மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன?
சுழியோடி
-21
எல்லோராலும் செல்லமாக லீமா என்று அழைக்கப்படும் பால்ராஜ் அண்ணாவின் இழப்பு செய்தி (20-05-2007 )அன்று அலம்பில் பகுதியில் நடந்தேறுகிறது பால்ராஜ் அண்ணாவின் விடுதலை போராட்ட வரலாறு சொல்ல முடியாது, எழுதமுடியாது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது
.தமிழீழ விடுதலையின் முதுகெலும்பாக திகழ்ந்தவர்.தமிழர்களின் வரலாற்றில் முதல் மரபுவழி படையணியாக திகழ்வதுதான் சாள்ஸ் அன்ரனி படையணிவிடுதலை போராட்டத்தின் தொடக்க காலத்தில் போராட்டம் பல்வேறு நெருக்கடி நெருக்குவாராங்களை சந்தித்த போதெல்லாம் அதில் இருந்து விடுபட வழி எடுத்து கொடுத்தவரும் தமிழீழ தேசிய தலைவரின் தோழருமான சாள்ஸ் அன்ரனி அவர்களின் நினைவை தாங்கி தொடங்க பட்டதுதான் சாள்ஸ் அன்ரனி படையணி இந்த படையணியின் வரலாறு தமிழீழ மண் எங்கிலும் உண்டு .சாள்ஸ் அன்ரனி படையணி களத்தில் என்றால் அதற்க்கு ஒரு பெருமை ,காரணம் களம் வெற்றி களமாக மாறும் என்பதுதான்.
( 1983 ) யூலை ( 15 ) நாள் என்னை சுட்டுபோட்டு துப்பாக்கியை எடுத்துகொண்டு போ என்று கட்டளை இட்ட வீரன்தான் லெப்.சீலன் என்று அழைக்கப்படும் சாள்ஸ் அன்ரனி ,அவரது நாமம் தரித்து ( 1-04-1994 ) அன்று உருவாக்கம் பெற்ற படையணியாக சாள்ஸ் அன்ரனி திகழ்கிறது.இந்தியாவின் ( 9 ) பயிற்சி பாசறையில் பயிற்சி பெற்ற பால்ராஜ் அவர்களின் விடுதலை போராட்ட தொடக்க காலமே போர்கலை வல்லவன் பசீலனுடன் தான் ஆரம்பிக்கிறது.முன்னைய வன்னி மாவட்ட தளபதி மேஜர் பசீலனின் வலது கரமாக திகழ்ந்தவர் லீமா அவர்கள்,பசீலனின் கரத்திற்கு வலுச்சேர்க்கும் கரமாக அன்று திகழ்ந்தார்.பசீலனின் தாக்குதல் என்று இருந்தாலும் அல்லது பசீலனின் உணவிலிருந்து என்றாலும் அதில் லீமாவின் பங்கு இருக்கும்.சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் முதல் தளபதியாகவும் விடுதலைபுலிகளின் படைபிரிவின் துனைத்தளபதியகவும் விளங்கியவர் லீமா.களத்தில் தொலைத்தொடர்பு கருவிகளில் லீமாவின் கண்ணீர் என்ற குரல் கேட்டால் போராளிகள் மத்தியில் உத்வேகம் பிறந்துவிடும்.அதேவேளை சிங்கள படைக்கு அது பயப்பீதியை கொடுக்கும்.களமுனைகளில் சண்டைகள் என்றால் லீமாவின் குரல்கள் தொலைத்தொடர்பில் ஓங்கி ஒலிக்கும் .தனது கட்டளைகளால் ஏராளமான எதிரியின் படைமுகாம்களை தகர்த்து படைத் தளபாடங்களை அள்ளிவந்த சாதனைக்கு சொந்தகாரர்.விடுதலை புலிகளின் பலத்தை அதிகரிக்க பெருமளவு வெடிபொருட்கள் ,படைய பொருட்கள் தேவைப்பட்டன.தனிமனிதனாக செயல்பட்ட லீமா அவர்கள் பல்வேறு தாக்குதல்களில் விடுதலைபுலிகளின் ஆயுத பலத்தினை அதிகரிக்க செய்தார்.
துணிவு, தந்திரம் வேகம் ,இம் மூன்றின் உருவம்தான் பாராஜ் அவர்கள். எதிரி களம் திறப்பதற்கு முன்னர் ,எதிரிக்கும் களம் திறப்பதில் வல்லவர் புதிய புதிய திட்டங்கள் போர் நுட்பங்களுடன் போராளிகளை வழிநடத்துவதில் வல்லவர்எங்கள் அண்ணன் லீமா.இப்படிபட்ட லீமதான் அன்று சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதியாக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.களமுனையில் எதிரியுடன் நேரடியாக சண்டையிட்டு உடலெங்கும் பல விழுப்புண்களை வாங்கிகொண்டு களமுனைகளில் வீறுநடை போடுவார் எங்கள் லீமா .விடுதலை புலிகளின் போராட்ட வரலாற்றில் என்றும் நிகழ்ந்திராத சாதனைய நிகழ்த்திய வரலாற்று தாக்குதலாக ஓயாத அலைகள் தாக்குதல்கள் நிகழ்ந்தன.இதில் ஓயாத அலைகள் மூன்றில் இத்தாவில் தரை இறக்கத்திற்காக அனைத்து படையணிகளின் பகுதிகளுடனும் லீமா கடல் மார்க்கமாக இத்தாவில் பகுதியில் தரையிறங்கி (34 ) நாட்கள் தொடர் தாக்குதலினை தொடுக்கிறார்.லீமா எங்களுடன் நிற்கிறார் என்ற உறுதியுடன் போராளிகள் களமுனையில் தாக்குதலை தொடுக்கிறார்கள்.இவ்வாறுதான் தீச்சுவாலை முறியடிப்பு சமர் என்றாலும் அதிலும் லீமா முழுமையாக தனது படையணிகளுடன் களமிறங்கி எதிரிக்கு தகுந்த பாடம் புகட்டினார் அன்று .
இதன்பின்புதான் சமாதனம் என்ற மாயை உருப்பெறுகிறது இதிலும் லீமா தன் உடலினை பொருட்படுத்தாமல் பயிற்ச்சி திட்டங்களில் ஈடுபடுகிறார் ஏன் அவரது உடல்நோயினை சீர்செய்ய பன்னாடு ஒன்றிற்கு லீமா அனுப்ப படுகின்றார்.இதன்போது ஒரு அதிசியம் நிகழ்கின்றது மருத்துவத்தினை முடித்து சிறிலங்காவின் கட்டுநாயக்க விமான நிலையம் வந்து இறங்குகின்றார் லீமா .அப்போது சிறிலங்கா படையின் தளபதிகள் எல்லோரும் பால்ராஜ் அவர்களை ஓர் அதிசியம் போல பார்கிறார்கள்.அப்போது மட்டும்தான் எதிரியால் லீமாவை நேரடியாக பார்க்க முடிந்தது.அந்த அளவிற்கு எதிரிக்கு கலக்கம் கொடுக்கும் வல்லவனாக திகழ்ந்தவர் லீமா அவர்கள்.சிகிச்சை பெற்று திரும்பிய பின் சமாதன காலத்திலும் அவர் சும்மாய் இருக்கவில்லை .தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் கட்டளைக்கு அமைவாக கிழக்கு மாகாணம் செல்கிறார்.அங்கு படையணிகளை பயிற்ச்சியில் ஈடுபடுத்துகிறார் .அடிப்படை பயிற்ச்சி தொடக்கம் மோட்டார் படை அணிவரை லீமாவின் நெறிப்படுத்தலில் நடைபெறுகிறது.இதன்போதுதான் (2004 ) வாகரையில் ஆழிப் பேரலையிலும் லீமா அவர்களும் பாதிக்கபடுகிறார்.எனினும் அதிலிருந்து மீண்டவர் பின்பு வன்னியில் படைகட்டுமானங்களின் மீள் பயிற்ச்சி தொடக்கம் அதிகாரிகளின் பயிற்ச்சி திட்டங்களில் முனைப்புடன் செயற்பட்டு பல மேல்நிலை அதிகாரிகளை உருவாக்குகின்றார்.இங்கு படை அணிகளில் உள்ள லெப் கேணல் நிலையுடைய கட்டளை அதிகாரிகளுக்கு படை தந்திரோபாயங்கள் யுத்திகள் என்பன லீமா அவர்களால் நேரடியாக பயிர்றபடுகின்றது.கனரக ஆயுதம் இயக்குதல் டாங்கி இயக்குதல் ,டாங்கிக்கு எதிர்தாக்குதல் செய்தல் போன்ற கனரக ஆயுதங்களை எல்லாம் அவர் திறம்பட கற்று வைத்துள்ளார்.
என்பது அப்போதுதான் அந்த மேல்நிலை அதிகாரிகள் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு கூட தெரியவருகிறது.லீமா அவர்களால் உருவாக்க பட்ட போர் வீரர்கள் எத்தனையோ பேர்கள் களத்தில் சாதனைகளை படைத்து இருக்கிறார்கள்.பயிற்ச்சி தளங்களில் பயிற்சிகளை வழங்கிக்கொண்டு இருந்தநிலையில்தான் லீமா அவர்களக்கு களமுனை ஒன்றை சீர்படுத்த வேண்டிய உத்தரவு வருகின்றது.அது மன்னார் களமுனை குறுகிய காலத்துக்குள் மன்னார் களமுனையினை சீர்செய்துவிட்டார்.அப்போதுதான் லீமா அவர்களின் உடல்நிலை சற்று மோசமடைகிறது.இதனால் ஓய்விற்காக விடப்படுகிறார்,அனால் அவர் ஒய்வெடுக்கவில்லை போராளிகளுக்கு வகுப்பெடுக்கிறார் அங்கும் லீமா அவர்களின் திறமையான நுட்பங்கள் பயிர்றபடுகின்றது.போர் உச்சமாகிகொண்டிருந்த நிலையில்,தமிழீழ துணைப்படை கட்டுமானத்தினை லீமா அவர்கள் மேற்கொள்கிறார்.விடுதலை போராட்டத்திற்கு ஆட்பலம் சேர்க்கும் பணிகளில் அவர் தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் நேரடியாக களம் இறங்குகின்றார்.கிராமங்களில் வீட்டுடன் நிற்கும் முன்னாள் போராளிகளை ஒன்றுதிரட்டி அமைப்பில் இணையுமாறு கதைக்கிறார்.இதில் போராளிகள் பலர் இணைகிறார்கள்.இணைந்தவர்களின் குடும்ப பராமரிப்பு செலவுகள் தொடர்ச்சியாக லீமா அவர்களினால் கவனிக்க படுகின்றது.வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டுவித்து கொடுக்கிறார் .இவ்வாறு இயலுமான உதவிகளை மேற்கொண்டு போராட்டத்துக்குள் முன்னைய போராளிகளை புதிய வடிவத்தில் இணைக்கும் பணிகளில் மக்களிடம் சென்று நேரடியாக கதைக்கின்றார்.இவ்வாறு இருக்கையில் தான் அன்று அலம்பில் பகுதியில் இவரது சோகமான செய்தி வந்து சேருகின்றது
மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன?
சுழியோடி
-22
லீமா வீரச்சாவாம் என்ற செய்தி போராளிகளாலும் மக்களாலும் ஏற்றுகொள்ள முடியாத உண்மையாகிறது.செய்திய கேள்விபட்டு மக்கள் கண்ணீர் வடித்தார்கள்.ஊடகங்களிலும் இணையதளங்களிலும் இந்த செய்தி பின்னர் வெளியாகி உலகெங்கும் இருந்து அவரது இழப்பின் வேதனையை பகிர்ந்து கொண்டிருந்தனர் தமிழ் மக்கள்.லீமாவின் இழப்பினால் விடுதலை புலிகள் மட்டுமல்ல ஆறாத்துயரில் அன்று வன்னி மக்களும் ஆழ்ந்தார்கள்.எங்கும் சோக கீதங்கள் இசைக்கவிட பட்டன.புலிகளின் குரல் வானொலி சோகத்தை கொட்டியது.வீதிகள் எங்கும் சிகப்பு மஞ்சள் கொடிகள் கட்டபட்டு லீமா அவர்களின் படங்கள் வைக்கபட்டு வணக்க நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகி இருந்தன.விடுதலை புலிகளின் கட்டமைப்பிற்குள் அமைவாக லீமா அவர்களின் வித்துடல் தியாகசீலம் கொண்டுசெல்ல பட்டு அங்கு உடல் துய்மையக்கபட்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டு தமிழீழ தேசிய தலைவரின் பார்வைக்காக வித்துடல் செல்கிறது.
