரிக்கும் இழப்புக்களை ஏற்படுத்த முடியும்.குப்பிய கடித்து வீரச்சாவை தழுவினாலும் இதனால் மேலும் சில நெருக்கடிகள் இருந்தன.குப்பிய கடித்து வீரச்சாவை தழுவும் போராளிகளிடம் இருக்கும் சில தடையங்கள் சில தரவுகளை வைத்துகொண்டு ஆதரவலர்களையும் இனம்கண்டு கொள்கின்ற,விடுதலைபுலிகளின் அடுத்தகட்ட செயற்பாடு குறித்து ஆராய்கின்ற நடவடிக்கையில் சிறிலங்கா பரையினர் ஈடுபட்ட நிகழ்வுகளும் நடந்தேறின.
இதனால் யாழ்குடாவில் நடவடிக்கைகளுக்கு செல்பவர்களுக்கென உடலோடு பொருத்தப்படும் யக்கட் ( வெடிகுண்டு )புதிதாக வடிவமைக்க படுகின்றது.அத்துடன் யாழ்ப்பாணத்தில் நிற்கும் அனைத்து போராளிகளுக்கும் இது தொடர்பாக புலனாய்வுத்துறையின் தலைமை பிடத்தால் கட்டளையும் வழங்க படுகிறது.எக்காரணம் கொண்டும் எதிரியின் கையில் உயிருடன் பிடிபட குடாது.உங்களை அளித்துகொள்ளவேண்டிய அவசியம் எழுந்தால் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி இரண்டு எதிரியையவது அளிக்கவேண்டும்.என்று அவர்களுக்கு கட்டளை வழங்க படுகிறது.இதனையடுத்து யாழ்ப்பாணத்தில் நடவடிக்கையில் நின்ற புதிதாக செல்லும் அனைத்து போராளிகளுக்கும் யக்கட் வழங்க படுகின்றது.இவ்வாறு இறுக்கமான காலகட்டத்தில் இறுக்கமான நிலையில்தான் புலனாய்வு போராளிகளின் செயல்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கையில் கரவெட்டி அரசடி பகுதியில் தியாகரஜனை அடையலாம் கண்டுகொண்ட சிறிலங்கா படையுடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்குழுவினர் அவர் மீது துப்பாக்கி சுடு நடத்துகின்றார்கள்.இதன்போது லெப் கேணல் தியகரஜ்கன் வீரச்சாவை தலுவிகொள்ளுகிறார்.
இதேவேளை போராளிகள் இருக்கும் இடமொன்றை அறிந்துகொண்ட சிறிலங்கா படையினர் மிக இரகசியமாக அப்பகுதிய சுற்றிவளைத்து அவர்களை உயிருடன் கைதுசெய்யும் நடவடிக்கையில் இறங்கினார்கள்.இதன்போது நிலமைய உணர்ந்துகொண்ட போராளிகள் பொறுமையோடு தமது இலக்குக்குள் படையினர் வரும்வரை காத்திருந்து.தங்களிடம் இருந்த குண்டுகளை வெடிக்கவைத்து தங்களை தாங்களே அளித்ததுடன் கையது செய்யவந்த படையினர் சிலரையும் உயிரிழக்க வைக்கிறார்கள்.தங்களையும் அளித்து தங்களிடம் இருந்த வெடிபொருட்கள் வேவு தரவுகளையும் அளித்து எதிரிக்கு அழிவை ஏற்படுத்தி இந்த மண்ணிற்கான அற்புதமான தியாகத்தை புரிந்துகொண்டார்கள் அந்த போராளிகள்.இதே வேளை படையினரிடம் அகப்படும் நிலையில் அவர்கள் முன்கட்டியிருந்த யாக்கட் குண்டினை வெடிக்கவைத்து வீரச்சாவு அடையும் சம்பவங்களும் இதனால் படையினர் இழப்புக்களை சந்திக்கும் சம்பவங்களும் அதிகரிக்க தொடங்கின.இவர் சிறிலங்கா படையினர் மத்தியில் அதிர்சியையும் அச்சத்தையும் புதிய பல சிக்கல்களையும் ஏற்படுத்தி இருந்தது.தங்களையும் அளித்து எதிரிக்கும் அழிவை ஏற்படுத்தும் அணிபோன்று யாழ்குடாவில் நிலைகொண்டிருந்த போராளிகள் செயற்பட்டுகொண்டிருன்தது சந்தேகத்தின் பெயரில் ஒருவரை படையினர் கையது செய்வதற்கு அன்சுகின்ர அளவிற்கு நிலமைய கொண்டு சென்றிருந்தது
