மாவை சேனாதிராசாவின் அரசியல் வரலாறு தெரியாத தமிழ் அரசுகட்சியின் வந்தேறிகள்- ஏழாண்டுகள் சிறையில் கழித்தார்

95

 

மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) என அழைக்கப்படும் சோமசுந்தரம் சேனாதிராஜா (பிறப்பு: அக்டோபர் 27, 1942) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார்.

 இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. இவர் யாழ்ப்பாண மாவட்டம்மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்தார்.[1][2] வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்ற பின்னர்,[2] இலங்கைப் பல்கலைக்க்ழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.

சேனாதிராசா இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றினார்.[2] இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார்.[2] 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.[2] 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு எட்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார். 1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவரியின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[2]

சேனாதிராஜா 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈஎன்டிஎல்எஃப்/ஈபிஆர்எல்எஃப்/டெலோ/தவிகூ கூட்டணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணியின் வேட்பாளர்களில் 13வதாக வந்து தோல்வியடைந்தார்.[3][4] ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 சூலை 13 இ படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். 1999 சூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்.

2000-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[7] 2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிதமிழீழ விடுதலை இயக்கம், தவிகூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின.[8][9] 2001 தேர்தலில் ததேகூ சார்பாக யாழ் மாவடத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[10] 200420102015 தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

செப்டம்பர் , 2014இல் சேனாதிராசா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.[

 
தேர்தல் தொகுதி / மாவட்டம் கட்சி வாக்குகள் முடிவு
1989 நாடாளுமன்றத் தேர்தல்[4] யாழ்ப்பாண மாவட்டம் தவிகூ 2,820 தெரிவு செய்யப்படவில்லை
2000 நாடாளுமன்றத் தேர்தல்[7] யாழ்ப்பாண மாவட்டம் தவிகூ 10,965 தெரிவு
2001 நாடாளுமன்றத் தேர்தல்[10] யாழ்ப்பாண மாவட்டம் தவிகூ 33,831 தெரிவு
2004 நாடாளுமன்றத் தேர்தல்[11] யாழ்ப்பாண மாவட்டம் ததேகூ 38,783 தெரிவு
2010 நாடாளுமன்றத் தேர்தல்[12] யாழ்ப்பாண மாவட்டம் ததேகூ 20,501 தெரிவு
2015 நாடாளுமன்றத் தேர்தல்[16] யாழ்ப்பாண மாவட்டம் ததேகூ 58,782 தெரிவு
2020 நாடாளுமன்றத் தேர்தல் யாழ்ப்பாண மாவட்டம் ததேகூ 20,358 தெரிவு செய்யப்படவில்லை

தொடரும்……….

தொகுப்பு இரணியன்

SHARE