அங்கு விடுதலை புலிகளின் அனைத்து தளபதிகளும் இருந்தார்கள்.அங்கு தமிழீழ தேசிய தலைவர் மலர்மாலை சூட்டி வீரவணக்கம் செய்ததை தொடர்ந்து தளபதிகள் பொறுப்பாளர்கள் வீரவணக்கம் செலுத்தினார்கள்.இதன்பின்பு வித்துடல் படைசார் வீர வணக்கத்திற்கும் மக்கள் வீர வணக்கத்திற்கும் வைக்க படுகிறது.இதற்காக ஒழுங்கமைக்கபட்ட இடங்கள் தெரிவுசெய்யபட்டு இரகசியமான ஏற்பாடுகள் நடந்தேறுகின்றன.முள்ளியவளை நீராவி பிட்டியிளிருத வீட்டிலிருந்து எடுத்து செல்லப்பட்டு ஒட்டிசுட்டான் வழியாக மாங்குளம் சென்று பின்பு மல்லாவி சென்று அதன் உடாக அக்கராயன் சென்று இஸ்கந்தபுரம் சென்று ,கோணாவில் ,கிளிநொச்சி ,பரந்தன் ,விஸ்வமடு ,உடையார்கட்டு ,புதுக்குடியிருப்பு ,முல்லைத்தீவு வழியாக மீண்டும் வித்துடல் முல்லியவளையினை சென்றடைந்து.லீமா அவர்களின் வித்த்டலினை பார்ப்பதற்காக மக்கள் வீதிகளில் மலர் மலைகளுடன் குவிந்து நின்றார்கள்.இரவிரவாக வித்துடல் நகர்ந்து சென்றது இரவிரவாக வீதிகளில் காத்திருந்த மக்கள் வித்திடளுக்கு வணக்கம் செலுத்தினார்கள்.சென்ற இடங்களிலெல்லாம் சிறப்பு வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்றன.இதில் தளபதிகள் பொறுப்பாளர்கள் போராளிகள் மக்கள் ஆகியோர் வீரவணக்கம் செலுத்தி உரை நிகழ்த்துகிறார்கள்.
தழிழீழ விடுதலைபுலிகளின் துறைசார் பொறுப்பாளர்கள் கட்டளைத்தளபதிகள் பொறுப்பாளர்கள் அனைவரும் வீரவனக்கத்தில் லீமா அவர்களின் போராட்ட வரலாற்றினை எடுத்து கூறினார்கள், லீமா அவர்களின் வீரவணக்கம் வன்னியில் நடந்தேறி வித்துடல் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் விதைக்க பட்டது.இந்த நிலையில் அனைத்து உயர்மட்ட தளபதிகள்,பொறுப்பாளர்கள்,போராளிகள் ,மக்கள் என ஆயிரகனக்கனோர் பங்கேற்று இருந்தார்கள்.முதற்தடவையாக இத்தனையாயிரம் பேர்களால் நிறைந்திருந்தது முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம்.எல்லா போராளிகளையும் விம்மி அழவைத்துவிட்டு லீமா சென்றுவிட்டார் ..அவர் சென்றுவிடவில்லை ஒவ்வொரு தமிழ் மக்கள் மனங்களிலும் ஒவ்வொரு போராளிகளின் மனங்களிலும் என்றும் நிறைந்திருக்கிறார்.அவர் கொடுத்த நினைவை சுமந்தபடி அவர் கொடுத்த விடுதலை உணர்வை சுமந்தபடி அவர் வளர்த்துவிட்ட போராளிகள் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் அவரது இழப்பு போராட்டத்திற்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததை நாங்கள் பின்னர் கண்டுகொண்டோம் அதனை தொடர்ந்து வரும் தொடரில் பார்ப்போம் **********
பால்ராஜ் அன்னையின் இழப்பால் சோர்ந்து போயிருந்த உள்ளங்களுக்கு உற்சாகத்தை உட்டிய பெரும் வெற்றியை பெற்றுதந்த தாக்குதலாக சிறுத்தீவு தாக்குதல் அமைந்திருந்தது.ஈருடக படையணியின் இந்த நீண்ட துரம் கடலில் சென்று தாக்குதல் நடத்திவிட்டு திரும்பி வருகின்ற வெற்றி செய்திகள் தமிழ் மக்களுக்கு உற்சாகத்தை கொடுத்த போதும் அது இந்தியாவிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.கடற்புலிகளின் தாக்குதல்களை அவதானித்து வந்த இந்திய இவ்வாறன தாக்குதலில் மேலும் ஆழமாக அவதானிக்க தொடங்கியது.(30 ) கிலோமீற்றர் துரம் கடலில் சென்று தாக்குதல் நடத்திவிட்டு திரும்பும் கடற்புலிகளால் (36 ) கிலோ மீற்றர் கடல் எல்லைய கொண்ட இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான கரற்பரப்பில் எவ்வாறான தாக்குதலை நடத்த முடியும் என்று அவர்கள் (வேண்டாத) கற்பனைகளை வளர்த்திருக்க வேண்டும்.இதன் காரணமாகத்தான் இந்திய இலங்கை கடல் எல்லையில் குண்டுகளை சிறிலங்கா கரற்படையினர் விதைத்து வைத்துள்ளதாக வெளியிடபட்ட செய்திகளை கொள்ள முடியும்.
அனால் சிறுத்தீவு கடற்படை தளம் தாக்குதல் மூலம் யாழ் குடாவின் மீது அதிக கண்காணிப்பு நடவடிக்கையை சிறிலங்கா கடற்படையினர் குவிப்பார்கள் என்ற நோக்கத்துடன்தான் இந்த தாக்குதல் முக்கியமாக விடுதலை புலிகளால் நடத்த பட்டது .அதாவது தமது ஈருடக படையனிக்ககான பயிற்ச்சியை வழங்குவதுடன்,இராணுவத்தை திசை திருப்பும் அல்லது அவர்களின் வளங்களை இன்னுரு பக்கத்திற்கு இழுத்து செல்லும் ஒரு நடவடிக்கையக்கவும்தான் இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டது.அனால் பணியில் தேள் கொட்ட ,தென்னையில் நெறி கட்டிய கதையாக ஈருடக படையணியின் தாக்குதலால் இந்திய தேவையில்லாமல் தனது அச்சத்தை அதிகரித்து கொண்டது.அல்லது அவ்வாறு காட்டிக்கொள்ள அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டது.அனால் உண்மை அதுவல்ல சமாதன காலத்திற்கு பின்னர் சிறிலங்கா தமது படைவலுவை அதிகரிக்க தொடங்கிய நிலையில் அதனை பலப்படுத்தும் உதவிகளை இந்திய வழங்கியிருந்தது.குறிப்பாக கடற்புலிகளை கட்டுபடுத்தும் அவர்களின் செயற்பாடுகளை கண்டறிந்து உளவு சொல்லும் செயற்பாடுகளை இந்திய போர் ஆரம்பிப்பதற்கு முன்னரே ஆரம்பித்து விட்டது.
இந்தியாவின் இந்த சிறிலங்காவிற்கான இராணுவ உதவிகளையும் அவர்களின் விடுதலைபுலிகளை அளிப்பதற்கு உதவிவரும் செயற்பாடுகளையும் போர் ஆரம்பித்ததன் ( சமாதானத்திற்கு ) பின்னர் அம்பலபடுத்திய பெரும் பங்கு ஈருடக படையணிக்கே முதலில் உண்டு .
யாழ்குடா மீதான இவர்களின் தாக்குதலே இந்தியாவின் இராணுவ உதவிகளை அம்பலபடுத்தி வைத்தது எனவே ஈருடக படையணியின் தாக்குதல்களை தடுக்கவும் கட்டுபடுத்தவும் மேலும் பல உதவிகளை இந்திய வழங்கியிருந்தது.அத்துடன் வான் தாக்குதல்களை கண்காணிக்க வவுனியாவிலும் தமிழகத்தின் கரையோரங்களிலும் கண்காணிப்பு நிலைகளை உருவாக்கியிருந்ததன் மூலம் விடுதலைபுலிகளின் கடல் வான் தாக்குதலை தடுக்கும் முழுமையான போர்ப்பை இந்திய எடுத்திருந்தது என்றே கொள்ளாம்.விடுதலைபுலிகளின் பலம் வாய்ந்த இரு படையணிகளை கட்டுபடுத்தும் பொறுப்பை இந்திய நேரடியாக பொறுப்பேற்று இருந்ததை இதன் மூலம் புரிந்து கொள்ளாலாம் இவை வெளியில் தெரிந்தவை.இவ்வரி விட வெளியில் வெளிவராத உண்மைகள் இன்னும் அதிகம்.போராட்டத்தின் பின்னடைவிற்கு இவைகள்தான் காரணங்கள் எனினும் இறுதிவரை போராடும் முடிவில் விடுதலைப்புலிகள் இருந்தார்கள்.கடைசி போராளி இருக்கும் வரை போராட்டம் தொடரும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.இதனால்தான் போர் முல்லிவாய்களில் முடியும்வரை அவர்கள் போராடினார்கள்.
யாழ்குடாவின் தீவுகள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்திய ஈருடக படையணியின் அடுத்த தாக்குதல் மன்னார் கடற்படை தளங்கள் மீது செல்கிறது வன்னியின் மேற்கே மானார் திருக்கீதீச்வரம் தொடக்கம் விடத்தல்தீவு நாச்சிகுடா மிக நீண்ட ( அண்ணளவாக )(80 ) முதல் (100 ) கிலோ மீற்றர் வரையான கடற்பரப்பு விடுதலைபுலிகளின் ஆளுகைக்குள் காணபட்டது .விடத்தல் தீவில் விடுதலைபுலிகளின் கடற்படைத்தளம் ஒன்றும் காணப்பட்டது .அப்போது மன்னார் மாவட்டத்தின் கட்டளைதளபதியாக அச்சுதன் இருந்தார் .அவரே அணியின் வேவு நடவடிக்கையின் கீழ் மன்னார் சிறுப்பிட்டி கடற்படைத்தளம் மீதான அடுத்தகட்ட தாக்குதலுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன?
சுழியோடி
-23
விடுதலை புலிகளின் கட்டுபாட்டு பகுதிகளுக்கு கொண்டு செல்லுவதற்கு சிறிலங்கா அரசினால் தடை விதிக்கபட்ட மின்கலங்கள் ( பற்றிகள் )எரிபொருள் போன்றவை தமிழ் நாட்டிலிருந்து கடல்வழியாக எடுத்துவருவது வழமை.அதனால் மேற்கு கடலின் பாதுகாப்பு அவசியம் என்ற வகையில் அக்கடற்பரப்பின் பாதுகாப்பை கடற்புலிகள் உறுதிபடுத்திக்கொண்டு இருந்தனர்.
இதில் மன்னாரில் கண்காணிப்பு கருவி (ராடார் ) பொருத்தபட்ட சிறுப்பிட்டி தளம் சற்று இடையுறாகவே இருந்தது.இந்த கண்காணிப்பு நிலையில் இருந்து வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளபட்ட தாக்குதல்களில் விடுதலைபுலிகளின் சில வளங்கள் படகுகள் அன்று அளிக்கபட்டும் இருந்தன.அத்துடன் விடுதலைபுலிகளின் வான் பறப்புக்களை அவதானித்து தகவல் வழங்கும் வல்லமையும் இந்த தளத்திற்கு இருந்தது.எனவே இந்த தளம் மீதான தாக்குதல் மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது.அத்துடன் சிறிலங்கா இராணுவத்தின் முற்றுகை அதிகரித்து தரை வழியின்னுடான முற்றுகை இருக்கும் பட்சத்தில் பொருட்களுக்கான நெருக்கடி மேலும் அதிகரித்தால் அதனை முறியடிக்கும் மேற்கு கடலின் கட்டுப்பாடு விடுதலை புலிகளுக்கு மிகவும் அவசியம் வாய்ந்ததாகவே இருந்தது.எனவே இந்த பகுதியின் பாதுகாப்பை இலகுபடுத்தும் வகையில் கண்காணிப்புக்களை முறியடிக்கும் வகையிலும் இந்த தளத்தை தாக்கியழிக்கும் முடிவை விடுதலைப்புலிகள் எடுத்து அதற்க்கான வேவு நடவடிக்கையில் இறங்கியிருந்தனர்.
இந்த தாக்குதலுக்கான வேவு நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க நாம் விடுதலை புலிகளுக்கு ஏற்பட்டுகொண்டிருந்த ஆயுத பற்றாக்குறை குறித்தும் அதனை முறியடிக்க விடுதலைப்புலிகள் என்ன வழிமுறைகளை கையாண்டார்கள் என்பது குறித்து சற்று பார்ப்போம்.போர் எல்லா இடங்களிலும் உக்கிரமாக நடந்துகொண்டு இருந்தமையால் அனைத்து பகுதிகளுக்கு ஆயுத வளங்களை மேற்கொள்ளவேண்டிய தேவை விடுதலை புலிகளின் தலைமைக்கு இருந்தது.விடுதலை புலிகளுடன் ஏராளமான ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளும் சர்வதேச நாடுகளிடம் இருந்து விடுதலை புலிகள் கருவிகளை கொள்வனவு செய்து நிறைந்த அனுபவங்களை பெற்றிருந்தனர்.எனவே தாயகத்திலையே அவ்வாறன கருவிகளை உற்பத்திசெய்யும் பொருட்டு தொழிற்சாலைகளை உருவாக்கி இருந்தனர்.இவற்றில் குறிப்பிட்டு சொல்ல கூடிய கைக்குண்டு உற்பத்தி தொழிற்சாலை ,மிதிவெடி உற்பத்தி தொழிற்சாலை ,ரி (51 ) ரி ( 81) துப்பாக்கிகளில் பூட்டி அடிக்கும் எறிகணை ( அருள் செல் எனப்படும் )உற்பத்தி தொழிற்சாலை குறுகிய துரத்தில் எதிரிக்கு பாரிய சேதத்தை கொடுக்கும் சண்டியன் எறிகணை சமாதனம் எறிகணை எறிகணை உற்பத்தி தொழிற்சாலை ,கரும்புலி படகுகள் தயாரிக்கும் தொழிற்சாலை,கிளைமோர் கண்ணிவெடி உற்பத்தி தொழிற்சாலை ,உள்ளிட்ட பெருமளவான ஆயுத தளபாட உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கிகொண்டு இருந்தன.இந்த ஆயுத தொழிற்சாலைகள் மக்கள் நடமர்ரம் அற்ற அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் காட்டு அகுதிகளில் மறைவிடங்களில் நிறுவபட்டு இருந்தன.