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்கால் வரை நடந்த கால்கள் ஒரு பகிர்வு-19 – சுழியோடி
அன்றைய பயிற்ச்சி முகாம்களை எடுத்துகொண்டால் (200 ) பேர்கள் பயிற்ச்சி பெறுவதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்டு இருந்தன.காட்டுக்குள் அமைக்கபட்ட முகாமிற்கு கிணறு வசதி கழிப்பிட வசதி பயிற்ச்சி இடைவேளையின் போது பொழுது போக்கு வசதிகளென அனைத்தும் நிறைந்து காணபடுகிறது.அத்துடன் அவர்களுக்கு பயிற்ச்சிக்கு தேவையான சத்தான உணவுகளும் வழங்கபட்டன.அனைத்து கல்வியறிவு பொது அறிவு வகுப்புக்கள் எல்லாம் இந்த முகாம்களில் அடிக்கடி நடைபெறும்.ஒவ்வொரு போராளிக்கும் சுட்டு பயிர்ச்சிகென (30 ) ரவைகள் வழங்கபட்டன.ஆண் பெண் இருபாலருக்கும் ஏற்றவகையில் இது நடைமுறை படுத்தபட்டது.இந்த அடிப்படை பயிற்ச்சி தளங்கள் கேணல் கடாபி அவர்களின் பொறுப்பில் நேரடிய நடைபெற்றன.இவ்வாறன பயிற்ச்சி தளங்களை சிறிலங்காவின் வேவு விமானகள் கண்டறிந்து தகவல்களை கொடுத்தும் இருந்தன.
இந்த புகைப்படங்களை கொண்டு விடுதலை புலிகள் சிறுவர்களுக்கு பயிற்ச்சி கொடுக்கிறார்கள் என சிறிலங்கா பிரச்சாரங்களை மேற்கொண்டதுடன்,அவற்றின் மீது சிறிலங்கா வான் படையினர் வான் தாக்குதலையும் மேற்கொண்டனர்.இந்த தாக்குதல்களால் அச்சமடைந்த புதிய போராளிகள் பயிற்ச்சியில் இருந்து விலகி சென்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.
பயிற்ச்சி தளங்களின் மீது தாக்குதல் நடத்திய அதே வேளை விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகளை கொல்லுவதற்காக ஆழ உடுருவும் படையணிய களத்தில் இறக்கியது சிறிலங்கா.நீண்ட துரம் உடுருவி காத்திருந்து விடுதலை புலிகளின் தளபதிகள் பொறுப்பாளர்களை இலக்குவைத்து தாக்கும் நடவடிக்கைக்காக பெருமளவான ஆளுடுருவும் படையினர் களத்தில் இறக்கபட்டு இருந்தனர்.சிறிலங்காவின் இந்த நடவடிக்கையானது அடுத்தகட்ட தாக்குதலை முன்னெடுப்பதற்கு ஒரு தடைக்கல்லாக்கியது.விடுதலைப்புலிகள் தமது படையணியை இன்னுரு பக்கத்திற்கு திசை திருப்பவேண்டிய நிலைய இது ஏற்படுத்தியது.தளபதிகளின் பாதுகாப்பிற்காக பெருமளவு போராளிகள் ஒதுக்க பட்டனர்.
விடுதலை புலிகளின் பின் தளங்களுக்குள் இந்த ஆழ உடுருவும் படையணியினை உடுருவவிடாமல் தடுப்பதற்கு பெருமளவான போராளிகளை நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது.போராளிகள் நிறுத்தபட்டு பின்தளங்கள் பாதுகாக்க படுகின்றன.அதே வேளைகளில் முதன்மை வீதிகளில் (100 ) மீற்றருக்கு ஒரு காவலரண் அமைக்கபட்டு பொதுமக்களை கொண்ட உள்ளக பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்க பட்டது.அதன் முலம் வீதி பாதுகாப்பு நடைமுறை படுத்த படுகிறது.அதாவது வன்னியில் உள்ள திருமணம் செய்தவர்கள் தொழில் புரிபவர்கள் மக்கள் படைக்கட்டுமானம் மூலம் பயிற்ச்சி கொடுக்கபட்டு ஒரு மாதத்திற்கு ஏழு நாட்கள் என்ற வகையில் கட்டாய பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு பணிக்க படுகின்றார்கள்.இந்த கட்டமைப்பில் ஈடுபட மறுப்பவர்களுக்கு தண்ட பணம் அறவிட பட்டது.