தாக்குதல்கள் அதிகரித்திருந்த நிலையில் இவற்றுக்கான வெடிமருந்துகள் வெளியில் இருந்து எடுத்துவருவது பாதிக்கபட்டு இருந்தது.குறிப்பாக விடுதலை புலிகளின் கப்பல்கள் சில தாக்கியழிக்க பட்ட நிலையில் வெடிமருந்துக்கான தட்டுபாடு மேலும் அதிகரித்து இருந்தத நிலையில் விடுதலைப்புலிகள் அதற்கான மாற்றுவழிய கையாண்டார்கள்.இவ்வாறன மாற்றுவழிகள் ஏற்கனவே இந்திய இராணுவத்தின் முற்றுகை காலத்திலும் விடுதலை புலிகளால் கையாள பட்டது.அதே போன்ற இந்த இராணுவ முற்றுகை காலத்திலும் இராணுவத்தினர் ஏவும் எறிகணைகளை கொண்டே அவர்களுக்கு அழிவை ஏற்படுத்தும் மாற்று திட்டம் வகுக்கபடுகிறது.வன்னி பிரதேசங்கள் எங்கும் சிறிலங்கா படையினரின் கிபீர் மிக் விமானங்கள் தினமும் பல தடவைகள் வந்து குண்டுகளை வீசி செல்லும் .சுமார் இரண்டு கிபீர் விமானகள் ஒரு தடவை தாக்குதல் நடத்த வந்தால் சுமார் ( 250 ) கிலோ நிறையுடைய (8 ) குண்டுகளை எடுத்துவந்து வீசும், அல்லது பெரும் அழிவை ஒரே இடத்தில் ஏற்படுத்த வேண்டுமாயின் ( 500 ) கிலோ நிறையுடைய (4 ) குண்டுகளை எடுத்துவந்து வீசும் .இவ்வாறு வீசும்போது ஒவ்வொரு தடவையும் குறைந்தது ஒரு குண்டாவது வெடிக்காமல் போகும் சந்தியம் இருந்தது .அதன் பாவனை காலம் முடிவடைந்தது அல்லது அதன் முனை சரியாக விழுந்து மோதாமை போன்ற சில காரணங்களால் குண்டுகள் வெடிக்காமல் போவது உண்டு..
இவ்வாறு குண்டுகள் வீசும்போது வீசிய குண்டுகளையும் வீசிய சந்தங்களையும் கணக்கு வைக்கும் விடுதலைபுலிகளின் வெடிமருந்து பகுதியினர்.வெடிக்காத குண்டுகள் அறிந்து வீசப்பட்ட இடங்களுக்கு சென்று அவற்றை எடுத்து அவற்றில் இருக்கும் வெடிமருந்துகளையும் உலோகங்களையும் பிரித்தெடுத்து பட்டறைகளுக்கு அனுப்புவார்கள்.சுமார் ( 500 ) கிலோ குண்டு வெடிக்காத பட்சத்தில் அதிலிருந்து பலலட்சம் பெறுமதி வாய்ந்த வெடிமருந்தையும் உலோகங்களையும் எடுக்க முடியும்.இந்த மருந்துகள் உடனடியாக பட்டறைகளுக்கு எடுத்துசெல்லபட்டு எறிகனைகலாகவும் கைக்குண்டுகலாகவும் பல்வேறு வெடிபொருட்கள் தயார்படுத்தபடும்.எனவே இவ்வாறு சிறிலங்கா வான்படை வீசுகின்ற குண்டுகளை கண்டெடுத்து அவற்றின் மருந்துகளை பிரித்தெடுத்து அவற்றை தொழிற்சாலைகளுக்கு அனுப்பிவைக்கும் படைபிரிவோன்று இதற்கென இயங்கிகொண்டு இருந்தது.இவ்வாறு வெடிக்காத குண்டுகள் முலம் அதிகளவில் தயாரிக்க பட்டது கைகுண்டுகள்தான்.இந்த கைகுண்டுகளுக்கு தமிழன் என்று பெயரிடபட்டது ,எதிரி பாவிக்கும் கைக்குண்டினை விட எதிரிக்கும் பாரிய தாக்கத்தை உண்டுபண்ணும் பொறிமுறையில் ( வெடிப்பு ) இவை தயாரிக்கபட்டு அனைத்து படையணிகளுக்கும் களமுனைகளுக்கும் வினயோகிக்கபடும் இதனை விட கிளைமோர்கள் பல தயாரிக்க படுகின்றன.எதிரிக்கு பாரிய இழப்பினை கொடுக்கும் வகையில் இவை வடிவமைக்க படுகின்றன.தானியங்கி கருவியில் இயக்ககூடிய வகையில் ரேக்னேட்டார் ( வெடிப்பிகள் )உருவாக்க படுகின்றன..
(100 ) மீற்றர் (200 ) மீற்றர் துரத்தில் இருந்துகொண்டே இயக்கி வெடிக்க வைக்கும் தொழில்நுட்பம் இவற்றில் பயன்படுத்த படுகிறது .உதரணமாக “செந்தோழன் ” என்ற பெயரில் கிளைமோர்கள் உருவாக்க படுகின்றன.இதற்க்கான கல்லூரியும் உருவாக்க பட்டிருந்தது ஆதாவது விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினர்கள் வெடிபொருள் பயன்பாட்டாளர் லெப் கேணல் அப்பையா அவர்களின் பெயரில் அப்பையா வெடிபொருள் பயிற்ச்சி கல்லுரி நிறுவப்பட்டு ஏராளமான போராளிகள் அணிகளுக்கும் அங்கு பயிற்ச்சி வழங்கபட்டு கொண்டிருந்தது.லெப் கேணல் அப்பையா அவர்களின் பெயர் எதற்க்காக இந்த கல்லூரிக்கு வைக்கபட்டது
மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன?
சுழியோடி
-24
அதை வல்வெட்டி துறையிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்துள்ள இராசையா என்ற அப்பையா அண்ணா அன்றிலிருந்து யாழ்ப்பாணம் எங்கும் பிரபல்யமாக தேடபட்ட ஒருவரானார்.(1983 ) ம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல் வேலி தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அன்னையும் ஒருவர்.தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்த கண்ணிவெடியின் பொறிமுறைகளை சரி பார்த்து செல்லக்கிளி அம்மான் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான் .அந்த வரலாற்று தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் ,களத்தில் ,என்னும் ஏட்டில் எழுதியவற்றை மீட்டிபற்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.(1983 ) ம் ஆண்டு யூலை மாதம் (21 ) ம் நாள் இரவு (11.00 ) மணியளவில் யாழ் திருநெல்வேலியில் வைத்து சிறிலங்கா படையினர் மீது ஒரு கண்ணிவெடி தாக்குதலை நடத்தவென குறிப்பிட்ட வாகனமொன்றில் தேசியத்தலைவர் அவர்களும் அவருடன் செல்லக்கிளி அம்மான் ,விக்ரர் ,பொன்னம்மான் ,சந்தோசம் மாஸ்டர்,புலேந்தியம்மான் ,கருணாஸ்,ரஞ்சன் ,லிங்கம் பசீர்காக்க,நான் மற்றும் சில தோழர்களும் அடங்கிய எமது தாக்குதல் குழுவில் ஒருவராக ஐம்பது வயதை அடைந்துவிட்ட அப்பையா அண்ணரும் அங்கம் வகித்தார்.நாம் திட்டமிட்டபடி தாக்குதலுக்கான இடத்தை அடைந்ததும் எல்லோரும் வாகனத்தை விட்டு கிழே இறங்குகிறோம்,அடுத்ததாக அங்குள்ள ஒரு இடத்தில் கண்ணிவெடி தொகுதியை புதைக்கவேண்டும் அப்பையா அண்ணரும் ,செல்லக்கிளி அம்மானும் ,விக்ரரும்,கண்ணிவெடிகளை புதைக்க ஆரம்பிக்கின்றனர்
கண்ணிவெடியை புதைப்பதென்பது ஒரு பெரிய வேலை அதாவது கரடுமுரடான தார் ரோட்டில் பிக்கானால் கிடங்கு வெட்டுவது என்பது மிகவும் கடினமான வேலை .அதிலும் கண்ணிவெடி தொகுதிகளுக்கான மருந்தை அடைப்பதென்பது அதைவிட பெரிய வேலை.ஏனெனில் வெடிமருந்துகள் ஆபத்தானவை.எல்லோருக்கும் அந்த வேலை ஒத்துவர மாட்டாது.எனவே வெடிமருந்துடன் நன்கு பழக்கபட்ட அம்மைய அண்ணன் அந்த வேலைய திட்டத்திற்கு ஏற்ப மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானமாகவும் திறம்பட செய்து முடித்தார்.இவைக்கப்பால் அப்பையா அன்னார் எமது இயக்கத்திலையே வயது முதிர்ந்த உறுப்பினர் ஆவர்.இருந்தபோதிலும் அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் விவேகத்துடனும் சதா இயங்கிக்கொண்டு இருப்பார்.அத்தோடு எமது உள்ளூர் தயாரிப்புகளில் முக்கிய வெடிமருந்து நிபுணராகவும் அவர் விளங்கினார்.என மூத்த தளபதி கிட்டு அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார்.அதன் பின்னரான காலங்களில் இந்தியாவிற்கு பயிற்ச்சிக்கு சென்ற போராளிகளுடன் அப்பையா அண்ணையும் ஒருவராக இணைந்திருந்தார்.எப்படியாவது தானும் ஒரு இராணுவ பயிற்சிபெற்ற ஒரு வீரனாக உருவாக வேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார் .அனால் இவரது வயதை கருத்தில் கொண்ட இந்திய பயிற்சி அதிகாரிகள் அவரை ஏற்றுகொள்ள மறுத்து விட்டனர்.இருந்தபோதும் நாடுதிரும்பிய அப்பையா அண்ணார் போராளியாகவே தொடர்ந்து பணியாற்றினார்.அவரது விடுதலை பணிக்கு இராணுவ பயிற்சி என்றுமே ஒரு தடையாக இருந்தது இல்லை.ஆரம்பகாலங்களில் தாக்குதலில் பங்கெடுத்த கண்ணிவெடிகள் பல அப்பையா அண்ணையின் கரங்கள் தழுவ பெற்றவை.
வன்னி பகுதியில் நடந்த தாக்குதல்களிலும் அவர் பங்கெடுத்தார்.அப்பையா அண்ணையின் கண்டுபிடிப்பு முயற்ச்சிகள் இயக்கத்தில் பிரபலமாக பேசப்படுபவை.அவற்றில் பல களத்தில் பயன்படுத்த பட்டவையாக இருந்தும் போதும் கூட இளம்போரளிகலிடையே இத்தகைய முயற்ச்சிகளை உக்குவித்து இயக்கத்தில் அத்தகைய ஒரு மரபை வளர்த்தெடுக்கும் தலைவர் அவர்களின் என்னத்திற்கு அப்பையா அண்ணையின் அத்தகைய முயற்ச்சிகள் வாய்ப்பாக அமைந்தன.அது பின்னைய காலங்களின் இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது.பிற்காலங்களில் அந்த முதிய போராளி மிகவும் இளைத்து போயிருந்தார்.எந்த பணியாற்றவும் அவரால் முடியாதிருந்தது .எமது வரலாற்றில் பெருமைக்குரியவாராக இருந்த அவர் (24-12-1997 )மல்லாவி பகுதியில் காணமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதி என்னெவென்று தெரியவில்லை.ஜெயசுக்குறு நடவடிக்கையின் மூலம் சிங்கள படைகள் வன்னியில் அகல கால் பதித்திருந்த நேரம் .வயாதால் முதிர்ந்த நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறிலங்கா படைகளின் கைகுளிகள் கடத்தி சென்றுவிட்டனர்.அன்றிலிருந்து அவரை தேடி விடுதலைப்புலிகள் வலைவிரித்திருன்தனர்.அவரது சாவை உறுதிபடுத்தி மக்களுக்கு அறிவிப்பதற்கு விடுதலை புலிகளுக்கு முன்று ஆண்டுகளுக்கு மேல் சென்றது.அனால் சாவு அறிவித்தலை ஒவ்வுருவரும் எந்த ஆதாரமும் இல்லாமல் தங்கள் எண்ணம்போல் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
அப்பையா அண்ணா எமது ஆரம்பகால செயற்பாடுகளில் சாட்சியாக இருந்தவர் .மக்களோடு மக்களாக தலைமறைவு வாழ்வில் இயக்கம் இருந்த காலங்களில் போராளிகளுக்கு பெரும் பலமாக இருந்து செயல்பட்டவர்.அன்றைய காலங்களில் கண்ணிவெடி வெடிபொருள் உருவாக்கத்தில் முன்னின்று செயற்பட்டவர் .அதனாலையே அவரது பெயரில் வெடிபொருள் பயிற்சி கல்லூரிகள் ஆரம்பிக்க பட்டது.இதன்போது இந்திய இராணுவத்தால் சமாதான பேச்சுக்காக அழைத்து வரபட்டு கொல்லபட்ட லெப் கேணல் ஜொனி நினைவாக உருவாக்கபட்ட ஜொனி மிதிவெடிகள் ,தொழிற்சாலை அமைக்கபட்டு அங்கு உற்பத்தியக்கபட்டு கொண்டிருந்தன.ஏனைய நாடுகளின் மிதிவெடிகளின் வடிவமைப்புக்கு அமைவாக தாக்குதிறன் கூடிய மிதிவெடிகள் தயாரிக்கபட்டு அன்றைய முன்னணி களமுனைகள் எங்கும் விதைக்கபட்டன.விடுதலை புலிகளின் இந்த மிதிவெடிகளால் படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுகின்றன.என்று சிறிலங்கா இராணுவ தரப்பு கூறிவந்தது உங்கள் நினைவுக்கு வரலாம்.இவ்வாறுதான் மிதிவெடிகளுடன் பொறிவெடிகளும் தயாரிக்க படுகின்றன.இவை படையினர் ஏவிய செடிக்காத எறிகணைகளில் இருந்தே பெருமளவில் தாயரிக்க பட்டன.வேட்டைகாரர்களால் பயன்படுத்தப்படும் கட்டுக்குழாய் என்ற பொறிவெடி வன்னி காடுகளில் வாழ்ந்த பலரும் அறிந்தது.இதற்கமைவாக படையினர் ஏவி வெடிக்காத (60 ) மி , மீ (81 ) மி ,மீ எறிகணைகள் பொறி வெடிகளாக மற்ற படுகின்றன .அதாவது இவற்றின் முன் வெடிப்பிகளின் பொறிவெடி முறை மாற்றி அமைக்கபட்டு காடுகளுக்குள் மறைத்து வைக்கபட்டு நுல் அல்லது கம்பி கட்டபட்டு அது தட்டப்படும்போது வெடிக்கும் வகையில் எதிரியின் உள்நுளைவுகளுக்கு தடைகள் ஏற்படுத்த படுகின்றன
மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன?