வன்னிய பொறுத்தமட்டில் பெரும்பாலான இடங்கள் காடுகளால் நிறைந்துள்ளது.காடுகளுக்கு உடாகத்தான் பல வீதிகள் செல்கின்றன.இவ்வாறு இந்த வீதியின் பாதுகாப்புக்காகவே இவர்கள் கட்டாயத்தின் பெயரில் அழைக்க படுகிறார்கள்.அனால் புறநகர் வீதிகள் காவல்துறை உறுப்பினர்களை கொண்டு பாதுகாக்க படுகின்றது.ஒரு கிலோமீற்றருக்கு ஒரு காவலரண் அமைக்கபட்டு காலை மலை ரோந்து செய்யபட்டு புறநகர் வீதிகள் பாதுகாக்க படுகின்றன.இவ்வாறு உள்ளக பாதுகாப்பிற்கென ஏராளமான ஆயுதங்கள்,அணிகள் ஒதுக்க படுகின்றன.இதனால் நிர்வாக தேவை அதிகரிக்கிறது.ஆயுத பற்ற குறை நிலவுகின்றது.பழுதடைந்த ஆயுதங்கள் திருத்தி பாவிக்கும் அளவிற்கு நிலைமை ஏற்படுகிறது.உதாரணமாக கூறுவதானால் வீதி பாதுகாப்பில் உள்ள உள்ளக பாதுகாப்பு படையினருக்கு ஆயுதம் போதாமை காணப்படுகிறது.
( 500 ) மீற்றர் துரத்திற்கு ஒரு காவலரண் அமைக்க படுகின்றது.அதில் முன்று நான்கு பேர்கள் காவலில் ஈடுபடுத்த படுகின்றார்கள்.இவர்களில் இருவருக்குதான் ஆயுதம் வளங்கபட்டிருக்கும்.வன்னியில் உள்ள வீதிகளின் நீளத்தை கணக்கெடுத்து பார்த்தால் தெரியும் எத்தனை காவலரண்கள் அமைக்கபட்டு இருக்கும்,அதற்க்கு எத்தனை பேர்கள் தேவைபடுவார்கள் என்பது.விடுதலை புலிகளின் தளபதிகள் நடமாடும் அனைத்து வீதிகளும் இவ்வாறுதான் பாதுகாக்கப்படும்.இதேவேளை பாதுகாப்பு கடமைக்கு ஆட்கள் போதாமை இருக்கையில் பணவசதி படைத்தவர்கள் காவல் கடமைக்கு செல்லாமல் தண்ட பணத்தினை செலுத்தினார்கள்.இதனால் உள்ளக பதுகப்பிர்று ஆளணி பர்ரகுறை மேலும் அதிகரித்தது.இதனால் சில வீதிகள் பாதுகாப்பில் இருந்து நீக்கபடுகின்றன அத்துடன் ஒரு கட்டத்தில் சுற்றி சுற்றி உள்ள பாதுகாப்பு பணிக்காக ஒரு சில பொதுமக்களே போகவேண்டிய நிலைமையும் ஏற்படுகிறது.இதனால் அவர்களிடையே ஒரு கசப்புணர்வு தோன்றியது.
இது பாதுகாப்பில் பலவீனத்தை ஏற்படுத்தியது.இவை அன்று நடந்த உண்மைகள் மக்களின் இவ்வாறன செயற்பட்டிர்ற்கு அன்று சில பொறுப்புகளில் இருந்த பொறுப்பாளர்களும் கரணம் என்பதில் மறுப்பதற்கு இல்லை.வன்னியில் நிலைமை இவ்வாறிருக்க விடுதலை புலிகளின் தென்னிலங்கை மீது தாக்குதல்கள் தொடர்கின்றன.காலிதுறைமுகம் மீதான தாக்குதல் இதில் முக்கியமானவை.(2006 ) ஒக்டோபர் ( 18 ) ம் திகதி அதிகாலை நடந்த தாக்குதலில் ஐந்து படகுகளில் வந்த பதினைந்து வரையான கரும்புலிகள் தாக்குதலில் ஈடுபட்டிருந்ததாக சிறிலங்கா அரசு தெருவித்திருந்த போதிலும்,அவர்கள் தாக்குதலை நடத்திவிட்டு எவ்வாறு போனார்கள் என்பது தெரிவிக்கவில்லை.இதில் கடற்படையினருக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டன.பலம் பொருந்தியதாக கருதப்பட்ட காலி துறைமுகத்தில் நுழைந்து தாக்கிவிட்டு தப்பியும் சென்றது சிறிலங்காவிற்கு பெரும் அவமனத்தையிம் ஏற்படுத்தி இருந்தது.இந்த தாக்குதலால் அதிர்சியடைந்த சிறிலங்கா காலியில் உள்ள தமிழர்களின் வர்த்தக நிலையங்களை தக்கியளித்தது தனது ஆத்திரத்தை தீர்த்துகொண்டது.
அத்துடன் கடற்படையினருக்கு ஏற்பட்ட இழப்பினை ஈடுகட்ட கடற்புலிகளின் மீது தாக்குதல் நடத்தவும் சிறிலங்கா திட்டமிட்டது.அப்போது விடுதலைபுலிகளின் கடற்புலி தளங்கள் வடமராட்ச்சி கிழக்கு பகுதியிலையே அதிகளவில் செயற்பட்டு கொண்டிருந்தன.
மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன? –
சுழியோடி
-20
விடுதலை புலிகளின் கடற்படை தளங்கள் வடமராட்சி கிழக்கு பகுதியிலையே அதிகளவில் செயற்பட்டு கொண்டிருந்தன.வடமராட்சி கிழக்கில் சுண்டிக்குளம் வெற்றிலைக்கேணி ,கட்டைக்காடு கோவில் ,தாளையடி ,போன்ற பகுதிகளில் கடற்புலித்தளங்கள் செயற்பட்டு கொண்டிருந்தன.இந்த பகுதிகள் மீது வேவு விமானங்கள் கண்காணிப்பை மேற்கொண்ட சிறிலங்கா,காலி துறைமுக தாக்குதலின் பின் இத் தளங்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது.அத்துடன் முல்லைத்தீவில் இயங்கிகொண்டிருந்த சாலை கடற்புலிகளின் தளங்கள் மீது தனது தாக்குதலை கடுமையாக நடத்தியிருந்தன.இதன்போது கடற்புலிகளின் கலங்கள் சிலவும் ,களஞ்சியங்கள் மற்றும் படகுகளும் சேதமடைந்தன.வடமராட்சி கிழக்கில் கடற்புலிகளின் எரிபொருள் களஞ்சியம் ஒன்றும் விமான தாக்குதலுக்கு இலக்காகி தீப்பற்றி எரிந்தது.
படையினரின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு மத்தியிலும் கடற்புலிகளின் பலம் பெருகிக்கொண்டுதான் இருந்தது.புதிதாக இணைந்த போராளிகள் சிலர் பயிற்சிகளை நிறைவுசெய்து இருந்தனர்.
அதிகரித்திருந்த பலத்தினை கொண்டு புதிய படையணிகள் உருவாக்க பட்டன.அதில் முக்கியமானது கடற்புலிகளின் ஈருடக படையணி.கடற்புலிகளின் சிறப்பு தளபதி சூசை அவர்களின் மேற்பார்வையில் கடலிலும் தரையிலும் சென்று தாக்க கூடிய வல்லமை படைத்த சகல ஆயுதங்களையும் கையாளத்தக்க வகையில் ஈருடக படையணி உருவாக்கம் பெற்றிருந்தது.இந்த அணியின் பரீச்சித்த களமாகவும்முதல் களமாகவும் மண்டைதீவு அமைந்திருந்தது.(2006 ) ம் ஆண்டின் இறுதி காலப்பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்று இருந்தது.இதன் பின்னர் ( 2007 ) ம் ஆண்டு மே மாதம் (27 ) ம் திகதி மேற்கொள்ளபட்ட நெடுந்தீவு கடற்படை தளம் மீதான தாக்குதல் இவர்களின் முதல் வெற்றிகரமான தாக்குதலாக கொள்ளமுடியும்.