சுழியோடி
-25
இதன் பின்னன் போரிலும் ஆயுதகளை கையாளுவதிலும் தேர்ச்சி பெற்றிருந்த விடுதலைபுலிகளால் சமாதன காலத்திற்கு பின்னான களத்தில் பயன்படுத்தபட்டவைதான் சமாதனாம் ,சண்டியன் ,எறிகணைகள் ,பசீலனே படையினருக்கு அந்தளவிற்கு அச்சத்தை ஏற்படுத்தியது என்றால் ,சண்டியன் சமாதனம் பற்றி சொல்லவே தேவையில்லை .இந்த இரண்டும் ஏவப்பட்டால் படையினர் களமுனையில் நிற்காமல் தப்பியோடுவர்கள் என்பது உறுதி.
அந்தளவிற்கு இந்த எறிகணைகள் ஏவப்படுவது தெரிந்தாலே படையினர் களமுனைகளை விட்டு தப்பியோடும் நிகழ்வுகளும் நடந்தன .இந்த இரண்டு எறிகணைகளும் இழுத்து நகர்த்தி செல்லகூடிய வகையில் இரண்டு தண்டவாள துண்டுகளை கொண்டு இதற்கென வடிவமைக்கபட்ட உளவு உயந்திரத்தில் வைத்துதான் ஏவப்பட்டன.வேகமாக கொண்டு நகர்த்தகூடிய வகையில் சண்டியன் சமாதனம் எறிகணையின் ஏவுதளம் இருந்தது ,இந்த எறிகணைகள் ( 1000 ) மீற்றர் (சுமார் ஒரு கிலோமீற்றர்) தூரம்வரை சென்று தாக்கவல்லது சமாதனம் எறிகணையின் நிறை சுமார் நுறு கிலோவிற்கும் அதிகமாக இருக்கும் ,அதனை துக்கி போடுவதற்கு குறைந்தது இருவர் என்றாலும் வேண்டும்.இதனை இயக்கம் இடத்தில் இயக்குபவர்கள் நிக்கமட்டார்கள், சுமார் (50 ) மீற்றர் துரத்தில் நின்றுதான் இயக்கவைப்பர்கள்,இந்த எறிகணை செலுத்தியை இயக்க சுமார் ஆறு பேர்கள் தேவை .ஆதாவது இந்த எறிகணைய பற்றி சொல்லுவதானால் அதன் வடிவம் பாரிய ஏவுகணை போன்று இருக்கும் பின்பக்கத்தில் ஆறு மல்ரி பெறல் எறிகணைகள் பொருத்தபட்டு இருக்கும் ,இந்த மல்ரிபெரல் எறிகணைகள்தான் முன்னிருக்கும் எறிகணைய தாங்கிசெல்லும் .அந்த இலக்கில் வீழ்ந்து வெடிக்கும் போது பாரிய சத்தம் கேட்கும் ,அதன் துண்டுகள் கூட படையினரில் படத்தேவையில்லை இது வெடிக்கும் போது எழும் சத்தமே படையினரை கொன்றுவிடும் .இதன் நேரடி தாக்கம் சுமார் (50 ) மீற்றர் சுற்றுவட்டத்தை அழிக்கும்.இதுதான் சமாதனம் என்று சண்டைக்களங்களில் போராளிகளால் பேசப்படும் எறிகணை .
சண்டியனும் இதே வடிவம்தான் அனால் அதன் நிறை கொஞ்சம் குறைவு (65 ) கிலோ கிராம்தான் அத்துடன் சமாதனம் போன்று இது படையினருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது .அனால் படையினர் இதன் பெயரை சொல்லி அச்சப்படும் அளவிற்கு அதன் தாக்கம் இருந்தது,இந்த எறிகணைகள் முதன் முதல் முகமாலை படையினர் மீதுதான் பரீச்சித்து பார்க்கபட்டது .அதன் பின்னர் முகமாலையில் நின்ற படையினருக்கு சமாதனம் சண்டியன் என்றாலே போதும் அச்சத்தில் உறைந்து விடுவார்கள் .இந்த இரண்டும் எதிரிக்கு பாரிய இழப்பினை கொடுத்து விடுதலை புலிகளுக்கு பல வெற்றி தாக்குதல்களுக்கு காரணாமாக அமைந்தது.இதனால் இந்த எறிகணை உற்பத்தி அதிகரிக்கபட்டு மன்னார் ,வவுனியா ,மணலாறு ,போன்ற களமுனைகளுக்கும் அனுப்பிவைக்க படுகின்றது.இந்த எறிகணைகளுக்கான வெடிமருந்துகளை சிறிலங்கா வான்படையே தந்துதவியது ,கிபீர் ஏவி வெடிக்காத குண்டுகளில் இருந்தே இவற்றுக்கான மருந்துகள் பெறப்படுகின்றன.,இதை போன்று கடலில் கரும்புலி படகுகளின் வெடிமருந்து வடிவங்கள் மாற்றி அமைக்கபட்டு எதிரிக்கு பலத்த இழப்பில்லை ஏற்படுத்துகின்றார்கள்.இதே வேலை அன்று விடுதலை புலிகளுடன் (சினைப்பர் )எனப்படும் குறிசூட்டு துப்பாக்கி பெருமளவில் இருக்கவில்லை .இதனால் அந்த தேவைய ஈடுசெய்ய எ,கே (47 ) துப்பாக்கிகளுக்கு தொலை நோக்கிகளை பொருத்தி புதிய முறையிலான சினைப்பர் துப்பாக்கிகள் உருவாக்க பட்டன ,ஆதாவது குறுகிய துரத்தில் நின்றுகொண்டு எதிரியை குறிபார்த்து சுடும் வகையிலும் இலகுவாக கொண்டுசெல்ல கூடிய வகையிலும் எ ,கே (47 ) துப்பாக்கி விடுதலை புலிகளால் வடிவமைக்க படுகின்றன.
இந்த எ,கே ( 47 ) விடுதலை புலிகள் செண்பகம் என பெயரிட்டிருந்தனர் .இதற்க்கான ரவைகள் கூட சாதாரண எ ,கே (47 ) பாவிக்கப்படும் ரவைகள் பயன்படுத்த படவில்லை ,கவசதுளைப்பி ரவைகள் பயன்படுத்த படுகின்றது .இவ்வாறன துப்பாக்கிகள் ஏராளமாக வடிவமைக்க படுகின்றன .சினைப்பர் துப்பாக்கிகளுக்கு வளிதிறத்தல் ஏராளமான சினைப்பர் அணிகள் உருவாகின்றன.தளபதி தீபன் அவர்களின் கீழ் கிளாலி முகமாலை நாகர்கோவில் தளங்களில் சினைப்பர் அணிகள் உள்நுழைந்து ஏரளாமான இராணுவத்தினரை கொன்றிருந்தனர்.இதே போன்று மன்னார் களத்தின் தளபதி பானுவின் கட்டமைப்பின் கீழ் சினைப்பர் அணிகள் செயற்பட்டு எதிரிக்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தியிருந்தனர்.இவ்வாறு விடுதலைபுலிகளின் சினைப்பர் அணிகள் சண்டைகளின் போது உடுருவி நடத்திய பல தாக்குதல்களை வியப்புட்டுபவை .சிறிலங்கவிர்க்கு சண்டைகளங்களில் பாரிய இழப்பினை ஏற்படுத்துவதில் பெரும்பங்கு சினைப்பர் அணிக்கும் உண்டு .சிறிலங்கா படைத்தரப்பே இந்த சினைப்பர் அணியால் ஏற்பட்ட இழப்பகள் குறித்து கடந்த காலங்களில் தெரிவித்திருந்தமை இங்கு அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். இதேவேளை அன்றைய காலங்களில் சிறிலங்கா ஆழ உடுருவும் படையணியின் தாக்குதல்கள் வன்னி பெருநிலபரப்பில் அதிகரித்து இருந்தன.இதனால் தளபதிகளுக்கு பொறுப்பாளர்களுக்கும் எதிரியின் கிளைமோர் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு வழங்க அவர்கள் பயணம் செய்யும் வாகனங்கள் சன்னங்கள் துப்பாக்கி ரவைகள் துளைக்காத வண்ணம் பாதுகாப்பாக இரும்பு தகட்டினால் வடிவமைக்கப்பட்டு பரீச்சித்து பார்க்கபட்டு துருப்புக்காவி என பெயர்சொல்லி அழைக்கபட்டு ,பெரும்பாலான தளபதிகள் ,படையணி போராளிகளை ஏற்றி இறக்குவதற்கு வழங்க படுகின்றது.
இதே வேளை பாதைகள் மூடப்பட்டதனால் உணவு பொருட்களுக்கான நெருக்கடிகள் அதிகரிக்க தொடங்கின ,அத்துடன் சில களமுனைகளுக்கு அருகில் சமைக்கமுடியாத அளவிற்கு சண்டை தொடர்ச்சியாக உக்கிரமாக நடைபெற்று கொண்டிருந்தது ,சமைத்துசென்று உணவுகளை வழங்கமுடியாத களமுனைகளுக்கு (15 ) நாட்களுக்கு ஏற்ற வகையில் உலருணவு பொருட்கள் தயாரிக்கபட்டு பொதி செய்யபட்டு களமுனை போராளிகளுக்கு அனுப்பிவைக்க படுகின்றன ,இதேவேளை மருத்துவத்துறை ஏராளமான மருத்துவர்களை உருவாக்கியிருந்தது .இதனால் விடுதலை புலிகளின் மருத்துவ பிரிவும் விரிவாக்கம் பெற்று இருந்தது ,மருத்துவ போராளிகளில் பலர் பொதுமக்களின் மருத்துவ மனைகளில் இணைந்து மக்களுக்கு சேவையாற்றி தங்கள் அனுபவ அறிவை வளர்த்துகொண்டிருன்தனர்.விடுதலைபுலிகளின் மருத்துவ பிரிவால் ஏராளமான சத்திரசிகிச்சை முகாம்கள் அமைக்கபட்டு இருந்தன ,களமுனைக்கு அருகில் கூட சத்திரசிகிச்சை முகாம்கள் அமைக்கபட்டு காயமடையும் போராளிகள் காப்பற்ற படுகின்றார்கள் .,போராளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதை அடுத்து நிர்வாக அலகுகள் விடுதலைபுலிகளினால் அதிகரிக்க படுகின்றது .இவ்வாறு விடுதலைபுலிகளின் கட்டுமானங்கள் வளர்ச்சியான கட்டத்தில் இருக்கும்போதுதான் தேசியத் தலைவரால் புதிய தாக்குதல் திட்டம் ஒன்று வகுக்க படுகிறது
மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன?
சுழியோடி
-26
முன்று வருடங்களுக்கு முன்பாக ( 26-03-2007 ) அன்று நடந்த இந்த தாக்குதலால் சிறிலங்கா மட்டும் அதிரவில்லை உலக நாடுகள் எங்கும் அதன் அதிர்ச்சியும் ஆச்சரியமும் எதிரொலித்தன.
தமிழர் தாயக நிலத்தை விழுங்கியபடி சிறிலங்கா இராணுவம் முன்னேரிகொன்டிருந்த போது விடுதலை புலிகளின் பின்வாங்கல்கள் பலவீனமாகவே பார்க்கப்பட்டன.விடுதலை புலிகளின் பலத்தையும் வளத்தையும் அழித்துவிட்டோம் என சுளுரைத்துகொண்டிருந்த மகிந்த அரசாங்கத்தின் பரப்புரைகளை விடுதலைபுலிகளின் ஒரே ஒரு வான் தாக்குதல் சுக்குனுராக அடித்துபோட்டது .தரையையும் கடலையும் பார்த்துகொண்டிருந்த சிங்கள இராணுவம் வானையும் அண்ணாந்து பார்க்கவேண்டிய நிலைக்கு தள்ளியது இந்த தாக்குதல்.