ஆழ கடற்பகுதியில் கடற்படையினருக்கு மிகவும் சாதகமாக இருந்த நெடுந்தீவின் இரு பெரும் கடற்தளங்களில் ஒன்றான தென்பகுதி தளமான குயின்ரக் தளத்தை விடுதலைபுலிகளின் ஈருடக படையணியினர் முற்றாக தாக்கியளித்து இருந்தனர்.ஆதாவது புநகரி கடற்கரை பகுதியை தளமாக கொண்டு சுமார் முப்பது கிலோ மீற்றர் தொலைவிற்கு அப்பால் நெடுந்தீவு கடற்படை தளத்திற்கு சென்று தாக்குதல் நடத்திவிட்டு மீள திரும்பி வருவதென்பது ஆச்சரியத்துக்குரிய விடையம் ,சாதனைக்குரிய விடையமாகவும் இருந்தது.எனினும் அவ்வளவு துரத்திற்கு சென்று தாக்குதலை நடத்தியதுடன்.சுமார் இரண்டு மணிநேர கடும் சமரின் பின்னர் முகாமை தமது முழுமையான கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்து அதனை முழுமையாக அழித்திவிட்டு திரும்பியிருந்தனர்.
இத்தாக்குதலை முறியடிப்பதற்காக காங்கேசன்துறை மற்றும் காரைநகர் கடற்படை தளங்களிருந்து டோரா மற்றும் நீருந்து விசைப்படகுகளில் சிறிலங்கா கடற்படையினர் பெருமளவில் உதவிக்கு வந்தபோதும் கடலில் இவர்கள் மீது மேற்கொள்ளபட்ட வழிமறிப்பு தாக்குதலால்.டோரா ஒன்றும் நீருந்து இரண்டு விசைப்படகுகளும் சேதமடைய தமது இலக்கினை அடையமுடியாமல் கடற்படையினர் திரும்பி சென்றனர்.சுமார் நாற்பது வரையான கடற்படையினர் கொல்லபட்ட இத் தாக்குதலில் விடுதலை புலிகள் தரப்பில் நான்கு போராளிகள் வீரச்சாவை தழுவிக்கொண்டனர்.அத்துடன் பெருமளவு ஆயுத தளபாடங்கள் பெருமளவில் கைப்பற்ற பட்டன.இந்த தாக்குதலின் பின்னர் ஈருடக படையினரின் முக்கிய தாக்குதலாக சிறுத்தீவு தாக்குதலை கொள்ள முடியும்.நெடுந்தீவு கடற்படை தளம் அழிக்கபட்டு சரியாக ஓராண்டில் இத்தாக்குதல் நடத்தபட்டு இருந்தது.யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுத்தீவு யாழ்குடாவில் மக்கள் வசிக்காத தீவுகளில் ஒன்றாக இருக்கின்றது.
எப்போதும் குறிப்பிட்டளவு கடல்நீர் நிற்கும் இத்தீவில் கடல் கண்காணிப்புக்காக சிறிலங்கா படையினர் பலமான முகாம் ஒன்றை அமைத்திருந்தனர்.யாழ்ப்பாணத்துக்கான கடல்வழியான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தளமாக இருந்த இத்தீவினை சுற்றி பலத்த கண்காணிப்பு போடபட்டு இருந்தது.