காலத்துக்கு காலம் தேவைகளுக்கு ஏற்ப போரில் பல நாவீன உத்திகளை புகுத்திய தலைவரின் இந்த தாக்குதல் திட்டம் என்பது எதேச்சையாக எடுக்கபட்ட திட்டமாக இருக்க மாட்டாது.ஏனினில் ( 1998 ) நவம்பர் மாவீரர் நாளைக்கு முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் உலங்குவானுர்தி முலம் மலர்துவிய சம்பவம் விடுதலை புலிகளிடம் வான் படை இருக்கிறது என்ற உண்மைய வெளியுலகுக்கு அம்பலமாக்கி விட்டது.எனினும் அப்போது இடம்பெற்ற ஜெயசுக்குறு சமரிலோ அல்லது அதற்க்கு எதிரான பின்னர் நடைபெற்ற ஓயாத அலைகள் சமரிலோ விடுதலைப்புலிகள் வான்தாக்குதல் எதனையும் நடத்தவில்லை.ஆனாலும் விடுதலைபுலிகளின் வான் படை குறித்து சிறிலங்கா அறிந்துகொண்டதன் பின்னர் தனது கேந்திர நிலையங்களின் பாதுகாப்பிற்கு வான் எதிர்ப்பு துப்பாக்கிகளுடன் படையினரை நிறுத்தியிருந்தது.ஆனாலும் காலத்தின் தேவை கருதி தலைவர் வான் புலிகளை வெளியில் கொண்டுவந்தார் .எதிரி எந்த வகையில் அடக்குமுறைகளை கையளுகிறனோ அதே வழியில் சென்று பதிலடி கொடுப்பது என்பது தலைவருக்கு கைவந்த கலை.அப்பாவி மக்கள் மீது வானிலிருந்து குண்டுகளை கொட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொன்றொளித்த எதிரிக்கு தானும் அவ்வாறு தக்கபடுவோம் என்று புரியவைத்த இந்த வான் தாக்குதல்.
அனால் எதிரியை போன்று பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தாது எந்தவித பாதிப்பும் பொதுமக்களுக்கு ஏற்பட குடாது என்பதை தாக்குதலுக்கு சென்ற போராளிகளிடம் தலைவர் அவர்கள் ,வலியுறுத்தி அனுப்பிவைத்து நடத்திய தாக்குதல் இது .இவ்வாறு ஒரு இலக்கு தவறாத தாக்குதலை உலகில் பல நாடுகளிடம் பயிற்ச்சி பெற்ற சிறிலங்கா வான்படை கூட நடத்தியிருக்க முடியாது.வன்னியில் இருந்து ( 25 ) ம் திகதி புறப்பட்ட விடுதலைபுலிகளின் இரு விமானங்கள் (26 ) ம் அதிகாலை ( 5.45 ) ற்கு சிறிலங்கா சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையம் மேலாக பறந்து பயணிகள் விமானதளத்திற்கு அருகாமையில் இருந்த வான்படையின் தளத்தினை இலக்குவைத்து எட்டு குண்டுகளை வீசி அத்தளத்தை பாரிய சேதங்களுக்கு உள்ளக்கிவிட்டு இலக்கு சரியானதா என்பதை அதன் மேலாக சகசமாக ஒருமுறை வட்டமிட்டு உறுதிபடுத்திகொண்டு பாதுகாப்பாக வன்னியிலுள்ள அதன் தளத்திற்கு திரும்பியது.தரையால் வந்து நடத்திய தாக்குதலா வானால் வந்து நடத்திய தாக்குதலா என சிறிலங்கா குழம்பிபோயிருன்தது ,வான் தாக்குதலை விடுதலைப்புலிகள் அறிவிக்காது போனால் அதனை ஒரு தரை வழியிலான தாக்குதலாக காண்பித்து படையினருக்கு ஏற்படகூடிய அச்சங்களை தவிற்பதுக்கும் சிறிலங்கா விரும்பியது என பின்னர் அறியமுடிந்தது.
அனால் விமானங்கள் திரும்பிய சிலமணி நேரங்களில் விடுதலை புலிகள் தங்கள் தாக்குதலை அதிகரபுர்வமாக உரிமை கோரியதுடன் விமானங்களினதும் வான்புலிகளினதும் நிழற்படங்களை வெளியிட்டு மீளும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.இந்த செய்திகள் உடனடியாக சர்வதேச உடகங்களில் தலைப்பு செய்தியாகி இருந்தது இந்திய வேண்டாத அச்சங்களை வெளியிட்டு தனது பாதுகாப்பை பலப்படுத்துவதாக கூறியது தமிழக கரையோரங்களில் கண்காணிப்பு ராடார்களை நிறுவி விடுதலைபுலிகளின் வான் பறப்புக்களை கண்காணித்து சிறிலங்கவிர்க்கு உதவுவதற்கு முனைந்தது.அதேவேளை இந்த தாக்குதலில் சேதங்கள் ஏற்படவில்லை எனக்குறி சிறிலங்கா அரசாங்கள் இழப்பை முடிமறைத்தது.அனால் கட்டுநாயக்க மீது (25 ) யூலை ( 2001 ) ஆண்டு கரும்புலிகள் நடத்திய தாக்குதலுக்கு இணையாக இந்த தாக்குதலும் சிறிலங்கா வான் படையினருக்கு பெரும் அழிவையும் தொடர் பொருளாதார இழப்புக்களையும் கொடுத்தது என்பதே உண்மை .வான் படையினர் முலம் தாக்குதல் நடத்துவது மாத்திரமல்ல தாக்கிவிட்டு திரும்பிசெல்ல முடியும் என்பதனையும் நிருபித்து காட்டியதன் முலம் போரரங்கின் போக்கை மாற்றிவிட்டனர் விடுதலைப்புலிகள் என இராணுவ ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டனர்.இந்த தாக்குதலால் பெரும் அவமானமும் அதிர்ச்சியும் அடைந்த ஸ்ரீலங்கா இரணைமடு மற்றும் விமான தளங்கள் என்று கருதிய இடங்களில் எல்லாம் குண்டுமழை பொழிந்தது .அத்துடன் விமான தளங்களையும் ஓடுபாதைகளையும் கண்டுபிடிப்பதற்காக வேவு விமானங்கள் வன்னியை வட்டமிட தொடங்கியிருந்தன.இரவு பகல் என (24 ) மணி நேரமும் வேவு விமானங்கள் வன்னியை முற்றுகையிட்டு தேடுதலை மேற்கொண்டு இருந்தன.இவ்வாறு வந்த வேவு விமானம் ஒன்று திரும்பி போகவே இல்லை. விடுதலை புலிகளின் முயற்ச்சி ஒன்றில் அந்த விமானம் வன்னி மண்ணில் விழுந்து உயிரை விட்டது .
இதன் பிற்பாடு தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வேவு விமானங்கள் பரப்பில் ஈடுபட்டிருந்தன.இரவில் துல்லியமாக படம் எடுக்ககூடிய வேவு விமானம் பயன்படுத்தியது .அத்துடன் சில நாடுகளிடம் இருந்து செய்மதியுடான கண்காணிப்பு உதவியையும் சிறிலங்கா பெற்றுகொண்டு இருந்தது.அத்துடன் இந்த வான் தாக்குதலை சர்வதேச அச்சுறுத்தலாக மாற்றி உலகநாடுகளின் ஆதரவை வளைத்து போடவும் சிறிலங்கா முயன்றது .(11-2001 ) இல் அமெரிக்க இரட்டை கோபுரம் மீதான தாக்குதல் போன்று ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடிய விடுதலை புலிகளின் தாக்குதல் அதுவும் பொதுமக்களுக்கு எந்தவித இழப்பும் ஏற்படாமல் இராணுவ நிலைகளை இலக்குவைத்து மேற்கொள்ளபட்ட தாக்குதல் பயங்கர வாதமாக கண்பிக்கபட்டது.விடுதலை புலிகளை ஒடுக்கவேண்டும் என்று எப்போதும் சிந்தித்துகொண்டிருக்கும் இந்தியாவின் ஆதரவு சிறிலங்கவிற்கு பலமாக கிடைத்தது .இதன் வெளிப்பாடுதான் ஒட்டுமொத்த நாடுகளின் ஆதரவுடன் விடுதலைபுலிகளை அளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்க படுகிறது
மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன?
சுழியோடி
-27
தமிழர் தாயகத்தின் மீது பேரிழப்புக்களை ஏற்படுத்திய சிறிலங்கா வான்படையின் தங்குமிடமாக இருந்த அனுராதபுரம் சிறிலங்காவின் வான்படைதளம்தான் அந்த தாக்குதல் இலக்கு.அனுராதபுரம் வான்படைத்தளம் என்பது ஒரு சாதாரண வான்படைத்தளம் அல்ல வடக்கு பகுதியில் இருக்கின்ற அனைத்து இராணுவ தளங்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதும்,வடபக்தியில் ஒரு இராணுவ நடவடிக்கையை செய்வதானால் அதற்க்கு இதயமாகவும் கட்டளை செயலகமாகவும் செயற்பட வேண்டிய தளமாகவும் இருந்தது.
அது மட்டுமல்ல வடக்கு பகுதியில் அனைத்து இராணுவ செயற்படுகளுக்குமான ஒரு மைய்யத்தளமாக இந்த வான்படைத்தளம் இருந்தது .இலங்கையில் உள்ள அனைத்து தளங்களினதும் இந்த தளம் மிகவும் வித்தியாசம் ஆனது.ஏனெனில் ஏனைய தளங்களில் மக்களின் போக்குவரத்திற்கும் சில பகுதிகள் ஒதுக்க பட்டுள்ளன .அனால் முற்றுமுழுதாக இராணுவத் தேவைகளுக்காகவே ஒதுக்கபட்ட தளம் அனுராதபுர தளம் .எந்த சந்தர்பத்திலும் எந்தவொரு பொதுமகனும் உள்நுழைய முடியாத அளவிற்கு மிகவும் இறுக்கமான பாதுகாப்பை பேணிவந்த தளம் இது.இந்த தளத்தின் மீது சிறிலங்கா பெரும் நம்பிக்கை கொண்டிருந்தது.அத்துடன் தளம் விரிவுபடுத்த பட்டுகொண்டிருன்தது மிகையொலி வானுர்திகளை நிறுத்துவதற்காகவும் எதிர்காலத்தில் பல தாக்குதல் வான்கலங்களை நிறுத்தி வைக்க பாதுகாப்பான தளம் என்பதையும் கருதி செயற்பாடுகள் மேற்கொள்ளபட்டு வந்தன.
இதே வேளை முற்றுமுழுதாக சிங்க கிராமங்களால் சூழப்பட்ட பகுதி என்பதால் இதற்குள் புலிகள் உடுருவது என்பது மிகவும் கடினமான விடையம் என்றே சிங்கள இராணுவம் நம்பியிருந்தது .அந்த நம்பிக்கையில் மண்ணை அள்ளிபோட்டனர் புலிகள்.இப்பெரும் தளத்தின் மீதுதான் கரும்புலிகளும் வான்புலிகளும் இணைந்து (22-10-2007 ) ஒரு இணைந்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்துகிறார்கள்.
எல்லாளன் என தமிழீழ தேசிய தலைவரால் பெயரிடப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை குறித்து போராளிகளுக்கு மட்டுமல்ல பொறுப்பாளர்கள் மத்தியில் கூட அன்றைய சூழ்நிலையில் இவ்வாறான தாக்குதல் நடைபெறும் என்று எதிர்பார்கவில்லை .தாக்குதலுக்கு முதல்நாள் தளபதிகளை அழைத்த தமிழீழ தேசிய தலைவர் “உங்களுக்கு நான் எல்லாளனை காட்ட போகிறேன் “என்று கூறியபோது கூட யாருக்கும் என்ன எதுவென்று தெரியவில்லை,அத்தனை துரம் மிகவும் இரகசியமாக திட்டமிடபட்டு தலைவரால் ஒருன்கினைக்கபட்டு மேற்கொள்ளபட்ட தாக்குதல் இது .ஒரு தாக்குதல் நடவடிக்கையை தலைவரால் இத்தனை துரம் இரகசியம் பேணப்பட்டு மேற்கொள்ளபட்டது என்றால்,ஒரு பெரும் இராணுவ நடவடிக்கையை தலைவர் எவ்வாறு எதிர்கொண்டிருப்பார் என்பதை வரும்காலம்தான் பதில் சொல்லும்.அதுவரை பொறுத்திருக்கத்தான் வேண்டும் ,கடும் பயிற்ச்சி நீண்ட பயணம் என தங்களை வருத்தி இந்த வெற்றிக்காக உழைத்திருந்த கரும்புலிகள் தங்களையே கொடையாக கொடுத்து இந்த வெற்றியை தேசத்துக்கு பெற்று தந்தார்கள்.(21 ) கரும்புலிகளுக்கும் தலைமைதாங்கி தளபதியாக சென்றவர் இளங்கோ ,எத்தனையோ சமர்களங்களில் தோல்வி வந்து விடுமோ என்று எதிர்பாக்க பட்டநிலையில் அந்த களமுனையை வெற்றி களமுனையாக மாற்றிய பெருமைக்குரிய போராளி இளங்கோவிற்கு உண்டு.இந்த கரும்புலி அணியில் இரண்டாவது பொறுப்பாளராக வீமன் நியமிக்கபட்டிருந்தார் தலைவரின் மெய்பாதுகாப்பு அணியில் நம்பிக்கைக்குரிய போராளியாக இருந்த வீமநிடம்தான் ‘ தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தாயகத்தில் பயணிக்கும் போது அவருடைய பாதுகாப்புக்கான முழுப்பொறுப்பையும் தலைவர் ஒப்படைத்து இருந்தார்.இவ்வாறு நம்பிக்கைக்குரிய போராளிகளைத்தான் இந்த நடவடிக்கைக்கு தேர்தெடுத்து அனுப்பிவைத்திருந்தார்.தலைவரின் நம்பிக்கையை இறுதிவரை தக்கவைத்தார்கள்.