இத்தீவை சுற்றி முள்கம்பி வேலிகள் அமைக்கபட்டு இருந்ததுடன் ராடர் அவதானிப்புக்களும் காவல் நிலைகளும் அமைக்கபட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டு இருந்தது.அத்துடன் இதற்க்கு மிக அருகாமையில் இருந்த மண்டைதீவில் சிறிலங்கா படையினரின் பாரிய வேலுசுமண தளம் அமைந்திருந்தது.இதிலும் ராடர் தளமும் கடற்கலங்களின் தளமும் அமைந்திருந்தது.யாழ் கடல் நீரேரியின் முழுமையான பாதுகாப்பை இந்த இரு தளங்களும் தான் உறுதிப்படுத்து வந்தன.எனவே சிறுத்தீவு மீது தாக்குதல் நடத்தினால் மண்டைதீவில் இருந்து படையணிகள் உதவிக்கு வருவது மிக இலகுவாக இருந்தது.அத்துடன் யாழ்குடாவில் நிலைகொண்டிருக்கும் படையினரும் எறிகணை தாக்குதல் முலம் நடவடிக்கைய மேற்கொள்ளவும்.உதவிக்கு விரைந்து வரவும் இந்த முகாமிற்கு வசதியும் இருந்தது.இதனால் இம் முகாம் மீது தாக்குதல் என்பது நெடுந்தீவு மீதான தாக்குதலை விடவும் ஆபத்து நிறைந்ததாக கருதப்பட்டது.எனினும் துணிவு .தந்திரம் ,வேகம் ,.என்னும் தலைவரின் தாரக மந்திரத்தின் அடிப்படையில் (2008 ) ம் ஆண்டு மே மாதம் (29 ) ம் திகதி அதிகாலை கடற்படை தளம் மீது தாக்குதல் தொடுக்க பட்டது.நெடுந்தீவு சிறுத்தீவு மீதான தாக்குதலுக்கான திட்டங்களை கடற்புலிகளின் சிறப்பு தளபதி சூசை அவர்களே நேரடியாக நெறிப்படுத்தினார்.
விடுதலை புலிகளின் ஈருடக படையணியின் சிறப்பு கொமாண்டோ அணியினர் அதிவேக தாக்குதல் ஒன்றை தொடுத்து முகாமின் தடைகளை உடைத்து கொண்டு வேகமாக உள்நுளைந்தனர்.சுமார் அரை மணி நேரத்தில் படையினருக்கு இழப்புக்களை ஏற்படுத்தி தளத்தை முழுமையான கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
இதன்போது ( 13 ) சிறிலங்கா கடற்படையினர் கொல்லபட்டனர் பலர் காயங்களுடன் தப்பியோடி இருந்தனர்.சில மணி நேரங்கள் முகாமை கட்டுபாட்டுக்குள் வைத்திருந்ததுடன் அங்கிருந்த பெறுமதி வாய்ந்த ராடர் மற்றும் ஆயுத தளபாடங்களுடன்.முன்று கடற்படையினரின் உடலங்களையும் கைப்பற்றி கொண்டு முகாமை தகர்த்துவிட்டு சிறப்பு அணியினர் தளம் திரும்பினர்.இத்தாக்குதலின் போது விடுதலை புலிகளுக்கு எந்தவித இழப்புக்களும் ஏற்படவில்லை.என்பது இங்கு குறிப்பிட தக்கது.
எனினும் சிறுத்தீவு மீதான தாக்குதலால் ஆத்திரமடைந்த படையினர் தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகள் அங்கிருந்து வெளியேறி யாழ் குடாவிற்கு சென்றிருக்கலாம் என்ற அச்சமும் காரணமாக தமது கட்டுபாட்டு பகுதிகளில் உள்ள குருநகர் பாசையூர் பகுதிகளை இலக்குவைத்து கடும் எறிகணை தாக்குதல்களை நடத்தினார்கள்.இதன்போதும் ஐந்து பொதுமக்கள் கொல்லபட்டும் ( 13 ) பேர் படுகாய பட்டனர்.மண்டைதீவு நெடுந்தீவு சிறுத்தீவு என கடற்புலிகளின் ஈருடக படையணியின் வெற்றிகர தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டு இருந்தன.குறைந்த அளவு போராளிகளுடன் பெரும் வெற்றிகளை தேடித்தரும் தாக்குதல்களாக ஈருடக தாக்குதல்கள் அமைந்திருந்தன.இது கடற்புலிகளின் பலத்தை நீருபிக்கின்றதும் சிறலங்கா கடற்படையினருக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றதுமான தாக்குதல்களாக தொடர்ந்துகொண்டு இருந்தன.இதேவேளை சிறுத்தீவு தாக்குதலுக்கு ஒருசில தினங்களுக்கு முன்பாகத்தான் விடுதலைப்புலிகள் வரலாற்றில் பெரும் இழப்பொன்ரை சந்தித்து இருந்தார்கள்.அது குறித்து அடுத்த வாரம் பார்ப்போம்