அன்றிரவு தலைவர் துக்கமின்றி தளபதிகளுடன் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு இருந்தார்.அதிகாலை ( 3.20 ) மணிக்கு இளங்கோ சண்டைய துவங்க போவதாக தலைவருக்கு அறிவிக்கிறார்.அப்போதுதான் அங்கிருந்த தளபதிகளுக்கே அனுராதபுரத்தில் பேரிடி விழப்போகும் உண்மை புரிகிறது.மிக வேகமாக தாக்குதலை நடத்தி தங்களுக்கு வழங்கபட்ட இலக்குகளை அழித்து அங்கிருந்த வானுர்திகளை தகர்த்து முடித்தார்கள்.விடுதலைபுலிகளின் வெற்றிகரமான தாக்குதல் வரிசைகளில் ஒன்றானா உலக நாடுகளை எல்லாம் விடுதலைப்புலிகள் பற்றி பேசவைத்த தாக்குதலாக இந்த தாக்குதலும் அமைந்து விட்டது.அனால் இந்திய இத்தாக்குதல் குறித்து ஆழமாக அச்சம் கொண்டது சிறிலங்கா படைகளின் வடக்கு கிழக்கிற்கான வான்படைத் தலைமையகம் அனுராதபுரத்தை மையமாக கொண்டு செயற்பட்டது.அதற்க்கு இந்த தாக்குதல் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி விட்டாதாக கருதப்பட்டது.இத்தாக்குதல் முலம் சிறிலங்கா வான்படையினரின் பல வானுர்திகள் ,வான்கலங்கள் ,ஆயுதங்கள் , நவீன ராடார் கருவிகள் , அழிக்கபட்டு பலகோடி பெறுமதியான இழப்புக்கள் ஏற்படுத்த பட்டது.அந்த இழப்பினை இறுதிவரை சிறிலங்கா வெளியிடாமல் மறைத்துகொண்டது.தாக்குதலை நடத்திய விடுதலை புலிகளின் வான்படை வெற்றிகரமாக தாயகம் திரும்பின.சிறிலங்கவிற்கு பெரும் அழிவினை ஏற்படுத்திய இந்த கரும்புலிகளில் ( 21 ) கரும்புலிகள் தமது வீர வரலாற்றை எழுதினார்கள்.மறுநாள் அவர்கள் தேசிய தலைவருடன் நிற்கும் படங்கள், ஒளிப்படங்கள் ,வெளியிடபடுகின்றன வன்னி மட்டுமல்ல புலம்பெயர்ந்து தமிழ் மக்கள் வாழும் நாடுகள் எங்கும் இக்கரும்புலிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.
அனால் இந்த தாக்குதலால் ஏற்பட்ட தோல்வியால் அவமானமும் ஆத்திரமும் அடைந்த சிறிலங்கா மிக கேவலமாக நடந்துகொண்டது.கரும்புலிகளின் ஆடைகளை களைந்து அவமான படுத்த முனைந்தவர்கள் தங்களைத் தாங்களே கேவலமாக்கி அவமான பட்டுகொண்டார்கள்.எல்லாவற்றையும் துறந்துவிட்டு வந்த புத்தரின் மண்ணில் அவரைப்போலவே எங்கள் போராளிகளும் கிடந்தார்கள் தமிழர் மனங்களில் அவர்கள் தெய்வமாக உயர்ந்தார்கள்.இதேவேளை விடுதலை புலிகளின் வான்படையால் சிறிலங்கா படையினர் மட்டுமல்ல வேறு சிலரும் அச்சம் கொண்டிருந்தனர் என்பது அன்று உலகம் அறிந்த உண்மை.தனியாக தாக்குதல் நடத்திவந்த வான்புலிகள் தற்போது இணைந்து தாக்குதல் நடந்துவதென்பது எதிர்காலத்தில் சிறிலங்கவிற்கு மேலும் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தும் என்று அச்சம் கொள்ள தொடங்கினார்கள்.இதனை கட்டுபடுத்த உலகநாடுகளின் கால்களில் வீழ்ந்தது சிறிலங்கா.வான் புலிகளை ஒடுக்க உலக நாடுகளிடம் உதவி கேரி நின்றார்கள்.இந்தியாவும் சிறிலங்கவிற்கு ஆதரவாக உலக நாடுகளின் உதவிகரன்களை பிடித்து கொடுத்தது.இந்தநிலையில் வானத்தில் இருந்து வானத்தில் தாக்குதல் நடத்தகூடிய வல்லமை பொருந்திய கு (7 ) ரக விமானத்தினை சிறிலங்கா வான் படையினர் கொள்வனவு செய்கிறார்கள்.இதில் இரவில் தாக்கும் திறன்கொண்ட தொழில்நுட்பங்களை கையாள்கிறார்கள்.இந்த நிலையில்தான் வெற்றிகராமாக தாக்குதல்களை நடத்திய வான் புலிகளுக்கு தமிழீழ தேசிய தலைவர் விருது வழங்கி கவுரவித்தார்,அந்த நிகழ்வு மிகவும் எளிச்சிகரமாக நடைபெற்றது அந்த நிகழ்வு நடைபெற்ற மறுநாள்தான் பேரிழப்பு ஒன்று வந்து சேர்ந்தது
மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன?
சுழியோடி
-28
எங்கே சென்று மறைகிறார்கள் என்பதை கண்டறிந்துகொள்ள முடியாமல் மனமுடைந்து போகுமளவுக்கு சிறிலங்கா வான்படை திகழ்ந்தது.வானில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு குருவி பறந்தால் கூட சந்திரனைபார்த்து குரைத்த நாயைப்போல் படையினர் இலக்குகள் இன்று வேட்டுக்களை தீர்த்து தள்ளினார்கள்.
ஒரு கட்டத்தில் இரணைமடுவில் தாக்குதல் நடத்துவதை விமான படையினர் தவிர்த்துவிட்டு முல்லைத்தீவு புதுக்குடியிருக்கு என வேறு பகுதிகளில் வான் புலிகள் இருப்புக்களை தேடி வெளிச்சக்குண்டுகளை தேடி தாக்குதல்களை நடத்த தொடங்கினார்கள்.இதனால் பொதுமக்களுக்குத்தான் இழப்புக்கள் அதிகம் ஏற்பட்டன.அத்துடன் வன்னி வான்பரப்பில் சிறிலங்கா படையின் வேவு விமானங்கள் (24 ) நேரமும் விடுதலைபுலிகளின் நடமாட்டத்தை கண்காணித்து கொண்டிருந்தன.அது வழங்கும் தகவல்களை கொண்டு சிறிலங்கா வான்படை இடைவிடாத தாக்குதல்களை நடத்திக்கொண்டு இருந்தது .அத்துடன் தரை வழியாகவும் தனது புலனாய்வாளர்கள் தனக்கு தகவல் தருபவர்களை கொண்டு வன்னியின் நிலைமைகளை அறிந்துகொண்டு இருந்தது.இந்தநிலையில் தான் ( 01-11-2007 ) அன்று வான்புலிகளை கவுரவிக்கும் நிகழ்வொன்றில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் கலந்துகொண்டு வான் புலிகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்திருந்தார் ,விடுதலை புலிகளின் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்ட இந்த முக்கிய நிகழ்விற்கு விடுதலைபுலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களும் சென்றுவிட்டு கிளிநொச்சி தொண்டைமனகரில் உள்ள தனது முகாமிற்கு அன்றிரவே சென்று அந்த செய்தியினை உடகங்களுக்கு வழங்கிவிட்டு தனது செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்,சு ப .தமிழ்செல்வனின் இந்த முகாம் (எ ) வீதியிலிருந்து (100 ) மீற்றர் தொலைவில்தான் இருந்தது.இவரது முகாம்தான் என்பதை சிறிலங்கா ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தது ,விருதுவழங்கும் விழாவில் கலந்துகொண்டுவிட்டு வந்திருந்த இவரது முகாமில் அன்று இரவு வாகன நடமாட்டங்கள் அதிகரித்து காணப்பட்டன.இதனை வானத்தில் இருந்து வேவு விமானம் படம் எடுத்துகொண்டிருன்தது.
வாகன நடமாட்டங்களை கொண்டு அங்கு வேறும் பல முக்கிய பிரமுகர்கள் இருக்கிறார்கள் என்று சிறிலங்கா வான் படை கணித்திருக்கும்,மறுநாள் ( 02-11-2007 ) அன்று அந்த இடத்தை நோக்கி விரைந்து வந்தன சிறிலங்கா வான்படை விமானங்கள் ..வான்படை விமானங்கள் வருவதற்கு முன்பாகவே அந்த இடத்தை வேவு விமானங்கள் முற்றுகையிட்டிருந்தன.வழமைக்கு மாறான இந்த அதிகரித்த நடவடிக்கையால் அன்றைய பயிற்ச்சி நடவடிக்கையை ஒத்திவைத்துவிட்டு அருகிலிருந்த முகாமில் நாங்கள் காத்துகொண்டிருந்த போதுதான், வேகமாக வந்த விமானங்கள் தமிழ்செல்வனின் முகாமை இலக்குவைத்து காலை( 6.20 ) குண்டுகளை வீசின அந்த இடமெல்லாம் அதிர்ந்தது ஒரே புகைமண்டலமாக அந்த பிரதேசம் மாறியிருந்தது.உடனடியாகவே எல்லோருக்கும் புரிந்து விட்டது தமிழ்செல்வனின் இடத்துக்குத்தான் அடி விழுந்துவிட்டது என்பது,தாக்குதல் நடோபெர்ற இடத்திற்கு வேகமாக ஓடிச்சென்றோம் அவரது பாதுகாவலர்கள் பாதுகாப்புக்குத் தோண்டியிருந்த பதுங்குழி முற்றுமுழுதாக முடபட்டு விட்டது,அதற்குள் இருந்தவர்கள் உயிர்தப்ப வாய்பிருக்கலாம் என்று கருதி வேகமாக குழிக்குள் இருந்த மண்ணை அகற்றி மீட்க்கும் பனி தொடங்கியது,கார்த்திகை மாதம் ஈரம் படித்த மண்ணை குழிக்குள் இருந்து அகற்றுவது அவளவு இலகுவானதாக இருக்கவில்லை.இதற்கிடையில் தமிழ்செல்வனின் இடத்திற்கு அடி விழுந்துவிட்டதாம் என்ற தகவல் போராளிகள் பொறுப்பாளர்கள் மத்தியில் தகவல் பரவு உடனடியாகவே தளபதிகள் பொறுப்பாளர்கள் அவ்விடத்தை விரைந்து வந்து சேர்ந்தார்கள்,அனல் இன்னும் அவர்கள் பதுங்குகுளிக்குள் இருந்து மீட்கப்படவில்லை முடியிருந்த மண்ணை அகற்றுவது பெரும்பாடாக இருந்தது,பின்னர் இயந்திரங்கள் கொண்டுவரபட்டு காலை ( 9.00 )மணிக்குத்தான் பதுங்குழியில் இருந்த மண்ணை அகற்ற முடிந்தது,..
உலகெங்கும் சமாதனம் பேசபறந்து திரிந்த வெள்ளை புற சிறகொடிந்து அந்த குழிக்குள் விழிமுடி கிடந்தது.அதற்குள் அவருடன் இருந்த அனைவரும் சாவை தழுவியிருந்தார்கள்.செல்வம் என்ற போராளிக்கு மீதமாக இன்னும் உயிர் இருப்பது தெரிந்தது,உடனடியாக அவசரசிகிச்சை வழங்கப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்துசெல்லபட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவரும் சாவை தளுவிகொள்ளுகிறார்,சமாதனத்துக்காக உலகெங்கும் திரிந்து போராடிய தமிழ்செல்வனின் இழப்பு தமிழர் மனங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது ,சமாதானத்திற்கு சிறிலங்கா வைத்த ஒரு முற்றுப் புள்ளியாகவே இது கருதபட்டது.அதுவே உண்மை என்பதை பின்னர் வந்த நாட்கள் உறுதிபடுத்தி சென்றன.சு ப தமிழ்செல்வம் மற்றும் போராளிகளின் வித்துடல் தளபதி போராளிகள் பொறுப்பாளர்கள் மக்கள் அன்சளிக்காக வைக்கபட்டு கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் விதைக்கபடுகின்றது,இவரது வீர வணக்க இறுதி நிகழ்வு கிளிநொச்சியில் பெருமெடுப்பில் நடைபெற்று கொண்டிருந்த போதே சிறிலங்கா வான்படையின் வேவு விமானம் இவரது நிகழ்வு நடக்கும் இடத்தை சுற்றி சுற்றி வேவு எடுத்துகொண்டு இருந்தது,ஆனாலும் அத்தனை தளபதிகள் போராளிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமிழ்செல்வனுக்கு இறுதிவிடை கொடுத்தனர்,கிபீர் மிக விமானங்கள் இரணைமடு பகுதிகள் மீது தாக்குதல் நடத்திக்கொண்டு இருந்தன,சிறிலங்கா விமானபடையின் அச்சுறுத்தலுக்கு மத்தியில்தான் சு ப தமிழ்செல்வனின் வித்துடல் முழுப்படைய மதிப்புடன் விதைக்கபடுகின்றது,சு ப தமிழ்செல்வனின் சாவுக்கு போரை விரும்பியது சிறிலங்கா அரசுதான் காரணம் என சொல்லபட்ட காரணங்களை ,இல்லை சர்வதேச நாடுகள்தான் காரணம் என அடுத்து வந்த நாட்கள் உடைத்து போட்டன
மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன?
சுழியோடி
-29
இதன் முலம் தலைவர் உரையாற்ற வருவதை தடுப்பது அல்லது அதன்போது கொல்லுவது மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகளில் மக்கள் கலந்து கொள்ளாமல் தடுப்பதும் முக்கியமானதாக இருந்தது.இந்த நிலையில்தான் சிங்கள ஊடகம் ஒன்றின் தலைப்பு செய்தியாக பிரபாகரனின் இறுதி மாவீரர் நாள் இதுவாகத்தான் இருக்கும் என்று எழுதியிருந்தது.இந்த செய்தி சில தளபதிகள் பொறுப்பாளர்கள் மத்தியில் தெரிகிறது.சிறிலங்கா அரசின் நினைப்பு எவ்வாறு அமைகிறது என்றால் தலைவர் அவர்கள் நேரடியாகத்தான் மாவீரர் நாள் உரையாற்றுவார் ,இதனை புலிகளின் குரல் உடகம்தான் ஒலிபரப்பு செய்யும் எனவே இந்த நிலையம் மீது தாக்குதல் நடத்திவிட்டால் தலைவரின் மாவீரர் நாள் செய்திகளை மக்களை சென்றடையாமல் தடுக்கலாம் என்ற எண்ணம் .சிங்களத்தின் இந்த புரிதலை புரிந்திகொண்டிருந்த விடுதலைபுலிகளின் தலைமைத்துவம் புலிகளின்குரல் பொறுப்பாளருக்கு சில நடவடிக்கைகள் குறித்து முன்னேற்பாடு மேற்கொள்ளுமாறு அறிவுறுத்த படுகிறது,
அதாவது மாவீரர் நாள் அன்று ,புலிகளின் குரல் மீது விமானப்படை தாக்குதல் நடத்தலாம் என்றும் ,இதற்கமைய பல்வேறு மாற்றங்களை செய்து ஒலிபரப்பினை நடத்துமாறு அறிவிக்க படுகிறது,இதற்கமையவே அன்றைய புலிகளின் குரல் முன்று இடங்களில் தனது ஒலிபரப்பினை நடத்தியது .அதாவது (fm,98,100,103.5 ) இல் ஆகிய அலைவரிசைகளில் வன்னி எங்கும் புலிகளின் குரல் ஒலிக்கிறது .புலிகளின் குரலின் ஆவணங்கள் அன்று இடம்மாற்ற படுகின்றன,அவ்வாறு மர்ருஒலுந்குகல் செயற்பாடுகளில் புலிகளின் குரல் ஈடுபடுகிறது .புலிகளின் குரல் மட்டுமல்ல விடுதலைபுலிகளின் கிளிநொச்சியில் உள்ள முதன்மையாக ஒலியமைப்பு செயலகங்களின் ஆவணங்கள் கூட இடம்மாற்ற படுகின்றது.இதன்போதுதான் மாவீரர் நாளான (27-11-2007 ) அன்று மாலை (4.30 ) மணியளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் விமானங்கள் புலிகளின்குரல் நடுவ பணியாக வளாகத்தின் மீது தாக்குதலை நடாத்துகின்றன .அனால் அன்று மாவீரர் நாள் என்றபடியால் மக்கள் பெருமளவில் மாவீரர் துயிலும் இல்லங்களில்,புலிகளின் குரலினை கேட்டுகொண்டே இருந்தார்கள்,புலிகளின் குரல் மீது தாக்குதல் நடந்தும் புலிகளின் குரல் ஒலித்துகொண்டே இருக்கிறது .இத்தாக்குதலில் புலிகளின் குரல் அறிவிப்பளார் இசைவிழிசெம்பியன் உள்ளிட்ட முன்று பணியாளர்களும் வீதியால் சென்றுகொண்டிருந்த எட்டு பொதுமக்களும் உயிர் இழக்கிறார்கள் சிலர் காயங்களுக்கு உள்ளாகிறார்கள்,
எனினும் எதுவித இடையுருகளும் இன்றி அன்று மாவீரர் நாள் நிகழ்வுகளை தாங்கியவாறு புலிகளின்குரல் தொடர்ந்து ஒலித்துகொண்டே இருந்தது ,புலிகளின் குரல் இரவு ( 8.30 ) செய்தியில்தான் புலிகளின்குரல் மீது சிறிலங்கா விமானபடையினர் தாக்குதல் நடாத்திவிட்ட செய்தியே வெளிவருகிறது.புலிகளின் குரல் மீது சிறிலங்கா வான்படை நடாத்திய முதல் தாக்குதல் இதுவல்ல (13 ) வது தாக்குதல் இதுவென்பது குறிப்பிட தக்கது இதை ஊடகத்தை அழிக்கும் செயற்பாடாக சிறிலங்கா அரசு செயற்பட்டதை கானக்குடியதாக இருந்தது,இதே வேலை அன்றைய மாவீரர் நாள் நிகழ்வில் சிறிலங்காவின் போர் வெறியை சுட்டிகாட்டியிருந்த தேசிய தலைவர் “சர்வதேசத்தின் மீது குற்றசாட்டு ஒன்றை நேரடியாகவே சுமத்தினார்.அது தமிழ்செல்வனின் சாவு குறித்து தனது உரையில் “சமாதனத்துக்காக உழைத்த எமது தவப்புதல்வன் தமிழ் செல்வனை சர்வதேசம் சமாதனம் பேசியே சாகடித்திருக்கிறது”என்று குற்றம் சாட்டியிருந்தார் .அமைதி பாதையில் பயணித்த எமது விடுதலை இயக்கத்தின் இதய துடிப்பு வலுக்கட்டாயமாக இழுத்து நிறுத்தியிருக்கிறது.எமது இதயங்களில் இலட்சிய நெருப்பை மூட்டி மறைந்த மாவீரருக்கு ஆண்டுதோறும் விளக்கு ஏற்றும்போது எப்போதும் என்னருகில் இருந்த அன்பு தம்பி தமிழ்செல்வனுக்கும் சேர்த்து இம்முறை என்கையால் ஈகைசுடறேர்ரும் நிலைமையை சர்வதேசம் உருவாக்கி இருக்கிறது.உலகத் தமிழினத்தையே கண்ணீரில் கரைத்து கலங்கியல வைத்திருக்கிறது..
சிங்கள தேசத்தின் சமாதன விரோத போக்கை போர் வெறியை உறுதியோடு கண்டித்திருந்தால் தமிழ்ச்செல்வன் இன்று உயிரோடு இருந்திருப்பான் சமாதானத்திற்கு இப்படியொரு பேரிடி விழுந்திருக்காது,சமாதானத்தின் காவலர்களாக வீற்று இருக்கும் இணைத்தலைமை நாடுகளும் இந்த பெரும் பொறுப்பிலிருந்து தவறியிருக்கின்றன:”என்று சர்வதீசத்தின் மீது தமிழ்செல்வனின் சாவுக்கான குற்றசாட்டை சுமத்தியிருந்தார்.இதே வேளை வன்னியில் விடுதலைபுலிகளின் முகாம்கள் சிறிலங்கா படைகளின் வான்படை தாக்குதல்களுக்கு இலக்காகி கொண்டிருந்தன,மிக நவீன கண்காணிப்பு சாதனங்களுடன் வன்னியை கண்ணில் எண்ணையை விட்டு பார்த்துகொண்டிருந்த சிறிலங்கவிர்காக பார்த்துகொண்டிருந்த வேவு விமானங்களும் விண்வெளிக் கண்களுக்கும் மண்ணை தூவிவிட்டு அனைத்து காரியங்களையும் செய்வது சாத்தியமல்ல,சில நடவடிக்கைகள் நகர்வுகள் அவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கவே செய்யவேண்டிய நிலை ,இந்த நிலையில் தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்களின் பாதுகாப்பு கேளிவிக்குறியகிறது.பொறுப்பாளர்கள் தளபதிகள் எல்லோரும் நடவடிக்கைகளுக்கான செயற்பட்டு வசதி கருதி கிளிநொச்சியை மையபடுத்தியே தமது இருப்பிடங்களை தீர்மானிக்கிறார்கள்,
ஏன் தலைவர் அவர்கள் கூட கிளிநொச்சியில் சில இடங்களில் தனது முகாம்களை அமைத்திருந்தார் அங்கு தளபதிகள் போருப்பலர்களுடன் பல சந்திப்புக்களை நடாத்தி இருக்கின்றார்.தலைவர் அவர்களின் குடும்பமும் கனாகம்பிகை குளத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில்தான் தங்கி இருந்தார்கள்,காரணம் கடைசி மகனின் படிப்பும் ,மகளின் கணனித்துறை படிப்பும் இவர்களை இப்பகுதியில் குடியேற வைத்திருந்தது.இந்த வீட்டில் இருப்பவர்கள் முக்கியமானவர்கள் என்பதை அயலவர்களுக்கு வந்துபோகும் வாகனம் புரிய வைத்திருக்கும்.இதனை தகவலாக கொண்டு கனகாம்பிகை குளத்தில் உள்ள தலைவர் அவர்களின் துணைவி பிள்ளைகளின் வீடு மீது சிறிலங்கா படையினர் வான் தாக்குதலை நடத்துகின்றார்கள் .தாக்குதல் துல்லியமானதாக இருந்தாலும் தலைவர் அவர்களின் துணைவியார் கடைசி மகன் உள்ளிட்டோர் காயங்கள் எதுவுமின்றி தப்புகிறார்கள்,அத்துடன் இத்தாக்குதலின் பின் தங்கள் இருப்பிடங்களை மாற்றுகின்றார்கள்,இருந்தும் தலைவர் அவர்களின் பாதுகாப்பு அணிகள் உள்ள முகாம்களும் அன்று சிறிலங்கா வான் படையின் தாக்குதலுக்கு இலக்காகிறது,இவ்வாறு இருக்கும் போதுதான் அன்று கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் உருத்திரபுரம் என்னும் பகுதிக்கு இடையில் தமிழீழ தேசிய தலைவர் வந்துபோகும் இடம் ஒன்றும் இருந்தது,இது அப்பிரதேச மக்களுக்கும் சற்று தெரியும்,பிறகென்ன மக்களுக்கு தெரிந்தால் அது ஸ்ரீலங்கா அரசுக்கு தெரிந்த போலத்தான்,உருத்திரபுரம் (10 ) ஆம் வாய்க்கால் என்னும் பகுதியில் தலைவர் அவர்கள் தங்கிநிற்கும் பாரிய முகாம் ஒன்றும் இருந்தது.தளபதிகள் பொறுப்பாளர்கள் அறிந்தவிடயம் அன்று ஒரு நாள் அந்த முகாமிற்கு தலைவர் வந்துவிட்டார் ..அனால் மறுபுறத்தில் கிபீர் விமானங்களும் புறப்பட்டு வன்னி நோக்கி வந்துகொண்டு இருந்தன
மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன?
சுழியோடி
-30
மணியோசை எழுப்பப்படும்,இதனை தொடர்ந்து அங்கு வேலை செய்யும் பணியாளர்கள் பாதுகாப்பு தேடுவார்கள் ,அல்லது நிறுவனத்தை விட்டு வெளியே சென்று விடுவார்கள்,இவர்களின் செயற்பாடுகளை மக்கள் அவதானித்து பொதுமக்களும் பாதுகாப்பு தேடிகொள்ளுவார்கள்,இதில் சுவாரசியமான சம்பவம் ஒன்றை இங்கே குறலாம் என்று நினைக்குறேன் ,கிளிநொச்சியின் கரடிபோக்கு சந்திக்கு அருகாமையில் யு ,என் ,எச்,சி,ஆர்,நிறுவன பணிமனைகள் இரண்டு அமைந்திருந்தன,ஒரு நாள் அவ்வழியால் நான் செல்லும்போது அவர்களது பணிமனை மதில்களை சுற்றி ஏராளமான தமிழ் மக்கள் குழுமி நின்றார்கள் ,நான் எனது உந்துருளியினை சற்று நிறுத்தி அங்கு நின்ற ஒருவரிடம் என்ன ஏதும் ஆர்பாட்டமோ? என்று கேட்டேன் அது ஒன்றும் இல்லை கிபீர் அலேட் அறிவித்து இருக்கு அதுதான் பாதுகாப்புக்காக இங்க வந்தனாங்கள் என்றால்,
இவ்வாறுதான் கிபீர் அலேட் கிடைத்தால் அங்கு மக்கள் யு ,என் ,எச்,சி,ஆர்,அலுவலகங்கள் ,உணவுத்திட்டம் கெயார் போன்ற ,ஆரச சார்பற்ற நிறுவனங்களின் வளாகங்களை சுற்றி நிற்பார்கள்.இவ்வாறன இடங்கள் மீது சிறிலங்கா வான்படை தாக்குதல் நடத்த மாட்டார்கள் என்பது அவர்களின் எதிர்பாப்பு,அன்று அவ்வாறுதான் விமானங்கள் வன்னி நோக்கி வருவதாக தகவல் கிடைத்திருந்த நிலையில் முகாம்கள் அனைத்திற்கும் விழிப்பு நிலை ஏற்பனவே கொடுக்கபட்டு இருந்தது.தலைவர் நின்றிருந்த பகுதியை சுற்றியிருந்த முகாம்களுக்கு ( இது சில குறியீடுகளுடன் )முகாம்களின் பொறுப்பாளர்களுக்கு அதியுச்ச விழிப்பு நிலை வழங்க பட்டிருக்கும்,அவ்வாறு விழிப்பு நிலை வழங்கபட்டால் முகாம்கள் சிகப்பு எச்சரிக்கை நிலைக்கு வந்துவிடும் ,தகவல் கிடைத்து ( 10 ) அல்லது (20 ) நிமிடங்களில் வன்னி வான்பரப்பில் கிபீர் விமானங்கள் நுழையும் அனால் எந்த இடத்தின் மீது தாக்குதல்கள் நடக்கும் என்பது தாக்குதல் நடக்கும் வரை பெரும்பாலும் யாருக்கும் தெரியாது,அனால் ,அன்று வன்னி நோக்கிவந்த கிபீர் விமானங்கள் தலைவர் நின்றிருந்த இடத்தையே இலக்கு வைத்திருந்தன ,தலைவர் நின்றிருந்த இடத்தை துல்லியமாக இலக்கு வைத்து தாக்க தொடங்கின ,விமானத்தாக்குதல் குறித்து எச்சரிக்கை ஏற்கனவே வழங்கபட்டு இருந்ததால் தலைவர் அவர்களும் அவரது மெய்பாதுகவலர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து உயிர் தப்புகிறார்கள்,எனினும் கிபீர் விமான தாக்குதல்கள் தலைவர் தங்கிநின்ற இடத்தின் மீது தாக்குதல் துல்லியமாக நடத்தபட்டதால்,தாக்குதல் குறித்து முதன்மை தளபதிகள் மத்தியில் சந்தேகங்கள் எழ தொடங்கின ,விடுதலை புலிகளுக்குள் உடுருவியிருக்கும் கருப்பு ஆடோன்ரின் வேலைதான் என்பது உடனடியாக புரிந்து விட்டது ,யார் அந்த கருப்பு ஆடு என்பதை கண்டுபிடித்து களை புடுங்கவேண்டியது அவசியமாகிறது,இந்த சம்பவம் முக்கிய கவனத்திற்கு எடுக்கபட்டு புலனாய்வுத்துறை பொறுப்பாளர் போட்டு அம்மானின் புலனாய்விர்க்கு உட்படுத்த படுகிறது,இதன்போது சில சந்தேகங்கள் தீர்க்க படுகின்றன,
இதற்க்கு முன்பாக தமிழீழ விடுதலை உணர்வாளரும் தமிழ் தேசிய குட்டமைப்பு நாடளமன்ர உறுப்பினருமான இ .சிவநீசன் அவர்கள் நாடலமன்று அமர்வு முடிந்துவிட்டு கிளிநொச்சி சென்றுகொண்டு இருக்கையில் மாங்குளத்திற்கு அண்மையாக (2008 ) ம் ஆண்டு சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் சிக்கி மரணமடைகிறார்,இவ்வாறு மேலும் சிலர் கிளைமோர் தாக்குதல்களில் இலக்கு வைத்து கொல்லபடுகின்றனர்,அத்துடன் அன்றைய நாட்களில் விடுதலை புலிகளின் தளங்கள் மீதான துல்லியமான தாக்குதல்களை சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக நடத்தியவண்ணம் இருந்தார்கள் ,எவ்வாறு துல்லியமான தாக்குதல்கள் நடைபெறுகின்றன எவ்வாறு குறிப்பிட்ட நபர்களை இலக்குவைத்து கிளைமோர் தாக்குதலில் கொல்லபடுகிறார்கள் ,என்று பொறுப்பாளர்கள் போராளிகள் மத்தியில் பல்வேறுபட்ட கேள்விகள் எழுகின்றன சட்லைட் சாதனம் உள்ளிட்ட நாடுகள் வன்னியை கண்காணித்து கொடுக்க அதனைக்கொண்டு இலக்குகளை சரியாக தாக்குகிறார்களோ என்ற கேள்வி பலரது மனங்களில் இருந்தது,அனால் உண்மை பெரும்பாலும் அதுவல்ல ,விடுதலைபுலிகளின் புலனாய்வு துறையினை எடுத்துகொண்டால் ,புலனாய்வு துரையின் உள்ளக பாதுகாப்பு அணிக்கு பொறுப்பாளராக காந்தி அம்மான் எனப்படும் காந்தி பொறுப்பாளராக செயற்பட்டுக்கொண்டு இருந்தார்,காந்தி அம்மானின் விசாரணைக்கு ஒரு குற்ராவளி செல்வாராயின் அவர் தன்னை அறியாமலே குற்றங்களை ஒப்புகொள்ளுவார்,இவரது பெயரை சொன்னாலே பலரும் நடுங்குவார்கள்,உள்ளக பாதுகாப்பு பொறுப்பாளரான இவருக்கு தலைவர் அவர்கள் சென்றுவரும் இடங்களும் தளபதிகளின் இருப்பிடங்கள் தளபதிகள் அன்று செல்லும் இடங்கள் குறித்த விபரங்கள் அனைத்தும் தெரிந்திருந்தது,
பெரும்பாலும் தளபதிகள் பயணம் செய்யும் வீதிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுவதற்கான பணிகளை மேற்கொள்ளுவதும் இவர்தான் ,அத்துடன் எதிரியின் உடுருபவர்களை கண்டுபிடித்து தீர்வு எழுதுவதும் இவர் பணியாக இருந்தது,சமாதன காலத்தில் வன்னிபகுதி மீது எதிரியின் உடுருவல்களை தடுக்கும் முயற்ச்சியில் இவர் தீவிரமாக ஈடுபட்டவர்,( அதாவது சிவில் நிர்வாகம் உடாக )இவ்வாறு விடுதலைபுலிகளின் நம்பிக்கைக்கும் விசுவசத்திர்க்கும் உரியவராக காந்தி இருந்தார், தலைவரின் அன்றைய பயணத்திட்டத்தை தெரிந்து இருந்தது இவர்தான் இவரின் மீது பொட்டு அம்மனுக்கு சந்தேகம் அதிகமாக வலுத்தது
மாவிலாறு மகிந்தாவும் முள்ளிவாய்க்கால் பிரபாகரனும் நடந்தது என்ன?
சுழியோடி
-31
என அனைத்தும் புலனாய்வு துறையால் அலசி ஆராயபடுகிறது,இதற்க்கு சிறிது காலம் எடுக்கிறது ,அதற்குள் போர் தீவிராமக்கபட்டு இருந்தது .இந்த நிலையில் போராட்டத்தின் இறுதி பகுதியில் முல்லிவாய்கால் பகுதியில் காந்தி தனிமைபடுத்தபட்டு வெறுமையாக விடபட்டு இருந்தார் ,தற்போது இவர் சிறிலங்கா இராணுவத்திடம் இருப்பதாக அறியப்படுகிறது,
( 2007 ) ஆரம்பத்தில் மன்னார் நோக்கிய இராணுவ நடவடிக்கையை சிறிலங்கா தொடங்கியது ,மடு பகுதியை ஆக்கிரமித்து ,சர்வதேச ரீதியாக பெரும் வெற்றியை அறிவிப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது .மடுபிரதேசம் தொடக்கம் அடம்பன் திருக்கேதீஸ்வரம் வரையான கடல் எல்லைவரை சுமார் (60 ) கிலோமீற்றர் துரம் உள்ளது ,இடையில் பெரும் காடுகள் இவ்வாறன நீளம் கொண்ட பகுதியில் முழுமையான காவலரன்கள் இருக்கவில்லை ,சில பகுத்கள் விடுதலை புலிகளினதோ ,இரனுவத்தினரினதோ காவலரண்கள் அற்ற பகுதிகளாகவே இருந்தன ,மன்னார் காட்டுபகுதி என்பது பெரும்பாலும் கட்டயம்பன் பகுதியை அண்மித்த காட்டுபகுதியாகவே காணப்படுகிறது ,சிறிலங்கா படையினரின் உடுருவல்கள் இப்பகுதிகள் உடாகவே அதிகம் நடைபெறுவது உண்டு ,காரணம் ,விடுதலை புலியளின் முழுமையான காவலரன்கள் இங்கு இல்லை ,இந்த பரப்பை கடந்தால் ,கட்டயம்பன் மடு வீதியினை மையபடுத்தி விடுதலை புலிகளின் சில முகாம்கள் அமைந்திருந்தன ,அதிலுள்ள போராளிகள் துணைப்படையினர் ரோந்து நடவடிக்கையின் மூலம் இந்த வீதி பாதுகாப்பினை உருதிபடுத்துகின்றார்கள்,காலை ,மாலை .இரவு .என முன்று வேளைகளும் வீதி சுற்றுகளில் ஈடுபடுவார்கள் ,இதன்போது சிறிலங்கா படையினரின் ஆழ உடுருவும் படையினர் சென்றதுக்கான தடையங்கள் கண்டுபிடிக்க படும் ,வீதிகளை கடக்கும் போது சில தடயங்களை தங்களையே அறியாமலே அவர்கள் விட்டு சென்றிருப்பார்கள்,அவ்வாறு இருந்தால் உடனடியாக ஆளுடுருவும் அணியினர் விடுதலை புலிகளின் பகுதிக்குள் உடுருவி விட்டார்கள் என்ற தகவல் அனைத்து முகாம்களுக்கும் அறிவிக்க படும் ,
அத்துடன் சிறிலங்கா படையினரின் கால் தடங்களை வைத்து ,சாப்பிட்ட உணவு வகைகளை வைத்தும் ,எத்தனை பேர்கள் சென்றார்கள் ,எந்த திசையில் சென்றார்கள் ,முடிவுகளை பொறுப்பாளர்கள் எடுப்பார்கள்,முகாம்கள் அனைத்திற்கும் விழிப்புடன் செயல்படுமாறு ..வீதி கண்காணிப்புகள் அனைத்தையும் சரிவர மேற்கொள்ளுமாறும் அறிவிக்க படும் ,சில வேளைகளில் இவ்வாறன தடையங்கள் கானபட்டு அடுத்த நாளே களமுனைக்கு பின்னான வீதிகளில் சிறிலங்கா படையினரின் ஆழ உடுருவும் படையினர் கிளைமோர் தாக்குதலை நடத்தினார்கள் ,இவர்கள் கிளைமோர் தாக்குதலை நடத்திவிட்டு குறுகிய நேரத்துக்குள் விடுதலை புலிகளின் எல்லையை தாண்டிவிடுவார்கள் ,இவ்வாறு பயிற்ச்சி பெற்றவர்கள் சில நேரங்களில் இவ்வாறன தடயங்கள் காணப்பட்டு அறிவிக்கபட்டும் ஐந்து ஆறு நாட்களின் பின்பும் மக்கள் மீதும் ,விடுதலை புலிகளின் வாகனங்கள் மீதும் ,தாக்குதலை நடத்திய சம்பவங்களும் இடம்பெற்றன ,இதன்போது மக்கள் பலர் பலியானார்கள் ,விடுதலை புலிகளின் தளபதிகளின் வாகனங்கள் கூட தாக்குதலில் சிக்கி அவர்கள் சாவை தழுவியது உண்டு ,இதில் கேணல் சாள்சின் சாவு விடுதலை புலிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவமாக அமைந்தது ,மானார் களமுனை உடாகத்தான் விடுதலைபுலிகளின் தென்பகுதி நடவடிக்கை நடைபெற்று கொண்டிருந்தன , இதற்கான சில நடவடிக்கைகளை
அன்று தளபதி கேணல் சாள்ஸ் மன்னாரில் இருந்து மேற்கொண்டிருந்தார் ,இவ்வாறுதான் (05-01-2008 ) மாலை முன்று மணியளவில் தளபதி சாள்ஸ் அவர்கள் மன்னாரில் இருந்து கிளிநொச்சி நோக்கி தனது வாகனத்தில் புறப்படுகின்றார் ,மன்னார் புநகரி வீதியில் ,முழங்காவில் பகுதிக்கு அண்மையாக ,பள்ளமடுவின் ஒரு காட்டுபகுதியில் சிறிலங்கா படையின் ஆழ உடுருவும் படையினர் ,கிளைமோர் தாக்குதலை நடத்துகிறார்கள் ,இதில் இவரது வாகனம் சிக்கி கொள்ளுகிறது ,சம்பவ இடத்திலையே கேணல் சாள்சுடன் ,மாதிரி கிராமம் ஜெயபுரத்தை சேர்ந்த லெப்,சுகந்தன் ,( 176 ) யோகபுரம் மல்லாவியை சேர்ந்த லெப் வீரமாறன் ,(பரராஜசிங்கம் சுதன்) ஆறுமுகம் வீதி வட்டக்கச்சியை சேர்ந்த லெப் ,காவலன் ( சின்னதம்பி கங்காதரன் ,திரு ,க .முருகவேல் ) ஆகிய முன்று போராளிகளும் வீரச்சாவை தழுவி கொண்டார்கள் ,
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இவ்வாறான ஆழ உடுருவும் படையினரால் கிளைமோர் தாக்குதல்கள் நடத்தபட்டு விடுதலை புலிகளின் நடமாட்டங்கள் முடக்க படுகின்றன,எனினும் இவற்றுக்கு மத்தியிலும் அன்று களமுனைகளுக்கு தேவையான ஆயுத தளபாடங்கள் ,உணவு பொருட்கள் ,காயம் அடைந்த போராளிகளை நகர்த்துதல் ,பொறுப்பாளர்களின் நகர்வு என்பன நடைபெற்று கொண்டிருந்தன ,மன்னார் மடு பகுதி தளபதி ஜெயம் அவர்களின் கிழ தளபதி பல்லவன் ,தளபதி கோபித் ,மற்றும் மாலதி படையணி போராளிகளும் ,அடம்பன் பகுதியின் தளபதி பானுவின் கீழ் இடைநிலை தளபதிகளான லக்மன் .கயன் , தளபதி கீதன் ,தளபதி மங்களேஸ்,ஆகியோர் கட்டளை தளபதிகளாக இருந்து செயற்பட்டார்கள்,இதேவேளை மன்னார் மாவட்டத்தின் கட்டளை பகுதி ஒன்றினை புநகரி படைப்பிரிவு பொறுப்பெடுத்து இருந்தது ,இதற்க்கான சிறப்பு தளபதியாக கேணல் ஈழபிரியன் செயல்பட்டுக்கொண்டு இருக்கையில் தளபதியாக லெப் கேணல் கீதன் செயற்படுகிறார்